பப்பரபப்பே என பல் இளிக்கும் சென்னை சாலைகள்...


சென்னையின் உள்கட்டமைப்பை இப்போது யாராவது ஒரு வெளிநாட்டவர் வந்து பார்த்து இருந்தால் தூ என்று காரி துப்பி இருப்பார்.... அந்தளவுக்கு படு கேவலமாக இருக்கின்றது....

எல்லா இடத்திலும் தோண்டி வைத்து அதில் ஒப்புக்கு ஒரு காண்டிராக்டர் மண் போட்டு முடி வைக்க.... அந்த இடங்கள் எல்லாம் மழையில் சென்னைவாசிகளுக்கு மரணக்குழிகளாயின...

எவன் சொன்னான் என்று தெரியவில்லை சென்னையில் தங்கம் கிடைக்கின்றது என்று எப்போது பார்த்தாலும் தொண்டி எழவெடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள்...

மழையால் சேதமாகிவிட்ட சாலைகள் என்று சொல்கின்றார்கள்... அப்படி சொல்ல வெட்கமாக இல்லை... ஒரு மூன்றுநாள் மழைக்கு சாலைகள் சேதமாகிவிடுமா?... அப்போது இதற்கு முன் சாலைகள் ஒழுங்காக இருந்தனவா?... அதற்கு முன்னும் அதே லட்சனம்தான்... இப்போது மழையால் இன்னும் கொடுமை...

இரண்டு சக்கரவாகனத்தில் பயணிக்கும் போது எந்த இடத்தில் பள்ளம் இருக்குமோ? என்று வாகனம் ஓட்டி செல்கையில் ஒரு வீத பீதியுடன்தான் செல்ல வேண்டும்....


வளசரவாக்கம் கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே... நடு ரோட்டில் ஒரு பெரிய பள்ளம்... வாகனத்தில் வேகமாக தண்ணீரை கிழித்து வந்தவர்கள் எல்லாம்...ஓ பன்னீர் செல்வம் போல் பொட்டிபாம்பாய் மாறி போனது பார்க்க கண் கொள்ளா காட்சிகள்.. அதே வேகத்துடன் வந்து மட்டென்று சத்தம் கேட்டு நிலை தடுமாறி முகம் வெளிறி மரணபயத்துடன் பல பொதுஜனங்கள், அந்த இடம் விட்டு நகர்ந்தார்கள்...

அது எப்படித்தான் சாலைக்கு நடுலே எரிக்கல் விழுந்தது போல் குழி விழும் என்று தெரியவில்லை...முதலில் சின்னதாக உருவாகும் பள்ளம் அதன் பிறகு இரண்டாம் நாள் மழைக்கு அரை அடி பள்ளத்திற்க்கு மாறிப்போனது...

வேளச்சேரியில் இருந்து தரமனி செல்லும் சாலை.. அப்படி ஒரு மோசம் எப்படித்தான் இந்த ஐடி வாலாலக்கள் அதில் காரிலும் பைக்கிலும் சென்று வருகின்றார்களோ? தெரியவில்லை

ரொம்பவும் கொடுமையானவர்கள்.. மவுன்ட் ரயில்வே ஸ்டேசனில் இருந்து வாணுவம்பேட்டை வழியாக, மடிப்பாக்கம், கீ்ழ் கட்டளை செல்பவர்கள்தான்... எவனாவது அரசாங்கத்தில் இருந்து வந்து மழையால் சாலை பழுதடைந்தது என்று சொன்னால் அவனை ஏறி மிதித்து விடுங்கள்...

ஏனென்னறால் மழையினால் மட்டும் அந்த சாலைகள் பழுதடையவில்லை... கடந்த பல வருடங்களாக அந்த சாலைகள் அப்படியேதான் இருக்கின்றது....

சரி மழையில ரோடு வீணாயிடுச்சி... நாங்க என்ன பண்ண முடியம் என்று நெடு்ஞ்சலைதுறை ஊழியர்கள் கேட்ககின்றார்களா?.. நியாயமான கேள்விதான்... ஆனால் பள்ளம் இங்கே இருக்கின்றது என்று அறி்விக்க எந்த இடத்திலும் அறிவிப்பு பலகை சென்னை மற்றும் தமிழகத்தில் எங்கும் இல்லையே... அப்ப நீங்க எல்லாம் எங்க போயிடறிங்க... மாதா கோயில்ல மணி ஆட்டவா?... வெயில்லதான் வேலை செய்வோம்.. மழையில நாங்க வேலை செய்யமா கையில புடிச்சிகிட்டு... அதான் செல்போனை நிப்போம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்?...

ஒரு சாலையில் பள்ளம் இருக்கின்றது என்று பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்வது நெடுஞ்சலைதுறையின் வேலை... ஆனால் தமிழகத்தை பொறுத்த மட்டில்... பொதுமக்கள் அந்த பள்ளத்தில் விழுந்து எழுந்து பக்கத்தில் எதாவது ஒரு மரத்தின் கிளையை ஒடித்து அதில் நட்டு வைத்து விட்டு இனி வரும் வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு செய்து விட்டு செல்வார்கள்... “எச்சரிக்கை இங்கே பெரிய பள்ளம் இருக்கின்றது” என்று... அந்த மரக்கிளைகள் உணர்த்தும்...


இந்த மழையில் சென்னை முழுவதும் சாலைகளின் நடுவே மரம் நடு விழாவை பொது மக்களே செய்தார்கள்.... என்ன வழக்கமாக சாலை ஓரத்தில் மரம் நடுவார்கள்..இப்போது ரோட்டுக்கு நடுவே....என்ன ஒரு கொடுமை என்றால் மரம் நட்டு தண்ணீர் ஊற்ற வில்லை... அதான் ஊரே தண்ணியில மெதக்குதே...


மழைன்னா சட்டென ஆட்கள் கோதாவில் இறங்க வேண்டும்... பள்ளம் உள்ள இடத்தில் அறிவிப்பு பலகைகள் வைத்து பொது மக்களை எச்சரிக்க வேண்டும்... அந்த பழக்கமே நம்மிடத்தில் இல்லை,...

எங்கள் ஊர் கடலூரில் இன்னும் கூட சாலைகள் சரிசெய்யபடவில்லை.... என் கல்யாணத்துக்கு வந்தவர்கள்... என் ஊர் சாலை லட்சனத்தை பார்த்து முகம் சுளித்து விட்டு போனார்கள்.. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆயிற்று இன்னும் எவன்...........................ன்னு தெரியலை....

போர்கால நடவடிக்கை என்று ஒரு வார்த்தையை அடிக்கடி தினத்தந்தியில் பார்த்து இருக்கலாம்... போர்ன்னு சொன்னா ... பொதுவா தமி்ழ்நாட்டுகாரனக்கு என்னன்னு தெரியும்?.... அந்த வலி , இடப்பெயர்வு,எதுவும் அவனுக்கு தெரியாது...

போர்கால நடவடிக்கை என்றால்... முடியாது என்ற வார்த்தையை சொல்லவே கூடாது... கட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது அதில் மிதவை பாலம் அமைத்து... பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்க்கு அழைத்து செல்ல வேண்டும்...போர்நடக்கும் இடத்திற்க்கு மருந்து மற்றும் உணவுபொருட்கள் எந்த தடை வந்தாலும் எடுத்து செல்ல வேண்டும்.. இல்லையென்றால் போரில் தோற்க்க வேண்டி வரும்...

அதாவது விரைவாய் செயலாற்றுவதற்க்கு போர்கால நடவடிக்கை என்று சொல்லுவார்கள்... ஆனால் தமிழகத்தில் அந்த வார்த்தையை எல்லா இடத்திலும் சர்வசாதாரணமாக பயண்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்...
இன்னும் கொஞ்சம்நாளில் போர்கால நடவடிக்கையில் இலவச டிவி கொடுப்போம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்...

மழை முடிந்து நேற்றுதான் எல்லா இடங்களிலும்... பள்ளங்களில் மண்ணையும் கல்லையும் கொட்டிவிட்டு போனார்கள் அந்த புண்ணியவான்கள்....


நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு,மழையில் களப்பணி ஆற்றாதவர்களுக்கு? எதற்கு போனஸ் லொட்டு லொசுக்கு எல்லாம்??? ஆனால் இதே கொட்டும் மழையில் களப்பணி ஆற்றியவர்களை நான் பார்த்தேன்... அந்த ஊழியர்களுக்கு என் நன்றிகள்..

ஏன் இங்கு சாலை பராமாரிப்பு என்பதே இல்லாமல் போய் விட்டது... அப்படியே பராமரித்தாலும் எல்லா வற்றிலும் லஞ்சபேய் தலைவிரித்து ஆடி...பொதுமக்கள் உயிரை எடுக்கின்றது..


நல்ல சாலைகள் மற்றும் குடிக்க குடிநீர் இதுதானே... ஒரு அரசிடம் பொதுமக்கள் வேண்டுவது..... அனால் இதை எந்த அரசும் சரியாய் செயல்ப டுத்தவில்லை என்பதுதான் உண்மை...

சரி நாமதான் இப்படி கஷ்டபடறோம் தலைவர்கள் வீட்டு பக்கம் எல்லாம் எப்படி இருக்கின்றது என்று பார்க்க போனேன்... கோபாலபுரத்து பக்கமும், போஸ்கார்டன் பக்கம் போய் பார்த்தேன் சாலைகளில் தண்ணீர் சிறிதளவுக்கு தேங்கி இருந்தததே தவிர.... சாலைகளில் பள்ளம் எங்கேயும் இல்லை....மிக நேர்த்தியாக இருந்தது...


(குறிப்பு) படங்கள் நெட்டில் சுட்டது.....

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி...

61 comments:

  1. //நல்ல சாலைகள் மற்றும் குடிக்க குடிநீர் இதுதானே

    ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்குள வரி கட்டும் போது இந்த வயித்தெரிச்சல் தாங்க எனக்கு. சம்பாதிக்குறதுல 70 சதவிகிதம் நேர் மற்றும் மறைமுக வரிகளில் போய்விடுகிறது.

    ReplyDelete
  2. ரோடு போட்டதுக்கு பில் பாஸ் செய்வதற்கே 4லட்சம் லஞ்சம் கேட்கிறானுங்க இதுல கண்ராக்டர் எப்படி ஒழுங்கா ரோடு போடுவான்.

    இவனுங்களை என்ன சொல்வது?

    ReplyDelete
  3. நல்ல வேளை, இந்த பதிவு முதல் அமைச்சர் பார்வைக்கு போகலை. போயிருந்தால் அடுத்த நாள் முரசொலியில் ஒரு சிறப்பு அறிவிப்பு அல்லது கவிதை வந்திருக்கும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ஏத்தி விடையா, தூக்கி விடையா,
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை,
    சாமியே ஐயப்பா, ஐயப்போ சாமியே!

    ReplyDelete
  6. இந்த நிலையைப் பார்த்தும் ஏதும் கோபம்கூட வராமல் செல்லும் மக்களைப் பார்த்தும் கோபம் வரணும். இந்தக் கோபம் எப்போவாவது எங்கேயாவது ஒரு விடிவைக் கொண்டு வராதா ...?

    ReplyDelete
  7. அ தி மு க வின் திட்டமிட்ட சதி

    ReplyDelete
  8. கமிஷன்ல ரோடு போட்டா இப்படித்தான் நடக்கும்..!

    நாலு தடவை அசோக் நகர் மெயின் ரோட்டை தோண்டித்தோண்டி ரோடு போட்டாங்க. இப்ப போய் பாருங்க.. ஒரு பக்க ரோட்டையே காணோம்..!

    அரசியல்வியாதிகள் சொகுசாக காரில் பயணிக்க.. நம் தலைவிதி கீழே விழுந்து எழ வேண்டியிருக்கிறது.

    மூன்று நாட்களில் நான்கு முறை எனது வண்டி குட்டிக்கரணம் அடித்துவிட்டது. எந்த இடத்தில் பள்ளம் என்பதே தெரியாத அளவிற்கு உள்ளது..!

    அது சரி.. உமக்கு ஏன்யா இந்த நிலைமை..? எதுக்கெடுத்தாலும் மைனஸ் குத்து குத்துறாங்க..?

    வலைல பெரிய ஆளாயிட்டா ஜாக்கி..! வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. [[[தருமி said...
    இந்த நிலையைப் பார்த்தும் ஏதும் கோபம்கூட வராமல் செல்லும் மக்களைப் பார்த்தும் கோபம் வரணும். இந்தக் கோபம் எப்போவாவது எங்கேயாவது ஒரு விடிவைக் கொண்டு வராதா?]]]

    ஒருத்தனுக்கு மட்டும் கோபம் வந்து என்ன ஸார் செய்ய..? ஊருக்கே வரணும்.. வராதே.. அந்த தைரியத்துலதான் நம்ம அரசியல்வியாதிகள் மஞ்சள் குளிக்குறாங்க..!

    ReplyDelete
  10. சிங்கார சென்னை நல்லாருக்கா ....

    ReplyDelete
  11. //ஆனால் பள்ளம் இங்கே இருக்கின்றது என்று அறி்விக்க எந்த இடத்திலும் அறிவிப்பு பலகை சென்னை மற்றும் தமிழகத்தில் எங்கும் இல்லையே... //

    அப்படி அறிவிப்பு வைக்க ஆரம்பித்தால் சாலைகளே இருக்காது பலகைகள் மட்டும் தான் இருக்கும்

    ReplyDelete
  12. அந்த நாலாவது புகைப்படத்தை மட்டும் என் பதிவுக்கு அன்பளிக்க முடியுமா?

    ReplyDelete
  13. உக்கிரமான கோபம். அருமையான கருத்துக்கள், உணர வேண்டியவர்களைப் போய்ச் சேரவேண்டும்.

    ReplyDelete
  14. சரியா சொன்னிங்க அண்ணே...
    அடையார் இசை கல்லூரி அதான் அந்த அம்பேத்கர்
    மணிமண்டபம் தாண்டியவுடன் சாலை மிக
    அருமையாக மோசமாக இருக்கின்றன....
    இரு சக்கர ஓட்டிகள் பார்த்து செல்லவும்....

    ReplyDelete
  15. போர்க்கால அடிப்படையில் பதிவு போட்டிருக்கீங்க பார்ப்போம் விடியுதான்னு
    :((

    ReplyDelete
  16. //தலைவர்கள் வீட்டு பக்கம் எல்லாம் எப்படி இருக்கின்றது என்று பார்க்க போனேன்... கோபாலபுரத்து பக்கமும், போஸ்கார்டன் பக்கம் போய் பார்த்தேன் சாலைகளில் தண்ணீர் சிறிதளவுக்கு தேங்கி இருந்தததே தவிர.... சாலைகளில் பள்ளம் எங்கேயும் இல்லை....மிக நேர்த்தியாக இருந்தது...//

    இங்க மட்டும் ரோடு நல்லா இருந்தாலும் திரும்பவும் ரோடு போடுவார்கள்.

    ReplyDelete
  17. செம கோவத்தில எழுதின பதிவு போல இருக்கு

    ReplyDelete
  18. சாலையின் நடுப்பாகம் மேடாகவும், இருபுறமும் ஓரத்தை நோக்கி கீழிறங்கும் விதமாக ஸ்லொப்பும் இருக்க வேண்டும். ஓரத்தில் திறந்த கான்கிரீட் பைப் புதைத்து கிரில் போட்டு மூட வேண்டும். சாலைக்கும் பாதுகாப்பு, மழைநீரையும் சேமித்தாயிற்று. சாலையைப் போடும் போதே இதைச் செய்தால் உபரியாக அஞ்சு பைசா செலவு கிடையாது.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  19. well said. I like the sarcastic comments. Thats all we can do:(

    ReplyDelete
  20. ஆமாண்ணே...
    போனவாரம் பெய்த மழையில் அம்பத்தூரிலிருந்து தினமும் அலுவலகம் சென்று வருவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு..
    அப்புறம் பதிவு.. வழக்கம் போல அதிரடி.. :)

    ReplyDelete
  21. சுந்தர்ராஜன் said

    \\நல்ல வேளை, இந்த பதிவு முதல் அமைச்சர் பார்வைக்கு போகலை. போயிருந்தால் அடுத்த நாள் முரசொலியில் ஒரு சிறப்பு அறிவிப்பு அல்லது கவிதை வந்திருக்கும்\\


    கலக்கல்

    ReplyDelete
  22. Jackie,

    Publish your address as well. I will send some one to 'reward' you.

    I am giving free TVs to keep the people stay at home so that they are safe. who asked you to ride a bike on road.

    Your Amma cleaned the treasury and left nothing for us to steal, we are managing somehow with commissions from free TV, Spectrum band etc.

    Next time amma comes she will try to find new ways to loot.

    Regards,

    bala.

    ReplyDelete
  23. ஜாக்கி,
    மனசில பல எண்ண அலைகள், கோர்வையா எழுத முடியுமான்னு தெரியல, முயல்கிறேன்...

    1. நல்லகண்ணுவைப் போன்றவர்களை ஆட்சியில் அமர்த்தாமல் (அவர் பேரன் சைக்கிளில் கல்லூரி செல்வதையும், அவர் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதையும் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்) நொள்ளைக் கண்ணன்களை ஆட்சியில் வைத்தால் இப்படித்தான் இருக்கும்.

    2.அவர்கள் கவலை அவர்களுக்கு, ஊழல் கேசில் ராஜா மாட்டினால், தங்களை காத்துக் கொள்வது எப்படி, அஞ்சா நெஞ்சனை டில்லியிலேயா வைக்கலாமா இல்ல மாநில அரசியல்ல நுழைய விடலாமா என்று பல அதி முக்கிய விஷயங்கள் இருக்க, மக்களைப் பத்தியெல்லாம் கவலை பட நேரமெங்கே?

    3. எதிர்கட்சித் தலைவி எங்கேன்னே தெரியல, ஆட்சியைப் பிடிக்கறததவிர அவங்க எதப்பத்தியும் கவலைப் படப்போறதில்ல..

    4. பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கிடைத்தால், லஞ்சம் வாங்காம ஏன் சம்பளமே வாங்காம உழைக்க நான் உள்பட எவ்வளவோ இளைஞர்கள் தயார், காண்ட்ராக்டர்கள் கண்ல விரல விட்டு ஆட்டிடுவோம், ஆனால் சத்தியமாக நடக்காது.

    5. வேறு நாட்டுடன் ஒப்பிட்டால், பலருக்கு கோபமும் வரும், நக்கலா பதில் வரும், உண்மை என்னன்னா, மத்த நாடுகள்ல மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து விட்டு காசு அடிப்பார்கள், நம்மூர்ல தனக்கு எடுத்துகிட்டு மிச்சம் இருப்பதுதான் திட்டங்களுக்கு..

    6. எனக்கு இந்தியாவின் மீது பற்றும் நம்பிக்கையும் அதிகம் இருந்தது. இப்போ பற்று மட்டும் அப்படியே இருக்கு, நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சு கிட்டத்தட்ட இல்லாமலே போயிடிச்சு..

    7. மிகப்பெரிய நாடுதழுவிய புரட்சி ஏற்பட்டால் மட்டுமே நிலைமை மாறும், அதுக்கு Chances are slim..

    கனத்த மனத்துடன்
    நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்...

    ReplyDelete
  24. பாஸ்டன் ஸ்ரீராம் ஆதங்கம் அங்கங்கே எனக்கும்.
    இன்று Times Of India முதல் பக்க செய்தியை பாருங்க இதற்கெல்லாம் விடை அங்கிருக்கு ஆனா யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றே தோனுகிறது.
    எனக்கு தெரிந்த வரை சென்னையை வளர்க்கக் கூடாது பக்கத்தில் ஏதாவது துணை நகரம் சரியான முறைப்படி கட்டி பல தொழில்கள் மற்றும் குடியிருப்புகளை கட்டி மக்களை இடம் மாற்றனும் அதன் பிறகு சென்னையை மொத்தமாக மாற்றினால் ஏதோ பிழைக்கலாம் அல்லது புவி சூடேற்றத்தில் கடலுக்கு தாரை வார்க்கலாம்.
    சொல்ல எவ்வளவோ இருக்கு ஆனா பிரயோஜனம் இல்லை,இங்கு எதுவுமே சரியில்லை என்ற எண்ணமே தோன்றுகிறது.
    வடபழனி 100 அடி சாலையில் எதிர் திசையில் வண்டி வரவில்லை என்றால் சாலையை கடக்கும் இரு சக்கர மற்றும் குவாலிஸ் கார்கள்...பல பல.அன்னியன் மாதிரி நான் மட்டும் பச்சை விளக்குக்காக காத்திருந்தால் அடிக்கப்படும் ஒலி காதை கிழிக்க அல்லது மோதிவிடுவது மாதிரி வரும் வாகனங்களில் தப்பிக்க என்னையும் தப்பு செய்ய வைக்கும் சமூகம்...என்ன சொலவது என்றே தெரியவில்லை.வண்டிக்கு பின்னால் உடகார்ந்திருக்கும் என் மகனுக்கு நான் காண்பிக்கும் “வழி” இது தான்.

    ReplyDelete
  25. அண்ணே,செம சாட்டையடி. நல்ல நடை கிண்டல் தொணி
    படங்களும் அருமை.

    வடுவூர் குமாரின் கருத்தும் அருமை.


    வடுவூர் குமார் said...

    பாஸ்டன் ஸ்ரீராம் ஆதங்கம் அங்கங்கே எனக்கும்.
    இன்று Times Of India முதல் பக்க செய்தியை பாருங்க இதற்கெல்லாம் விடை அங்கிருக்கு ஆனா யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றே தோனுகிறது.
    எனக்கு தெரிந்த வரை சென்னையை வளர்க்கக் கூடாது பக்கத்தில் ஏதாவது துணை நகரம் சரியான முறைப்படி கட்டி பல தொழில்கள் மற்றும் குடியிருப்புகளை கட்டி மக்களை இடம் மாற்றனும் அதன் பிறகு சென்னையை மொத்தமாக மாற்றினால் ஏதோ பிழைக்கலாம் அல்லது புவி சூடேற்றத்தில் கடலுக்கு தாரை வார்க்கலாம்.
    சொல்ல எவ்வளவோ இருக்கு ஆனா பிரயோஜனம் இல்லை,இங்கு எதுவுமே சரியில்லை என்ற எண்ணமே தோன்றுகிறது.
    வடபழனி 100 அடி சாலையில் எதிர் திசையில் வண்டி வரவில்லை என்றால் சாலையை கடக்கும் இரு சக்கர மற்றும் குவாலிஸ் கார்கள்...பல பல.அன்னியன் மாதிரி நான் மட்டும் பச்சை விளக்குக்காக காத்திருந்தால் அடிக்கப்படும் ஒலி காதை கிழிக்க அல்லது மோதிவிடுவது மாதிரி வரும் வாகனங்களில் தப்பிக்க என்னையும் தப்பு செய்ய வைக்கும் சமூகம்...என்ன சொலவது என்றே தெரியவில்லை.வண்டிக்கு பின்னால் உடகார்ந்திருக்கும் என் மகனுக்கு நான் காண்பிக்கும் “வழி” இது தான்.

    மிகவும் யோசிக்க வைத்த பின்னூட்டம்.ஓட்டுக்கள் போட்டாச்சு

    ReplyDelete
  26. வெளி நாடு வந்ததுக்கப்பறம்தான் தெரிஞ்சது இது நாள் வரைக்கும் ரோடுங்குற பேருல ஏதோ போட்டு ஏமாத்திட்டு இருந்திருக்காங்கன்னு.

    சென்னையில் மட்டுமல்ல தமிழ் நாடு முழுக்க இதுதான் கதி. இதில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றமில்லை. ஏன்னா ஊழலும் , லஞ்சமும் நம்ம ரத்தத்தில் ஊறிப்போச்சு.

    அப்படியே எதாவது ரோடு, பூங்கான்னு உருப்படியா செஞ்சாலும் அதைத்தான் நாம உடைச்சிடுவோமே.

    ReplyDelete
  27. Dear J

    As I said long back...you post always reflect my inner feelings.

    Don't know when our people will wake up to teach lesson to these stupid (Ba......d) politicians and corrupt government officers.

    My stomach is burning to see all these things.

    Here in UAE....there is no road tax...but all road are in excellent condition and have good sign boards. If there is even one inch of water standing on roads due to any reason....they will remove that with tanker. Police and Road Transport people will work like any thing...

    Hmmmmm think India is lagging at least 10 to 15 years behind other developed countries.

    Sarri...vedunga boss...BP will rise and Indian Thatha feeling will come up. (aathan boos kola verri varuthu)

    Just now I saw 2012 film....good film it can be added in பார்த்தே தீர வேண்டிய படங்கள்

    ReplyDelete
  28. வாழ்க திராவிட ஆட்சி,தமிழனின் ஆட்சி,வாழ்க மாநில சுயாட்சி,ரொம்ப நல்லாவே வாழ்க மத்தியில் கூட்டாட்சி.

    இந்தி எனும் அரக்கியை ஒழிக்கிறோம் எனும் போர்வையில்,தமிழனை காத்திட பார்ப்பனர்களை எதிர்க்கிறொம் என சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களின் லட்சனம் இதுதான்.
    தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள்

    மாதம் 45 ரூபாய்க்கு பெரியாரின் பத்திரிக்கையில் வேலை பார்க்க வந்த கருனாநிதி இன்றைக்கு தமிழக முதல் கோடீஸ்வரன் என்றால்?

    ReplyDelete
  29. kovatha koti ezhudharathuku words ungaluku enga irundhu than kedaikudho.. nalla serupala adicha mathiri iruku..

    ivlo nalla ezhudhareenga, neenga politics-la enter agalam la??

    nice post..

    ReplyDelete
  30. நன்றி கலை மிக்க நன்றி தொடர் பின்னுட்டத்திற்க்கு

    ReplyDelete
  31. /நல்ல சாலைகள் மற்றும் குடிக்க குடிநீர் இதுதானே

    ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்குள வரி கட்டும் போது இந்த வயித்தெரிச்சல் தாங்க எனக்கு. சம்பாதிக்குறதுல 70 சதவிகிதம் நேர் மற்றும் மறைமுக வரிகளில் போய்விடுகிறது.//

    பின்னோக்கி நன்றி தொடர் வாசிப்புக்கும் பின்னுடத்திற்க்கும்..

    நான் உங்களை திட்டவில்லை அது என்ன என்று பார்த்திர்காளா?,??

    ReplyDelete
  32. ரோடு போட்டதுக்கு பில் பாஸ் செய்வதற்கே 4லட்சம் லஞ்சம் கேட்கிறானுங்க இதுல கண்ராக்டர் எப்படி ஒழுங்கா ரோடு போடுவான்.

    இவனுங்களை என்ன சொல்வது?//

    தமிழ் நாட்ல ரோடு காண்டிராக்ட் எடுத்தவனுங்க எல்லாம் எவ்வளவு சொத்து சேர்த்து வச்சி இருக்கானுங்க தெரியுமா?????

    ReplyDelete
  33. நல்ல வேளை, இந்த பதிவு முதல் அமைச்சர் பார்வைக்கு போகலை. போயிருந்தால் அடுத்த நாள் முரசொலியில் ஒரு சிறப்பு அறிவிப்பு அல்லது கவிதை வந்திருக்கும்.//
    நன்றி வக்கில் உங்கள் முதல் வருகைக்கு..

    உங்களை கிழக்கு பதிப்பகம் வாசல்ல பார்த்து கடைசியா என்ன நான் சொல்வது சரிதானே???

    ReplyDelete
  34. ஏத்தி விடையா, தூக்கி விடையா,
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை,
    சாமியே ஐயப்பா, ஐயப்போ சாமியே//
    நன்றி பிளாக் பாண்டி

    ReplyDelete
  35. இந்த நிலையைப் பார்த்தும் ஏதும் கோபம்கூட வராமல் செல்லும் மக்களைப் பார்த்தும் கோபம் வரணும். இந்தக் கோபம் எப்போவாவது எங்கேயாவது ஒரு விடிவைக் கொண்டு வராதா ...?//
    என்னசொல்லறிங்க தருமி நாம எல்லாம் அதுக்கு பழகி எவ்வளவோ நாளாச்சு..

    நாம எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ல....

    ReplyDelete
  36. அ தி மு க வின் திட்டமிட்ட சதி//
    உண்மைதான் ராஜா...

    ReplyDelete
  37. மூன்று நாட்களில் நான்கு முறை எனது வண்டி குட்டிக்கரணம் அடித்துவிட்டது. எந்த இடத்தில் பள்ளம் என்பதே தெரியாத அளவிற்கு உள்ளது..!

    அது சரி.. உமக்கு ஏன்யா இந்த நிலைமை..? எதுக்கெடுத்தாலும் மைனஸ் குத்து குத்துறாங்க..?

    வலைல பெரிய ஆளாயிட்டா ஜாக்கி..! வாழ்த்துக்கள்..//
    நன்றி உண்மை தமிழன்..

    யாரோ ஒரு நல்லவன் குருப் மைனஸ் ஓட்டா குத்தி தள்ளுது...

    ReplyDelete
  38. சிங்கார சென்னை நல்லாருக்கா ....// ரொம்ப கேவலமா இருக்கு ஸ்டார்ஜன்

    ReplyDelete
  39. அப்படி அறிவிப்பு வைக்க ஆரம்பித்தால் சாலைகளே இருக்காது பலகைகள் மட்டும் தான் இருக்கும்//

    உண்மைதான் சங்கர் அப்புறம் வலைஞ்சி வண்டி ஓட்டனும்

    ReplyDelete
  40. உக்கிரமான கோபம். அருமையான கருத்துக்கள், உணர வேண்டியவர்களைப் போய்ச் சேரவேண்டும்// நன்றி சரவணகுமார்...

    ReplyDelete
  41. ரியா சொன்னிங்க அண்ணே...
    அடையார் இசை கல்லூரி அதான் அந்த அம்பேத்கர்
    மணிமண்டபம் தாண்டியவுடன் சாலை மிக
    அருமையாக மோசமாக இருக்கின்றன....
    இரு சக்கர ஓட்டிகள் பார்த்து செல்லவும்....//

    ஜெட்லி ந சொன்ன இடத்தை நைட்டு கிராஸ் பண்ணேன்.. ரோடு புல்லா ஒரே ஸ்பீட் பிரேக்...

    ReplyDelete
  42. போர்க்கால அடிப்படையில் பதிவு போட்டிருக்கீங்க பார்ப்போம் விடியுதான்னு
    :((//

    சிவா அப்படி விடிஞ்சா அது சொர்கமான நாடு..

    ReplyDelete
  43. வோட்டு போட்டதற்க்கு மிக்க நன்றி செந்தழல்ரவி..

    ReplyDelete
  44. இங்க மட்டும் ரோடு நல்லா இருந்தாலும் திரும்பவும் ரோடு போடுவார்கள்.//

    உண்மை வரதன் அவர்கள் தலைவர்கள் அல்லவா?

    ReplyDelete
  45. செம கோவத்தில எழுதின பதிவு போல இருக்கு//

    உண்மைதான் யோ...

    ReplyDelete
  46. பதிவுக்கு சம்பந்தமில்லாதது.
    http://biskothupayal.blogspot.com/2009/11/blog-post_12.html

    ReplyDelete
  47. பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க

    ReplyDelete
  48. ஜாக்கி, இது நியாயமா?
    நானும் வடுவூர் குமாரும் கை வலிக்க இத்தனாம் பெரிய (பதிவு சைசுக்கு) பின்னூட்டம் போட்டோம், நீ அதுக்கு ஆமான்னு ஒரு ஒத்த வார்த்தை பதில் கூட சொல்லலியே??
    என்றும அன்புடன்
    நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  49. சாலையின் நடுப்பாகம் மேடாகவும், இருபுறமும் ஓரத்தை நோக்கி கீழிறங்கும் விதமாக ஸ்லொப்பும் இருக்க வேண்டும். ஓரத்தில் திறந்த கான்கிரீட் பைப் புதைத்து கிரில் போட்டு மூட வேண்டும். சாலைக்கும் பாதுகாப்பு, மழைநீரையும் சேமித்தாயிற்று. சாலையைப் போடும் போதே இதைச் செய்தால் உபரியாக அஞ்சு பைசா செலவு கிடையாது. //


    ஜவஹர் நீங்க சொன்னது போல் செய்தால் காண்டிராக்ட்காரர்கள் பொழைப்ப முடியாது அல்லவா... போட்டை ரோட்டை வெட்டி அதுல இண்டர்நெட் கேபிள் போடறதுல நம்ம அளுங்க கில்லாடிங்க...

    ReplyDelete
  50. well said. I like the sarcastic comments. Thats all we can do:///

    நன்றி கெளரி என்ன செய்வது...???

    ReplyDelete
  51. ஆமாண்ணே...
    போனவாரம் பெய்த மழையில் அம்பத்தூரிலிருந்து தினமும் அலுவலகம் சென்று வருவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு..
    அப்புறம் பதிவு.. வழக்கம் போல அதிரடி.. :)///

    இந்த பதிவுக்கு வந்த பின்னுட்டத்தில் இருந்தே நீ தெரிந்து கொள்ளலாம் எத்தனை பேர் வெறுப்பேறி இருக்ாகங்கன்னு நன்றி மணி...

    ReplyDelete
  52. சுந்தர்ராஜன் said

    \\நல்ல வேளை, இந்த பதிவு முதல் அமைச்சர் பார்வைக்கு போகலை. போயிருந்தால் அடுத்த நாள் முரசொலியில் ஒரு சிறப்பு அறிவிப்பு அல்லது கவிதை வந்திருக்கும்\\


    கலக்கல்//

    நன்றி முரளி மிக்க நன்றி தங்கள் தொடர் வருகைக்கு

    ReplyDelete
  53. Jackie,

    Publish your address as well. I will send some one to 'reward' you.

    I am giving free TVs to keep the people stay at home so that they are safe. who asked you to ride a bike on road.

    Your Amma cleaned the treasury and left nothing for us to steal, we are managing somehow with commissions from free TV, Spectrum band etc.

    Next time amma comes she will try to find new ways to loot.

    Regards,

    bala.//


    உண்மைதான் பாலா இவுங்கல மாத்தி அவுங்க... அவுங்கல மாத்தி இவுங்க... இதுல யாராவது ஒருத்தர் நல்லா இருந்து இருந்தாலும் நம்ம தெரு சுத்தமா இருந்து இருக்கும்...

    ReplyDelete
  54. ஜாக்கி,
    மனசில பல எண்ண அலைகள், கோர்வையா எழுத முடியுமான்னு தெரியல, முயல்கிறேன்...//

    மன்னிக்கனும் ஸ்ரீ.. கலையில ஒரு பதிவி போட்டுட்டு கொஞ்சம் வேலை இருந்திச்சு நடுவுல கொஙசம் நேரம் கிடைச்சது...

    அதுல கொஞ்சம் பேருக்கு பதில் போட்டேன்.. அப்புறம் வெளிய போயிட்டு இப்பதான் வீட்டுக்கு வரேன்.. அதான் உடனே பதில் போட முடியலை...

    இந்தியன் படத்துல சுஜாதா எழுதி இருப்பார்... அங்க கடமையை மீறுறதுக்குதான் லஞ்சம் கேட்பான்.. இங்க கடமையை செய்யவே லஞ்சம் கேட்குறான்னு .. அது உண்மைதான்...
    வேற நாட்டோ ஒப்புமை கொள்ள அவர்கள் சொல்லும் காரணம் மக்கள்தொகைதான்...

    மக்கள்தொகை அதிகத்துக்கும் நல்லா சாலை பராமரிப்புக்கும் என்ன பிரச்சனை????.. அது இங்க பல பேருக்கு புரியறதே இல்லை//

    அதே போல் இதுல ரெண்டு கட்சியுமே.. சரி இல்லை... அதே போல் தவறை இடிந்துறைக்க சரியான எதிர்கட்சியும் இல்லை..

    நேர்மையான பல பேர் கொஞ்சம் சம்பளத்துக்கு.. நாயா உழைக்க ரெடிதான்...
    அப்படி அது போல் வந்துட்டா... வட்டம் மாவட்டடம் எல்லாம் இன்னும் சைக்கிள்ள இல்லை போயாகனும்???

    நன்றி ஸ்ரீ ஆதங்கத்தை கொட்டியதற்க்கு

    ReplyDelete
  55. அன்னியன் மாதிரி நான் மட்டும் பச்சை விளக்குக்காக காத்திருந்தால் அடிக்கப்படும் ஒலி காதை கிழிக்க அல்லது மோதிவிடுவது மாதிரி வரும் வாகனங்களில் தப்பிக்க என்னையும் தப்பு செய்ய வைக்கும் சமூகம்...என்ன சொலவது என்றே தெரியவில்லை.வண்டிக்கு பின்னால் உடகார்ந்திருக்கும் என் மகனுக்கு நான் காண்பிக்கும் “வழி” இது தான்//

    வடுவூர் குமார்.. உங்கள ஆதங்கத்தை கொட்டியதற்கு என் நன்றிகள்...

    அதில் கடைசி பரா என்னை ரொம்ப யோசிக்க செய்து விட்டது...

    என் பின்னால் உட்கார்ந்து இருக்கும் பிள்ளைக்கு நான் காட்டும வழி இதுதான்...

    என்ன செய்வது.. சமுகம் அப்படித்தான் அதன் சுயநலத்துக்கு மாறிக்கொண்டே இருக்கின்றது...

    நன்றி

    ReplyDelete
  56. நன்றி கார்த்தி மிக்க நன்றி தொடர் பின்னுட்டத்துக்கும் ஓட்டுக்கும்...

    ReplyDelete
  57. வெளி நாடு வந்ததுக்கப்பறம்தான் தெரிஞ்சது இது நாள் வரைக்கும் ரோடுங்குற பேருல ஏதோ போட்டு ஏமாத்திட்டு இருந்திருக்காங்கன்னு.//

    அக்பர் சரியா சொன்னிங்க..

    நான் பார்த்த உலக சினிமாக்கல்ல எந்த ரோட்டுலயும் இது போல் பள்ளத்தை நான் பார்த்து இல்லை..

    யாருமே இல்லாத அல்லது வாழாத சமவெளியில போட்டு இருக்குற ரோடு கூட பக்காவா போட்டு இருப்பாங்க.. அனா இங்க சிட்டியிலேயே... ரொம்ப கொடுமையா இருக்கு.. அப்ப கிராமத்து ஜனங்களை யோசிச்சு பாருங்க..???

    ReplyDelete
  58. As I said long back...you post always reflect my inner feelings.

    Don't know when our people will wake up to teach lesson to these stupid (Ba......d) politicians and corrupt government officers.


    நன்றி ராஜ் தொடர் பின்னுட்டத்துக்கு..தொடர் பாராட்டுக்கும் நிச்சயம்..2012 படம் பார்க்கின்றேன்..

    நிறைய விஷயங்கள் நம் அலைவரிசை ஒத்து போவதில் எனக்கு மகிழ்ச்சியே...

    ReplyDelete
  59. ஜாக்கி, இது நியாயமா?
    நானும் வடுவூர் குமாரும் கை வலிக்க இத்தனாம் பெரிய (பதிவு சைசுக்கு) பின்னூட்டம் போட்டோம், நீ அதுக்கு ஆமான்னு ஒரு ஒத்த வார்த்தை பதில் கூட சொல்லலியே??
    என்றும அன்புடன்
    நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்//

    நியாயம் இல்லைதான் காலையில் வெளியே போயிட்டு... நடு நடுவுல நேரம் கிடைக்கும் போது பதில் போட்டு கொண்டு இரந்த காரணத்தால் அப்படி நிகழ்ந்து விட்டது..

    நன்றி நண்பா..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner