பொதுவாக சென்னையில் காதலர்கள் சந்தித்து பேச சரியான இடம் இல்லை என்பேன்...முன்பு போல் இப்போது எல்லாம் காதலர்கள் பேசுவது மட்டும் இல்லை... அடுத்த படியாக முத்தம், கழுத்துக்கு கீழே கை என்று போய் வெகு நாட்கள் ஆகிவிட்டது...
மீடியாவி்ன் ஆதிக்கம் அதிகமானாதால் இப்போது வளரும் பருவத்தினரின் மனக்கட்டமைப்பு மாறி போய் விட்டது...கடந்த பத்து வருடங்களில் எல்க்ட்ரானிக் மீடியாவின் அசுர வளர்ச்சியே இதற்கு காரணம்...
உலகமயமாக்கல் பல துறைகளில் வேரூன்ற காதல் மட்டும் என்ன பாவம் செய்தது... அது பரிமாணம் பெற்றுவிட்டது... என்ன... கலாசச்சார முகமூடியால் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி போய் கிடக்கின்றது... அதை கட்டுடைத்து வெளிவர நாள் நேரம் பார்க்காமல் மெல்ல மெல்ல வந்து கொண்டு இருக்கின்றது...
முன்பெல்லாம் பெண்கள் உள்ளே போடும் பிரா பட்டை வெளியே தெரிந்தாலே.. சட்டென மனம் தந்தி அடிக்கும்.. மனம் கிளர்ச்சி கொள்ளும்... சட்டென நம் தலையில் தட்டி கொண்டு ... தெரியாத பெண்ணாக இருந்தாலும் செய்கையில் நாம் உணர்த்தினால் அவள் சரி செய்து கொண்டு ஒரு நன்றி பார்வை வீசுவாள்.. இப்போது எல்லாம் என்ன சமாச்சாரம் உள்ளே என்பதை அறிவிப்பது போலான உடை சர்வசாதாரணமாகிவிட்டது...
ஆணும் இப்போது பர பரவெனமாறிவிட்டான்... காதலித்து மேட்டர் முடித்து, காதலித்து மேட்டர் முடித்து, அதே போல் பெண்களும்....ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும்... இன்னும் ஒழுக்கமான காதலும், பெண்களும் ,ஆண்களும் மிக டிசன்டாக காதலி்த்தபடி இருக்கின்றார்கள்...
மனதை கட்டு படுத்த முடியாதவர்கள்.. மகாபலிபுரம் சவுக்கு தோப்பு,பூங்கா புதர், என்று மறைவிடம் நோக்கி போகின்றார்கள்...
சென்னையில் ஒரு சாலை இருக்கின்றது... சரியாக பதினெட்டு கிலோமீட்டர் நீளம்...பெரிதான வாகன போக்குவரத்து அதிகம் இல்லை...லாரிகள் மற்றும் கார்கள் மட்டும் அதிகம் பயண்படுத்தபடும் சாலை அது... ஆறு மணிக்கு மேல் அந்த சாலையில் விளக்கு இருக்காது.. வரும் வாகனங்களின் வெளிச்சம்தான்...
பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் கிண்டி விழியாக செல்லாமல்...மதுரவயல் செல்லும் அந்த சென்னையின் வெளிவட்டசாலைதான் அது...வாகனங்கள் சீறி பாய்ந்து செல்லும் டபுள் ரோடு அது...
பெருங்களத்தூரில் இருந்து...
விருகம்பாக்கம்,வளசவாக்கம் வர... நாம் எப்போதும்....தாம்பரம் வழியாக வந்து குரோம்பட்டை, பல்லாவரம்,கிண்டி , அசோக்நகர், கே கேநகர், விருகம்பாக்கம் ,வளசரவாக்கம்... வர வேண்டும்...இந்த விழியில் அதிகமான போக்குவரத்து மற்றும் சிக்னல்கள்.. டூவிலரில் வர ஒன்றரை மணிநேரம் எப்படியும் அகி விடும்... ஆனால் வளசரவாக்கத்தில் இருந்து போரூர் போய் இந்த டபுள் ரோட்டை பிடித்தால் அரை மணி நேரத்தில் பெருங்களத்தூர்....
அதனால் நான் பெருங்களத்தூர் செல்ல இந்த சாலையைதான் தேர்ந்து எடுப்பேன்... அதன் வாகன நெரிசலற்ற போக்குவரத்து... என்னை அதிகம் கவரும்...
பெருங்களத்தூரில் என் மனைவியின் அத்தை வீடு இருக்கின்றது... அங்கு இரவு உணவை முடித்து குசாலம் எல்லாம் விசாரித்து கிளம்ப கொஞ்சம் நேரம் ஆயிற்று... மணி இரவு பத்து... தாம்பரம் வழியாக சென்றால் லேட் அகும் என்பதால்... நான் மதுரவயல் பைபாசை தேர்ந்து எடுத்தேன்... அந்த சாலை பற்றியும் அதன் தனிமையும் எனக்கு தெரியும் இருந்தாலும்.. எதாவது ஒரு லாரிக்கு முன்னால் அதன் வெளிச்சத்தில்....சென்று கொண்டே இருக்கலாம் என்று நினைத்து போக... அந்த நேரத்தில் எந்த லாரியும் வரவில்லை... சரி என நானும் என் மனைவியும் பைக்கில் வேகம் எடுத்து செல்கையில்....ரிவர்யூ மீரரில் அந்த இரண்டு தடிப்பயல்களை பார்த்தேன்...ரோட்டில் வாகனத்தில் அளப்பறை செய்த கொண்டு வந்தார்கள்... நல்ல போதை என்பது தெரிந்து போயிற்று.. நான் எனது வண்டியை வேகம் எடுக்க அவர்களும் வேகம் எடுத்து எங்கள் வண்டி அருகில் மோதுவது போலும், நிறுத்துமாறும் செய்கை செய்ய செய்து கொண்டு இருக்க... ஒரு வேனும் ஒரு லாரியும் முன் சென்று கொண்டு இருக்க நான் வேகம் எடுத்து அதன் முன் சென்று விட அதன் பிறகு அவர்களை கானோம்... என் மனைவி கொஞ்சம் பயந்து விட்டாள்....
அதிலிருந்து இரவு பத்துக்கு மேல் இரவு பயணத்தை அந்த சாலையில் தவிர்த்துவிட்டோம்...இரவு வருவதாய் இருந்தால் தாம்பரம் வழியாகவே வருகின்றோம்.. ஆனால் மாலையில் அந்தி சாயும் வேலையில் அந்த பக்கம் எப்போதாவது போகும் போது... இப்போதெல்லாம் பின்னால் உட்கார்ந்து இருக்கும் பெண் முழுதாய் வண்டி ஓட்டும காதலனைஅனைத்த படி மெதுவாய் செல்கின்றார்கள்... அந்த வாகனம் 20 அல்லது 30 கீலோமீட்டா வேகத்தில்தான் செல்கின்றது. அதற்கு நடந்தே போய் விடலாம்...
அந்த சாலையின் பிரச்சனைகள்....
1.பதினெட்டு கிலோமீட்டருக்கு இரவில் விளக்கு இருக்காது...
2. காதல் போதையில் பெட்ரோல் போட மறந்து விட்டால்.... நடராஜா சர்விஸ்தான்...
3.தாம்பரம் அருகில் ஒரு பெட்ரோல் பங்கு உள்ளது.
4. பஞ்சர் ஆனால் எந்த இடத்திலும் கடை கிடையாது..
5. இவ்வளவு ஏன் அந்த சாலையில் ஒரு டீக்கடை கூட கிடையாது....
6.மழைவந்தால் எங்கேயும் ஒதுங்க முடியாது...
இப்படி பட்ட சாலையில் சமீபகாலமாக இரு சக்கர வாகனத்தில் பல காதலர்களை இப்போது பார்க்கின்றேன்... பொதுவாக புறநகர் கல்லூரி மாணவ மாணவிகளை பார்க்கின்றேன்...
போலிஸ் வாகனம் எப்போதாவது அந்த வழியாக கிராஸ் ஆகின்றது.... அந்த யாருமற்ற தனிமை...பல இளவட்டங்கள் தண்ணி அடித்து ஆட்டம் போட அந்த வழி ஏதுவாக இருக்கின்றது..... அந்த சாலைகளை இப்போது பல குடும்பத்தினர் பயண்படு்த்த ஆரம்பித்து விட்டார்கள்... வாகனங்கள் விரைவாய் செல்லும் சாலை இது....
இருப்பினும் காதலர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்வேன்... அந்த வழி வேண்டாம்...பாதுகாப்பு ரொம்ப குறைவாக இருக்கின்றது...குடும்பஸ்தர்களுக்கு ஒரு எச்சரிக்கை... குழந்தைகள்.. மனைவியுடன் அந்த வழியே இரவில் செல்ல வேண்டுமாயின்.. அந்த பாதையை தவிர்த்து விட்டு ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பாதையை தேர்ந்து எடுங்கள்.. வண்டி பஞ்சர் ஆனால் அவ்வளவுதான்...
மூன்று மாதங்களுக்கு முன் கூட பெருங்களத்தூரில் இருந்து அந்த வழியாக இரவு7 மணிக்கு அந்த சாலையில் நான் வந்து கொண்டு இருந்த போது.. திருநீர்மலை அருகில் அந்த கைனட்டிக்ஹோண்டாவை பார்த்தேன்...
அந்த பெண் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்தாள்... பின்னால் அவளை கட்டி பிடித்தபடி அவன் உட்கார்ந்து இருந்தான்...எனது வாகனத்தின் வெளிச்சம் அவனின் மேல் பட்டும் அந்த பெண் மீது இழைந்து கொண்டு இருப்பதை அவன் நிறுத்தவில்லை... அவர்களை கடக்கையில் நான் பார்த்தேன்... அவள்தலை அநியாயத்திற்க்கு கலைந்து போய் இருந்தது... பின்னால் உட்கார்ந்து இருந்தவனின்.. ஒரு கை அந்த பெண்ணின் இடு்ப்பிலும்.. ஒரு கை சுடிதார்.......................................................... இருந்தது... எப்படியும் அந்த பெண் அவள் வீட்டில்... ஸ்பெஷல் கிளாஸ் என்று சொல்லிவிட்டு வந்து இருக்கும்...ஸ்ஸஸஸஸ் பெஷல் கிளாஸ்தான் அந்த பெண் அட்டென்ட் செய்து கொண்டு இருந்தது... பட் எதாவது ஒரு தண்ணி அடிச்ச குருப் பார்த்தா... அந்த பெண்ணை தேவிடியா ரேஞ்சுக்கு...சுத்தி வளைச்சி முழு துணியை அவுக்க வச்சிடுவானுங்க...
தயவு செய்து பெண்கள் காதல் போதையில் காதலருடன்.. தனிமையான இடம் செல்வதை தவிருங்கள்...
நான் அவர்களுக்கு இந்த சாலை பற்றி எச்சரிக்கலாம் என்று நினைத்தேன்... இந்த நேரத்தில் யார் சொன்னாலும் அவர்கள் காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள் என்பதாலும்... நம்மை கரடி ரேஞ்சுக்கு நினைப்பார்கள் என்பதாலும் நான் வந்து விட்டேன்...
அந்த பையன் எப்படியாவது எதையாவது செய்து விட்டு தூங்கினாலும்... அந்த பெண் நிச்சயம் அந்த இரவில் தூங்கி இருக்கமாட்டாள் என்பது மட்டும் நிச்சயம்...
(புகைபடங்கள்... ஜாக்கிசேகர்)
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
//நான் அவர்களுக்கு இந்த சாலை பற்றி எச்சரிக்கலாம் என்று நினைத்தேன்... இந்த நேரத்தில் யார் சொன்னாலும் அவர்கள் காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள் என்பதாலும்... நம்மை கரடி ரேஞ்சுக்கு நினைப்பார்கள் என்பதாலும் நான் வந்து விட்டேன்...//
ReplyDeletetrue.
நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க....புரியிரவங்களுக்கு புரிஞ்சா சரிதான்...! நீங்கள் சொல்லும் அந்த சாலையில் நானும் பயணித்திருக்கிறேன்....சாலையோரத்திலேயே இரு சக்கர வாகனகளை நிறுத்தி விட்டு பீர் பாட்டல்களுடன் நின்றிருந்த சில பேரை அப்போது பார்த்தேன்....போலீஸ் அங்கு செல்லும் வேற்று மாநில லாரிகளை மடக்க மட்டுமே அவ்வப்போது வருகிறார்கள்.
ReplyDeleteஇந்த சாலையை சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் ஒருமுறை பயன்படுத்தி இருக்கிறேன், அன்று கண்ட காட்சிகள் இன்று வரை அங்கு செல்வதை தவிர்க்க வைக்கின்றன
ReplyDelete/மனதை கட்டு //படுத்து// முடியாதவர்கள்.. மகாபலிபுரம் சவுக்கு தோப்பு,பூங்கா புதர், என்று மறைவிடம் நோக்கி போகின்றார்கள்//
ReplyDelete???????
மிக முக்கியமான ,அவசியமான பதிவு ... அனைவரையும் சென்றடைய வேண்டும்,!
ReplyDeletegood post jackie!...keep going!
ReplyDeletehttp://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=77
ReplyDeleteகோவை மாநகராட்சி வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இட மென்றும் பாராமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர் களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.
கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சி சாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.
ஒழுங்கீன செயல்கள்:
வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள் கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண் பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.
மாணவர்கள் "கட்':
வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.
கஞ்சா ஆசாமிகள்:
கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித் துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி., பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
ஆசிரியை ஆவேசம்:
வ.உ.சி., பூங்காவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்திருந்த ஆசிரியை கூறியதாவது: வ.உ.சி., பூங்கா மட்டுமின்றி, மிருகக் காட்சி சாலை வளாகத்திலும் சிலர் ஜோடி, ஜோடியாக அமர்ந்துள்ளனர். பலரும் தங்களை கவனிப்பார்களே, என்ற கூச்சம் கூட அவர் களிடம் இல்லாதது கவலை அளிக்கிறது. மிருகங்களை பார்வையிட பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்தால், இது போன்ற ஜோடிகள் தான் அதிகம் இருக்கின்றனர். இவர்களை பிள்ளைகள் வேடிக்கை பார்த்தபடி செல்லும் போது, நாங்கள் கண்டித்து அவர்களின் பார்வையை திசைதிருப்ப வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, கோவை மாநகராட்சி நிர்வாகம், கூடுதல் காவலாளிகளை நியமித்து கண்காணிக்கலாம். சில்மிஷ செயலில் ஈடுபடுவோரை, பார்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது, பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, ஆசிரியை தெரிவித்தார்
இந்த வாரம் சாலை வாரமா ?.
ReplyDeleteபடம் நல்லாயிருக்கு. மழையில் நனைந்த சாலைகள்.
Really disturbing!. You should add one more locality in the list... CHILDRENS' PARK. Nobody in their good senses will take their children here.
ReplyDeleteNantri
ReplyDeletehttp://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=Chennai+Bypass+Rd&sll=12.939653,80.114708&sspn=0.042495,0.055189&ie=UTF8&hq=&hnear=Chennai+Bypass+Rd,+Tamil+Nadu,+India&ll=12.976122,80.123978&spn=0.084977,0.110378&t=h&z=13
ReplyDeleteநீங்கள் சொன்ன சென்னை பைபாஸ் ரோட்டின் கூகிள் மேப் முகவரி. அனைவரும் அண்ணன் சொன்னது போல இந்த ரோட்டில் செல்லும் போது எச்ச ரிக்கை உடன் செல்லவும்.
nice post but atleast for this post, you could have removed that actress side sex y photo.
ReplyDeleteநல்ல பகிர்வு...
ReplyDeleteவாங்க அண்ணா , உங்க அத்தை வீடு பெருங்கலதூரா , என் பாட்டி, சித்தி , அத்தை மாமா வீடு, பூர்வீகமே அங்குதான். ஒரு முறை நானும் என் தங்கையும், நீங்கள் சொன்ன பாதையில் சென்றுரிக்கிறோம் , தாங்கள் சொன்னது அத்தனையும் உண்மை...இன்னொன்று லாரிகள் அதி வேகத்துடன் வரும்...இதை படித்தாவது சிலராவது சுதாரிதார்கள் என்றால் நல்லது....
ReplyDeleteஇநோன்று..அந்த சாலையின் ஓரத்திலே இருக்கும் சேலையூர் நண்பர் சொன்ன தகவல், அங்கு வழிப்பறி அதிகமாக நடக்கிறதாம், முக்கியமாக காதலர்களை குறி வைத்து..
ReplyDeleteஅண்ணே,
ReplyDeleteநல்ல சமூக விழிப்புணர்வு கட்டுரை,
இந்த ரோட்டில் லாரி ரேஸும் லீவு நாட்களில் ஆட்டோ ரேஸும் நடக்கும்.
காரில் போவதற்கு ஏற்றது, இளம் ஜோடிகளுக்கு இரவில் உகந்ததல்ல.
இன்னொரு முறை அந்த சாலையில் அண்ணியுடன் இரவில் போகாதீங்க
ஓட்டுக்கள் போட்டாச்சி
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
ReplyDeleteதமிழ்நெஞ்சம்
நியாயமான வருத்தம். காதலிக்கிறவங்க வீட்டுல பேசி காலாகாலத்துல கல்யாணம் பண்ணிகிட்டா இந்த மாதிரி வெளியிடம் தேடி அலையவேண்டாம்.
ReplyDeleteஅய்யா சமுதாய விழிப்புணர்வு சிங்கம் ஜாக்கி,
ReplyDeleteஉங்களோட பழைய பதிவிற்கும் சேர்த்தே இந்த பின்னூட்டம்.
நானும் பல நாடுகள் சுற்றி உள்ளேன். நம்ம ஊரில் சாலை வீணாவது போல் வேறு எங்கும் காணோம். காரணம் ஊழல் மற்றும் வேலை தரக்குறைவு. மனிதன் குறைந்த முயற்சியில் பெரிய வெற்றி காண துடிகிறான். கீழ் மட்டத்திலிருந்து மேல் வரை ஊழல் ஒரு சங்கிலி தொடர் போல் நடக்கிறது.
ஊழல் அழியும் என்று நினைத்தால் அது மேலும் வளர்த்துள்ளது. காசுக்கும் சாராயத்திற்கும் ஓட்டு போடும் மக்கள் உள்ளவரை ஊழல் ஒழியாது. சாலையும் சரியாகாது.
நான் ஒரு முறை பகலில் சென்னை புறவழி சாலை வழியாக சென்றுள்ளேன். சாலை மிக அருமை. ஆனால் சுங்கமும் அதிகம். பாதுகாப்பும் குறைவு (இரவில்). கி.க சாலையும் இது போல் தான். அங்கு வழிபறி மிக அதிகம் என்று கேள்விப்பட்டுள்ளேன். அங்கே பல குற்ற்றங்கள் மானம் கருதி (போன பின்) புகார் செய்யப்படாமல் போயுள்ளன.
மக்கள் சில சமயம் சமுதாயத்தை மதிப்பதில்லை. சமுதாயமும் சிலசமயம் சட்டத்தை மதிப்பது இல்லை. அதனால் சட்டம் அதன் கடமையை ஆற்ற முடியாமல் போய்விடுகிறது. குற்றம் வளர்கிறது. குற்றவாளியும் ஜாலியாக அடுத்த குற்றத்திற்கு தயார் ஆகிறான். என்னை பொருத்தவரை மக்களே முதல் குற்றவாளி.
நான் இந்த 12 Rounds படத்தை பார்க்கவில்லை. பார்க்க தூண்டிவிட்டுள்ளீர்கள். DVD யை தேடிக்கொண்டுள்ளேன்.
வணக்கம்,
பாலா.
+2347034184824
+91 9486457303 (சீக்கிரம் ஊருக்கு வரவுள்ளேன் Dec 02 )
/நான் அவர்களுக்கு இந்த சாலை பற்றி எச்சரிக்கலாம் என்று நினைத்தேன்... இந்த நேரத்தில் யார் சொன்னாலும் அவர்கள் காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள் என்பதாலும்... நம்மை கரடி ரேஞ்சுக்கு நினைப்பார்கள் என்பதாலும் நான் வந்து விட்டேன்...//
ReplyDeletetrue.--==//
நன்றி சன்சனா....
நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க....புரியிரவங்களுக்கு புரிஞ்சா சரிதான்...! நீங்கள் சொல்லும் அந்த சாலையில் நானும் பயணித்திருக்கிறேன்....சாலையோரத்திலேயே இரு சக்கர வாகனகளை நிறுத்தி விட்டு பீர் பாட்டல்களுடன் நின்றிருந்த சில பேரை அப்போது பார்த்தேன்....போலீஸ் அங்கு செல்லும் வேற்று மாநில லாரிகளை மடக்க மட்டுமே அவ்வப்போது வருகிறார்கள்.//
ReplyDeleteஇப்பயும் அதே விஷயங்கள் தொடர்ந்துகிட்டேதான் இருக்கு....
நன்றி லெமூறியன்
இந்த சாலையை சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் ஒருமுறை பயன்படுத்தி இருக்கிறேன், அன்று கண்ட காட்சிகள் இன்று வரை அங்கு செல்வதை தவிர்க்க வைக்கின்றன//
ReplyDeleteஉண்மைதான் சங்கர் ஆனால் இப்போது வாகன போக்குவரத்து சற்றே அதிகம் ஆகியுள்ளது...
/மனதை கட்டு //படுத்து// முடியாதவர்கள்.. மகாபலிபுரம் சவுக்கு தோப்பு,பூங்கா புதர், என்று மறைவிடம் நோக்கி போகின்றார்கள்////
ReplyDeleteஐயோ ஐயோ உனக்காகவே தப்பு இல்லதம எழுத வேண்டியதாயி போச்சே...
மிக முக்கியமான ,அவசியமான பதிவு ... அனைவரையும் சென்றடைய வேண்டும்,!//
ReplyDeleteநன்றி ஜீவன் தங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும்...
good post jackie!...keep going!//
ReplyDeleteநன்றி 23சீ.. நிச்சயதார்தத்துக்கு வாழ்த்துக்கள்..
நன்றி சாம்பார்வடை இந்த பகுதியை பத்திரிக்கையில் நானும் படித்தேன்.. சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteஇந்த வாரம் சாலை வாரமா ?.
ReplyDeleteபடம் நல்லாயிருக்கு. மழையில் நனைந்த சாலைகள்.//
உண்மைதான் அந்த படம் எனக்கு பிடிச்ச படம்.. நன்றி பின்னோக்கி
Really disturbing!. You should add one more locality in the list... CHILDRENS' PARK. Nobody in their good senses will take their children here.//
ReplyDeleteநன்றி அழகன் மற்றவர் பார்வையில் இருக்கும் போது அவும் குழந்தைகள் உள்ள இடத்தில் இப்படி நடந்து கொள்வதை வண்மையாக கண்டிக்கின்றேன்...
நன்றி சுர்
ReplyDeletehttp://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=Chennai+Bypass+Rd&sll=12.939653,80.114708&sspn=0.042495,0.055189&ie=UTF8&hq=&hnear=Chennai+Bypass+Rd,+Tamil+Nadu,+India&ll=12.976122,80.123978&spn=0.084977,0.110378&t=h&z=13
ReplyDeleteநீங்கள் சொன்ன சென்னை பைபாஸ் ரோட்டின் கூகிள் மேப் முகவரி. அனைவரும் அண்ணன் சொன்னது போல இந்த ரோட்டில் செல்லும் போது எச்ச ரிக்கை உடன் செல்லவும்.//
நன்றி பிளாக் பாண்டி குகிள் மேப் எல்லாம் போட்டு அசத்திட்டிங்க... ஹ
மிக்க நன்றி
nice post but atleast for this post, you could have removed that actress side sex y photo.//
ReplyDeleteநன்றி குப்பன்.. அந்த போட்டோக்கள் எனக்கும் அப்புறம்எனது வாசகர்களுக்கும் பிடித்து இருக்கின்றது.. நன்றி
நல்ல பகிர்வு...//
ReplyDeleteநன்றி ஜெட்லி
வாங்க அண்ணா , உங்க அத்தை வீடு பெருங்கலதூரா , என் பாட்டி, சித்தி , அத்தை மாமா வீடு, பூர்வீகமே அங்குதான். ஒரு முறை நானும் என் தங்கையும், நீங்கள் சொன்ன பாதையில் சென்றுரிக்கிறோம் , தாங்கள் சொன்னது அத்தனையும் உண்மை...இன்னொன்று லாரிகள் அதி வேகத்துடன் வரும்...இதை படித்தாவது சிலராவது சுதாரிதார்கள் என்றால் நல்லது....//
ReplyDeleteநன்றி சூர்யா நான் அடிக்கடி பெருங்களத்தூர் வருவேன்..
இநோன்று..அந்த சாலையின் ஓரத்திலே இருக்கும் சேலையூர் நண்பர் சொன்ன தகவல், அங்கு வழிப்பறி அதிகமாக நடக்கிறதாம், முக்கியமாக காதலர்களை குறி வைத்து..//
ReplyDeleteசூர்யா அதே போல் ரேப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்..
அண்ணே,
ReplyDeleteநல்ல சமூக விழிப்புணர்வு கட்டுரை,
இந்த ரோட்டில் லாரி ரேஸும் லீவு நாட்களில் ஆட்டோ ரேஸும் நடக்கும்.
காரில் போவதற்கு ஏற்றது, இளம் ஜோடிகளுக்கு இரவில் உகந்ததல்ல.
இன்னொரு முறை அந்த சாலையில் அண்ணியுடன் இரவில் போகாதீங்க
ஓட்டுக்கள் போட்டாச்சி//
நன்றி கார்த்தி அண்ணியோடு இரவில் போவதை குறைத்தாகி விட்டது..நன்றி
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
ReplyDeleteதமிழ்நெஞ்சம்//
மிக்க நன்றி தமிழ் நெஞ்சம்..
நியாயமான வருத்தம். காதலிக்கிறவங்க வீட்டுல பேசி காலாகாலத்துல கல்யாணம் பண்ணிகிட்டா இந்த மாதிரி வெளியிடம் தேடி அலையவேண்டாம்.//வரதட்சனையாலே பல கல்யாணங்கள் தள்ளிபோகுது ராஜா என்ன செய்வது...???
ReplyDeleteநான் ஒரு முறை பகலில் சென்னை புறவழி சாலை வழியாக சென்றுள்ளேன். சாலை மிக அருமை. ஆனால் சுங்கமும் அதிகம். பாதுகாப்பும் குறைவு (இரவில்). கி.க சாலையும் இது போல் தான். அங்கு வழிபறி மிக அதிகம் என்று கேள்விப்பட்டுள்ளேன். அங்கே பல குற்ற்றங்கள் மானம் கருதி (போன பின்) புகார் செய்யப்படாமல் போயுள்ளன//
ReplyDeleteஉண்மைதான் பாலா.. நீங்கள் சொல்வது உண்மைதான்..
அதே போல் நீங்கள் சொன்னது போல் என் மனைவிக்கு ஜெட்லாக் ஏற்பட்டதால் உங்களை அடிக்கடி நினைவு படுத்துவாள்.. அவர் சொன்னனது போலவே நடக்குது..எ னற்ாள்..
நன்றி பாலா
ன்னையில் இருந்தபோது அந்தசாலியைல் பகலில் பயணித்திருக்கிறேன்...உண்மையில் வெட்டவெளிதான்..
ReplyDelete//அந்த பையன் எப்படியாவது எதையாவது செய்து விட்டு தூங்கினாலும்... அந்த பெண் நிச்சயம் அந்த இரவில் தூங்கி இருக்கமாட்டாள் என்பது மட்டும் நிச்சயம்...//
அப்படியா ஏண்ணே??? :-)