ஹைதராபாத் ஒரு பார்வை....(பாகம்...1) புகைபடங்களுடன்...போலியாவால் பாதிக்கபட்ட சென்னை போல் இல்லாமல் எத்திராஜ் கல்லூரி பெண்ணை போல் ஹைதராபாத் மிக அழகாக இருந்தது...

எல்லா இடத்திலும் கட்டிடம் கட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.. எங்கிருந்து மணல் கிடைக்கின்றது என்று தெரியவில்லை...ஹைதராபாத்தில் நுழைந்ததும் நம்ம ஊர் சூர்யா பாரத் சிமெண்ட் விளம்பரத்துக்கு செயற்க்கை சிரிப்பில் பல விளம்பர ஹோர்டிங்குகளில் காணப்படும் போதே...ஹைதராபாத் ரியல் எஸ்டேட் பலத்தையும்... அதன் மூலம் புரளும் கோடிகளையும் நினைத்துபார்க்க மலைப்பாக இருக்கின்றது.....

அமீர் பேட் வரை வழி எங்கும் நான் கவனித்த வகையில் நிறைய கார்டனுடன் கூடிய திருமண மண்டபங்கள் மற்றும் பார்ட்டி ஹால்கள் ரெட்டிகாருகளின் பேங்க் பேலன்சை சொற்பமாய் கறக்க பேருதவி புரிகின்றன...இவ்வளவு பார்ட்டிஹால்கள் இருக்கும் போது அவர்கள் திருமண விழாக்கள் எவ்வளவு கிராண்டாக நடத்துகின்றார்கள் என்பதை பார்க்கும் போது... வரதட்சனை எந்தளவுக்கு அதிகம் பரவி கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்...

இங்கு மாப்பிள்ளை ரேட் என்ன என்று விசாரித்தேன்... எல்லாம் கிலோ கணக்குகளில் பவுன் கொடுக்கின்றார்கள்....வீடுகள் மற்றும் நிலங்கள் வேறு....முக்கியமாக முஸ்லீம் சமுகத்து மக்களிடம் இன்னும் அதிகமாம்.... அதே போல் மாப்பிள்ளை பையன்...சென்னையில் கல்லூரியில் படித்தவன் என்றால் இன்னும் 50 பவுன் எக்ஸ்ட்ரா கொடுப்பார்களாம்... நம் தமிழ்நாட்டின் கல்வி தரத்தின் மேல் அவ்வளவு மரியாதையோ என்ன மண்ணாங்கட்டியோ தெரியவில்லை...

அதே போல் அலப்புழாவில் தமிழன் என்ற அலட்சியம் காட்டும் கேரளாவாசிகள் போல் இல்லாமல் சென்னைவாசி, தமிழன் என்ற அலட்சியம் இங்கு இல்லை...

எங்களுக்கு ஜுப்ளி ஹில்ஸ் அருகில் இருக்கும் கிருஷ்ணா நகர் அருகில் ஒரு கெஸ்ட் ஹவுசில் ரூம் போட்டு இருந்தார்கள்... சென்னையில் எப்படி அடையாறு,பெசண்ட்நகர்,அண்ணநகரோ அது போல் அரிசி விலைஉயர்வு பற்றியோ, பெட்ரோல் விலைஉயர்வையும் பற்றி கிஞ்சித்தும் கவலைபடாத மேல்தட்டிலேயே மேல்தட்டு மக்கள் வசிக்கும் இடம்..ஹைதராபாத்தில் ஜுப்ளி ஹில்ஸ்ம், பஞ்சார ஹில்ஸ்ம்......


இங்கு யராவது வந்து இங்கு கட்ட பட்ட வீடுகளை பார்த்தால் சடட்டென தலையில் ரெட் ரிப்பன் கட்டி நக்ஸைலைட்டுகளாக உடனே மாறிவிடுவார்கள்...வீடுகள் என்றால் மன்னிக்கவும் இங்கு வீடு கட்டி வாழுங்கள் என்றால் எல்லோரும் கல்யாண மண்டபம் கட்டி அதில் வாழ்கின்றார்கள்...

குன்றின் மீது இருக்கும் நகரம் என்பதால் எல்லா இடங்களிலும் சாலைகள் எறி இறங்கி பார்பதற்கு மிக அழகாக இருக்கின்றது... இதுவும் சோம்பல் நகரம்தான் என்றாலும் ஆலப்புழா போல் அவ்வளவு மோசம் இல்லை... காலை 5 மணிக்கு டீ கிடைக்கின்றது....

எல்லா இடத்திலும் பாறைகளால் ஆன நகரம் என்பதால் பல இடங்களில் வெடிகளை வைத்து தகர்த்து அந்த இடத்தை சம படுத்தி வீடு மன்னிக்கவும் பங்களா கட்டிகொள்கின்றார்கள்...

மலைகளை உடைத்த வெடி வைத்து தகர்த்து சாலைகள் அமைக்கின்றார்கள்.... ஹைதரபாத்தில் எல்லா இடத்திலும் பாலம் கட்டி போக்குவரத்தை நெரிசலை முடிந்த அளவுக்கு குறைத்து இருக்கின்றார்கள்... முக்கியமாக புதிய ஏர்போர்ட் போக ஒரு நான்கு வழிப்பாதை அமைக்கின்றார்கள்.... பிரமாண்டம்...

இங்கு ஹெல்மெட் போட்டுக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் இல்லை.... இருப்பினும் இந்த பெப்பி கடைக்கு அருகில் 3 நாட்களுக்கு முன் போகும் போது இரண்டு இளைஞர்கள் யூ டேர்னில் திரும்பும் போது பஸ் மோதி ஸ்தலத்தில் இறந்து போக அந்த பையனின் அம்மா அந்த இறந்து போன சடலத்துக்கு அருகில் உட்கார்ந்து கதறி அழுதது மனதை கசக்கியது...
மேலுள்ள படத்தில் இருப்பது ஒரு பள்ளி பஸ் என்றால் என்னால் நம்ப முடியவில்லை.. அது ஒரு ஓல்வோ பஸ்... அது போல் 50க்கு மேல் இருக்கின்றதாம்....பள்ளி முழுவதும் குளிர்சாதனம் செய்யபட்டு இருக்குமாம்...
வாழ்வுதான்....


பெண்கள் இங்கு ரொம்பவும் குறைந்தவிலையில் தங்கள் உடலை விற்க்கின்றார்கள்... சார்மினார் பகுதியில் இன்னும் குறைந்த விலைக்கு கிடைப்பார்களாம்... எல்லாம் சொல் கேள்விதான்....அதுவும் தனியாக வாயில் நீர் ஒழுக போனால்... எல்லாத்தையும் தொலைத்து விட்டு வெறும் ஜட்டியுடன் ரிட்டர்ன் ஆக வேண்டுமாம்... அப்படியும் அடங்காதவர்கள் தன் கையை உதவிக்கு வைத்துக்கொள்ளவேண்டும்....மற்ற மாநிலங்களை கம்பேர் செய்யும் போது தமிழகத்தில் விபச்சாரம் அந்தளவுக்கு வெளிப்படையாக இல்லை....

ஹைதராபாத் பெண்கள் அடுத்த பகுதியில்.....

தொடரும்

13 comments:

 1. Chennai is not polio affected city, that too in comparison with Hyderabad.
  If you compare with Mumbai or Delhi, at least we could accept.

  Chennai is in in a higher position than Hyderabad in all aspects, education, jobs, richness, culture, cinema, political (no of MLA seats, MP)...

  ReplyDelete
 2. என் பார்வை முடிஞ்சது . இப்ப உங்க பார்வையா?

  நடக்கட்டும். நான் 'பார்க்காத' விஷயங்கள் வரப்போகுதுன்னு ...'பட்சி' சொல்லுது:-)

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு, தொடருங்கள் நண்பரே.

  ReplyDelete
 4. //வீடுகள் என்றால் மன்னிக்கவும் இங்கு வீடு கட்டி வாழுங்கள் என்றால் எல்லோரும் கல்யாண மண்டபம் கட்டி அதில் வாழ்கின்றார்கள்...
  //
  அப்போ ஆந்திராவில் பண மழை பொழியுதுனு சொல்லுங்க அண்ணே

  ReplyDelete
 5. ஜாக்கி, பாரடைஸ் பிரியாணி, Blue Sea Tea, டேஸ்ட் பாத்தியா..??

  ReplyDelete
 6. நல்ல நடை. சரளமான நடை. சுஜாதா போல் ஆங்காங்கே பஞ்ச். சமூக பொறுப்பு தூள் அண்ணே அடிச்சி பின்னுங்க. (மஸ்தா எயுதுப்பா ஐதராபாத் பத்தி. சந்திரபாபு கட்டின ஹை டெக் சிட்டி. அதுக்கு ட்ரெயினேஜ் இல்லாம இருந்து ஒய்.எஸ்.ஆர் நிதி ஒதுக்கினது. நறைய சமாஜாரம் இருக்கப்பு

  ReplyDelete
 7. ஜாக்கி,

  மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி.

  ஹைதராபாத் பல நல்ல / கெட்ட அனுபவங்களை கற்றுக்கொடுத்திருக்கும் என்றே நம்புவோம்.

  பகிர்விற்கும் அதன் தன்மைக்கும் பாராட்டு.

  அதிலும் இறுதி para மிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

  வரும் புதனன்று நான் சென்னையில் இருப்பேன். முடிந்தால் சந்திக்கலாம். என் கைபேசி எண்: 9486457303 . முடிந்தால் தொடர்பு கொள்ளவும்.

  அந்த 'வெத்துவேட்டு வீனபோனவனைப்' பற்றி எதாவது தெரிந்ததா.

  இப்படிக்கு,
  பாலா.

  ReplyDelete
 8. அண்ணே... வந்துட்டீங்களா???

  ஆந்திராவில் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்பவராக/செய்தவராக இருந்தால் வரதட்சணை இன்னும் அதிகமாம்..

  அடுத்த பதிவு ஹைதராபாத் பெண்கள் பற்றியா?? நடக்கட்டும்... நடக்கட்டும்..

  ReplyDelete
 9. VANTHACHA....VANTHACHA....VANTHACHAA........VANTHAAAAACHAAAAAAAAAAA

  GOOD OBSERVATION....GOOD PRESENTATION.

  NOWADAYS YOU ARE VERY MUCH ALERT IN OBSERVING THINGS. THINK YOUR HEART WANTS TO GIVE SATISFACTION TO THE READERS.

  YOU ARE ACHIEVING THAT OBJECTIVE IN ALMOST ALL THE POSTS.

  PROUD TO BE YOUR FOLLOWER.

  ReplyDelete
 10. ஆரம்பம் அருமை.

  மேலும் எதிர்ப் பார்க்கின்றேன்

  ReplyDelete
 11. வாங்கோண்ணா... வாங்கோண்ணா...

  ReplyDelete
 12. அது ஒரு ஓல்வோ பஸ்//

  mannikkavum neengal padathil kaatiyullathu volvo bus kidaiyaathu.

  mathapadi neengal solvathai ellam naan aamothikiren

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner