காதலிக்கும் போது காதலியை சுற்று சுற்று என்று சுற்றிக்கொண்டு இருக்கின்றோம்... அவளுக்காக பல கிலோமீட்டர் நடந்தே சென்று இருப்போம்... பொறுமையாக பத்து பக்கத்துக்கு மிகாமல் காதல் கடிதங்கள் எழுதி இருப்போம்... கண்ணே மணியே என்று கொஞ்சி இருப்போம்... இது காதலித்தவர்கள் மட்டும் அல்ல... திருமணம் ஆன புதிதில் பல கொஞ்சல்கள்... அழகாய் இருக்கின்றாய் என்று பொய் சொன்ன கணங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்த நிகழ்வுதான் இது....
ஆனாலும் காதலித்த போது காத்த பொறுமை.. திருமணத்துக்கு பிறகு நம்மில் பலருக்கு இருப்பதில்லை...பொதுவாக பெண்கள் எப்போதும் ஆண்களை மைக்கில் ஹலோ டெஸ்ட்டிங்..123 என்பது போல் நீ என்னை காதலிக்கின்றாயா? காதலி்க்கின்றாயா ? என்று கேட்டபடியே இருப்பார்கள்.. ஏனென்றால் கணவன் தன்னை மட்டும் நேசிக்க வேண்டும் என்ற பேராசைதான்.. காரணம் அவளோடுதான் மணிக்கணக்காக செலவிட வேண்டும் என்ற எண்ணமும் நிறைய பேச வேண்டும் என்று மனைவிகள் விருப்பம் கொள்கின்றார்கள்...
காதலிக்கும் போது நிறை பேசனிங்க... இப்ப எதுவுமே பேசவில்லை என்ற ஆதங்கம் அதிகம் எல்லா பெண்களுக்கும் உண்டு.. காரணம்... காதலியை வீட்டுக்கு தெரியாமல் இரண்டு் மணி நேரம்தான் பார்க்க முடியும் எனும் போது மனதில் உள்ள எல்லாவற்றையும் கொட்டி விடுகின்றோம்... ஆனால் திருமணத்துக்கு பிறகு 24 மணி நேரமும் அவளோடு செலவிடும் போது பேச்சு குறைந்து விடுகின்றது...
இது போன்ற ஒரு பெண்ணின் ஏக்கத்தை மிக அழகாக காதலுடன் பதிவு செய்த இந்த விளம்பரம் மிக அற்பதமான காதலையும் .. நேசிப்பையும் சொல்வதால் இந்த விளம்பர படம் எனக்கு மிகவும் பிடிக்கும்
அந்த அழகான 3 ரோசஸ் டீ விளம்பரம்...
கணவன் பேப்பர் படித்து கொண்டு இருக்கின்றான்... சுவாதியோட டாகியை பார்த்திங்களா, என்று கேட்டபடி வரும் மனைவி நாயை பற்றி அதன் பிள்ஸ்களை பற்றி சொல்லிக்கொண்டு வரும் போது கணவணுக்கு டீயை கலந்து கொடுக்கின்றாள்... அவனிடம் அவள் பேசிக்கொண்டு இருக்கும் போது அவள் சொல்வதை கேட்காமல் பேப்பர் புரட்டிக்கொண்டு இருக்கின்றான்... நாய் நம்மோடு இருக்கும் வீட்டை காக்கும் என்று சொல்லும் போது... கணவன் அப்புறம் என்று கேட்க... அது ஆபிஸ்ல இருந்து லேட்டா வராது என்று சொல்லும் போது கணவன் தன் தவற்றை உணர்ந்து.. தான் திருந்த ஒரு வாய்ப்பு கேட்க.. அவள் சரி என்று சொல்லும் போது இருவரும் காதலுடன் சிரிக்கின்றார்கள்... அதை விட இந்த விளம்பர படத்தில் நடித்த இந்த பெண்ணின் கண்கள் அவ்வளவு அழகு... அது அபிஸ்ல இருந்து லேட்டா வராது என்று சொல்லி விட்டு அதற்க்கு அடுத்து அந்த பெண்ணுக்கு கொடுத்த குளோசப்களில் அந்த பெண் சிக்கசரும் பவுண்டிரியும் அடித்து ஆடுவது போல் எக்ஸ்பிரஷன் கொடுத்து இருப்பார்.... அதை விட முக்கியம் இதன் இசை... மனதை மயக்கும் இந்த இசையை எப்போது வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டு இருக்கலாம்...
52 செக்கன்டுகளில்.. குடும்ப பெண்களின் தனிமையையும் ஏக்கத்தையும் சொல்லி இருக்கும் இந்த 3 ரோசஸ் டீ ,விளம்பர குழுவுக்கு எனது ராயல் சல்யுட்கள்.... இவர்களின் இன்னோரு விளம்பரம்... மனைவிக்கு ஐலவ்யூ சொல்வதான அந்த விளம்பரம் எமது அடுத்த பதிவில்...
இந்த விளம்பர படத்தின் ஒளிப்பதிவாளர், இயக்குனர் இசையமைப்பபாளர் போன்ற தகவல்களை படிப்பவர்கள் பின்னுட்டம் வாயிலாக தெரிய படுத்த வேண்டுகின்றேன்... அது எனக்கு அடுத்து பதிவை வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்
நன்றி
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
appppppppppppa me the first
ReplyDeletelet me read the post and come back
ReplyDeleteme too like this ad husband....every week I will request..."ONE MORE CHANCE"
ReplyDeletemaximum two week I will manage to spend more time with my wife....after that....laptop...mobile...blog....till she takes another great action....
ReplyDeleteMr. J....if you write an article about "how to spend more time with wife"...we will appriciate....
ReplyDeletecoming to that ad....yes...very touching add...next version also good...
நல்ல பகிர்வு ............
ReplyDeleteபடத்தில் நடித்த பையன் பத்தி ஒன்னுமே சொல்லல! அவர் துள்ளவதோ இளமை படத்தில் வந்தவர். அதுல நல்லா இருந்தாரு. இந்த விளம்பர படத்துல ரொம்ப வயசான மாதிரி இருக்குல!
ReplyDeleteஎனக்கும் பிடித்த விளம்பரம் இது!!:)
எனக்கு பிடித்த விளம்பரம்.
ReplyDelete3 ரோசஸ் டீ விளம்பரம் எல்லாமே நல்லா இருக்கும்
ReplyDeleteஏற்கனவே பார்த்த விளம்பரம்ன்னாலும் உங்களோட அறிமுகம் அருமை நண்பரே....
ReplyDeleteநல்ல விளம்பரம். அம்மா வீட்டுக்கு போகனும்னு சொல்றதும் நல்லாயிருக்கும். திருஷ்டி வெச்ச மாதிரி ப்ரூக்கு ஒரு விளம்பரம் வரும் பாருங்க. கேவலமா இருக்கும்
ReplyDeleteIF YOU SEE BRU AD...THE LEADING FEMALE ARTIST WILL LOOK UGLY THEN OTHER GIRL...ALSO IT IS VERY "MOKA" AD...
ReplyDeleteappppppppppppa me the first//
ReplyDeleteநன்றி ராஜ்குமார்..
let me read the post and come back//
ReplyDeleteசரி படிச்சிட்டே வாங்க ஒன்னும் அவசரம் இல்லை
me too like this ad husband....every week I will request..."ONE MORE CHANCE"// கணவர்கள் அப்படித்தான்... என்ன செய்வது..
ReplyDeletemaximum two week I will manage to spend more time with my wife....after that....laptop...mobile...blog....till she takes another great action....// எல்லார் வீட்லயும் இதே கதைதான்
ReplyDeleteMr. J....if you write an article about "how to spend more time with wife"...we will appriciate....
ReplyDeletecoming to that ad....yes...very touching add...next version also good...// எப்படியாவது நேரம் இதுக்கும் ஒதுக்கியே அவனும் இல்லையா,? அதான் மிக்க நன்றி.. ராஜ் என் மேல் வைத்து இருக்கும் மரியாதைக்கு...
படத்தில் நடித்த பையன் பத்தி ஒன்னுமே சொல்லல! அவர் துள்ளவதோ இளமை படத்தில் வந்தவர். அதுல நல்லா இருந்தாரு. இந்த விளம்பர படத்துல ரொம்ப வயசான மாதிரி இருக்குல!
ReplyDeleteஎனக்கும் பிடித்த விளம்பரம் இது!!:)//நன்றி தமிழ்
பதிவு எழுதி போஸ்ட் பண்ணதுக்க அப்புறம்தான் நானே கவனிச்சேன்...
எனக்கு பிடித்த விளம்பரம்.//
ReplyDeleteநன்றி நைனா..
நன்றி மங்களுர் சிவா மற்றும் சாஹானா
ReplyDeleteஏற்கனவே பார்த்த விளம்பரம்ன்னாலும் உங்களோட அறிமுகம் அருமை நண்பரே....//
ReplyDeleteநன்றி தபாய் ராஜா...
நல்ல விளம்பரம். அம்மா வீட்டுக்கு போகனும்னு சொல்றதும் நல்லாயிருக்கும். திருஷ்டி வெச்ச மாதிரி ப்ரூக்கு ஒரு விளம்பரம் வரும் பாருங்க. கேவலமா இருக்கும்//
ReplyDeleteநன்றி பின்னோக்கி பகிர்வுக்கு
IF YOU SEE BRU AD...THE LEADING FEMALE ARTIST WILL LOOK UGLY THEN OTHER GIRL...ALSO IT IS VERY "MOKA" AD...//
ReplyDeleteநன்றி ராஜ் அதையேதான் பின்னோக்கியும் சொல்லி இருக்கார்..
பயங்கர ரசனைக்காரரா இருக்கீங்க:-))))))
ReplyDeleteரசிச்சதை எல்லோருக்கும் சொல்லணும்னு நினைச்சீங்க பாருங்க. அதுக்கே ஷ்பெஷல் பாராட்டுக்கள்
ReplyDelete