(My Sassy Girl) உலக சினிமா/கொரியா... குடிகார காதலி


ஒரு சில பெண்கள் நம் வாழ்க்கையில் கடந்து போய் இருப்பார்கள்... அல்லது வாழ்நாள் முழுவதும் நம்முடனே வாழ்க்கை நடத்துவர்கள்... அவர்கள் என்னதான் தப்பு செய்தாலும் அவர்கள் மேடல கோபம் வரவே வராது.. பொதுவாக ஒரு சிலரிடம் அவர்களை பார்த்தாலே வயிற்று எரிச்சலாக இருக்கும்..
இத்தனைக்கும் அவர்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது... அவர்கள் அறிமுகம் கூட நமக்கு இருக்காது.. இருப்பினும் பயங்கர கோபம் வரும்... இத்தனைக்கும் அவர்கள் நமக்கு எந்த கெடுதலும் செய்து இருக்க மாட்டார்கள்..

மனதோடு கேள்வி கேட்கும் போது இந்த கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் அந்த கேள்வி மட்டும் எடியுரப்பா கவெர்மெண்ட் போல் மலங்க மலங்க விழிக்கும்...ஆனால் இது உங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கும்.. உங்கள் மனது வெறுக்கும் ஒரு நபரை ஏதாவது ஒரு சூழலில் அவர் உங்களிடம் நட்பாக பேசி அவரை மட்டும் உங்களுக்கு பிடித்து விட்டால் அவ்வளவுதான் வாழ்நாள் முழுவதும் உங்களை யாரும் பிரிக்க முடியாத அளவுக்கு அந்த வெறுத்த நபருடன் அன்பு பாராட்டுவீர்கள்... இது நிச்சய்ம உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்து
இருக்கும்.. யோசித்து பாருங்கள்...

அதே போல் ஒரு சிலர் செய்யும் தவறுகளை நாம் மன்னித்து கொண்டே இருப்போம்... அதற்க்கு காரணம் ரொம்ப சிம்பிள் அந்த நபரை நீங்கள் ரொம் ரொம்ப அதிகமாக நேசிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.. அது பிள்ளையாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம்... இவ்வளவு ஏன் நிங்க வளக்கற உங்க நாயா கூட இருக்கலாம்... அப்படி ஒரு குடிகார பெண்ணை ஒருவனுக்கு ரொம்பவும் பிடித்து போக அவன் படும்பாடுதான்.. மை சாசி கேள் எனும் கொரிய மொழி படம்...

My Sassy Girl கொரிய மொழி படத்தின் கதை இதுதான்........

அவன் ஒரு உருப்படாத பய வெகுளி...Gyeon-woo (Cha Tae-Hyun) ரொம்பவும் வெகுளி பழி பாவத்துக்கு அஞ்சுபவன்.. அவன் கல்லூரியில் படித்து கொண்டு இருக்கின்றான்... ஒரு நாள் இரவு ரயில் நிலையத்தில் நிறைய குடித்த ஒரு ஆழகான இளம் பெண்.. ரயில் வரும் போது பிளாட்பாரத்தின் முனையில் நின்று கொண்டு இருக்க எப்போது வேண்டுமானாலும் விழுந்து இறந்து விடுவாள் என்று இருக்கும் போது ஓடி போய் அவளை காப்பாற்ற... அதன் பிறகு அவள் வேதாளம் முறுங்கை மரத்தில் ஏறிய கதையாக... அவனது வாழ்வில் தொடர்ந்து குறுக்கிட்டு கொண்டே இருக்கின்றாள்.. அவள் செய்யும் ஒவ்வொறு செயலும் எரிச்சல் படம் பார்க்கும் நமக்கு ஏற்பட்டாலும்..அவனுக்கு மட்டும் அவள் மீது வெறுப்பு வரவேயில்லை..
அந்த பெண்ணிடம் நிறைய உதை வாங்கி கூட அவனுக்கு புத்தி வரவில்லை... அவள் நிறைய தவறுகள் செய்தாலும் அவளிடம் ஒரு பரிதாபம் கொண்ட காதல் இருப்பதை உணர்கின்றான்.. அவளை அவன் காதலிக்க தொடங்குகின்றான்... இருவரும் நடுவில் பிரிகின்றனர்.. திரும்பவும் ஒன்று சேர்த்தார்களா? என்பதை வெண்திரையில் காண்க..

(குறிப்பு) வழக்கம் போல் டிவிடி எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து கேட்காதீர்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

வாசக நண்பர் ராஜ்குமார் கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க இந்த படம்.. காரணம் இந்த படம் ஒரு ரோமான்டிக் காமெடி திரைப்படம்...

இந்த படத்தின் கதாநாயகன் படும் பாடுகளை நீங்கள் நினைத்து நினைத்து பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்..
இந்த படம் ஒரு அற்புதமான காதல் கவிதை என்றால் அது மிகையாகது..

இந்த படம் 2001ல் வெளியிடப்பட்டது..

இதே படத்தை ரீமேக்கி 2008ல் இதே பெயரில் ஹாலிவுட்டில் எடுத்து வெளியிட்டார்கள்..

இதே படத்தை இந்தியிலும் மல்லிகாஷெராவத் நடித்த அங்லி அவுர் பக்லி படத்தை அப்பட்டமாக எடுத்து இருப்பார்கள்..

இந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கபட்டது..

இந்த படத்தின் கதாநாயகி பர்பி டால் போல் அழகாய் இருப்பாள்...
முதலில் இந்த படத்தின் கதாநாயகனை பிடிக்காமல் போக படம் 15 நிமிடம் கழித்து அவனை பிடிக்க ஆரம்பிக்கும்...

படத்தில் ரயிலில் வாந்தி எடுக்கும் சீனும் அதற்க்கு அங்கு நட்க்கும் காமெடி காட்சிகளும் அருமை...


படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...

Directed by Kwak Jae-yong
Produced by Shin Chul
Written by Kim Ho-sik
Kwak Jae-yong
Starring Jun Ji-hyun
Cha Tae-hyun
Distributed by Cinema Service
Release date(s) July 27, 2001
Running time 123 min.
137 min. (director's cut)
Country South Korea
Language Korean

அன்புடன்
ஜாக்கிசேகர்...
(குறிப்பு... பதிவுலகில் நிறைய பேர் திரைவிமர்சனம் எழுதுகின்றார்கள்... அனால் எனது தளத்தில்...உலகின் மிகச்சிறந்த படங்களை மட்டுமே பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் அறிமுகபடுத்துகின்றேன்... சிறந்த படத்துக்கு மொழி ,நாடு வித்யாசமில்லை... ஒரு நல்ல படத்தை நான் உங்களுக்கு அறிமுக படுத்த 15 குப்பை படங்களை பார்த்து தொலைக்க வேண்டி இருக்கின்றது... அதற்க்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டி உள்ளது... எந்த படம் நல்ல படம்? என்று நான் தேடிய போது இது போன்று அறிமுகபடுத்த தளங்கள் அப்போது இல்லை... அது போல் வரும் தலைமுறை தட்டுதடுமாறக்கூடாது என்று நான் அதிகம் நேசிக்கும் சினிமாவை எனது தளத்தில் உலக சினிமா,உள்ளுர்சினிமாவில் தி பெஸ்ட் என்று பெயர் எடுத்த படங்களை மட்டும் எழுதி வருகின்றேன்... பின்னுட்டம் இட்டும ஓட்டு போட்டும் உற்சகபடுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்)

ஜாக்கிசேகர்

26 comments:

  1. செம படம். அந்த பொண்ணு பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கும். படம் முழுக்க நம்மல சிரிக்க வச்சு, கடைசில லைட்டா ஃபீலும் பண்ண வைக்கும்!

    ReplyDelete
  2. Jackie,

    Your review is good.

    Its very simple. Go to IMDB.com(http://www.imdb.com/chart/top) and click the link "IMDB Top 250 films" in the left hand side. you will see all good movies. If the rating is above 7.5 is good movie and most people watched movie in the world.

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம் சார்.

    ReplyDelete
  4. //ஒரு சிலர் செய்யும் தவறுகளை நாம் மன்னித்து கொண்டே இருப்போம்... அதற்க்கு காரணம் ரொம்ப சிம்பிள் அந்த நபரை நீங்கள் ரொம் ரொம்ப அதிகமாக நேசிக்கின்றீர்கள் என்று அர்த்தம்..//
    உண்மைதான் ........................... :)

    ReplyDelete
  5. //ஒரு சிலர் செய்யும் தவறுகளை நாம் மன்னித்து கொண்டே இருப்போம்... அதற்க்கு காரணம் ரொம்ப சிம்பிள் அந்த நபரை நீங்கள் ரொம் ரொம்ப அதிகமாக நேசிக்கின்றீர்கள் என்று அர்த்தம்..//
    உண்மைதான் ........................... :)

    ReplyDelete
  6. super படங்க இது. அப்படியே தமிழ் படம் பார்க்குற மாதிரியே இருக்கும். ஹீரோ சான்ஸே இல்லை. அப்பாவியா இருப்பான். இந்த படத்துல இருந்து சில சீன்ஸ் தமிழ் படத்துல சுட்டுட்டாங்க.

    ReplyDelete
  7. //வழக்கம் போல் டிவிடி எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து கேட்காதீர்கள்....//

    நான் மாத்தி கேக்குறேன்.. விசிடி எங்கண்ணா கிடைக்கும்?
    http://kalakalkalai.blogspot.com/2009/11/blog-post.html

    ReplyDelete
  8. @பின்னோக்கி yes... for example "siva manasula sakthi" and karthick and anitha...

    இந்த படத்தை நல்லா பார்த்திங்கன்னா ஒவ்வொரு சீனும் ரெண்டு ரெண்டு தடவ இருக்கும் i mean.. same seen in different environmental ... ரொம்ப ரொம்ப பிடித்த படம் ..... ஹிரோயின் சூப்பரா இருப்பா... அதுக்காகவே பல தடவ பாக்கலாம் ... thats for the review..

    ReplyDelete
  9. கொரியன் படங்களில் பொதுவாக வண்முறை அதிகமாக இருக்கும். அவர்களின் படங்கள் பலவகைகளில் வித்தியாசமாக இருக்கும். மேலும் கீழ்க்கண்ட படங்களையும் பாருங்கள்.

    Old boy
    Bin jip
    Il mare
    Windstruck
    Sympathy for Mr.Vengence
    Shiri
    My wife is a gangster (comedy)

    அசந்துவிடுவீர்கள். :)

    ReplyDelete
  10. DEAR MR. J
    THANKS MANY FOR ACCEPTING MY REQUEST.

    ALREADY IN SHARJAH THE DVD SHOP GUYS ARE LOOKING ME AS STRANGE PERSON...

    LET ME SEARCH FOR THIS MOVIE...

    AS MR. ALEX SAID...MY "WIFE IS A GANGSTER" IS ONE OF NICE COMEDY MOVIE....ALSO I LIKE "SO CLOSE"...IN BOTH FILMS THE LEADING ROLE IS DONE BY "Shu Qi"

    SHU QI----I LIKE HER "AASALT" ACTION...ALSO ONE MORE INFORMATION ABOUT HER

    "In 2008, she was elected by American entertainment channel E! as "The Actress with the World's Sexiest Lips".(THANKS TO WIKIPEDIA)

    THATS REALLY TRUE...HER LIPS ARE...!@#$%^&*()-=\/.,<>"|\;'~`....

    ReplyDelete
  11. ரொம்ப ரொம்ப பிடித்த படம் ...

    ReplyDelete
  12. செம படம். அந்த பொண்ணு பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கும். படம் முழுக்க நம்மல சிரிக்க வச்சு, கடைசில லைட்டா ஃபீலும் பண்ண வைக்கும்!//

    உண்மைதான் பப்பு ரொம்ப ஜாலியான படம் இந்த படம்

    ReplyDelete
  13. Jackie,

    Your review is good.

    Its very simple. Go to IMDB.com(http://www.imdb.com/chart/top) and click the link "IMDB Top 250 films" in the left hand side. you will see all good movies. If the rating is above 7.5 is good movie and most people watched movie in the world.//
    நன்றி கோபி தங்கள் தகவலுக்கு அவசியம் செக் செய்கின்றேன்...

    ReplyDelete
  14. நல்ல விமர்சனம் சார்.//
    நன்றி மிக்க நன்றி

    ReplyDelete
  15. /ஒரு சிலர் செய்யும் தவறுகளை நாம் மன்னித்து கொண்டே இருப்போம்... அதற்க்கு காரணம் ரொம்ப சிம்பிள் அந்த நபரை நீங்கள் ரொம் ரொம்ப அதிகமாக நேசிக்கின்றீர்கள் என்று அர்த்தம்..//
    உண்மைதான் ...............//
    நன்றி ராஜ பிரியன்..

    ReplyDelete
  16. super படங்க இது. அப்படியே தமிழ் படம் பார்க்குற மாதிரியே இருக்கும். ஹீரோ சான்ஸே இல்லை. அப்பாவியா இருப்பான். இந்த படத்துல இருந்து சில சீன்ஸ் தமிழ் படத்துல சுட்டுட்டாங்க.//
    நன்றி பின்னோக்கி தொடர் வாசிப்புக்கு தொடர் பின்னுட்டத்தற்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. //வழக்கம் போல் டிவிடி எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து கேட்காதீர்கள்....//

    நான் மாத்தி கேக்குறேன்.. விசிடி எங்கண்ணா கிடைக்கும்?
    http://kalakalkalai.blogspot.com/2009/11/blog-post.html

    கலை நான் விசிடியி ல படம் பாாக்கறதே கிடையாது...

    ReplyDelete
  18. @பின்னோக்கி yes... for example "siva manasula sakthi" and karthick and anitha...

    இந்த படத்தை நல்லா பார்த்திங்கன்னா ஒவ்வொரு சீனும் ரெண்டு ரெண்டு தடவ இருக்கும் i mean.. same seen in different environmental ... ரொம்ப ரொம்ப பிடித்த படம் ..... ஹிரோயின் சூப்பரா இருப்பா... அதுக்காகவே பல தடவ பாக்கலாம் ... thats for the review..//

    அருள் இதுல சிவா மனசுல சக்தி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

    ReplyDelete
  19. கொரியன் படங்களில் பொதுவாக வண்முறை அதிகமாக இருக்கும். அவர்களின் படங்கள் பலவகைகளில் வித்தியாசமாக இருக்கும். மேலும் கீழ்க்கண்ட படங்களையும் பாருங்கள்.

    Old boy
    Bin jip
    Il mare
    Windstruck
    Sympathy for Mr.Vengence
    Shiri
    My wife is a gangster (comedy)//

    லிஸ்ட்க்கு நன்றி அலெக்ஸ்... இந்த லிஸ்ட்டில் இரண்டு படம்தான் பார்த்து இருக்கின்றேன்..

    ReplyDelete
  20. "In 2008, she was elected by American entertainment channel E! as "The Actress with the World's Sexiest Lips".(THANKS TO WIKIPEDIA)

    THATS REALLY TRUE...HER LIPS ARE...!@#$%^&*()-=\/.,<>"|\;'~`....=//

    நன்றி ராஜ் அந்த உதட்டுக்குகாக திரும்பவும் ஒரு முறை பார்க்கின்றேன்...

    ReplyDelete
  21. ரொம்ப ரொம்ப பிடித்த படம் ...//
    நன்றி ராஜன்...

    ReplyDelete
  22. //வழக்கம் போல் டிவிடி எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து கேட்காதீர்கள்....//

    ''அப்ப எந்த வெப்சைடில் கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா. !!!! ''
    நன்றி
    மகாராஜா

    ReplyDelete
  23. Dear Jackie,
    Thanks for the review.
    Indeed it is a great pleasure to read your blogs.
    Cheers!
    Balaji.S (Balaji-paari)
    paari.blogspot.com

    ReplyDelete
  24. http://www.letmewatchthis.com/watch-1206-My-Sassy-Girl-Yeopgijeogin-geunyeo

    ReplyDelete
  25. JACKIE SIR,

    THANKS FOR THE REVIEW. THIS IS MY ONE OF THE FAVORITE MOVIE. PLEASE WRITE MORE REVIEWS ABOUT THIS MOVIE SEQUEL WINDSTRUCK.

    ReplyDelete
  26. jackie sir,
    Thanks for the review. this is my one of the favourite movie and pls try to write reviews about windstruck,someone special,a moment to remember,il mare.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner