(12 ROUNDS) போலிசுக்கு தண்ணி காட்டும் வில்லன்...பாசம் வைத்து இருக்கும் எந்த பொருளை நாம் இழந்தாலும் ஒரு வருத்தம் நெஞ்சில் குடி கொண்டபடி இருக்கும்... அது இயற்க்கையாக நம்மை விட்டு போனால் நம் மனம் தாங்காது... அதுவே பொருளாக இல்லாமல் காதலியாக இருந்து அவள் சாவுக்கு ஒரு போலிஸ் ஆபிசர் காரணம் என்றால்.....அந்த காதலி ஒரு டானுக்கு காதலியாக இருந்தாள்????

12ரவுண்ட் படத்தின் கதை இதுதான்....

Miles Jackson (Aidan Gillen) எப்பிஐயால் தேடப்பட்டு வரும் சர்வதேச குற்றவாளி... எதெச்சையாக அவனை நெருங்குகையில் அவன் அவனது காதலியோடு காரில் தப்பி சென்று கொண்டு இருக்கும் போது...Danny Fisher (John Cena) ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி.. அவரும் இந்த துரத்தல் வேட்டையில் ஈடுபட ... வழக்கம் போல் எப் பி் ஐ யை ஏமாற்றி தப்பி செல்ல முயற்ச்சிக்க....Danny Fisher (John Cena)இடம் மாட்டிக்கொள்கின்றான்.. இந்த முற்றுகையில் எதிர்பாபராத விதமாக அவன் காதலி இறந்து விடுகின்றாள்.. அத ஒரு விபத்து என்றாலும்.. இவன் மட்டும் தலையிடவில்லை என்றால் தான் தப்பி இருக்கலாமே... தன் காதலியும் தன்னை விட்டு போய் இருக்க மாட்டாளே.. என்ற கோபம் .. அவனை சிறையில் அடைக்கின்றார்கள்.. சிறைக்கு போகும் முன் பிஷ்ஷர் பெயரை படுத்து விட்டு செல்கின்றான்.... ஒரு வருடத்தில் அவன் சிறையில் இருந்து தப்பிக்க... அவன் பிஷ்ஷர் மனைவியை கடத்திக்கொண்டு போய் வைத்துக்கொண்டு 12 ரவுண்ட் கேம் ஒன்றை ஸ்டார்ட் செய்து அதில் ஜெயித்தால் உன் மனைவி உயிரோடு கிடைப்பாள்.. என்று செக் வைக்கின்றான்... செக்கில்Danny Fisher (John Cena) ஜெயித்தானா? மனைவியை காப்பாற்றினானா? என்பதை வெண்திரையில்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படத்தின் டைரக்டர்Renny Harlin டை ஹார்டு இரண்டாம் பாகத்தை எடுத்தவர்...

இவரின் முந்தைய படைப்புகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டமாயின்... ஸ்டோலன் நடித்த கிளிப்ஹேங்கர், லாங்கிஸ் குட் நைட் போன்ற படங்களை இயக்கியவர் ..
லாங்கிஸ் குட் நைட் படத்தின் விமர்சனம் நமது தளத்தில் எழுதி இருக்கின்றேன்... கிளிப்ஹேங்கர் விரைவில் எழுதுவோம்....

Renny Harlinஒரு டைரக்டர் மட்டும் அல்ல ஒரு புரொடெக்ஷன் கம்பெனி வைத்து இருக்கி்ன்றார்... நிறைய படங்களை தயாரித்து வருபவர்..

இந்த படம் ஸ்பீட் படத்தை ஞாபகபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை என்றாலும்... அந்த படத்தின் சாயல் சிறிதும் இந்த படத்தில் வராமல் இருக்கு ரொம்பவே மெனக்கெட்டு இருக்கின்றார்...

டிராம் வண்டி பிரேக் இல்லாமல் வரு வது.. அதில் ஒருவன் அசந்து தூங்குவது காமெடிக்கு என்றாலும் டன் கணக்காகன பூ நம் காதுகளில்...

காதாநாயகன் ஜான் சினா தன் பாடி பில்ட் உடம்பை வைத்துக்கொண்டு நன்றாக ஒடுகின்றார் சண்டை போடுகின்றார்...

வில்லன் பணத்தை அபேஸ் செய்வது நல்ல ஐடியா...

வழக்கமான படம் கதை என்றாலும் .. சில இடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றார் இயக்குனர்...

மிக முக்கியமாக இரவு காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகின்றது..

பணம் தெருவில் கொட்டி கிடக்கும் கடைசி காட்சி ஹெலிகாப்டரில் இருந்து வைத்து இருக்கும் கடைசி ஷாட்டில் கண்டினியுட்டி சூப்பர்..

படத்தின் டிரைலர்...

படத்தின் குழுவினர் விபரம்..

directed by Renny Harlin
Produced by Becki Cross Trujillo
Mark Gordon
Renny Harlin
Mike Lake
Josh McLaughlin
Vince McMahon
Written by Daniel Kunka
Starring John Cena
Ashley Scott
Steve Harris
Gonzalo Menendez
Aidan Gillen
Brian J. White
Taylor Cole
Vincent Flood
Music by Trevor Rabin
Cinematography David Boyd
Editing by Brian Berdan
Studio WWE Studios
Distributed by 20th Century Fox
Release date(s) New Zealand:
March 26, 2009
North America:
March 27, 2009
United Kingdom:
May 29, 2009
United Arab Emirates:
April 2, 2009
Running time 108 min.
Country United States
Language English
Budget $20 million
Gross revenue $17,037,910

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

8 comments:

 1. அப்படியே punisher பட கதை
  மாதிரி இருக்கு??

  ReplyDelete
 2. நான் JOHN CENA -- வோட தீவிர ரசிகன் ............................ அவர் ஏற்கனவே POP ALBUM ஒன்றையும் வெளியிட்டுள்ளார். iam a bad bad man .......... என தொடங்கும் பாடல் அது. அவர் WRERSTLING MATCH பார்த்தவர்களுக்கும் தெரியும் அவர் எப்படி விளையாடுவார் என .................... REALLY SUPER HERO. "U CAN SEE ME ", " JAIN GANG ", "JAIN CENA "
  "THE CHAMP IS HERE", ....................

  ஒரு பெரிய பூட்டை கழுத்தில் தொங்கவிட்டிருப்பார். அந்த பூட்டு நாம் கழுத்து சங்கிலியில் போடும் டாலர் போல பெரிய சங்கிலியை கழுத்தில் மாட்டி அதில் அந்த பூட்டு பூட்டப்பட்டு இருக்கும். இப்பொழுது அதை அவர் போடுவதில்லை ............

  நன்றி............. தலைவரே நல்ல பதிவு வாழ்த்துக்கள்...........

  ReplyDelete
 3. அய்யா சமுதாய விழிப்புணர்வு சிங்கம் ஜாக்கி,

  உங்களோட பழைய பதிவிற்கும் சேர்த்தே இந்த பின்னூட்டம்.

  நானும் பல நாடுகள் சுற்றி உள்ளேன். நம்ம ஊரில் சாலை வீணாவது போல் வேறு எங்கும் காணோம். காரணம் ஊழல் மற்றும் வேலை தரக்குறைவு. மனிதன் குறைந்த முயற்சியில் பெரிய வெற்றி காண துடிகிறான். கீழ் மட்டத்திலிருந்து மேல் வரை ஊழல் ஒரு சங்கிலி தொடர் போல் நடக்கிறது.

  ஊழல் அழியும் என்று நினைத்தால் அது மேலும் வளர்த்துள்ளது. காசுக்கும் சாராயத்திற்கும் ஓட்டு போடும் மக்கள் உள்ளவரை ஊழல் ஒழியாது. சாலையும் சரியாகாது.

  நான் ஒரு முறை பகலில் சென்னை புறவழி சாலை வழியாக சென்றுள்ளேன். சாலை மிக அருமை. ஆனால் சுங்கமும் அதிகம். பாதுகாப்பும் குறைவு (இரவில்). கி.க சாலையும் இது போல் தான். அங்கு வழிபறி மிக அதிகம் என்று கேள்விப்பட்டுள்ளேன். அங்கே பல குற்ற்றங்கள் மானம் கருதி (போன பின்) புகார் செய்யப்படாமல் போயுள்ளன.

  மக்கள் சில சமயம் சமுதாயத்தை மதிப்பதில்லை. சமுதாயமும் சிலசமயம் சட்டத்தை மதிப்பது இல்லை. அதனால் சட்டம் அதன் கடமையை ஆற்ற முடியாமல் போய்விடுகிறது. குற்றம் வளர்கிறது. குற்றவாளியும் ஜாலியாக அடுத்த குற்றத்திற்கு தயார் ஆகிறான். என்னை பொருத்தவரை மக்களே முதல் குற்றவாளி.

  நான் இந்த 12 Rounds படத்தை பார்க்கவில்லை. பார்க்க தூண்டிவிட்டுள்ளீர்கள். DVD யை தேடிக்கொண்டுள்ளேன்.

  வணக்கம்,

  பாலா.
  +2347034184824
  +91 9486457303 (சீக்கிரம் ஊருக்கு வரவுள்ளேன் Dec 02 )

  ReplyDelete
 4. அப்படியே punisher பட கதை
  மாதிரி இருக்கு??--//ஹ

  ஜெட்லிஹாலிவுட்ல பல படங்கள் அப்படிதான் இருக்கும்...

  ReplyDelete
 5. நான் JOHN CENA -- வோட தீவிர ரசிகன் ............................ அவர் ஏற்கனவே POP ALBUM ஒன்றையும் வெளியிட்டுள்ளார். iam a bad bad man .......... என தொடங்கும் பாடல் அது. அவர் WRERSTLING MATCH பார்த்தவர்களுக்கும் தெரியும் அவர் எப்படி விளையாடுவார் என .................... REALLY SUPER HERO. "U CAN SEE ME ", " JAIN GANG ", "JAIN CENA "
  "THE CHAMP IS HERE", ....................

  ஒரு பெரிய பூட்டை கழுத்தில் தொங்கவிட்டிருப்பார். அந்த பூட்டு நாம் கழுத்து சங்கிலியில் போடும் டாலர் போல பெரிய சங்கிலியை கழுத்தில் மாட்டி அதில் அந்த பூட்டு பூட்டப்பட்டு இருக்கும். இப்பொழுது அதை அவர் போடுவதில்லை ............

  நன்றி............. தலைவரே நல்ல பதிவு வாழ்த்துக்கள்...//
  சீனா பத்தி இவ்வளவு விரிவான கருத்துக்கள் நான் எதிர்பார்க்கவில்லை நன்றி...பிரியன்

  ReplyDelete
 6. பாலா இப்பவெல்லாம் உங்க வேளை பளுவுக்கு நடுவுலயும் வந்து இப்படி விரவான பின்னுட்டத்தில் பகிர்ந்து கொள்வதற்க்கு என் நன்றிகள்..

  ReplyDelete
 7. நல்ல அறிமுகம்.//
  நன்றி சிவா...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner