கேமராவுக்கு பூஜை (சினிமா சுவாரஸ்யங்கள் /பாகம் 2)

தமிழ் சினிமா பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும்.. முதலில் இந்த சுவாரஸ்யத்தில் ,இருந்து துவங்குவோம்...பொதுவாக கேமரா என்றால் அது ஜெர்மன் தயாரிப்புதான்..

நமது திரையுலகில் தற்போது பயன்பாட்டில் இருப்பது...ஏரி235, ஏரி435,ஏரி435 எக்ஸ்ட்ரீம்.. போன்றவை பயன் பாட்டில் உள்ளன... பானவிஷன் கேமராக்கள் ஹாலிவுட்டில் அதிக அளவு பயன் படுத்தினாலும் இந்தியாவில் அதாவது வளரும் நாடுகளின் சாய்ஸ் ஏரி நிறுவன தயாரிப்பு வகை கேமராக்கள்தான்....

ஏரிவகை கேமராக்கள் இரண்டாம் உலக போரின் போது டாக்குமென்ட்ரி எடுக்கவும் போர்கால சூழலை அடுத்த தலைமுறைக்கு தெரியபடுத்தவும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கபட்ட இந்த கேமரா முதலில் இது டாக்குமென்ட்ரி படமெடுக்க உருவாக்கபட்டது...மோஷன் பிக்சருக்கு செட் அனது காலத்தின் கோலம்...

இது சிறியது... பெனாவிஷன் கேமராக்கள் போல் பெரியது இல்லை... அதுவும் இல்லாமல் இது விலை குறைவானது... அதனாலே வளரும் நாடுகளான நாம்.. ஏரி வகை கேமராக்களையே அதிகம் பயன்படுத்துகின்றோம்..

இருப்பினும் சினிமா சந்தை அதிகம் புழங்கும் இந்திய மார்கெட்டில் ஏரி கோலச்சுவதை கண்டு இப்போது பேனாவிஷன் கம்பெனி சில பலமாறுதல் மற்றும் விலைகுறைப்பை செய்து விட்டு மெல்ல இந்திய சினிமா சந்தையில் கால் எடுத்து வைக்கின்றது..

இது கேமராக்கள் பற்றிய விவரம் கொடுக்கும் பதிவு அல்ல... இனி மேட்ட்ருக்கு வருகின்றேன்..

எனக்கு தெரிந்து தென் இந்தியாவில் தமிழ் தெலுங்கு ,மலையாளம், கன்னடம், போன்ற திரைஉலகில்... கேமாரா ஷுட்டிங் ஸ்பாட்டில் கேமரா வைத்தவுடன் பஸ்ட் ஷாட் எடுக்கும் முன்... கேமராவுக்கு முன்னால் தேங்காயில் சூடம் காட்டி படைத்த விட்டு உடைக்கும் பழக்கம் உண்டு... வட இந்தியாவில் எப்படி என்று தெரியவில்லை.. ஆனால் தென் இந்தியாவில் இப்போதும் எல்லா நாளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது..

இது எப்படி இந்த பழக்கம் வந்து இருக்க வேண்டும்.. என்று சற்றே யோசித்தால்... மற்ற நிறுவனங்கள் போல்... ஒரு டிப்பார்ட்மென்ட்ரிப்போர்ட் வேண்டும்... அந்த ரிப்போர்ட்டை நாளைக்கு தருகின்றேன் என்றால் அது பிரச்சனை இல்லை...

ஆனால் இங்கே ஒரு காட்சியை செல்லுலாய்டில் பதிக்க அத்தனை டிப்பார்ட்மென்ட் ஒரு சேர உழைக்க வேண்டும்... அப்போதுதான் சினிமா எடுக்க முடியும்..லைட்மேன்டிப்பார்ட்மென்ட், கேமரா டிப்பார்ட்மென்ட், ஆர்ட் டிப்பார்ட்மென்ட்,டைரக்ஷன் டிப்பார்ட்மென்ட், போன்றவை களத்தில் பம்பரமாக சுற்றினால் மட்டுமே இது எல்லாம் சாத்தியம்.... இந்த ஒன்று கூடல் நடந்தால் சினிமா என்று வரும் போது பல்வேறு குணநலன் கொண்ட மனிதன் இனையும் போது.. ஆண்டவா.. எந்த பிரச்சனையும் இல்லாம ,ஷுட்டிங் நடக்கனும்...எனென்றால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சத்தில் இருந்து ஒரு கோடிவரை செலவு செய்து படம் எடுக்கும் போது தென் இந்தியர்கள் இந்த வேண்டுதலை அதாவது கேமராவுக்கு முன் சூடம் காட்டி கடவுளிடம் வேண்டுவது இங்கே சர்வசாதாரணமாகிவிடு்கின்றது...

அது மட்டும் அல்லாமல், இப்போது போல் அப்போது எல்லாம் படம் எடுக்கும் போதே பிரேமில் என்ன இருக்கின்றது.. என்று பார்க்க டிஸ்ப்ளே வசதி இல்லாமல் இருந்த காலங்களில்... கேமராவில் என்ன எடுத்தாலும் டெவலப் பண்ணி பார்த்த பிறகுதான் என்ன வந்து இருக்கின்றது என்று தெரியும் போது... சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் ஷட்டிங் பண்ணி பிலிமில் அல்லது கேமராவில் எதாவது பிரச்சனை என்றால் அரோகராதான்... எல்லோருடைய உழைப்பும் வீண்... அந்த பயம்தான் கேமராவுக்கு முன் சூடம் காட்டி வழிபடும் பழக்கம் வந்து இருக்க வேண்டும்.. என்று எனக்கு தோன்றுகின்றது..

எனது நண்பர் செந்தூரப்பூவே படத்தின் கேமராமேன் ரங்கசாமி அவர்களிடம் பேசும் போது இந்த கேமரா முன் சூடம் காட்டும் செயல் குறித்து பேசுகையில்... அவர் இப்படி சொன்னார்...

அது ஒரு ஒழுக்கம்... நான் செய்யற செயல் சிறப்பா வரனும்னு ஒரு சேர எல்லோரும் பிரார்திப்பது...இப்ப தேசிய கொடியை ஏத்தி விட்டு சல்யுட் செய்யறோம் அது முட நம்பிக்கையா?... அது ஒரு ஒழுக்கம் அது போலதான் இதுவும் என்றார்... செண்டிமென்ட் சொன்னா சொல்லிட்டு போவட்டும்.. என்பார்..

அவர் சொன்னது போல் அந்த ஒழுக்கம் சின்னதிரையிலும் வந்து விட்டது.. இப்போது கூட நீங்கள் எங்காவது ஷட்டிங் நடக்கின்றது என்றால்... அது சின்னதிரையாக இருந்தாலும் பெரிய திரையாக இருந்தாலும்...எல்லாம் ரெடியாகி கேமராகோனம், ஆர்ட்டிஸ் ரிகர்சல், எல்லாம் பார்த்த பிறகு... ரெடி கேமரா என்ற டைரக்டரின் குரலுக்கு முன்... படப்பிடிப்பு குழுவில் இருக்கும் செட் அசிஸ்டென்ட்கள்... காலில் உள்ள செருப்பை அவிழ்த்து விட்டு ஒரு தேங்காயில் சூடம் வைத்து,அதனை கொளுத்தும் தீப்பெட்டியை டைரக்டரிடம் கொடுக்க, அவரும் காலில் உள்ள செறுப்பை அவிழ்த்து விட்டு கற்புரம் கொளுத்த..கேமராவுக்கு முன் வலது பக்கம், இடது பக்கம் மூன்று சுற்று சுற்றி விட்டு அதை, டைரக்டரிடம் காட்ட அந்த எரியும் கற்புரத்தில் கை வைத்து லேசாக கண்ணில் ஒத்திக்கொள்ள, அப்புறம் கேமராமேன் என்று அது பலரிடம் டிராவல் ஆகி அந்த தேங்காயை தரையில் அடித்து சுக்குநூறாக உடைத்து விடுவர்கள்...

அது செண்டிமென்டாகவும் இருக்கலாம்...எல்லாவற்றிலும், அதாவது அத்தனை பேரின் கூட்டு முயற்ச்சியை, வியற்வையை, உழைப்பை, செல்லுலாய்டில் பதியும் கேமராவுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற பயம் காரணமாக இருக்கலாம்... கேமராமேன் ரங்கசாமி சொல்வது போல், அது ஒரு ஒழுக்கத்தின் வெளிப்பாடாய் இருக்கலாம்... ஆனால் இப்போது பலரிடம் முன்பு போல் அந்த செயலுக்கு இப்போது மரியாதை கொடுப்பது குறைந்து வருகின்றது... நான் அப்படி அல்ல... கற்புரத்தை கண்ணில் ஒத்திக்கொள்ளும் போது இறையே, ஒளியே இன்று நடக்கும் நிகழ்வுகள் எனக்கு முன்னேற்றத்தை தரவல்லதாக இருக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்வேன்..
அது செண்டிமென்டோ ஒழுக்கமோ இது போன்ற மிக நட்பமான சின்ன , சின்ன சுவாரஸ்யங்களில் இருந்து இன்னும் பல பல பெரிய விஷயங்கள் வரை உங்களோடு நேரம் கிடைக்கும் போது,பகிர்ந்து கொள்ள எழுதுகின்றேன்..


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

30 comments:

  1. Dear Mr. J

    I liked the first half of this post very much then second half. The photos selected for this post are really unseen - great collection.

    Looking forward for more சினிமா சுவாரஸ்யங்கள்.

    ReplyDelete
  2. சூப்பர்!

    அதைவிட படங்கள் அருமை.

    ReplyDelete
  3. stills are nuch :)--//
    நன்றி யாசவி.. பாராட்டுக்கு நெட்டில் சுட்டு போட்ட படங்கள் இது..

    ReplyDelete
  4. Dear Mr. J

    I liked the first half of this post very much then second half. The photos selected for this post are really unseen - great collection.

    Looking forward for more சினிமா சுவாரஸ்யங்கள்// நண்பர் ராஜக்கு.. மதல் பகுதி ஒரு அறிமுகம் மட்டுமே

    தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்திற்க்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  5. சூப்பர்!

    அதைவிட படங்கள் அருமை.

    நன்றி உலகநாதன் தொடர் வாசிப்புக்கும் தொடர் பின்னுட்டத்திற்க்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  6. க‌ருத்துக‌ள் ந‌ன்று காட்சிக‌ள் அதைவிட‌ மிக‌ ந‌ன்று

    ReplyDelete
  7. நன்றி தமி்ழ்வாணன்.. உங்கள் முதல் வருகைக்கும் பின்னுட்டத்துக்கும் பாராட்டுக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  8. good post thalai, neraiya puthiya visayangala therinchikitten

    ReplyDelete
  9. Dear Jackie,

    Stills were very good,

    mood out ayiduchi paathu!!

    Enna panna mmmmmmm.

    Regards,

    Bala.

    ReplyDelete
  10. சூப்பர் ஜாக்கி, தொடர்ந்து எழுது, படிக்கக் காத்திருக்கிறேன்
    என்றும் அன்புடன்
    நண்பன் பாஸ்டன் ஸ்ரீரான்

    ReplyDelete
  11. எனக்கும் கூட.. முதல் பகுதிதான் பிடிச்சிருந்தது ஜாக்கி! (உங்களுக்கு என்ன வயசுன்னு தெரியாமலேயே.. இப்படி கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்).


    இரண்டாம் பகுதியின் செயல் எனக்கு பிடிக்கலைன்னாலும்..., திரு. ரங்கசாமி சொன்னது பிடிச்சது!!

    ////இப்ப தேசிய கொடியை ஏத்தி விட்டு சல்யுட் செய்யறோம் அது முட நம்பிக்கையா?..//

    ReplyDelete
  12. நல்ல பதிவு. மேலும் இது தொடர்பான அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். இந்த ஏரி காமிராவோட ஒரு நாள் வாடகை எவ்வளவு?

    ReplyDelete
  13. ஹாலிவுட் பாலா,

    தனா என்னளவுக்கு யூத்து இல்லயின்னாலும், அவன் வழுக்கை சொல்லுமளவுக்கு ஓல்டும் இல்ல.
    யூத்துகும் ஒல்டுக்குன் நடுவுலன்னு வெச்சிக்கலாம்...
    எவ்வள்வு கலாய்ச்சாலும் தாங்குவான், ரொம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்லவன்...
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  14. தகவல் பகிர்வுக்கு நன்றி ஜாக்கி

    ஹரி ராஜகோபாலன்

    ReplyDelete
  15. சுவார‌ஸ்ய‌மான ப‌திவு.. தொட‌ருங்க‌ள் ஸார்.

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  16. ஜாக்கி அண்ணே மிக நல்ல பதிவு,
    காமிராக்கள் பற்றியும் தமிழ் ஷூட்டிங் ஸ்பாட்டின் தொழில் பக்தி பற்றியும் அறிந்து கொண்டோம்.ஓட்டுக்கள் போட்டாச்சு

    ReplyDelete
  17. படங்கள்
    சூப்பர் அண்ணே...
    நீங்க போட்ட படத்தின் மூலம்
    ஏதோ சொல்ல வரீங்க...

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  19. good post thalai, neraiya puthiya visayangala therinchikitten--//
    நன்றி யோ பகிர்தலுக்கு

    ReplyDelete
  20. Dear Jackie,

    Stills were very good,

    mood out ayiduchi paathu!!

    Enna panna mmmmmmm.

    Regards,

    Bala.//

    பாலா வெளியூர்ல இருந்தா மூட் அவுட்தான் அகும்.. நன்றி பாலா.. தொடர் பின்னுட்டத்திற்க்கு

    ReplyDelete
  21. சூப்பர் ஜாக்கி, தொடர்ந்து எழுது, படிக்கக் காத்திருக்கிறேன்
    என்றும் அன்புடன்
    நண்பன் பாஸ்டன் ஸ்ரீரான்//
    நன்றி ஸ்ரீராம் கண்டிப்பாக நிறைய எழுதுகின்றேன்..

    ReplyDelete
  22. எனக்கும் கூட.. முதல் பகுதிதான் பிடிச்சிருந்தது ஜாக்கி! (உங்களுக்கு என்ன வயசுன்னு தெரியாமலேயே.. இப்படி கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்).


    இரண்டாம் பகுதியின் செயல் எனக்கு பிடிக்கலைன்னாலும்..., திரு. ரங்கசாமி சொன்னது பிடிச்சது!!

    ////இப்ப தேசிய கொடியை ஏத்தி விட்டு சல்யுட் செய்யறோம் அது முட நம்பிக்கையா?..////

    பொதுவா நான் வயசு பார்த்து பழகறது இல்லை பாஸ்டன் ஸ்ரீராம் சொல்லுவாப்பல இங்க அமெிரிக்காவுல பிரசிடன்ட் ஆக இருந்தாலும் மிஸ்டர் மற்றும் பெயர் வைத்தே அழைப்பார்கள் அது போலதான் நானும்

    நன்றி பாலா

    ReplyDelete
  23. நல்ல பதிவு. மேலும் இது தொடர்பான அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். இந்த ஏரி காமிராவோட ஒரு நாள் வாடகை எவ்வளவு?//

    அது பத்தி விசாரிச்சு இன்னொறு பதிவு போடறேன்...

    ReplyDelete
  24. ஹாலிவுட் பாலா,

    தனா என்னளவுக்கு யூத்து இல்லயின்னாலும், அவன் வழுக்கை சொல்லுமளவுக்கு ஓல்டும் இல்ல.
    யூத்துகும் ஒல்டுக்குன் நடுவுலன்னு வெச்சிக்கலாம்...
    எவ்வள்வு கலாய்ச்சாலும் தாங்குவான், ரொம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்லவன்...
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்//

    நன்றி ஸ்ரீராம் என்னை புரிந்து வைத்து இருப்பதற்க்கு... எனக்கு பொதுவாக இது போல் நண்பர்கள் கலாய்தால் எனக்கு கோபம் வராது அப்படி வந்தால் வெளிப்படையாய் சொல்லிவிடுவேன்...

    நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  25. ஜாக்கி அண்ணே மிக நல்ல பதிவு,
    காமிராக்கள் பற்றியும் தமிழ் ஷூட்டிங் ஸ்பாட்டின் தொழில் பக்தி பற்றியும் அறிந்து கொண்டோம்.ஓட்டுக்கள் போட்டாச்சு//
    நன்றி
    கார்த்தி மிக்க நன்றி தொடர் வாசிப்புக்கும் பகிர்தலுக்கும் ஓட்டு போடுவதற்க்கும்... நன்றிகள்

    ReplyDelete
  26. சுவார‌ஸ்ய‌மான ப‌திவு.. தொட‌ருங்க‌ள் ஸார்.

    -Toto
    www.pixmonk.com//

    மிக்க நன்றி டாடூ பகிர்தலுக்கு

    ReplyDelete
  27. தகவல் பகிர்வுக்கு நன்றி ஜாக்கி

    ஹரி ராஜகோபாலன்//
    நன்றி ஹரி மிக்க நன்றி

    ReplyDelete
  28. படங்கள்
    சூப்பர் அண்ணே...
    நீங்க போட்ட படத்தின் மூலம்
    ஏதோ சொல்ல வரீங்க...// உண்மைதான் ஜெட்லி உனக்காகவது புரிஞ்சுதே..

    ReplyDelete
  29. நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்// நன்றி சந்ரு உங்கள் முதல் வருகைக்கு...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner