சென்னையில் ஒரு கோடி கொடுத்து வீடு வாங்கனவன் எல்லாம் தெருகோடியில நிக்கறானுங்க....


மும்பை குண்டு வெடிப்பும் பாரபட்சம் உள்ள வட இந்திய மீடியாவும் சென்னை பெருமழை பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவல்லை. முன்னாள் பிரதமர் விபிசிங் இறந்ததை கூட இரண்டு நிமிடம் சொல்ல மனம் வராத மீடியாக்கள்தான் வட இந்திய மீடியாக்கள்.


சென்னையில் ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனியை அடுத்த ராமாபுரம் , ஆழ்வார் திருநகர், தேவிகுப்பம் , வளசரவாக்கம், ஆலபாக்கம், இந்த பக்கம்வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரனை, பம்மல் மடிப்பாக்கம் போன்ற இடங்களில் எல்லாம் வீட்டு வாடகை என்பது டபுள் பெட்ரும் 10,000 ஒரு லட்சரூபாய் அட்வான்ஸ் தொகை கொடுத்து குடிபுகுந்தார்கள்.

அதுவும் சொந்தமாக கிரவுண்டு வாங்கி வீடு கட்டடும் போது ஒரு கோடி முதலிடு செய்தார்கள். வாங்கிய இடங்கள் எல்லாம் ஏரி மற்றும் தாழ்வான பகுதிகள். ஒரு கோடி கொடுதது வாங்ககியவர்கள் எல்லாம் தெரு கோடிக்கு வந்துஇருக்கிறாப்கள்.

தண்ணீர் உள்ள இடத்தில் இருந்து ஒரு ஆளை அழைத்து வர 80ரூபாய் வாங்கி அழைத்து வந்தார்கள் ஆட்டோ டிரைவர்கள் .

இப்போது மட்டும் அல்ல எப்போதுமே சென்னை ஆட்டோகாரர்கள் போல் நியாயமானவர்கள், சட்டத்துக்க கட்டுபட்டுநடப்பவர்கள் இநத உலகத்தில் இருக்க முடியாது.

பைக்கில் போன ரோட்டில் குழந்தை குட்டிகளுடன் போட்டில் போய் கொண்டு இருக்கிறார்கள் இந்த முதலிட்டை சொந்த ஊரில் செய்து இருந்தாலும் 25 டபுள் பெட்ரூம் தனி வீட்டுக்கு சொந்தக்காரகளாக இருந்து இருக்கலாம்.


அலச்சல்கார வீட்டு ஓனர்கள் பணம் வாங்கி பர்க்கெட்டில் போட்டதும் அந்த பக்கமே வர வில்லை இந்த ஆட்சி மட்டும் இல்லை எந்த ஆட்சியும் வெள்ளம் வரும் போது இரண்டாயிரம் பணம் பத்து கிலோ அரிசி கொடுப்பதோடு தன் கடமையை முடித்து கொள்கிறது.

அதற்க்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துவதும் தொலை நோக்கு பார்வையும் இவர்களிடம் இல்ல இல்லை.
கவுன்ஸ்லர்களும் காண்ட்ராக்ட் காரர்களும் கடன் இழவே என்று ரோடு போடுவதும் சாக்கடை கட்டுவதும் ஏதும் நிரந்தர தீர்வை தர இயலவில்லை.


ஆட்சியாளர்கள் போயஸ் கார்டனிலும் அதன் எதிர்புறம் உள்ள கோபால புரத்திலும் மனைவி நண்பியோடு இருக்கம் போது புறநகர் மக்கள்பற்றி அவர்களுக்கு என்ன கவலை வந்து விட போகிறது.


அன்புடன்/ஜாக்கிசேகர்.

16 comments:

  1. என்னாது தொலைநோக்குப் பார்வையா? அதுவும் நம்ம அரசியல்வாதிங்ககிட்டயா? அவங்க தொலைநோக்குப் பார்வையெல்லாம் தன் குடும்பத்துல எத்தனை தலைமுறைக்கு சொத்து சேக்கலாம் அப்படின்றதோட சரி.. பொதுஜனத்த பத்தி அவங்க கவலைபடுறதா? நம்மள வெச்சி காமெடி கீமடி பண்ணலியே நீங்க... :(

    ReplyDelete
  2. போர்கால நடவடிடககை மற்றும் தொலை நோக்கு பார்வை இதெல்லாம் நம்ம அரசியல் வாதிகள் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்

    ReplyDelete
  3. //ஆட்சியாளர்கள் போயஸ் கார்டனிலும் அதன் எதிர்புறம் உள்ள கோபால புரத்திலும் மனைவி நண்பியோடு இருக்கம் போது புறநகர் மக்கள்பற்றி அவர்களுக்கு என்ன கவலை வந்து விட போகிறது.//

    அவங்க எதுக்கு நம்மல பத்தி கவலைப்படனும்.

    அவங்களுக்கு ஆயிரம் கவலை கண்டிப்பா மக்களை பத்தி கிடையாது.

    ReplyDelete
  4. என்ன, ஒரு ஓட்டு விழுந்திருக்கா..? எஞ்ஜாய்! (அஞ்சு நட்சத்திர அந்தஸ்து குடுத்துக்கமில்ல...)

    ReplyDelete
  5. கிழி என்ன சொல்ல வருகிறீர்கள்

    ReplyDelete
  6. ஆட்காட்டி என்ன எதிர் பார்க்கிறீர்கள்

    ReplyDelete
  7. //இப்போது மட்டும் அல்ல எப்போதுமே சென்னை ஆட்டோகாரர்கள் போல் நியாயமானவர்கள், சட்டத்துக்க கட்டுபட்டுநடப்பவர்கள் இநத உலகத்தில் இருக்க முடியாது.// :)

    ReplyDelete
  8. ஒரு கோடி, தெருக்கோடி - கலைஞர் மாதிரியே கவிதை (?) எழுதுறீங்க...

    கலக்குங்க

    அன்புடன் நித்யன்

    ReplyDelete
  9. நன்றி அத்திரி சார் தொடர்ந்து நீங்கள் இடும் பின்னுட்டத்துக்கு

    ReplyDelete
  10. கலைஞரோடு எல்லாம் கம்பேர் பண்ணாதிங்க தலை

    ReplyDelete
  11. //
    இப்போது மட்டும் அல்ல எப்போதுமே சென்னை ஆட்டோகாரர்கள் போல் நியாயமானவர்கள், சட்டத்துக்க கட்டுபட்டுநடப்பவர்கள் இநத உலகத்தில் இருக்க முடியாது.
    //

    ultimate
    :)))))))))))))))

    ReplyDelete
  12. //
    இந்த ஆட்சி மட்டும் இல்லை எந்த ஆட்சியும் வெள்ளம் வரும் போது இரண்டாயிரம் பணம் பத்து கிலோ அரிசி கொடுப்பதோடு தன் கடமையை முடித்து கொள்கிறது.
    //

    :((((((((((

    ReplyDelete
  13. நன்றி சிவா தங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  14. சமூக அக்கறை சார்ந்த பதிவு.சென்னை வாசிகளுக்கு ஒரு எச்சரிக்கை.ஒரு கோடி,தெருக்கோடினு வார்த்தை ஜாலத்துல கலக்குறீங்களே,ஏப்பா அஸிஸ்ட்டெண்ட் டைரக்டர்ஸ், நோட் பண்ணுங்கப்பா

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner