(பாகம்/8) மதிப்பில்லாத காதல். priceless பிரெஞ்சு பட விமர்சனம்.



நான் முதல் முதல் எழுதிய கவிதை

காதல் புனிதமானது
தெய்வீகமானதும் கூட
என் வீட்டு சகோதரிகள்
காதல்வயப்படாதவரை......

என்று அந்த வயதில் காதல் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதியது. நாட்கள் நகர்ந்தன என் திருமணமும் காதல் திருமணத்தில் முடிந்தது. அதுவும் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல பத்து வருடங்கள்.


காதல் சக்தி வாய்ந்த விஷயம்தான். அது எந்தளவுக்கு என்பதுதான் பிரைஸ்லெஸ் படத்தின் கதை.

ஜேன் ஒரு பார் அட்டன்டர். நாளைய சோத்துக்கு ஜிங்கிஅடிப்பவன். ஒரு நாள் அந்த ஓட்டலில் இருந்த பாருக்கு நேரங்கெட்ட நேரத்தில் ஐரின் வருகிறாள்,
அவளை பற்றி சில வரிகள் பார்த்தே ஆக வேண்டும்.


எண்ணை வளம் உள்ள நாடுகளின் மேல் எப்படி அமெரிக்காவுக்கு ஒரு கண்இருக்கிறதோ அதே போல் யாரிடம் எல்லாம் பணம் இருக்கிறதோ அவர்கள் மீது எல்லாம் ஐரினுக்கு ஒரு கண் இருக்கும், அதே போல் அவர்கள் கைபேசி எண் அவள்டைரியிலும் இருக்கும்.


பணம் ஒரு அறுபது வயது கிழவனிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் எதை பற்றியும் கவலை படாமல் முனியாண்டி விலாஸ் ஓட்டலில் காடை ,கவுதாரி ,சிக்கன், எல்லாம் ஒரு டிரேயில் வைத்து நீட்டுவார்களே அது போல் யாரிடம் வேண்டுமானாலும் தன் உடம்பை காட்டி விடுவாள்.

எல்ஐசி பாலிசி போல் அவளுக்கும் ஒரு பாலிஸி இருந்தது.
சுகத்துக்கு சுகம் பணத்துக்கு பணம் இதுதான் அந்த பெருமை வாய்ந்த பாலிஸி.


எத்தனையோ பேரிடம் எத்தனையோ இரவுகள் கழித்தாலும், ஜேன் வேலை செய்யும் ஓட்டலுக்கு அவள் வந்தது அறுபது வயது கிழவருடன்.

கிழவர் ரெண்டு பெக் போட்டதும் மட்டையாகி விட அன்று பார்த்து அவளுக்கு பர்த்டே.
கம்பெனிக்கு வந்த கிழவன் மட்டையானதால் சோகத்துடன் பாருக்குவர அங்கு ஜென் தவிர வேறு யாருமில்லை.


ஐரின்ஜேனை கம்பல் செய்து இரண்டு பெக் கம்பெனி கொடுக்க சொல்ல , தேவதை போன்ற பெண் கம்பனி கொடுக்க சொல்லும் போது யார்தான் கம்பெனி கொடுக்காமல் இருக்க முடியும்....

அது கடைசியில் இரண்டு பேர் உடம்பிலும் ஒட்டு துணி கூட இல்லாமல் செய்ய, அது அந்த கிழவனுக்கு தெரிய வர, அப்புறம் அந்த விஷயம் அந்த ஓட்டடல் முதலாளி்க்கு தெரிய வர கிழவன் அவளை கழட்டி விட, ஓட்டல் நிர்வாகம் இவனை கழட்டி விட இருவரும் நடுதெரு நாராயணனாக நடுத்தெருவில் நிற்க்கிறார்கள்.


ஐரின் தன் செய்த செயலை நினைத்து வருந்தி அடுத்த ஆளை தேடி போக, ருசி கண்ட பூனையான ஜேன் அவள் பின்னாடியே வர அடுத்த வேளை சோறும் தங்க இடமும் இல்லாத இருவரும் என்ன ஆனார்கள் அவன் காதல் கை கூடியதா?. அவன் காதலை அவள் ஏற்றுக்கொண்டாளா? என்பதை காமெடி கலந்த விறுவிறப்புடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர்Pierre Salvadori


படத்தை பற்றி சவாரஸ்யமான சில வரிகள்....

ஒரு சின்ன முடிச்சை வைத்து காமெடி கலந்து ரொம்ப அற்புதமாக லோ பட்ஜெட் படமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர்.


எவ்வளவுதான் ஜெனை ஜரின் உதாசினப்படுத்தினாலும். கடைசி கை இருப்பாக ஒரு யூரோ நாணயத்தை கொடுத்து பத்து செகன்டு உன்னைபார்த்து கொள்கிறேன் என்று சொல்ல அவள் அந்த ஒரு யூரோ பணத்தையும் வாங்கி கொண்டு பத்து செகண்டு முடிந்து விட்டது என்று சொல்லி அவள் நகர அவளை காதலுடன் பார்க்கும் நாயகனை கோவில்கட்டி கும்பிடலாம்.

காதல் வயப்பட்டவர்கள் இந்த படத்தை மிகவும் ரசித்து பார்ப்பார்கள்.

நாளைய சோத்துக்கு வழி இல்லாத நாயகன் நம்பிக்கையுடன் அவளை தொடரும் போது what ever may happen but life must go on.... என்ற வரி ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை

நாயகன் காக்டெயில் கலந்து அவளுக்கு கொடுக்க அது நிறைய பெக் சென்றுவிட்டதை சிறு குடைமூலம் விளக்கியிருப்பார் இயக்குநர்.

நல்ல படம் பார்த்து நாளாயி்ற்று என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த படம் அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்ய வல்லது.


Director: Pierre Salvadori

Cast: Audrey Tautou, Gad Elmaleh, Marie-Christine Adam, Vernon Dobtcheff full cast

Rated: 12A

Duration: 106 mins

UK Release: Jun 13 2008
US Release: Mar 28 2008

3 comments:

  1. எமிலி படத்தில் நடித்த நடிகை போல தெரிகிறதே,கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்

    ReplyDelete
  2. "விலை மதிப்பற்ற காதல்" என்பதே சரியான மொழி பெயர்ப்பு

    ReplyDelete
  3. ஆர்ட் படம் போல் தெரியுது.இருந்தாலும் ப்ரெட்டிவிமன் படக்கதையின் சாயல் உள்ளது.ஹீரோ ,ஹீரோயின் கேரக்டர் வர்ணனை உங்கள் காமெடி சென்ஸை வெளிப்படுத்துது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner