சட்ட கல்லூரி மாணவர்கள் கோபம் நியாயமானது தானா?


சட்ட கல்லூரி மாணவர்கள் ஒரே கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தி மூன்றுமாணவர்களை நடை பினமாக்கி இருக்கிறார்கள்.எல்லோரும் இந்திய இறையான்மை காப்பபற்றுவதற்க்காக படித்து கிழிக்க இருப்பவர்கள்.


பிரச்சனை என்பது உப்பு சப்பு இல்லாத காரணமாகத்தான் இருக்கும்.
ஒன்றும் இல்லாத காரணத்திற்க்கே கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என்றால்,
அதுவும் அடி பட்டு மயங்கியவனை பொலந்து கட்டும் இவர்கள் மனநிலையை பாருங்கள்.

படிக்கிற பையன் கையில் கத்தி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி இருக்கிறது என்றால் அது அப்படி என்ன தலை போககூடிய பிரச்சனை? அதற்க்கு வன்முறை ஒன்றுதான் தீர்வா?




அதே போல் என்ன இருந்தாலும் விடுதலைபுலிகள் ஆயுதம் தூக்கியது தவறு என்று நம்மவர்களில் படித்த பலர் சொல்ல கோட்டு இருக்கிறேன்.



படித்து சட்டத்தின் மூலம்எழை மக்களை காக்க வேண்டிய மாணவனின் கையில் கத்தி தடி போன்ற ஆயுதங்கள் . இந்தனைக்கு இலங்கை தமிழர்கள் போன்று பெரிய புலம் பெயர்ந்த வலியோ, சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்டவேதனையோ ஏதும் இல்லாத மாணவர்கள் இவர்கள் சபிட்சமான வாழ்க்கை வாழ்ந்த இந்த மாணவர்களுக்கே இவ்வளவு கோபம் என்றால்? சொந்த நாட்டு மக்களை காக்க நினைத்த புலிகளுக்கு?


செருப்பு போட்டு இருப்பவனுக்குதான் அந்த செருப்பு கடிப்பதன் வலி தெரியும் என்பார்கள்.

பிறந்து வளர்ந்த நாட்டில் முன்றாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டு, உரிமைகள் வேண்டும் என்று சாத்வீக முறையில் போரட்டாம் நடத்திய தமிழ் மக்களை நிராயுதபானியாக இருந்த போது அந்த கூட்டத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்களே சிங்களவர்கள், அப்போது எவ்வளவு கோபம் வந்து இருக்கும்.

காக்கும் என்ற இலங்கை அரசு கை கட்டி வெடிக்கை பார்க்கும் போது அந்த நாட்டு மக்கள் ஆயுதம் தூக்குவார்களா? மாட்டார்களா?

இப்போது கூட சட்டகல்லூரி மாணவர்கள் தாக்குதலை பக்கத்தில் வேடிக்கை பார்த்து கொண்டு நின்ற போலிஸ்சார் மீதுதான் போது மக்களின் ஒட்டு மொத்த கோபமும். அது போல்தான் ஒட்டு மொத்த தமிழர்களும்வெடிக்கை பார்த்த இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதங்கள் தூக்கினார்கள் இது பெரும் தவறா?


சின்ன பிரச்சனைக்கு கொலை வெறி தாக்குதல் நடத்தும் போது, தன் மனைவி தன் எதிரே கற்பழிக்கபடும் போதும், தன் தங்கையை எதிரில் ஆயுதம் வைத்து மிரட்டி கற்பழிக்க வைத்த போது எந்த அண்ணணும் பொங்கிதான் எழுவான்.


தன் சொந்த மக்கள் துரத்தி துரத்தி அடிக்கும் போது ஆவர்கள் ஆயுதம் தூக்கியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் ஆயுதஙக்ளை தூக்கியது என்ன நியாயம்?

ஆனால் தொடர்ந்து தமிழில் சில ஏடுகள் தொடர்ந்து புலிகள் ஆயுதம் தூக்கியது தவறு என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.



எந்த பெரிய வேதனையையும் அனுபவிக்காதவனும் ஆயுதம் எடுக்கிறான். பெரிய இழப்புகளை சந்தித்தவனும் ஆயுதம் எடுக்கிறான்.

ஆனால் தெரிந்தோ தெரியாமலே நாம் அனைவரும் வன்முறை அரக்கனால் கட்டப்பட்டு இருக்கிறோம் என்பதே நிதர்சன உண்மை.


அன்புடன்/ ஜாக்கிசேகர்

2 comments:

  1. உங்கள் கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்..

    ReplyDelete
  2. ஜாக்கி சார்...

    இந்த அதிர்ச்சி நிகழ்வின் போது கை கட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் அதிகாரிகளைப் பற்றியெல்லாம் உங்களுக்கு வருத்தம் வராது.

    இப்படி ஒருபக்கம் சார்ந்து, செயல்படாமல் கைகள் கட்டப்பட்ட காவல்துறையைப் பற்றி கிஞ்சித்தும் விமர்சிக்காத உங்களுடைய இந்த பதிவிற்கு நான் என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

    நித்யகுமாரன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner