
நேற்றுதான் எழுத தொடங்கியது போல் இருக்கிறது . ஆனால் அதற்க்குள் எவ்வளவு பிரச்சனைகள், எவ்வளவு சந்தோஷங்கள்.
என் எண்ணத்தை இந்தபூமியில் வாழும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் படித்து பத்து பதினைந்து நிமிடத்தில் பதில் பின்னுட்டமாக போடும போது நம் எழுத்துக்கு உடன்கொடுக்கப் படும் வரவேற்ப்பு எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத வரப்பிரசாதம் என்பேன்.
அதே போல் தவறு என்றால் உடன் அந்த தவற்றை சுட்டிக்காட்டும் வேகமும் எனக்கு ரொம்பவும் பிடித்தமானது.
பதிவு எழுத ஆரம்பித்து அதற்க்குள் 100 பதிவாகவிட்டது. இன்னும் நிறைய எழுத ஆசைதான் ஆனால் என்ன செய்ய நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் இந்த மூன்று மாதத்தில்100 எனும் போது சற்று மலைப்பாகவும் , சந்தோஷமாகவும் இருக்கிறது.
இந்த நல்ல விஷயத்தை எனக்கு அறிமுகப்படுத்திய வலைபதிவர் நித்யகுமாரன் என்றென்றும் என் நன்றிக்கு உரியவர்.
தொடர்ந்து என் பதிவுகளை வெளியிட்டு வரும் தமிழ் மனம் மற்றும் தமிழ் வெளி, தமிலிஷ் போன்ற திரட்டிகளுக்கும், தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்
மங்களுர் சிவா
வெண்பூ
வால்பையன்
நித்யகுமாரன்
குண்டுமாமா
போன்றவர்களுக்கு என் இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகள்.
அதே போல் அதிஷா, முரளி கண்ணன், கிரி, போன்று என் வலைபதிவை படித்து தொடர்ந்து பின்னுட்டம் இட்டு என்னை ஊக்கப்படுததும் சக பதிவர் அனைவருக்கும் என் நன்றிகள்.
அமெரிக்காவில் தொடர்ந்து என் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கும் மற்றம் உலகம் எங்கும் காற்றை போல் வியாபித்து இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த சுவாரஸ்யமான எழுத்தை எழுத முக்கிய காரணம் என் அம்மமா ஜெயலட்சுமி என்னை சிறு வயதில் அதிகம் வாசிக்க கற்றுகொடுத்ததே முக்கிய காரணம் என்பேன் .
அதே போல் கடலூர் திருப்பாதிரிபூலியூர் ராமகிருஷ்னா பள்ளியில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கற்றுக் கொடுத்த ஒன்றாம் வகுப்பு ஆசிரியை ரோஸ்லின் டீச்சருக்கும்,
கதை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய தினத்தந்தி சிந்துபாத் எழுதும் சாகா வரம் பெற்ற எழுத்தாளருக்கும்,
பாக்கெட் நாவல் அறிமுகபடுத்தி தமிழகத்தில் படிப்பு சுவை ஏற்படுத்திய பாக்கெட் நாவல் அசோகனுக்கும்,
பத்தாம் வகுப்பு படித்த என்னை கிரைம் நாவல் படிக்க வைத்த எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார் அவர்களுக்கும், சுபா, பட்டுகோட்டைபிரபாகர் அவர்களுக்கும்.
எழுத்தின் சுவை மேலும் கூட்டி உலகம் பற்றி அறிவை விசாலப்படுத்திய எழுத்தாளர் ஏகலைவன் சுஜாதாஅவர்களுக்கும்,
வாழ்க்கை பற்றிய அறிவை புகட்டிய எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
தமிழ் டைப்பில் என் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் என் தங்கை சுதாவடமலைக்கும்,
எப்போதும் கம்யூட்டரே கதியா? என்று கேள்வி கேட்டு வெறுப்பு ஏற்றாமல் என் எழுத்தை தொடர்ந்து வாசித்து நல்ல எழுத்துக்களுக்கு வாழ்த்து உடன் தெடரிவித்து ஊக்கப்படுத்தும் என் மனைவி சுதா சீனிவாசன் என்றென்றும் என் நன்றிக்கு உரியவர்கள்
சிறுவயதில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து ஹாலிவுட் வசூல் சாதனைகளை முறியடித்த என் இன்ஸ்பிரேஷன் ஹாங்காங் நடிகர் ஜாக்கிசானும் என் நன்றிக்கு உகந்தவர்
தொடர்ந்து எழுத பலத்தையும் அறிவையும் கொடுக்கும் எல்லாம் வல்ல பரம் பொருளுக்கு என் நெடுஞ்சான் கிடையான நன்றிகள் பல.
அன்புடன்/ஜாக்கிசேகர்
வாழ்த்துக்கள் நண்பரே !
ReplyDeleteநன்றி ரிஷான், பதிவர்களிள் முதல் முதல் என் படத்தை வைத்து பல பதிவர் படத்துடன் ஒரு பதிவு எழுதியவர் நீங்கள்தான். இருப்பினும் அவசரத்தில் உங்கள் பெயர் விடுபட்டு விட்டது. மன்னிக்கவும்
ReplyDeleteமுதல் சதம்!!!
ReplyDeleteஇனிய வாழ்த்து(க்)கள்.
படத்தை மட்டும் முதலில் பார்த்துட்டு,
அட! ஜாக்கிசேகர், ஜாக்கிச்சான் மாதிரி இருக்காரேன்னு நினைச்சேன்.
'ஜாக்கி'யின் பொருள் புரிந்தது:-)))
வாழ்த்துக்கள் நண்பரே !
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் :)
ReplyDeleteநன்றி துளிசி கோபால் , தங்கள் வருகைக்கு.ஜாக்கியின் வெறியும் உழைப்பும் எனக்கு மிகவும் பிடித்தமானது.
ReplyDeleteநன்றி விஸ்வா உங்கள் வாழ்த்துக்கள் படி
ReplyDeleteநன்றி ராப் தங்கள் இப்போதெல்லாம் தொடர்ந்து படித்து பின்னுட்டம் இட்டு வருகிறீர்கள் உங்களுக்கு என் நன்றிகள் பல
ReplyDeleteநன்றி தூயா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteசாரே...
ReplyDeleteஉங்களுக்காக ஒரு பதிவு எழுதியிருக்கேன் வந்து பாத்துட்டு போங்க..
அன்பு நித்யன்
கலக்குங்க ஜாக்கி :)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்...
ReplyDeleteநன்றி சுந்தர் தங்கள் வாழ்த்துக்கு
ReplyDeleteநன்றி சரவணக்குமார் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கிசேகர்.
ReplyDeleteஎனக்காக தனியாக படிதவையே போட்டு என் எழுத்தை பிரித்து மேய்ந்த பதிவர் நித்யாவுக்கு என் நன்றிகள் மேலும் வாசிக்கhttp://nithyakumaaran.blogspot.com/2008/11/100.html
ReplyDelete100 பதிவா? வாவ்.. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ஜாக்கி..
ReplyDeleteநன்றி வெண்பூ எங்கே உங்களை கானோம் என்று எண்ணி இருந்தேன் நன்றிகள் பல
ReplyDeleteஜாக்கி சேகர் உங்களுடைய 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து நல்ல பதிவுகளை தர வேண்டுகிறேன்
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteநம்ம பதிவுக்கு வாங்க. கருத்து சொல்லுங்கோ.
வாழ்த்துக்கள்....இன்னும் பல நூறு காண வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன் அருணா
நன்றி நண்பர் ரவி
ReplyDeleteவணக்கம் அருனா டீச்சர் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கிசேகர்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் தொடர்ந்து என் பதிவை வாசிப்பதற்க்கும் என் நன்றிகள்
ReplyDelete92 நாளில் 100 பதிவா? அடேங்கப்பா? அப்போ டெய்லி 3 மணி நேரம் செலவு பண்ணனுமே.அருமை.உங்க கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு அண்ணே
ReplyDelete