மேட்டர் செய்யும் இடத்தில் ஒரு பெண்ணுக்கு பல் வளர்ந்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன ஆகும்.?
பொதுவாக வாயில் உள்ள பல் எதற்க்கு? கணமான பொருட்களை கடித்து பின்பு ருசிக்க அல்லவா.
அதுவே உங்கள் வாயில் தேவையில்லாமல் யாராவது விரல் விட்டால் நறுக்கென்று கடிக்கமாட்டீர்கள். அதுதான் அதேதான் இந்த படத்தின் மைய கரு.
உலகலாவிய அளவில் பெண்ணுக்கு எதிரான வன் கொடுமைகள் தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவளை பாதுகாக்கும் ஆண் சமுகம் பாதுகாப்பு கொடுப்பதாக சொல்லி கொண்டு அவளை ருசி பார்த்து விடுகிறது.
இதில் நெருங்கிய உறவுகளான அண்ணன், தம்பி, கொழுந்தன், சில இடங்களில் அப்பா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பொதுவாக நிறைய ஆண்களுக்கு பெண் உறுப்பு போதையான விஷயமாக இருக்கிறது. அது போதை ஏறும் பட்சத்தில் மகள் என்று பார்க்காமல் , மருமகள் என்று பார்க்காமல் தன் இச்சையை தீர்த்துகொள்கிறான்.
ஒரு பெண் இடங்கொடுக்காமல் அந்த இடத்தை அடைய நினைப்பது உலகின் மிக கேவலமான செயல் என்பேன்.
இன்னும் சில அறிவு ஜிவிகள் ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல்எத்தனை பேர் இருந்தாலும் அவளை அடைய முடியாது என்று சொல்லபவர்களும் உண்டு.இரண்டு பேர் கையை பிடித்து கொண்டால் இரண்டு பேர் காலை பிடித்து கொண்டால் மேட்டர் ஓவர்.
இன்னும் முரண்டு பிடித்தால் அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து அவ்வளவுதான்.
( சாமி சத்தியமா எனக்கு எந்த அனுபவமும் இல்லங்க. ஒரு காட்டுவாசி ஆங்கில படத்தில் பார்த்தது.)
ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் தெரிந்தோ தெரியாமலோ அல்லது தெய்வ குத்தத்துடனோ பல் முளைத்து விடுகிறது. அவள் சந்திக்கும் போராட்டங்களை சுவைபட, சற்று காமெடி சற்று திகிலுடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
டான் பதினெட்டு வயது பருவ பெண். அப்பா, அம்மா மற்றும் அண்ணனுடன் வாழ்கிறாள். டான் கிருஸ்த்துவ மதத்தை பரப்பும் ஒரு பேச்சாளினி. அதனால் தான் எப்போதும் கற்புடன் வாழ வேண்டும என்ற கொள்கை உடையவள்.
டானின் அண்ணன் எப்போதும் செக்ஸ் பற்றிய எண்ணங்களோடு வாழ்பவன். சில நேரங்களில்அவன் அம்மாவின் எதிரே கூட செக்ஸ் வைத்து கொள்ள தயங்காதவன்.
அம்மா இரும்பும் போது கூட மருந்து கொடுக்காமல் செக்ஸ் வைத்து கொள்வான் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
டான் இயல்பிலேயே கூச்ச சுபாவம் மிக்கவள். அவளுக்கு டாபே என்ற நண்பன் பழக்க மாகிறான். ஒரு நாள் டான், டாபே மற்றும் சில நண்பர்களுடன் ஒரு அழகான நீர்வீழ்ச்சிக்கு செல்கிறாள். சில நாட்கள் கழித்து அதே நீர்வீ்ழ்ச்சி்க்கு டாபேயுடன் செல்ல நேர்கிறது.
ஒரு தனிமையான தருணத்தில் அவளை டாபே அடைய நினைக்கிறான். அவள் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் கெஞ்சியும் வலுக்கட்டயமாக அவளை புணர்கிறான்.
புணர்ந்து கொண்டு இருக்கும் போதே டாபே வீல் என்று கத்துகிறான். பயத்தில் ஆத்திரத்தில் எழுந்தவனுக்கு பிறப்புறுப்பே இல்லை அது பக்கத்தி்ல் துண்டாக கிடக்கிறது.
அதன் பிறகு அவள் தன் உடம்பில் இருக்கும் வித்தியாசத்துக்கு விடை காண டாக்ட்ரை போய் பார்க்கிறாள், டாக்டர் அவளை சோதனை செய்வதாக சொல்லி வாசலின் தடவி கை உறையுடன் டரன் பிறப்புறுப்பில் கை விடும போது டாக்டரின் கை விரல்களும் துண்டாகி விடுகின்றன.
டானுக்கு பிறப்புறுப்பில் வளர்ந்த பல் நீக்கப்பட்டதா? இன்னும் எத்தனை பேருடைய “அது” துண்டானது என்பதை திருட்டு டிவிடி அல்லது பர்மா பஜார் மார்க்கெட்டில் தேடிபிடித்து பார்க்கவும்.
படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்....
உலகம் எங்கும் ஆண் மனநிலை என்ன என்பதை அற்புதமாக காட்டியிருக்கிறார்இயக்குநர் மிட்செல்.
இப்படி பிறப்புறுப்பில் பல் முளைக்கும் விஷயம் மட்டும் உண்மையாக இருந்தால் உலகில் எந்த பெண்ணும் அவள் விருப்பம் இன்றி புணரமுடியாது. அதே போல் உலகம் எங்கும் பெண்ணுக்கான வன்கொடுமை நடக்காது .
விபச்சாரம் எங்கும் நடக்காது.
உலகில் உள்ள ஆண்கள் பெண்ணை பயபக்தியுடன் நடத்திதான் ஆகவேண்டும். இல்லை என்றால் ஆணின் மேட்டர் கட் செய்யப்படும்.
ஜனத்தொகை உலகில் மட்டுப்படுத்தபடும். இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
படத்தின் கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர். படம் பார்த்த ஜீவன்கள் பின்னுட்டத்தில் பதில் சொல்லி மகிழ வேண்டுமாய் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
படத்தில் இந்த சப்ஜெக்ட்டுக்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விரசம் காண்பித்து இருக்கலாம் ஆனால் அப்படி ஏதும் இல்லை. இதுவே ஒரு நல்ல இயக்குனருக்கான தகுதி.
இந்த படம் சுடன்ஸ் பிலிம் பெஸ்ட்டிவலில் இந்த படம் வெற்றி பெற்ற படம்.
இந்த படம் பார்த்த போது எனக்கு தோன்றிய எண்ணம் என்னவென்றால் உலகம் எங்கும் இருக்கும்பெண்களுக்கு பல் முளைக்கிறதோ இல்லையோ. இலங்கையில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல் முளைத்தால் சிங்கள ராணுவத்தின் கொடுர தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா?. இது பைத்தியக்காரதனமான எண்ணம்தான் என்ன செய்வது.
இந்தியன் படத்தில் சுஜாதா வசனம் போல்.
புத்திக்கு தெரியும் விஷயம் மனதுக்கு தெரிவதில்லை.
Genres: | Suspense/Horror and Teen |
Running Time: | 1 hr. 27 min. |
Release Date: | January 18th, 2008 (limited) |
MPAA Rating: | |
Distributors: | Lionsgate, Roadside Attractions |
U.S. Box Office: | $346,342 |
ஐயோ ஐய்யய்யொ
ReplyDeleteபயமா இருக்கா? தலை
ReplyDeleteஎப்படியும் இந்தப் படம் பார்க்கும் எண்ணத்தை தூண்டுகின்றது உங்கள் பதிவு.
ReplyDelete///இலங்கையில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல் முளைத்தால் சிங்கள ராணுவத்தின் கொடுர தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா?. இது பைத்தியக்காரதனமான எண்ணம்தான் என்ன செய்வது.//
ReplyDeleteடாப் டச்.......
நன்றி ஞன்சேகரன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDelete;)))
ReplyDeleteபார்க்கலாம் ஜாக்கி..
ReplyDeleteசென்னை பெஸ்டிவலுக்கு வருகிறதா என்று பார்ப்போம்..
விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
நீங்கள் சொல்வதைப் போல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்தால் சிரிப்புதான் வருகிறது.
வேண்டிய போது சாதகமாகவும், வேண்டாத போது பாதகமாகவும் பயன்படுத்தும் அளவுக்கு இருந்தால் இன்னும் கொஞ்சம் நலம். உலக வாழ்க்கையில் ஜனத்திரள் அதிகரிக்க வேண்டுமே.? அதற்கொரு வழி வேண்டாமா..?
DVD கொடுத்த உதவுமாறு மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஅன்பு நித்யன்
ஆரம்பத்தில இந்த படத்தைப் பத்தி நான் விமர்சனம் செய்யலாம்ன்னு நினைச்சேன்...அப்புறம் வேண்டாம் சரியா ரெஸ்பான்ஸ் கிடைக்காதுன்னு விட்டுட்டேன்..ஆனா உங்க விமர்சனம் சூப்பர்.
ReplyDeleteபடம் ஆபாசமா எதுவும் தெரியாதது ஒரு ப்ளஸ்பாயிண்ட். இது ஒரு த்ரில்லர் படம்
க்ளைமேக்ஸ்..ஹா...ஹா...
ReplyDeleteஅது நம்ம யூகத்துக்கு விடுவது தான் சூப்பர்.
நன்றி சர்வேசன் நீங்கள் தொடர்ந்து என் தளத்தை படித்து கருத்து சொல்வதற்க்கு
ReplyDeleteநன்றி உண்மை தமிழன். தங்களின் விரிவான பின்னுட்டத்திற்க்கு என் நன்றிகள்
ReplyDeleteநன்றி நித்யா நேரம் கிடைக்கும் போது தருகிறேன்.
ReplyDeleteஅன்புடன்/ ஜாக்கிசேகர்
நன்றி ஆதவன் தங்கள் வருகைக்கு.இதே படத்தை வேறு ஒரு பதிவர் விமர்சனம் செய்து இருப்பது நேற்றுதான் தெரியவந்தது. அவர் வேறு பார்வையில அந்த படத்தை பார்த்தத புருஞ்சுக்க முடியுது, இருப்பினும் என்விமர்சனத்தை படம் பார்த்து விட்டு நல்லா இருக்குன்னு சொன்னது ரொம்ப சந்தோஷம். இந்த பாராட்டுகள்தான் பார்த்தே தீர வேண்டிய படங்கள் தொடருக்கு கிடைத்த வெற்றி நன்றி.
ReplyDeleteபடத்தோட கிளைமாக்ஸ் நீங்க எப்படி சிரிக்கிறீங்களோ அதே போல்தான் நானும் சிரித்தேன்
ReplyDeleteகலக்கல் படத்துக்கு கலக்கல் விமர்சனம்,
ReplyDeleteஎங்கிருந்து உங்களுக்கு இந்த மாதிரி படமெல்லாம் கிடைக்குது.
உங்களின் இந்த தலைப்பு என்னை படிக்க வேண்டாம் என்றுதான் சொன்னது. பின்பு படித்தேன்.
ReplyDeleteபாதி படித்துக்கொண்டு வரும்போதே
எனக்கும் இந்த எண்ணம் தான் தோன்றியது.
இந்த படம் பார்த்த போது எனக்கு தோன்றிய எண்ணம் என்னவென்றால் உலகம் எங்கும் இருக்கும்பெண்களுக்கு பல் முளைக்கிறதோ இல்லையோ. இலங்கையில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல் முளைத்தால் சிங்கள ராணுவத்தின் கொடுர தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா?.
நன்றி வால் பையன். இந்த மாதிரி படங்கள் எல்லாம் நண்பர்கள் சொல்லி வாங்கி பார்ப்பதுதான்.அது மட்டும் இல்லாமல் படங்களின் மேல் உள்ள காதலும் இதற்க்கு காரணம் அதை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதற்க்காகவே இந்த தொடர்
ReplyDeleteநன்றி வர்ஷினி அம்மா தங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteபாலகுமாரன் முகவரி படத்தில் ஒரு வசனம்நல்வர்ள் நல்லவர்களை சந்திச்சே ஆகனும். அது போல நீங்கள் யோசித்த விதமும் நான் யோசித்த விதமும் ஒன்றே. குழந்தை வர்ஷினி்க்கு என் அன்பை சொல்லுங்கள்
அதே போல் தலைப்பு கொஞசம் உறுத்தல்தான். ஆனால் அந்த இடத்தில் பல் முளைத்தால் என்று நான் வந்த வழியை விரசப்படுத்த விரும்பவில்லை அதை விட இந்த படத்தின் சாரம்சமே அதுதான் எனும் போது அதில் என்ன வெட்கம்...
அதே போல் உங்கள் போஸ்டர் பற்றிய பதிவு அருமை
\\ ஆ.ஞானசேகரன் said...
ReplyDelete///இலங்கையில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல் முளைத்தால் சிங்கள ராணுவத்தின் கொடுர தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா?. இது பைத்தியக்காரதனமான எண்ணம்தான் என்ன செய்வது.//
டாப் டச்.......\\
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் .....
அருமையான விமர்சனம், கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். உங்களின் சரளமான நகைச்சுவை கலந்த கட்டுரை மிகவும் ரசிக்கும்படி உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சிவா தங்களை போன்றவர்களின் பாராட்டுக்கள்தான் என்னை அதிகம் எழுத உற்சாகப்படுத்துகின்றன...
ReplyDeleteபெண்ணின் சம்மதம் இல்லாமல்....
ReplyDeleteஎன்ற கேள்விக்கு நீங்கள் அளீத்த பதில் அருமை.அனுபவம் பேசுதோ.இலங்கைத்தமிழர் பிரச்சனையை டச் பண்ணியது நகைச்சுவை உணர்ச்சி உங்களூக்குள் இருந்தாலும் அதையும் மீறி சமூக பொறுப்புணர்வு இருப்பதை காட்டுது,ஓகே வழக்கமா ட்ரைலர் போடுவீங்க ஏன் போடலை?