
இன்று (16/11/08 )காலையில் தினமலர் நாளிதழின் வால் பேப்பர் பார்க்க நேர்ந்தது. பூநகரி கடற் படை தளத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றி வி்ட்டதால் ராஜபக்சேவை விட,நமது தமிழக நாளேடு தினமலர் வெற்றி கூத்தாடுகிறது.
தினமலர் பத்திரிக்கை நிறைய சமுக பிரச்சனைகளை அவர்களின் நக்கலோடு அலசினாலும் ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்ட்டு கொண்டு இருக்கும் போது தினமலரின் இந்த நக்கல் தேவை இல்லாதது.
விடுதலைபுலிகளின் கதி என்ன? என்று வால் பேப்பரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். தினமலரை பொறுத்தவரை அது தீவிரவாத இயக்கம். அவர்கள் எப்படி போனால் என்ன எவன் மயிரை புடுங்கினால் இவர்களுக்கு என்ன?
ஆக விடுதலைபுலிகள் கதி என்ன ? என்று அந்த கேள்வியோடு வால்பேப்பர் போட்டால் சர்க்குலேஷன் தமிழகத்தில் அதிகம் விற்க்கும் என்பதால்தானே. அந்த வால்பேப்பர்.
இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்படட் கதையாக இருக்கின்றது. போதும் நீங்கள் வருத்தப்பட்டதும் கவலை பட்டதும்.
நீங்கள் நங்கநல்லுரில் நாலவது தெருவில் தெருவிளக்கு எரியவில்லை என்று எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பொழப்புக்கு...........................................................................................................................................................................
..........................................................................................................................................................................
..........................................................................................................................................................................
.........................................................................................................................................................................
அவர் அவர்கள் கோபத்துக்கு ஏற்றது போல் கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க.
அன்புடன் /ஜாக்கிசேகர்.
வீரமணி சொன்னது போல தினமணி ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் மிகுந்த ஆதரவு இருக்கிறது என்று புள்ளிவிவரம் போடுகிறார்கள்.
ReplyDeleteஇதையே நாம் சொன்னால் தீவிரவாதம் என்று சொல்கிறார்கள்.
புலிகளுக்கு தமிழக மக்களிடம் அபார ஆதரவு உள்ளது எனச்சொல்லி தமிழ் மக்களிடம் வியாபாரம் செய்துவிடுகிறார்கள்.
http://thamizhoviya.blogspot.com/2008/11/blog-post_3307.html
விடுதலைப்புலிகளுக்கு தமிழ் மக்களிடம் எவ்வளவு அபாரமான ஆதரவு இருக்கிறது என்பதை புள்ளி விவரத்துடன் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருந்தார் தினமணி வைத்தியநாதய்யர், 29-ந் தேதி ஒரு மாதிரி எழுதுவார். 30-ந் தேதி அடுத்த நாள் தலையங்கத்தில் இன்னொரு மாதிரி எழுதுவார். இது வேடிக்கையாக இருக்கும்.
ஆனந்த விகடனோ!
தினமணியை முந்திக் கொண்டு ஆனந்த விகடன் சீனிவாசஅய்யர், நிச்சயம் தமிழ் ஈழம் வேண்டும் என்று தலைப்பிட்டு 4195 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் இங்கு நிலவும் மனநிலை இதுதான் என்று அடித்துச் சொல்லும் சர்வே என்ற முகவுரையோடு விடுதலைப்புலிகளின் ஆற்றல், ராஜதந்திரம் அவர்களுக்கு தமிழக மக்களிடையே இருக்கும் அபரிதமான ஆதரவு இவற்றை எல்லாம் சொல்லி புள்ளி விவரத்தை வெளியிட்டிருந்தார்.
ஆக, இவர்கள் எழுதினார்கள் என்றால் ஜார்னலிசம் அது செய்தி. அது தேச பக்தி. ஆனால் மற்றவர்கள் எழுதினால் சாதாரணமாக எழுதினால் பேசினால் இவர்கள் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று இவர்கள் சொல்லுகின்றார்கள். இதைத்தான் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.