(பாகம்/5) அகதி வாழ்கை எப்படி இருக்கும்

அகதியாக இருப்பது எவ்வளவு கொடுமையான செயல். அதுவும் கதியற்றவராக இருக்கும் போதுஇந்த படித்த நாகரிக உலகம் எப்படி எல்லாம் அந்த நதி அற்ற கதியற்ற மனிதனை அலைகழிக்கிறது. இறையாண்மை என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள்அப்பப்பா கொடுமைடா சாமி.

அகதிகளின் வாழ்வு துயரங்களையும், அவர்களின் தாய் நாட்டு பாசத்தையும் தன் நாட்டு மக்களின் துயரம் பார்த்து ஏதும் செய்ய இயலாமல் அல்லல் படுவதும். தன் நாட்டு மொழியின் இரண்டொரு வார்த்தைகள் வெயிநாட்டுக்காரர் பேச கேட்டு புல்லரிப்பதும். தன் நாட்டு காலவரங்கள் என்று முடிவுக்கு வரும் என்று நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் கதியற்றவர்களின் வாழ்கை நிலை எவருக்கும் வர கூடாது.அது பற்றி இந்திய தமிழர்களுக்கு புரியாது. எனென்றால்

இந்திய தமிழர்கள் ஒருரூபாய்க்கு அரிசி வாங்கி வயிற்றை ரொப்பிக்கொள்ள முடியும்.

சுபிட்சமான வாழ்வு வாழ்வதால்
இழுப்பின் வலிகளை நம்மால் உணரமுடிவதில்லை. இரண்டு மணி நேர மின் வெட்டை நம்மால் தாங்க முடிவதில்லை. இப்படி சொல்லிகொண்டே போகலாம் .

அகதியாய் இருப்பவன் படும் பாடுகளை இவ்வளவு தத்ரூபமாக அழகாக சொன்னதில்லை என்பேன். படித்து விட்டால் பெரிய புடுங்கிகள் போல் டநினைக்கும் சென்னைவாசிகளில் சிலர் இந்த படத்தை கட்டடாயம் பார்க்க வேண்டும்.
சட்டம் என்பது வேறு. மனிதாபிமானம் என்பது வேறு என்பதையும், வாழ்வாதபாரம் பாதிக்http://2.bp.blogspot.com/_FDULgrSOClk/SQ1hFxxztBI/AAAAAAAAAno/dMeqVcmMo5I/s1600-h/catherine_zeta_jones1.jpgகப்ட்ட மனிதனின் கேள்விக்குறியான வாழ்க்கை நிலையையும் மிக அற்புதமாக எதார்தத்துடன் காட்சி படுத்தி தன் ஒரு சினிமா பிதாமகன் என்பதை நிருபித்து இருக்கிறார் இயக்குநர்ஸ்பில்பெர்க்

படத்தின்

பெயர் டெர்மினல் படம் வெளியான ஆண்டு 2004
அதே போல் படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் சத்தியம். நம்மில் எத்தனை பேர் செய்து கொடுத்த சத்தியத்துக்கு விசுவாசமாய் இருக்கிறோம்

விதி படத்தில் மேட்டர் முடிந்த உடன் பூர்ணிமா மோகனிடம் அப்ப நீங்க செய்த சத்தியம்?
சத்தியம் சக்கரை பொங்கல் வரட்டுமாடி பேதை பெண்ணே என்று மோகன் சொல்லுவார் இந்திய அரசியல் வாதிகள் சத்தியமும் சக்கரை பொங்கல் வகையை சார்ந்ததே.

படத்தின் கதையின் நாயகன் விக்டர் நவோஸ்கி (டாம்ஹாங்ஸ்)தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்காக நாயாய் பேயாய் அலைவதும் ரொம்ப அற்புதமாகஅதன் அழகியல் மாறாமல் இயக்கிஇருக்கிறார்

விக்டர் நவோஸ்கி எனும் ஒருவன் ரஷ்யாவில் துண்டாடபட்ட நாடான க்ரோக்கிஷியாவில் இருந்து அமெரிக்காவின் நுயார்க் நகரில் இருக்கும் ஜான் எப் கென்னடி விமானநிலயத்தில் இறங்குகிறான் அவன் நியுயார்க் வந்ததன் நோக்கம் தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்க்காக நியுயார்க் நைட்கிளப்பில் ஒருவரை சந்திக்க வேண்டும் அவ்வளவே.

அவன் கென்னடி விமான நிலயத்தில் இறங்கி வெளிவருவதற்க்குள் அவன் சொந்த நாடன க்ரோக்கோஷியாவில் உள் நாட்டு கலவரம் வெடித்து அரசாங்கம் கவிழ்ந்து விடுகிறது. இதனால் அவனின் சொந்த நாட்டு வீசா செல்லாமல் போகிறது.

அவன் திரும்பவும் சொந்த நாட்டிற்க்கு போகவும் முடியாது .அங்கே கலவரம்,நுயுயார்க் நகரத்தி்லும் கால் பதிக்க முரயாது எனெனில் கலவர நாட்டின் குடிமகன் அவன்நாட்டில் அவனுக்கு கொடுத்த வீசாகொடுத்த கவர்மென்ட் கலைந்ததால் அதுவும் முடியாது.

அவன் கென்னடி ஏர்போட்டில் இருந்து வெளியே ஒரு அடி எடுத்து வைத்தால் கூட கைது செய்து சிறையில் தள்ள ரெடியாக இருக்கிறது கென்னடி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆட்கள்.


அவன் அந்த ஏர்போர்ட்டிலேயே காலம் தள்ள வேண்டிய நிலமை. அவன் எங்கு தங்குவான் அவனுக்குஎப்படி சாப்பாடு கிடைக்கிறது அதற்க்கு அவன் என்ன என்ன காரியங்கள் செய்கிறான் என்பதை சுவைபட சொல்லிஇருக்கிறார் இயக்குநர் இதற்க்கு நடுவில் விமான பணிப் பெண்ணான காத்தரீன் ஜீட்டா ஜோன்ஸ் மீது காதல் வேறு..


படித்தவர்கள்சட்டம் இருக்கிறது என்ற காரணத்தால் எப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதையும் அதிகாரவர்கத்தில்இருப்பவர்களுக்கும்கீழ் நிலை மக்களுக்கும் உள்ளஇடைவெளிகளை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார்.ஸ்பில்பெர்க்

அந்த ஏர்போட்டில் காலம் தள்ளும் போது அவனுக்கு நண்பர்களாக குப்தா எனும் இந்திய கிழவர்மற்றும் சிலரும் நட்பாகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த கென்னடிஏர்போர்ட்டில் விக்டர் நவோஸ்க்கியை தெரியாதவர்களே இல்லை என்ற நிலமை. அதே போல் எர்போர்ட் அத்தாரிட்டி ஆபிஸர் விக்டர் நவோஸ்கியை கைது செய்து கங்கனம் கட்டி அலைவது. இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில்

1. விக்டர் தன் தந்தைக்க செய்து கொடுத்த சத்தியத்தை நிறை வேற்றுகிறானா?

2. விக்டர் நியுயார்க் நகரத்தில் கால் பதித்தானா?

3.விக்டருக்கும் விமானபணிப்பெண்ணுக்கான காதல் என்னவாயிற்று?

4.விக்டருக்கு அந்த ஏர்போர்ர்டில் உதவி செய்தவர்களின் கதி என்ன?

வெள்ளி திரையில் கான்க அல்லது திருட்டு டிவிடி யில் காண்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில............

ஸ்பில்பெர்க் எடுத்ததில் இதுதான் குப்பை படம் என்று விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ( நம்ம ஊரில் அன்பே சிவம் படம் குப்பை என்பது போல்)

படத்தில் காட்டப்படும் ஏர்போர்ட் அத்தனையும் செட்டு போட்டு எடுத்தார்கள் என்றால் நம்புங்கள் மக்களே...( புகைபடங்கள் மேலே உங்கள் பார்வைக்கு)


படத்தில் நடித்திருக்கும் குப்தா பாத்திர படைப்பு சென்னையில் பீடா கடை வைத்து இருந்தவரை சென்னை காவல் துறையினர் எப்படி எல்லாம் லஞ்சம் வாங்கி அவரை கொலைகாரனாக மாட்டினார்கள் என்று சொல்லும் போது நம் இந்திய மானமும் சென்னை மானமும் காற்றில் பறந்து விட்டது.

சட்டமா ?மனிதாபிமானமா? என்பதை க்ரொக்கோஷியா நாட்டில் இருந்து ஆயுர்வேத மருந்து தன் தந்தைக்கு எடுத்து வரும் போது அதை ஏஙர்போர்ட் நிர்வாகம் அனுமதி மறுக்க அதனை லாவகமாக பேசி விக்டர் அவனிடத்தில் சேர்பது அழகிலும் அழகு.

இந்த படத்தின் பாத்திர படைப்பு உண்மை சம்பவங்களின் அடிப்டையாக கொண்டது(The movie is based on the 18-year-stay of Mehran Karimi Nasseri in the Charles de Gaulle International Airport, Terminal I, Paris, France from 1988 to 2006.)


க்ரக்கோஷியா நாடு ஒரு கற்பனை நாடு.

தன் நாட்டில் கலவரம் ஏற்பட்டதை டிவியில் பார்க்கும் டாம் ஹங்ஸ் மொழி தெரியாமல் தவிப்பதும் கண்களில் நீர் மல்க அலைபான்வதும் அகதிகளின் வாழ்வில் நடக்கும் அப்பட்டங்களை அப்டியே செல்லுலாய்டில் வடித்து இருப்பார் இயக்குநர்.


குப்தாவாக நடித்து இருக்கும் இந்திய கிழவரின் நடிப்பு மிகை படுத்தாமல் இயல்பாய்இருக்கும்

படத்தின் இசை படத்தின் மிகப்பெரிய பலம்.

இந்த படம் கமெடி படம்தான் என்றாலும் மிக மெல்லிதான சோகத்தை படம் முழுக்க இழையோட விட்டுஇருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

இந்த படம் பார்க்கும் போது அகதியாய் இருப்பது எவ்வளவு கொடுமையான செயல் என்ன என்பது படம் பார்க்கும் போது நீங்கள் அறிவீர்கள்.

குவைத்திலருந்து இந்தியா வந்ததும் எர்போட்டில் செக்கிங் செய்து வெளி வருவதற்க்குள் தாவு தீத்துட்டான் பா என்று புலம்புகிறோம். அனால் அதே ஏர்போர்ட்டில் தங்கி வாழ்வது எவ்வளவு கொடுமையான செயல்.

ஏர்போர்ட் அகதி வாழ்கை கூட ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். இலங்க காடுகளில் மனைவி மக்களுடன் ராணுவத்தின் ஷெல் அடிப்புக்கு பயந்து பாம்பு மற்றும் கொடிய ஜந்துக்களுடன் வாழ்வது எவ்வளவு கொடுமை என்பதை எண்ணிபார்த்தால் எஸ் வி சேகர் போல் யாரும் தெனாவெட்டாக பேட்டி கொடுக்கமாட்டார்கள்




The Terminal

Theatrical release poster
Directed by Steven Spielberg
Produced by Steven Spielberg
Walter F. Parkes
Laurie MacDonald
Andrew Niccol
Written by Andrew Niccol
Sacha Gervasi
Jeff Nathanson
Starring Tom Hanks
Catherine Zeta-Jones
Music by John Williams
Cinematography Janusz Kaminski
Editing by Michael Kahn
Distributed by DreamWorks Pictures
Amblin Entertainment
Release date(s) June 18, 2004
Running time 128 min.
Country United States
Language English
French
Russian
Bulgarian
Budget $60,000,000
Gross revenue $219,417,255
Official website IMDb Allmovie


வாழ்வில் பார்க்க வேண்டிய படம்



அன்புடன் ஜாக்கிசேகர்

10 comments:

  1. ஒரு நல்ல படத்தை பற்றிய நல்ல விமர்சனம் ஜாக்கி.. எனக்கும் இது மிகவும் பிடித்த படம்.

    ஒரு விசயம்.. இது நிஜ நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பாரீஸ் ஏர்போர்ட்டில் 18 வருடம் சிக்கிக்கொண்ட ஒருவனது உண்மைக் கதை.. :(

    ReplyDelete
  2. இந்த படத்தின் பாத்திர படைப்பு உண்மை சம்பவங்களின் அடிப்டையாக கொண்டது(The movie is based on the 18-year-stay of Mehran Karimi Nasseri in the Charles de Gaulle International Airport, Terminal I, Paris, France from 1988 to 2006.)

    ReplyDelete
  3. ஆமா ஜாக்கி, உங்க பதிவுல இருந்துதான் அந்த லிங்கை கண்டுபிடிச்சேன்.. உங்களிடமிருந்து இது போல இன்னும் பல விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  4. சேகர் அண்ணா திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?????

    ReplyDelete
  5. உங்க தொலைபேசி எண் தவறிடிச்சி எனக்கு மெயில் பண்ணுங்க mglrssr@gmail.com

    ReplyDelete
  6. நல்ல ஒரு பதிவு நண்பரே... நீண்ட நாட்கள் பதிவுப் பக்கம் வரவில்லை... முதல் முதலாக உங்களுடைய பதிவை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது... நன்றாக எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி ஹாரன் தங்களை போன்றவர்களின் வாழ்த்துக்களால்தான் பிளாக்கில் எழுதும் எண்ணமே வருகின்றது. மிக்க நன்றி

    ReplyDelete
  8. நலமாய் இருக்கிறேன் சிவா

    ReplyDelete
  9. வணக்கம் சார்...

    இதை இதைத்தான் உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம். நாயகனும் நாயகியும் உணவருந்தும் காட்சியில் குப்தா தாத்தா வந்து சர்க்கஸ் விளையாட்டு காட்சிகள் உட்பட படம் முழுக்க கலக்கல்.

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    அன்பு நித்யகுமாரன்.

    ReplyDelete
  10. இததான் நீங்க எதிர்பார்ப்பிங்கன்னு தெரியும் பட் இத அடிச்ச முடிக்க 3 மணிநேரம் ஆச்சு வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner