பதிவர்கள் பதறியதை போல் வாரணம் ஆயிரம் அந்த அளவுக்கு மோசமில்லை....

நேற்று இரவு சென்னை சத்தியத்தில் வாரணம் ஆயிரம் படம் பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.

கற்றது தமிழில் ஒரு வசனம் வரும்சென்னையில இரண்டு பேர்தான் இருக்கான். ஒன்னுசத்தியம் தியேட்டர் உள்ள இருக்கறவன்.
இன்னொருத்தன் சத்தியம் தியேட்டர் வெளியில இருக்கறவன். நாரும் வெளியில இருக்கற ஜாதிதான். ஆனா நல்ல படம் வந்த அந்த தியேட்டர்ல பாக்கறதுதான் எனக்கு வசதி. எவன் தலையும் மறைக்காது, எவனும் நம்ம தலைமேல கால வச்சி படம் பார்க்க மாட்டான்.

ஒரு பெண் நல்ல பெரிய மார்புடன் டி சர்ட்டில் இருந்தாள்
stop thinking என்று டி சர்ட்டில் எழதி இருந்தாள் அதனாலே என் கற்பனை அதள பாதாளத்துக்க சென்றது. புது மனைவி என்னை கையை கிள்ளி எச்சரித்தால்.

சத்தியம் தியேட்டர் கார்ப்பரேட் கம்பெனி போல் மாறிவிட்டது. நமக்குள் ஒரு விதமான தாழ்மனப்பான்மையை அது ஏற்படுத்துகிறது என்பது நிஜம் .வந்த எல்லா பெண்களும் ஒரு வித அலட்டலுடன் இருக்கிறார்கள்.

சரி படத்தை பற்றி சில வரிகள்.....


இறந்து போன தந்தையையும் அவர் காதலையும் தனக்காக தன் தந்தை எந்தளவுக்கு புரிந்து விட்டு கொடுததார் என்பதையும் மகனின் நினைவுகளோடு விரிவதுதான் படத்தின் கதை.

பதிவர்கள் பதறிய அளவுக்கு படம் அந்த அளக்கு மோசமில்லை என்பதே நிதர்சன உண்மை.

தவமாய் தவமிருந்து, பாரஸ்ட்கம்ப் போன்ற படங்களை ஞாபகபடுத்தினாலும்.கம்பேர் பண்ணக்கூடாது.

காப்பி அடிப்பது நம்மவர்களுக்கு கை வந்த கலை என்றாலும் அந்த பழைய கள்ளை எப்படிபுதிய மொந்தையில் ஊற்றி கொடுக்கிறார்கள் என்பதே முக்கியமானது.காதல் படத்தின் கதை என்ன?
பணக்கார பெண்ணும் ஏழை பையணும் காதலிப்பதுதான் கதை.
இது தான் ஒன்லைன் ஆடர். ஆனால் அந்த படத்தை எப்படி பிரசன்ட் பண்ணினார்கள் என்பதே முக்கியம்.


வாரணம் ஆயிரம் படம் அந்தளவுக்கு மெனெக்கெட்டு இருந்தாளும் இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் கோட்டாவியுடன் கண்ண்னில் நீர் வருவதை தவிர்க்க முடியவில்லை.

முதல் பாதியில் படம் ரொம்ப அற்புதம் பழகி போன கதைதான் என்றாலும் அதை கொடுத்த விதத்தில் கௌதம் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் .

தவமாய் தவமிருந்து படம் குப்புசாமி அவர் தந்தையை பற்றிய படம் என்றால் வாரணம் ஆயிரம் சுரேஷ் அவர் தந்தை பற்றிய படம் எனலாம் .
குப்புசாமி தந்தை பற்றி படம் எடுக்கும் போது சுரேஷ் பற்றி படம் எடுக்க கூடாதா?

படத்தில் அசத்தலான இருண்டு பேர் சூர்யா மற்றொறுவர் சிம்ரன் அதுவும் அப்பா சூர்யா இறந்த போது சிம்ரன் நடிப்பு ரொம்பவும் அற்புதம்.


எப்படியாவது கௌதம் படத்திற்க்கு பணக்காரகளை கிடைத்து விடுகிறது.

இரயிலில் சமீரா ரெட்டியுடன் புரியும் ரொமான்டிக் சீன் ரொம்பவும் ரசிக்க தக்க அளவில் இருக்கிறது.

படத்தின் இசைதான் படத்திற்க்கு மிகப்பெரிய பலம்.

ஒரு காட்சிக்கும் மறு காட்சிக்கு டிசால் வ் டுயுரேஷன் எடிட்டிங்கில் வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது.

அழகிய தீயே படத்தில் டைட்டானிக் படத்தை உல்ட்டாவாக சொல்வார்களே அது போல் சொல்லி இருக்கிறார்கள் என்று பொத்ததாம் பொதுவாக சொல்லி விட முடியாது.


கௌதம் படத்தின் பிற்பகுதியில் நிறைய கோட்டை விட்டு இருக்கிறார். எது எப்படி இருந்தாலும் படத்தை ரசிக்கதக்க அளவில் எடுத்துஇருக்கிறார் என்பதும் உண்மை


ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது பெரிய டைரக்டராக மாறி விட்டால் கதாநாயகன் காதலியை பார்க்க அமேரிக்காவுக்கும் போக வைக்க முடியும். ஆஸ்த்ரேலியாவுக்கும் போக வைக்க முடியும்.

மனது போர் அடித்தால் மனது சரியில்லை என்றால் காஷ்மீருக்கும் போக வைக்கமுடியும்.


அன்புடன்/ ஜாக்கிசேகர்

12 comments:

 1. என் ஆபிஸிலும் பலருக்கு படம் பிடித்திருக்கிறது (அ) பிடிக்காமல் போகவில்லை. ஆனால் படம் ஏ சென்டருக்கானது என்பதே எல்லோருடைய கருத்தாகவும் இருக்கிறது..

  ReplyDelete
 2. ஜாக்கி சேகர் எப்படி இருக்கீங்க?

  நான் நாளை இந்த படத்திற்கு போகிறேன்... அதனால் உங்கள் விமர்சனம் படிக்கவில்லை

  ReplyDelete
 3. படம் ஏ சென்டருக்கானது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. நன்றி வெண் , தங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும்

  ReplyDelete
 4. நலமாய் இருக்கிறேன் கிரி, தாங்கள் படம் பார்த்து விட்டு பதில் சொல்லுங்கள் அல்லது ஒரு பதிவு எழுதுங்கள்

  ReplyDelete
 5. நாங்களும் பார்த்தோம். படம் நல்லா இருக்கு. காதலில் விழுந்தேன் படம் மாதிரி கொடுமை படுத்தலை அதுவே ரொம்ப சந்தோசம்!

  ReplyDelete
 6. /

  ஒரு பெண் நல்ல பெரிய மார்புடன் டி சர்ட்டில் இருந்தாள்
  stop thinking என்று டி சர்ட்டில் எழதி இருந்தாள் அதனாலே என் கற்பனை அதள பாதாளத்துக்க சென்றது.
  /

  :))))))))))

  ReplyDelete
 7. /
  புது மனைவி என்னை கையை கிள்ளி எச்சரித்தால்.
  /

  எல்லா புது பொண்டாட்டிங்களும் இப்படித்தான் போல
  :)))

  இங்கயும் அப்பப்ப உண்டு

  ReplyDelete
 8. //சத்தியம் தியேட்டர் கார்ப்பரேட் கம்பெனி போல் மாறிவிட்டது. நமக்குள் ஒரு விதமான தாழ்மனப்பான்மையை அது ஏற்படுத்துகிறது என்பது நிஜம் .//

  why?

  ReplyDelete
 9. ஒரு பாப்கான் விலை 80 ரூபாய். 120 ரூபாய் டிக்கெட்டுக்கே மனசு அடிச்சுக்குது ஒவ்வொறு தின்பண்டமும் யானை விலை. மத்தவங்களை கம்பேர் பண்ணறப்ப கொஞ்சம் தாழ்வு மானப்பான்மை ஏற்படுவது நிஜம்

  ReplyDelete
 10. படம் பார்த்து விட்டேன், நன்றாக உள்ளது. பதிவிடுகிறேன்.

  ReplyDelete
 11. After reading ur review..
  I think it will be somewhat slow
  moving like movie Rhythm,
  but might be interesting..
  wanna see this movie.

  I hve read some of ur blog articles,pretty interesting.

  Senthil

  ReplyDelete
 12. thank you senthil. continue read my blog thnk you so much

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner