இறையான்மை என்றால் என்ன? அந்த வார்த்தையை வைத்து எப்படி பொழப்பு நடத்தலாம்.


எழுத்தாளர் பட்டு கோட்டை பிரபாகர் அவர்கள் தொட்டால் தொடரும் என்ற அருமையான நாவலை எழுதினார் அதன் ஒவ்வோரு அத்தியாயத்திலும் காதல் என்பது என்று எழுதி விட்டு எதாவது எழுதுவார்

(உம்)
காதல் என்பது
வாயில் பிரஷ்உடன் கனவு கான்பது
காதல் என்பது
தபால்காரர் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பது என்று எழுதி இருப்பார்

அது போல் இந்த இறையான்மை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்


இறையான்மை என்பது

1, அது பிங்பேக் தியரிபோல் புரியாதது.

2,அது காங்கிரஸ்காரர்கள் மட்டும் குத்துகை எடுத்து கொண்டு இருக்கும் சொல்.

3, இனி வரும்காலங்களிலும் அதை வைத்து காங்கிரஸ்காரர்கள் பிழைப்பு நடத்த
உதவ வேண்டிய சொல்


4 , காங்கரஸ்காரர்களான ஞானசேகரன் தங்கபாலு போன்றவர்கள் அந்த வார்த்தையை பயன் படுத்தியே பிழைப்பு நடத்தி பிழைக்கும் நாதியற்றவர்கள்.

5, இந்தியா, பங்களாதேஷ் தேசத்தில் மட்டும் காற்றில் பறக்க விட்ட சொல்.

6, இந்தியா டுடே மற்றும் தினமலர் இந்த இரண்டு பத்திரிக்கைகள் மட்டுமே அந்த சொல் படி நடப்பவை.

7, சுப்ரீம் கோர்ட் சொல்லியும் காவிரியில் கர்நாடக ஜலம் விடாததை பற்றி மேலுள்ள இரண்டு பத்திரிக்கைகளும்இந்திய இறையாண்மை பற்றி அலட்டிக்கொள்ளாதவை.

8,இறையான்மை மீறிய வைகோவை கூட்டனியில் வைத்துக்கொண்டே கைது செய்ய சொல்லி அறிக்கை வி்ட்டு தள்ளும் ஜெயலலிதா மிகவும் பாரட்டத்தக்கவர்.

9,இறையான்மை பற்றி பேசிக்கொண்டே இருக்கும் ஜெயலலிதா அரசு நிலமான டான்சி நிலத்தை வாங்கி நீதி மன்றத்தால் கண்டடிக்கப்பட்ட போது இந்திய இறையான்மையை காற்றில் பறக்க விட்டவர்

10, அந்த கட்சி எம் எல் ஏ எஸ்வி சேகர் இந்திய இறையபண்மையின் ஓட்டு மொத்த குத்தகைதாரர்.


11,சோ ராமஸ்சுவாமி இறையான்மை முகத்தில் முழிப்பார், இறையான்மையால் பல்துலக்குவார், இறையான்மை பெட்ஷீட்டால் போர்த்தி கொண்டு தூங்குபவர்.

12,நாம் போன்ற சாதரண மனிதாகள் எல்லாம் இறையான்மை சொல்லை உச்சரிக்க லாயக்கற்றவர்கள்

13, அது ஹிண்டு பேப்பர் வாசித்து ஐஐடியில் கோர்ஸ் முடித்து அடுத்த பிளைட்டில் அமெரிக்காக செல்லும் மேட்டுகுடி மக்கள் உபயோகப்படு்த்தும் சொல்
14, ஒரு வீட்டில் ஜெயா டிவி ஒடுகின்றது என்பதை வீட்டின்வெளியில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம். செய்தி நேரத்தின் போதுஇறையான்மை வார்த்தை நிமிடத்துக்கு 5முறை கேட்டால் சட்சாத் அது ஜெயாடிவிதான்.


15, இந்திராகாந்தி, எம்ஜி ஆர் போன்றவர்கள் விடுதலை புலிகளை வளர்த்து விட்டது மூலம் இறையான்மைக்கு துரோகம் செய்தவர்கள்

16,அந்த வார்த்தை பற்றி இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் நேரமின்மை காரணமாக பஞ்ச் டயலாக்குடன் முடிக்கிறேன்

17, இறையான்மை என்பது

பொங்கடா கொய்யாலுங்கலா வாயில் அசிங்கமா வருது.....


அன்புடன்/ ஜாக்கிசேகர்

10 comments:

 1. உங்கள் வருத்தம் / வேதனை / கோபம் புரிகிறது ஜாக்கி. இந்த மாதிரியே நம்ம ஆளுங்க நெறய நல்ல, புனிதமான‌ வார்த்தைகளை கெட்ட வார்த்தை ஆக்கி வெச்சிருக்கானுங்க.. "அரசியல்" அப்படின்ற வார்த்தை உட்பட.. :(

  ****

  பதிவில் இருக்கும் புகைப்படம் அருமை..

  ReplyDelete
 2. நன்றி வெண், தங்கள் வருகைக்கும் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவிற்க்கும்.என்ன செய்ய என் கோபங்களுக்கான வடிகாலாக இந்த பதிவை எழுதிகிறேன்.

  ReplyDelete
 3. உங்க ஆதங்கம் புரியுது சேகர்.. என்ன பண்றது நம்மால இந்தமாதிரி ஒரு பதிவு போடமுடியும், இல்லையா என்ன மாதிரி கமெண்ட் போட முடியும்.
  பஞ்ச் டயலாக்தான் டாப்.

  ReplyDelete
 4. கலக்குறீங்க ஜாக்கி!

  நம்ம பங்குக்கு ஒண்ணு

  இறையாண்மை என்பது பூணூல் போன்றது அதை எல்லாருமே உரிமைக் கொண்டாட முடியாது.

  ReplyDelete
 5. நல்லா சொன்னிங்க உறையூராரே, உங்க அளவுக்கு பச்சையா எழத முடியலை அது மட்டும் அல்ல யாரோ ரேண்டு பேர் பண்ணற தப்புக்கு எல்லோரையும் குத்தம் சொல்ல முடியலை

  ReplyDelete
 6. நகைச்சுவை உணர்வுடன் கூடிய சமூக ஆதங்கம்.
  ஆட்சியை தக்கவைத்து கொள்ள அரசியல்வாதிகள் செய்யும் வழக்கமான டெக்னிக் தானே இது

  ReplyDelete
 7. நீங்கள் சொல்வது சரிதான்.என்ன செய்வது?

  ReplyDelete
 8. நன்றி சிவா நலமாய் இருக்கிங்களா

  ReplyDelete
 9. //, இந்தியா, பங்களாதேஷ் தேசத்தில் மட்டும் காற்றில் பறக்க விட்ட சொல்.//--ithukku enna solla poranga namba thangabaluvum,
  gnana sekaranum..

  ReplyDelete
 10. questionsya senthil. what we do?.congeress people no one answer this

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner