(பாகம்/6) 13பேர் உயிரும் ஒரு துப்பாக்கி குண்டும்....


இருபது வருடங்களுக்கு முன்பு ஈவில் டெட் என்ற ஆங்கில படம் பார்த்து விட்டுவெளியே வந்த என் நண்பர்களிடம் கேட்டேன்

எப்படி மச்சான் படம் இருக்கு?
மச்சான் “பீ ”கழட்டிக்கிச்சுடா என்று பயத்தில் வயிறு கலக்குவதை அப்படி சொல்லுவார்கள்.

“பீ” என்ற வார்த்தை உங்களுக்கு புரியவில்லை என்றால் அதன்ஆங்கில வார்த்தை ஷிட்.
வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் சைக்கோ கொளையாளிகள் உபயோகப்படுத்தும் வாத்தைதான் அது.

அது போல் ஷிட் கழட்டிக்கும் படம்தான் “13டசாமேட்டி” என்ற பிரெஞ் மொழிப்படம்.



20 வயது சாபெஸ்ட்டின் எப்படியாவது பணம் ஈட்டி பெரிய நிலைக்கு உயர வேண்டும் என்ற ஆசை கொண்டவன்.
ஒரு வீட்டில் எடுபிடி வேலை சென்து வயிற்றை கழுவுகிறான் அந்த வீட்டின் எமானர் அதிகமான போதை பொருள் சாப்பிட்டதால் அவர் இறக்க நேர்கிறது. அனால் அவரை போலிஸ் கண்கானித்து கொன்டு இருக்கிறது இறந்த கணவனை அடக்கம் செய்த உடன் தன் கணவன் எதோ ஒரு விஷயத்தை தன்னிடம் மறைத்ததாகவும்அது என்ன என்று தெரியவில்லை என்ற அந்த பணக்காரரின் மனைவி சொல்வதை சாபஸ்ட்டின் கேட்கிறான். அந்த பணக்காரருக்கு வரும் கடிதத்தை செபஸ்ட்டின் மறைத்து வைக்கிறான்.



அந்த கடிதத்தி்ல் ஒரு ரயில் டிக்கட்டும் ஒரு ஹோட்டலின் புக் செய்யபட்ட அறை ரசீதும் இருக்கின்றது .

எதாவது ஒரு வகையில் மிக அதிகமான பணம் கிடைக்கும் என்ற காரணத்துக்காகதான் அங்கு செபஸ்ட்டின் செல்கிறான். அவனை போலீ்ஸ்ம் அவனை பின் தொடர்கின்றது.

அவன் அந்த கடிதத்தில் சொன்ன நேரத்துக்கு ஆள்ஆரவாரம் இல்லாத காட்டு பகுதியில் இறங்க வாரகை காரோட்டி அவனை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறான்

அவன் சென்ற சில நிமிடங்களில் ஒரு தாடிக்காரன் காரில் வந்து 13 என்ற எண்னை காட்ட, செபஸ்ட்டின் அவனிடம் இருந்த 13 என்ற எண்னை காட்டியதும் செபஸ்ட்டி்னை காரில் ஏற்றிக்கொண்டு பல மைல்தூரத்துக்கு அப்பால் இருக்கும் காட்டு பங்ளாமுன் அந்த கார் நிற்க்க. இன்னும் பல கார்களில் பலகணவான்கள் இறங்குகிறார்கள்.
ஒருவயதான பணக்காரன் அந்த கார் ஓட்டி வந்த தாடிக்காரனிடம் என்ன சின்ன வயது பையனாக இருக்கிறான் என்று கேட்க ?

அவன் நாம் பயன் படுத்தும் சங்கேத வார்த்தைகள் சரியாக இருந்ததால் அவனை அழைத்து வந்தாக சொல்ல..

செபஸ்ட்டின் இடம் உனக்கு இந்த விளையாட்டு விளையாட சம்மதமா என்று கேட்கும் போது தனக்கு ஏதும் தெரியாது என் எஜமானுக்கு வந்த கடிதத்தை தான் எடுத்து வந்ததாக கூறுகிறான்.

எல்லா ஊரில் இருந்தும் ஆட்கள் வந்து விட்டதால் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று காட்டயப் படுத்த அது என்ன விளையாட்டு என்று தெரிய வரும் போது இந்த கட்டுரையின் முதல் பாராவில் வருவது போல் சபாஸ்ட்டி்னுக்கு ஷிட் கழுட்டி கொள்கிறது.

அது ரஷ்ய கிரிமினல்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் விளையாட்டு போட்டி.

மனிதாபிமானத்தை இலங்கை ராணுவம் எப்படி காலில் மிதித்து மனித உரிமை மீறுகின்றதோ அது போல் மனிதாபிமானத்தை மனித உரிமை மீறும் விளையாட்டு அது.

13 பேர் ரவுண்டாக நிற்க வேண்டும், அவர்களுக்க நடுவில் ஒரு குண்டு பல்பு தொங்கும் .




13பேர் கையிலும் ஒரே ஒரு துப்பாக்கி கொடுத்து அதன் உள்ளே ஒரே ஒரு குண்டு போட்டு அந்த துப்பாக்கி செம்பரை நன்றாக சுற்ற விட்டு ஒருவர் தலைக்கு பின் ஒருவர் துப்பாக்கி வைத்து ரப்பரி ரெடி ஜீட் என்றதும் அந்த குண்டு பல்பு எரியும் போது சுட வேண்டும். அதற்க்கு முன் அந்த பதிமுன்று பேரின் மீதும் பந்தயம் லட்சக்ணக்கில் கட்டி விளையாடும் விளையாட்டு. செத்தவர்களை ஓரம் தள்ளி விட்டுகடைசிவரை எவன் உயிரோடு இருக்கிறான் என்பதே விளையாட்டின் சுவாரஸ்யம்.
செபஸ்டின் உயிரோடு இருந்தானா?
செபஸ்ட்டினுக்க பணம் கிடைத்ததா?
அந்த வினையாட்டு போலிஸால் கண்டு பிடிக்கபட்டதா என்பதை திருட்டு டிவிடி அல்லது திருட்டு விசீடியில் கான்க.

படத்தை பற்றி சுவாரஸ்யங்கள்.

படம் முதலில் மெதுவாக ஆரம்பித்தாலும் பின்னால் நகம் கடிக்க வைக்கும் காட்சிகளுக்கு அந்த ஆரம்பம் தேவைதான்.

இந்த படம் 2005ல் வெளிவந்த படமாக இருந்தாலும் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டது.

கலரில் வந்து இருந்தால் இன்னும கூடுதலாக நகம் கடிக்க வைத்திருக்கும்



சாபஸ்ட்டினுக்கு என்ன ஆகும் என்பதை நிமிடத்துக்கு நிமிடம் நம்மை நகம் கடிக்கவும் சீட்டின் நுனிக்கே நம்மை அழைத்து சென்றது இயக்குநரின் திரைக்கதை வெற்றி.


உயிர் பயத்தில் விளையாட்டில் கலந்து கொள்ளதவர்களை போதை அதிகம் கொடுதது பயம் தெளிய வைத்து விளையாட வைப்பது ரொம்பவும் கொடுமையானது.


உயிர்பயத்தை அப்படியே செல்லுலாய்ிடில் பதின விட்ட இயக்குநர் பாராட்டுக்குறியவர்.


பின்னனி இசை அடக்கி வாசித்து துப்பாக்கி செம்பர்சுற்றும் சத்தத்தை கேட்க வைத்து குலை நடுங்க வைத்தது ரொம்பவும் அருமை.

இந்த படத்தை உங்கள் வீட்டு ஹோம் தியேட்டரில் நல்ல சவுண்டில் படம் பார்த்து விட்டு எனக்கு சொல்லுங்கள்.

பணம் ஜெயித்தவனிடம் கூட பணம் வாங்கும் போதும் அதை தூக்கி நாயிக்கு போடுவது போல் போட அதையும் நாய் போல் அந்த தாடிக்காரன் எடுத்துக்கொள்வது மனித தன்மையற்ற செயல்


அதிகாரம்,பணம் அதிகம் வரும் போது எதை பற்றியும் கவலை படாது எதற்க்கும் மனித மனம் துணியும் என்பதை ரொம்ப அற்புதமாக சொல்லி இருக்கும் இயக்நர் பாராட்டுக்குறியவர்


The film won the World Cinema Jury Prize at the 2006 Sundance Film Festival. It also won two awards at the 62nd Venice Film Festival



13 Tzameti is a 2005 film written and directed by Georgian filmmaker Géla Babluani. Tzameti is the Georgian word for thirteen. 13 Tzameti is the feature length directorial debut for Babluani. It also marks the acting debut of his younger brother Georges Babluani, who plays the film's protagonist Sébastien.









Music by The Troublemakers
Distributed by Palm Pictures
Release date(s) Flag of France February 8, 2006
Running time 86 min.
Language French
Budget


அன்புடன்/ ஜாக்கிசேகர்

6 comments:

  1. பதிவே பயமுறுத்துதே! படம் எப்படியிருக்குமோ

    ReplyDelete
  2. நன்றி வால்பையன் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுக்கும் ஊக்கத்திற்க்கு

    ReplyDelete
  3. /
    Blogger வால்பையன் said...

    பதிவே பயமுறுத்துதே! படம் எப்படியிருக்குமோ
    /

    அதானே!

    ReplyDelete
  4. தலைவரே..

    DVD குடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும்.

    அன்பு நித்யகுமாரன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner