(சன் டிவி)மாறன் சகோதரர்கள் சிந்திப்பார்களா???????


கலைஞரின் மனசாட்சியாக இருந்தவர் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன். கடைசி வரை மாறன் தேவர் மகன் கமலஹாசன் போல் கலைஞரை எதிர்த்து பேசியதே இல்லை.

அவ்வப்போது கோபதாபங்கள் மாறனுக்கும் மாமா கலைஞருக்கும் ஏற்ப்பட்டாலும் ஒரு வாரம் கோபித்து கொண்டு மாமா வீட்டுக்கு வராமல் அப்புறம் தானே வந்து சமாதானப் படுத்திக்கொள்வார். எனென்றால் திட்டியது மாமா தானே?. ரோட்டில் போகிறவர் இல்லையே.

18 வருடங்களுக்கு முன்பு பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்து அதில் சினிமா செய்திகள் இயக்குநர் மற்றும் நடிகர் நடிகை பேட்டிகள் போன்றவையும் சினிமா தொடக்க விழாக்களையும் தொகுத்து வீடியோ கேசட்டாக தமிழகம் எங்கும் உள்ள வீடியோ கடைகளுக்கு வினியோகித்தார் கலா நிதி மாறன். அப்போது கடலூரில் ஒரு வீடியோ கடையில் நான் வேலை செய்துவந்தேன்.


ஆனால் வீடியோ கேசட் கடை காரர்கள் ஒன்று வாங்கி நிறைய காப்பி போட்டு விற்க்க அது தோல்வியில் முடிந்தது.

அதன் பிறகு சன் டிவி ஆரம்பித்து அது தமிழகத்தில் இன்றும் கோலாச்சி கொண்டு இருப்பதை யாவரும் அறிவர். அதற்க்கு கலாநிதி மாறனின் வியற்வையும் உழைப்பும், அவரின் அறிவும் திறமையுமே காரணம் என்றால் அது மிகையாகாது.

எல்லோருக்கும்தான் அறிவும் உழைப்பும் இருக்கிறது.
எல்லோராலும், எல்லோருக்கும் சாத்திய படுகிறதா? சாத்தியப்படாது. எனென்றால், திமுக என்ற அரசியல் செல்வாக்கு மட்டும் இல்லையென்றால் ஆசியாவின் இளம் தொழில் அதிபர் பட்டம் கிடைத்து இருக்குமா?


ஜெயா டிவிக்கு கூட அரசியல் செல்வாக்கு இருந்தது.
ஆனால் வியாபார உத்தி தெரிந்தவர் அங்கு யாரும் இல்லை அதனால் அது பெரிய அளவில் சோபிக்கவில்லை.

திமுக செல்வாக்கு உள்ள டிவி என்பதாலும் பொதிகைக்கு மாற்று வேண்டும் என்பதாலும் சன் கோலாச்ச ஆரம்பித்தது.


திமுக ஆதரவு டிவி என்பதலே கழகத்தினர் அதனை பார்த்து ரசித்து கொண்டாடினர்.


இப்போது இதன் இயக்குனர்கள் சொல்வது போல் நடுநிலை என்ற வார்த்தை மட்டும் 18 வருடங்களுக்கு முன்பு உபயோகப்படுத்தி இருந்தால், அறிவாலயத்தில் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், அது மட்டும் கோடம்பாக்த்தின் எதாவது ஒரு சாலையில் இருந்து இருந்தால்,இன்நேரம் சன் ஆபிஸில் வன்முறை வெறியாட்டம் நடந்து மதுரை தினகரன் பத்திரிக்கை கதி ஏற்பட்டு இருக்கும்.


மாறன் சகோதர்ர்கள் அப்போது அறிவாலய கோட்டைகுள்ளே வளர்ந்தார்கள். திமுக அரசியல் கேடயத்தை வைத்து மேலும் மேலும் முன்னேறினார்கள். அப்போது அவர்கள் நடு நிலை பேசவில்லை. பேசமாட்டார்கள் வியாபார உத்தியில் பேசவும் கூடாது. பேசியிருந்தால் அறிவாலய கோட்டையில் இருந்து அப்புறபடுத்தி இருப்பார்கள்.


தயாநிதி மாறன் யார்?
சைதை கிட்டு ,வெற்றி கொண்டான் போல் ஏதாவது கட்சி பொது கூட்டத்தையோ அல்லது கட்சி செயல்பாடுகளையோ மேடையில் பேசியவரா? இல்லை,
மாறன் இளைய மகன் அவ்வளவே.


கலைஞர் கைதின் போது முரசொலி மாறன், மத்திய அமைச்சராக இருந்த போதிலும்,
அந்த வயதிலும் வேட்டி அவுந்து வெள்ளை நிக்கர் வெளியே தெரிய போலிஸ் அடித்து இழுத்து போன போது, தன் தலைவனை காக்க போராடிய வேகம் மாறன் மகன்களிடம் எங்கு போனது.


வைகோ,
என் அப்பா கைதின் போது பழப்பு காட்டியவர் என்று சொல்லி சன்னில் காட்டாமல் விட்டதால்,
அந்த ஆளும் புழுங்கி புழுங்கி கடைசியில் ஜெ பக்கம் போனார்.
அப்படி அவர் போகாமல் இருந்து இருந்தால் இன்று ஜெயா டிவியில் மைனாரிட்டி திமுக என்ற வார்த்தை வந்து இருக்குமா? இப்போது என்னடாவென்றால் திமுக வெற்றிக்கு நாங்கள் காரணம் என்று நீங்கள் இப்போது சொல்கிறீர்கள்.


நீங்களும் காரணம்தான் அது மறுப்பதற்க்கில்லை அது உங்களின் செஞ்சொற்று கடன். அது உங்களின் கடமையும் கூட.

ஒரு சாதாரண திமுக தொண்டனுக்கு இருக்கும் கடமையை விட உங்களுக்கு அதிகமான கடமை இருக்கிறது .இன்னும் எழெழு ஜென்மத்துக்கு அந்த கடமை இருக்கிறது.

அரம்பத்தில் இருந்தே நடுநிலமை என்றால் அதுதான் உண்மையான ஆட்டம் இப்போது நடுநிலமை என்பது அழுகுனி ஆட்டம். அதைதான் அண்ணன் தம்பி இருவரும் செய்கிறீர்கள்.


நடுநிலை என்ற சொல்லோடு நீங்கள் சினிமா விமர்சனம் செய்து இருந்தால் எத்தனையோ படங்கள் ஓடி இருந்து இருக்கும் உங்களிடம் விற்க்காத படங்களை,
தமிழ் நாட்டில் இப்படி ஒரு படமே வரவில்லை என்று பொதுமக்கள் என்னும் அளவுக்குதானே படங்களை விமர்சனம் செய்வீர்கள் செய்து இருக்குறீர்கள் . உங்களாலும் தமிழ் திரைப்ட உலகம் அழிந்து என்றால் அது மிகை இல்லை


தமிழகத்தின் எல்லா பெட்டிகடைகளிலும் கடன் அன்பை முறிக்கும் என்று எழுதி வைப்பது போல்,
நீ வாழ பிறரை கெடுக்காதே என்ற அற்புதமான வாசகம் ஒன்று உண்டு. அது உங்களுக்கு தெரிய நியாயமில்லை.


ஒரு வேண்டுகோள் உங்கள் நடுநிலமைகளை கலைஞர் எனும் 85 வயது கிழவன் இறந்ததும் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போதும் எப்போதும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் அறிவால் சூட்சமத்தால் இந்த பெரிய வெற்றியை பெற்றுள்ளீர்கள். ஆனால், திமுக அரசியல் செல்வாக்கு மற்றும், அறிவாலய கோட்டையை கேடயமாக பயன் படுத்தி வளர்ந்தீர்கள் என்பதை மறவாதீர்கள் சகோதரர்களே.


வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என்று திமுக பொது கூட்டங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் ஹனிபா கணீர் குரலில் கேட்டு இருக்கிறேன். அது கலைஞர் விஷயத்தில் உண்மையும் கூட.


வளர்த்த கடாக்களுக்கும், வளரும் கடாக்களுக்கும் கலைஞர் மார்பு என்றால் கொள்ளை பிரியம்..............


அன்புடன்/ ஜாக்கிசேகர்

39 comments:

  1. நீங்க அடங்கவே மாட்டீங்களா...

    முரசொலியில போயி வேலைக்குச் சேறுங்க...

    நித்யன்

    ReplyDelete
  2. இரு பக்கமுமே தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பதிவெழுதும் அன்பர்கள் சன் டீவி மேல மட்டும் ஏன் சாடுகிறார்கள் ?. உங்கள் பதிவும் ஒரு தலைபட்சமாகவே இருக்கு. கலைஞரின் விருப்பத்திற்கு எதிர்மாறாகத்தான் இப்போதும் எல்லாம் நடக்குது.

    ReplyDelete
  3. இருபுறமும் தவறிருக்கலாம்...ஆனால் , நியாயம் யார் பக்கம் என்பதையொட்டிய பதிவுகள் இருக்க வேண்டும்...அதையே இந்தப்பதிவு பிரதிபலிக்கிறது......

    ReplyDelete
  4. நன்றி அத்திரி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். இரு பக்கமும் தவறு உண்மை இல்லை என்று சொல்லவில்லை. எங்கிருந்து அந்த நடுநிலை வந்தது என்று கேட்கிறேன். கடந்த பதினெட்டு வருடங்களாக நடுநிலை எங்கே போனது என்பதே என் கேள்வி

    ReplyDelete
  5. நன்றி மதி பாலா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என் பதிவை மிகச்சரியாக புரிந்து கொண்டமைக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  6. சன் டிவியின் நடுநிலை பற்றி தெரியாமல் கமென்ட் எழுதியுள்ளார்கள். நீ வாழ பிறரைக் கெடுக்காதே என்பது அவர்களுக்கு சரியாகவே பொருந்தும். இல்லையென்றால் ராஜ்நியூஸ் சேனலையும் ஜீ தமிழ் சேனலையும் சென்னையில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்சிவியில் இன்னும் கொடுக்காமல் இருபபதற்கு என்ன காரணம்

    ReplyDelete
  7. நித்யா முரசொலியில் நல்ல சம்பளமும் அல்லது ஜெயா டிவியில் நல்ல சம்பளம் கொடுத்தாலும் வேலை செய்ய தயராகவே இருக்கிறேன்

    ReplyDelete
  8. // அத்திரி said...
    இரு பக்கமுமே தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பதிவெழுதும் அன்பர்கள் சன் டீவி மேல மட்டும் ஏன் சாடுகிறார்கள் ?. உங்கள் பதிவும் ஒரு தலைபட்சமாகவே இருக்கு. கலைஞரின் விருப்பத்திற்கு எதிர்மாறாகத்தான் இப்போதும் எல்லாம் நடக்குது//

    அந்திரியின் கருத்தை வழிமொழிகிறேன்.

    அவர்கள் வியாபாரிகள் இவர்கள் அரசியல் வாதிகள். இவர்களிடம் நியாயத்தை நடுநிலைமையை எதிர்பார்ப்பது, கொஞ்சம் அதிகமாகத்தான் படுகிறது நமக்கு.

    ReplyDelete
  9. நல்ல பதிவு, ஆனால் நீங்கள் சொல்வது போல கலாநிதி மாறனோ, முரசொலி மாறனோ அறிவு கொழுந்துகள் இல்லை.

    திமுக வை வைத்தே சண் டி வி வளர்ந்தது. அன்றே கலைஞர் கலைஞர் டி வி தொடங்கி இருந்திருந்தால் இன்று சண் டி வி ராஜ் டி வி, வசந்த் டி வி நிலைமை தான்.

    iப்போதே இரவு நேரங்களில் விஜய் , கலைஞர் டி வி தான் முன்னிலை. வார இறுதி நாட்களிலும் மான் ஆட மயில் ஆட, விஜய் ஜோடி ஒன்று, காபி வித் அணு, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போன்றவை தான் முன்னணி.

    விஜய் டி வி யை பார்த்து கப்பி அடித்த நிகழ்ச்சி தானே அசத்த போவது யாரு. அந்த நிகழ்ச்சியில் இருந்து மதுரை முத்து, கோவை குணா... ஆகியோரை சண் டி விக்கு விலை கொடுத்து வாங்கியது தான், நீங்கள் சொல்லும் புத்தி சாலி தனமா.

    தினகரன் கே பி கந்தசாமி யின் குமாரர், வேறு எவர் கேட்டலும் தினகரனை விற்று இருக்க மாட்டார். கலைஞர் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே மாறனுக்கு விற்றார்.

    அதற்க்கும் திமுக மாநிலங்கள் அவை உறப்பினர் என்ற வெகுமதி கொடுத்தது.


    எத்தனை பொதுக் கூட்டங்கள் , கழக ஆர்ப்பட்டங்கள், ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி உள்ளார் தயாநிதி மாறன். எங்கிருந்து மத்திய மந்திரி பதவி, அதுவும் முக்கியமான துறை.

    டி ஆர் பாலு, சுப்புலக்ஸ்மி ஜெகதீசனை விட இவர் கட்சிக்கு என்னது செய்து விட்டார்.

    நாம் இப்போது ஒண்ணுமே சொல்ல வேண்டாம், ஜெயலலிதாவை நம்பி போகிறார்கள்,
    மூன்றே மாதத்தில் திரும்ப வந்து கலைஞர் காலடியில் கிடப்பார்கள், பொறுத்திருந்து பாருங்கள்.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  10. உங்களின் இந்தப் பதிவில் உள்ள பெரும்பாலான கருத்துகளுடன் உடன்படுகிறேன்.

    ReplyDelete
  11. //இருபுறமும் தவறிருக்கலாம்...ஆனால் , நியாயம் யார் பக்கம் என்பதையொட்டிய பதிவுகள் இருக்க வேண்டும்...அதையே இந்தப்பதிவு பிரதிபலிக்கிறது......//

    இங்கு பதிவிட்டிருப்பது ஒரு பக்க நியாயமே.

    //எங்கிருந்து அந்த நடுநிலை வந்தது என்று கேட்கிறேன். கடந்த பதினெட்டு வருடங்களாக நடுநிலை எங்கே போனது என்பதே என் கேள்வி//

    அந்த நடுநிலை பதினெட்டு வருசமா கலைஞரோட பாக்கெட்ல இருந்திச்சு.

    அப்படியே என்னோட பதிவையும் பாருங்க
    http://rajkanss.blogspot.com/2008/11/blog-post_21.html

    ReplyDelete
  12. ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்கலைஞர் நேர்மை பற்றி நான் பேசவில்லை. சன் நடு நிலமை பற்றி மட்டுமே பேச்சு. கலைஞர் நேர்மை அற்றவர்தான். அவரோடுதான் இந்த இரண்டு பேரும் வளர்ந்து இப்போது மட்டும் நேர்மையாக இருப்பதுதான் என் கேள்வி தாத்தா நேர்மை அற்வராக இருக்கும் போது பேரன்கள் திடிர் நேர்மை மற்றம் நடுநிலைக்கு வந்த நியாயம் என்ன?

    ReplyDelete
  13. //ராஜ்நியூஸ் சேனலையும் ஜீ தமிழ் சேனலையும் சென்னையில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்சிவியில் இன்னும் கொடுக்காமல் இருபபதற்கு என்ன காரணம்//

    எஸ்சிவி சென்னையிலும் மதுரையிலும் ஆளும் கட்சியின் ஆதரவால் அதால பாளத்தில் உள்ளது. தமிழ்நாடு முழுக்க கேபிள் லைன் ஆளுங்கட்சி கைக்குள்ள மொத்தமா வந்திட்டு இருக்கு.இன்னும் என்ன எதிர்பாக்குறீங்க?.

    ReplyDelete
  14. இன்றைக்கு தமிழ்நாட்டில் கேபிள்தொழிலோ இல்லை சேனலோ நடத்தனும்னா கண்டிப்பா ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் ஆதரவு தேவை. தற்போது ஆளும் கட்சி எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் எதுவும் செய்யக்கூடாது என்பதற்காக நடக்கும் போட்டியில் அவர்கள் தற்போது நடுநிலைமை என்கிற கேடயத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

    ReplyDelete
  15. உண்மைதான் கவி தங்கள் கரு்த்துக்கு நன்றி

    ReplyDelete
  16. உண்மைதான் அத்திரி முற்பகல் செயின் பிற்பகல் விளையும். கேரபள் காரர்கள் எல்லாரும் சேர்ந்து ஆரம்பித்த தமிழ் செனலின் கதி என்ன. பாரதி என்ற தமிழ் சேனலின் கதி என்ன?

    ReplyDelete
  17. //அவர்கள் வியாபாரிகள் இவர்கள் அரசியல் வாதிகள். இவர்களிடம் நியாயத்தை நடுநிலைமையை எதிர்பார்ப்பது, கொஞ்சம் அதிகமாகத்தான் படுகிறது நமக்கு. //

    ஜோதி பாரதி சார் உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்

    ReplyDelete
  18. குப்பன், மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் கி விரிவாகவும் அதே போல் உண்மையுடனும். நன்றி தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. நன்றி சுந்தர் தங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  20. அன்றைக்கு கலைஞர் பேச்சை கேட்டு ஆடுனாங்கோ, இன்றைக்கு தனியா நின்னு ஆடுறாங்கோ.

    மற்றபடி வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

    முதலில் எல்லோரும் ஒரு விசயத்தை கவனத்தில் கொள்க.

    எஸ்சிவி நிறுவனம் தமிழகம் முழுக்க கிடையாது.
    ஆறு நகரங்களில் மட்டும்தான்.அங்கேயும் தற்போது என்ன நிலைமையின்னு தெரியுமா?

    பாரதி சேனல் வரும்போது தமிழ் சேனல்கள் அனைத்தும் இலவச சேவையாக வந்து கொண்டிருந்தன. பாரதி சேனல் கட்டண சேனலாக வந்தது. இதுதான் காரணம்.

    ReplyDelete
  21. அன்றைக்கு கலைஞர் பேச்சை கேட்டு ஆடுனாங்கோ, இன்றைக்கு தனியா நின்னு ஆடுறாங்கோ. வழி மெழிகிறேன்

    ReplyDelete
  22. நல்ல பதிவு.........வாழ்த்துகள்

    ReplyDelete
  23. நன்றி டாக்டர் சாரதி தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  24. யாருக்குமே நம்பகமாக இல்லாமல் தான் மட்டுமே எல்லாம், தன் குடும்பம் மட்டுமே எல்லாம் என்பது கருணாநிதி குடும்பத்தினரின் குணம். இதில் எந்தக்கொள்ளி நல்லகொள்ளி என்ற விவாதம் வேண்டாம்.

    இவர்களால் தமிழகம் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்த நாம் என்ன செய்யவேண்டும். எவ்வொரு குடிமகனும் என்ன செய்யப்போகிறோம் என்பதை முடிவுசெய்வோம்.

    ReplyDelete
  25. குடும்பம் புள்ள குட்டி இருக்கறவன் சுரண்டுறதல கூட ஒரு நியாயம் இருக்கு குடும்பம் இல்லாதவங்க கூட சுருட்டறதுதான் வேதனை தருது கரிகாலன்

    ReplyDelete
  26. /ஒரு வேண்டுகோள் உங்கள் நடுநிலமைகளை கலைஞர் எனும் 85 வயது கிழவன் இறந்ததும் வைத்துக்கொள்ளுங்கள்.//

    i too thinked so...
    Really a good message to talented Marans

    ReplyDelete
  27. நன்றி கார்த்திகேயன் தங்கள் வருகைக்கும் என் ஒத்த கருத்துக்கும்

    ReplyDelete
  28. ஐயா, முதலில் இருவருமாய் (கலைஞர், மாறன் bros) சேர்ந்து பிறர் வயிற்றில் அடித்தார்கள். இப்பொழுது ஒருவர் வயிற்றில் ஒருவர் அடித்துக்கொள்கிறார்கள். இது தான் வித்தியாசம். அப்பொழுதும் இப்பொழுதும் அவர்கள் தொழில் ஆரோக்கிய போட்டியில் வளரவில்லை. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    ReplyDelete
  29. என்ன சொல்ல வர்ரிங்க,
    சன் டீவீ நடுநிலையோடு இருக்ககூடாதா?
    கலைஞர் இறந்த பிறகு நடுநிலையோடு இருக்கலாமா?
    போங்க சார் எனக்கு சிரிப்பு வருது!

    ReplyDelete
  30. ஆ வயிற்றில் அடித்ததை மறுக்கவில்லை. அதே போல் இந்த திடிர் நடுநிலமை பற்றிதான் கேள்வி.

    ReplyDelete
  31. வால்பையன்

    ஆரம்பத்தில் விஜய் செய்திகள் போல் நடுநிலமையோடு சன்டிவி இருந்து இருந்தால் தப்பே இல்லை. அதுவும் இல்லாமல் திமுக எனும் அரசியல் செல்வாக்கில் வந்த டிவி ,வளர்ந்த டிவியும் கூட. அது இப்போது செய்வது துரோகம், அதன் பின் புல கதை மிக பெரியது. ராஜ் டிவி எப்படி மாறினாலும் அது பற்றி கேள்வி இல்லை . அது 5சகோதரர்களின் கூட்டு முயற்ச்சி. அனால் சன்டிவி வேறுவிஷயம்

    ReplyDelete
  32. வளர்த்த கடாக்களுக்கும், வளரும் கடாக்களுக்கும் கலைஞர் மார்பு என்றால் கொள்ளை பிரியம்..............

    //

    திமுக வரலாறு தெரிந்தவர்களுக்கு வலி மிகுந்த இந்த வரிகளின் அர்த்தம் புரியும்.

    ReplyDelete
  33. நித்யகுமாரன் said...
    நீங்க அடங்கவே மாட்டீங்களா...

    முரசொலியில போயி வேலைக்குச் சேறுங்க...

    நித்யன்

    //


    நித்தியகுமாரன் சற்று பொருமையோடு யோசித்துப் பாருங்கள். ஜாக்கி வேறு யாருடைய வலைப்பூவிலோ போய் இதை எழுதவில்லை. அவருடைய வலைப்பூவில் அவருடைய கருத்தைக் கூறி இருக்கிறார். வலைப்பூ என்பதும் தம் எண்ணங்களை பதிந்து வைக்கும் டைரி போலத்தானே? இதில் நீங்க ஆத்திரப்படாமல் உங்க கருத்தைக் கூறலாம் என்பது என் எண்ணம்.நான் தவறாக சொல்வதாக எண்ணினால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  34. //அதுவும் இல்லாமல் திமுக எனும் அரசியல் செல்வாக்கில் வந்த டிவி ,வளர்ந்த டிவியும் கூட. அது இப்போது செய்வது துரோகம், //

    துரோகம் கழகத்திற்க்கு, ஒரு பொதுமனிதனாக நாம் எதிர்பார்க்க வேண்டியது இப்போவாவது திருந்தினானே என்பதை மட்டும் தான்.
    நீங்கள் ஒரு பொது மனிதனாக இருந்தால் இந்த கண்ணோட்டதில் யோசிக்கலாம். இல்லை ஒரு தி.மு.க அபிமானி என்றால் ஸாரி என் மேல தான் தப்பு.

    ReplyDelete
  35. வால்பையன்.
    பொதுமனிதனாய் அவர்கள் திருந்தியதுநல்ல விடயம்தான்,ஏன் பூசி மொழுக வேண்டும். அதிமுக திமுக எனும் இரண்டு திருடர்களில் எனக்கு திமுக. பிடிக்கும். போன வருடம் வரை கலைஞர் சன் டிவியின் பங்குதாரர் என்பது தாங்கள் அறிந்து இருக்க நியாயம் இல்லை.

    ReplyDelete
  36. நன்றி புதுகை அப்துல்லா தங்களாவது அந்த கடைசி வரியை குறிப்பிட்டிர்களே. மிக்க நன்றி

    ReplyDelete
  37. //போன வருடம் வரை கலைஞர் சன் டிவியின் பங்குதாரர் என்பது தாங்கள் அறிந்து இருக்க நியாயம் இல்லை.//

    முரசொலியிலும், தினகரனிலும்
    மாறி மாறி அவர்கள் கொடுத்த அறிக்கையில்
    மொத்த உலகுக்கே தெரிந்து விட்டது.

    முன்பிருந்த இனப்பற்று கலைஞருக்கு இப்போதும் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை. தன் பதவியை தக்க வைத்து கொள்ளவும்.
    தன் குடும்பத்தார் சம்பாரிக்கவும், அவரது சமரசங்கள், ஒரு தமிழனாக ஒரு குடிமகனாக ஒரு மனிதனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை

    ReplyDelete
  38. நன்றி உங்கள் தரப்பும் உங்கள் ஆதங்கமும் புரிகிறது இது பற்றி விரைவில் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  39. தாத்தாவிற்கு ஏற்ற சரியான பேரன்கள்.
    இப்பொழுதுதான் ஆடம் சூடு பிடிக்கிறது. பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது. இந்த வயதிலும் பணம், பதவி (ம) குடும்பம் மேல் இருக்கும் பற்று துளி கூட மாநிலம், மக்கள், காவிரி, ஒகேனக்கல், மீனவர்கள் (ம) கச்சதீவு மேல் இல்லை.

    நான் இங்கு இலங்கை தமிழர்களை குறிப்பிட வில்லை. ஏன் என்றால் தன் நாட்டு மக்களையே கவனிக்க தவறிய வயோதிகர் தலைவர், வக்கணையாக பேசி வரலாற்றை திரிக்கும் பழுத்த அரசியல் தாத்தா பிற நட்டு மக்களையா கவனிக்க போகிறார்.

    அனாலும் நான் ஒன்று சொல்ல கடமை பட்டு இருகிறேன். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கருணாநிதி போல் தன் குடும்ப நலன் காத்தால் தமிழ் நாடு ஒரு முன்னோடி மாநிலமாய் மாறும்.

    Do not get hesitate to learn godd thingd from the bad fello

    நன்றி...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner