மும்பை பற்றி எறிகிறது....

நேற்று இரவு பதினோரு மணியளவில் மும்பையில் தாஜ் ஓபராய் ஓட்டல்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு துப்பாக்கி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் .இதுவரை 80 பேர் பலி , 7 காவல் துறையினர் பலியாகி உள்ளனர். இன்னும் இடங்களில் குண்டு வெடிப்பும் நிகழ்த்தி உள்ளனர். இந்த பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் வரை மும்பை ஒபராய் ஓட்டலில் இன்னும் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் வர வில்லை. இராணுவம் ஒபராய் ஓட்டலில் நுழைந்து இருக்கிறது.
முன்பு எல்லாம் குண்டு வைத்து தீவிரவாதிகள் தலைமறைவு ஆனார்கள் இப்போதெல்லாம் டைஹார்டு படம் போல் இருபது தீவிரவாதிகள் ஒன்று சேர்ந்து குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். வழக்கம் போல் மத்திய அரசின் உளவு துறை மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது.

என்ன ஒரே ஆறுதல் அண்ணாடங்காட்சிகள் பயணம் செய்யும் பேருந்து, ரயில், மார்கெட் போன்ற இடங்களில் குண்டு வைக்காமல் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் அட்டாக் செய்து இருக்கிறார்கள்.


ஒருவேளை மேல் மட்டத்து மக்களுக்கு வலிகளையும் வேதனைகளையும் புரியவைப்பதற்க்காகவோ???

பார்ப்போம் மன்மோகன் அரசு இன்னும் எத்தனை பேரை மண்ணுக்கு அனுப்ப போகிறது என்று?


இந்த இடத்தில் என் பழைய பதிவை இணைக்கிறேன். அது எப்போதும் இந்தியாவுக்கு பொறுந்தும்

நேற்று அசாம் கவுகாத்தியில் குண்டு வெடித்து 70 பேர் பலியானார்கள்(30/10/2008) இந்த பதிவு டெல்லி குண்டு வெடிப்பின் போது எழுதியது. இப்போதும் எப்போதும் இந்தியாவிற்க்கு பொறுந்தும்.....

இன்னும் குண்டு வெடிக்கும் போதெல்லாம் இதே பதிவை உயிர் சேதம் மற்றும் நாளை மடடும் மாற்றி போடலாம் என்று இருக்கிறேன். எனெனில் இத்தனை பலியாகி இருக்கிறார்கள் உளவுதுறை என்ன செய்கிறது? அவர்களுக்கு கெபடுககும் சம்பளம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா?

இதற்க்கு மேல் பழைய பதிவை படியுங்கள் இது எப்போதும் பொறுந்துவது போல்தான் எழுதியுள்ளேன்


நேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.சில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,


பெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.


இதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...

1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே அப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்

2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.

3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.

4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.

5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.

6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.

7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.

8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .


அடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

6 comments:

 1. :(

  ஆனா, பதிவு தலைப்பு ஓவர் சென்ஷேனலைஸ்டா இருக்கே.
  'பற்றி'யெல்லாம் எரீலியே?

  ReplyDelete
 2. தலைவரே கண்ணகி மதுரையை எரித்தது போல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீரா????. 80 பேர் பொது மக்கள் இறந்து இருக்கிறார்கள். 12 காவல் துறையிபர் இறந்து இருக்கிறார்கள். 100 பேர் பணய கைதியாக இருக்கிறார்கள். இராணுவம் வந்து இருக்கிறது இந்த நிமிடம் வரை ஓபராய் ஓட்டல் இன்னும் கட்டுப்பாட்டில் வரவில்லை. இரண்டு கார் ஓண்டு வெடித்து இருக்கிறது. பொதுமக்கள் பதட்டம் தனியும் வரை விட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என் கேட்டு கொள்ள படுகிறார்கள்.பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அளித்து இருக்கிறார்கள். மும்பையில் மழை கூட பெய்யவில்லை. இதை விட வேறு என்ன வேண்டும அது மட்டும அல்ல 100 பேர் உயிர் உசல்

  ReplyDelete
 3. AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT, THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

  IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

  THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

  NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

  WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

  I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS.

  ReplyDelete
 4. \\\THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .\\\ ya vanjoor i agree it .tanks for reading my blog

  ReplyDelete
 5. //
  SurveySan said...

  :(

  ஆனா, பதிவு தலைப்பு ஓவர் சென்ஷேனலைஸ்டா இருக்கே.
  'பற்றி'யெல்லாம் எரீலியே?
  //

  @சர்வேஸ்
  NDTV பாக்கலியா தாஜ் ஹோட்டெல் விடிய விடிய எரிஞ்சதே :((((((

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner