பொதுவாக தெலுங்கு படம் என்பது1980களில் பெல்பாட்டம் போட்டு பாக்கியராஜ் போடுவது போல் பெரிய கண்ணாடி அணிந்து பாக்கியராஜ் போலவே உடற்பயிற்ச்சி ஆட்டம் ஆடுவார்கள் அந்த கால கட்டத்து தெலுங்கு ஹிரோக்கள்.
தெலுங்கு ஹிரோயின்கள் கட்டாயம் விதவை டிரஸ் ஆன, மன்னிக்கவும் வெள்ளை உடை உடுத்தி மழையில் நனைய வைப்பார்கள். அப்போது கண்டிப்பாக அவர்கள் கருப்பு பிரா அல்லது சிவப்பு பிரா அணிந்து இருப்பார்கள், அவர்களுக்கு
பின்புறம் என் ஆம்மா வயது ஒத்த பெண்கள் பெருத்த தொப்பையுடன் டூபீஸ் மாட்டிக்கொண்டு ஆடுவார்கள்.
இடுப்பில் பவுன் கலரில் ஒரு மினுக்கும் கயிறு அணிந்து இருப்பார்கள், லைட்டாக தொப்புள் பக்கம் லேசாக நீர்த்திவலைகள் இருக்க எங்கிருந்தோ வரும் ஆப்பிள் அல்லது ஆரஞ்சு பழம் தொப்புளில் அடிக்க சம்மா அதிருதில்லை கணக்காக தொப்புள் அதிரும்.
இப்படிதான் தெலுங்கு படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தலைமுறை மாற்றம் மெல்ல மாறியதும் இளம் இயக்குநர்கள் தங்கள் கையில் தெலுங்கு சினிமாவை எடுத்துக்கொண்டு இப்போது வெற்றி நடை போடுகிறார்கள். அப்படி வெற்றி நடை போட்டபடம்தான் ANUKOKUNDA OKA ROJU.
படித்து கொண்டே பாடகி சான்ஸ் தேடும் சர்மிலி... அம்மா அப்பா சின்ன வயதிலேயே டிவோர்ஸ் வாங்கி பிரிந்து விட்டார்கள். அப்பா மற்றும் ஸ்டெப்மதர் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளோடு வீட்டில் தங்கி படிக்கிறாள். சித்தி கொடுமைகாரி. எப்படியாவது சினிமாவில் பெரிய பாடகி ஆகி விட வேண்டும என்று தொடர்ந்து முயற்ச்சிசெய்து வருபவள். அவ்வப்போது கோரஸ்ம் பாடுவாள்.
ஒரு நாள் அப்பா அவர் குடும்பத்துடன் வெளியூர் செல்ல நண்பி ஒருத்தி பேச்சை கேட்டு இரவு பார்ட்டியில் வியாழக்கிழமை இரவு கலந்து கொள்கிறாள். மறுநாள் எப்போதும் போல் கல்லூரி செல்ல, எப்போதும் கூட்டம் இருக்கும் பேருந்தில் அன்று கூட்டம் சுத்தமாக இல்லை. கல்லூரிக்கு அவசர அவசரமாக செல்ல அங்கும் யாரும் இல்லை. ஏன் யாரும் இல்லை என்று பியுனிடம் கேட்க இன்று சனிக்கிழமை என்று சொல்ல ,அவளுக்கு தூக்கிவாரி போட படம்பார்க்கும் நமக்கும்தான்.
அந்த ஒருநாள் என்ன ஆனது? அந்த ஒருநாள் எங்கே இருந்தாள்? அந்த ஒருநாள் அவள் நினைவு அடுக்கில் ஏன் இல்லாமல் போனது? வயசுப்பெண்ணாயிற்றே அந்த சுய நினைவு இல்லாத அந்த தினத்தில் அவள் கற்புடன்தான் இருந்தாளா? என தெரிய ANUKOKUNDA OKA ROJU படம் பார்க்கவும்
படத்தை பற்றி சில சுவாரஸ்யங்கள் சில.....
படத்தி்ன் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று இருப்பது கெஜபதி பாபு. டாக்ஸி டிரைவராக செஷான்க் இருவரும் அற்புதமாக நடித்து இருப்பார்கள்.
இந்த படத்தின் ஓப்பனிங் சீன் வழக்கமான தெலுங்கு படம் போல் இல்லாமல் ரொம்ப அற்புதமாக இருக்கும் இதுவே இது வித்யாசமான படம் என்று சொல்ல வைக்கும்.
குறைந்த முதலீட்டில் நட்சத்திடர அந்தஸ்த்து இல்லாத ஆட்களை வைத்து காமெடி கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் தந்த இயக்குநர் அதுவும் தெலுங்கில் இப்படி ஒரு படம் எடுத்த Chandra Sekhar Yeleti
என் பெருமைக்கு உரியவர்.
தொடந்து தெலுங்கு படத்தை பற்றிய என் எண்ணவோட்டத்தை மாற்றிய இயக்குநர் என்பேன்.
படத்தின் பெரியபலம் இந்த படம் வேறு எந்த படத்தையும் ஞாபகப்படுததாது.
எவராலும் கண்டுபிடிக்க முடியாத திரைக்கதை. எல்லா கேரக்டர்களும் பிரமாத படு்த்தியிருப்பார்கள்.
முக்கியமாக அந்த இங்கிலிஷ் வாத்தியார், சாமியார் இருவரும்
கவர்ச்சி சர்மிலி இதில் நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருப்பபார்.
கீரவானி பின்னனி இசை படத்துக்குமேலும் மெருகு....
இந்த படத்தின் ஒளிப்பதிவு அவய்லபுள் லைட்டில் எடுக்கப்பட்டது போல் தோற்றம் இருப்பதால் இந்த படத்துக்கு அது ரியாலிட்டி எபெக்ட் கொடுக்கின்றது.
இந்த படத்தின் இயக்குநர் இதற்க்கு முன் அய்த்தே என்ற தெலுங்கு படம்தான் இவரின் முதல் படம் அதுதான் தமிழில் நாம் என்ற படமாக வந்தது..
இனிமே யாரும் ஹாலிவுட் ஹாலிவுட்தான் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். நம்ம ஆட்களை முதல்ல மதிக்க கத்துக்கோங்க
இப்படி ஒரு தெலுங்கு படம் நீங்க பாத்திருக்க வாய்பில்லைதான் என்று நான் அடித்து சொல்லுவேன்
eevi rating: 3.5/5
Punchline: Anukunnate Oka Manchi Cinema
Genre: Thriller
Type: Straight
Banner: Just Yellow Media
Cast: Charmy, Sashank, Pavan Malhotra, Harsha Vardhan, Narsing Yadav, Pooja Bharati, Jagga Rao, Sivannarayana, Ravi Prakash, Kaushal, Amit, Pingpong, Vasu Inturi, Sandra, Jayalakshmi, Baby Roopika
Dialogues: Gangaraju Gunnam
Lyrics: Sirivennela, MM Keeravani, Gangaraju Gunnam & Marut
Music: MM Keeravani
Choreography: Nixon
Cinematography: Sarvesh Murari
Stunts: Ramana
Editing: Mohan - Rama Rao
Art: Ravindar R
Costumes: Rama Vastala & Sandhya Ravi
Presents: Ramaraju D
Executive Producer: Urmila Gunnam
Story - Screenplay - Direction: Chandra Sekhar Yeleti
Producers: Gangaraju Gunnam & Venkat Dega
Theatrical release date: 30th June 2005
அன்புடன்/ ஜாக்கிசேகர்
ஜாக்கி அன்னையா...
ReplyDeleteமீக்கு தெலுகு கூட பாக ஒச்சிந்தா... நாக்கு தெளிதே...
ஈரோஜே நேனு பயக்க வெள்ளி ஈ சினிமா DVD எக்கடயானு தொறக்கிந்தானு சூப்பி ஒஸ்தேனு...
மீறு இலாக சால மஞ்சின வாடுன்னு இப்போதே அனுக்குண்டோமன்டி...
ஓகே பாவா, நேனு தரவாத்த.......
அன்பு நித்யகுமாரன்
அந்தபுரம் என்ற படம் தெலுங்கில் இருந்து தான் தமிழுக்கு வந்தது,அதில் பார்த்திபனின் நடிப்பு பட்டாசாக இருக்கும்
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்.. இப்போவெல்லாம் தெலுகு இன்டஸ்ட்ரியும் நல்லா டெவலப் ஆகிடுச்சி.. நல்ல விமர்சனம்.. பார்க்கவேண்டும்..
ReplyDeleteஹீரோயின் பெயர் சார்மி இல்லை?
நல்ல விமர்சனம்.. பார்க்கவேண்டும்..
ReplyDeleteஅந்தபுரம் என்ற படம் தெலுங்கில் இருந்து தான் தமிழுக்கு வந்தது,அதில் பார்த்திபனின் நடிப்பு பட்டாசாக இருக்கும்
ReplyDelete//
அன்பு நண்பருக்கு ,
அந்தப்புரம் தெலுங்கு பதிப்பில் பார்த்தீபன் இல்லை...தமிழ் டப்பிங்கிற்காக பார்த்தீபன் நுழைக்கப்பட்டார். பிரகாஷ்ராஜ் நடிப்பும் பிரமாதம். கொஞ்சம் ஓவர் இரத்தம்.
இந்த படம் வந்து ஓரு நான்கைந்து வருடங்கள் ஆகிறது. நானே இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள்.. க்ளைமாக்ஸில் தான் கொஞ்சம் சொதப்புமே தவிர மற்றபடி சும்மா.. அதிரி போதுந்து சினிமா..
ReplyDeleteசிவா பார்த்து விட்டு கருத்து கூறவும்
ReplyDeleteநித்யா தங்கள் சுந்தர தெலுங்கில் எழுதிய பின்னுட்டத்திற்க்கு நன்றி
ReplyDeleteவெண் , இந்த படம் பழைய படம் , படம் வந்து எப்படியும் 4 வருடங்களாவது இருக்கும்.
ReplyDeleteநன்றி வால்பையன். உண்மைதான் இப்போது இன்னும் நன்றாக வந்துவிட்டது என்று சொல்கிறேன்
ReplyDeleteநன்றி மதிபாலா தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்
ReplyDeleteநன்றி சங்கர் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteஅப்படியே Pursuit of Happiness, Shaswank Redemption, The usual Suspects படங்களைப்ப் பார்த்துட்டு பதிவு போடுங்க!
ReplyDeleteபு நிச்சயமாக நீங்கள் சொல்லும் படங்கள் எல்லாம் மனதில் உள்ளது தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்
ReplyDeleteNaan paartha mudhal telugu padam idhuve. Thelungu padangalai thodarndhu paarkkiren. Indha oru padam thandha thirupthiyaal.
ReplyDeleteஇந்த மாதிரி வித்யாசமான ஒன் லைன் ஸ்டோரியை கேட்டதில்லை.ஸ்வாதி முத்யம்,சங்கராபரணா படத்துக்கு பிறகு இந்தப்படத்தை தெலுங்கில் எடுத்த முக்கிய படங்களில் ஒன்றாய் சொல்லலாமோ?
ReplyDelete