
போலிஸ் வேடிக்கை பார்த்தது சரி என்றே என் மனதுக்குபடுகின்றது. கடந்த காலங்களை புரட்டி பார்த்தோமானால் போலிஸ் சட்டகல்லூரி மாணவர்கள் மோதல் என்பது சக்காளத்தி சண்டையை விட கேவலமாகவே நடந்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
போனமுறை கூட ஹாஸ்டலில் கலவரம் என்றதும் தடியடி அடித்து கலைத்தது போலிஸ்.
எப்படி எங்கள் வளகத்துள் போலிஸ் வரலாம் எங்களுக்குள் சண்டை என்றால் நங்களே தீர்த்து கொள்வோம் நீங்கள் உள்ளே வர தேவையில்லை என்றும் இந்த கலவரத்தின் போது தடியடிக்கு உத்தரவு இட்ட போலிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும என்று இதே சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள்.
அப்படி கலவரத்தை கட்டு படுதத வந்தவனை நீ யோக்கியம் இல்லை எப்படிஉள்ளே வரலாம். என்றால் எவன் உள்ள வந்து காப்பாத்துவான்.
இப்போது அதே வளாகத்தில் நடந்த சண்டையில் உள்ளே போனால் நாங்க வெட்டிக்குவோம் குத்திக்கிவோம் உங்களுக்கு எனன வந்தது என்று திரும்பி போலிஸ் மீதே பபழியை போடுவார்கள் அதனால்தான் போலிஸ் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது.
பொதுவாக சட்டட கல்லூரி மாணவர்கள் என்றால்அராஜகத்தின் மொத்த உருவமாகதான் நமக்கு காட்சி அளித்து இருக்கிறார்கள். சட்டம் படிப்பதால் தான் என்னவோ பெரிய படுங்கிகள் போல்தான் அவர்களை எண்ணிக்கொள்வார்கள். வக்கிலாக மாறினால் கூட இந்த மனநிலை மாறாது. எப்போது பார்த்தாலும் ஸ்டிரைக் அடிப்பார்கள்.
பாரிஸ் முனை பகுதிக்கு போய் நிம்மதியாக பொருள் வாங்கி வரமுடியாது. ஆன் உன்னா உடனே ரோட்டுக்கு வந்து ஸ்டிரைக் செய்வார்கள்.
இந்த உதை கொடுத்த சம்பவத்தை பார்த்த எந்த பாரி முனை வியாபரியும் சந்தோஷப்பட்டே இருப்பான்.. அந்தளவுக்கு நொந்து நுடுல்ஸ் ஆக்கி இருக்கிறார்கள் சட்ட கல்லூரி மாணவர்கள்.
அதே போல் அந்த கல்லூரியில் காட்டு ஆற்று வெள்ளம் போல் கலந்து இருக்கும் ஜாதி அரசியல். எந்த நிலைபாட்டை எடுததாலும் அரசியல் தலைவர்கள் சப்போட்டுடன் எதிர்க்கும் ரவுடி மாணவர்கள்.
இந்த முறை உதைவாங்கும் போலி்ஸ் கை கட்டி வேடிக்கை பார்க்க காரணம் முன்பு இவர்கள்செய்த அராஜகத்துக்கு அதுவும் அவர்களுக்கு உள்ளே அடி கொடுதது அடி வாங்கும் போது வேடிக்கை பார்த்தது அவ்வளவுதான்.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் கோவை மாணவர்கள் அராஜகம் செய்ய கல்லூரி வளாகத்தில் போலிஸ் நுழைய எந்த போலிஸ் உள்ளே நுழைந்தாளும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சில மாணவர்கள்மாடி மேல் ஏறி ஷோ கட்டியதைதமிழ் மக்கள் எல்லோருக்கும் சன்நுயுஸ் காட்டியது. அதே போல் வேறு மாவட்டத்தில் நடந்த சட்ட கல்லூரி கலவரத்துக்கு சமாதானம் செய்ய போன இன்ஸ்பெக்டரை நெட்டி தள்ளி வெளியேற்றியது இதே மாணவ சமுதாயம்தான்.

பொதுவாக சட்ட கல்லூரிக்கு என்று வயது வரம்பு என்று ஏதும் இல்லை என்ற காரணத்தால் எவருக்கும் மாணவர்கள் என்ற எண்ணம் வரு வதில்லை அது மட்டும் அல்ல ஜாதி அரசியல் போன்றவை கலக்கும் போது அது இன்னும் அடங்கும் தன்மையை இழந்து விடு்கின்றது.
எவ்வளவு காரணம் சொன்னாலும் மிருகத்னமாக ஒரு மனிதன் உதை வாங்கும் போது பழைய கணக்கை தீர்ப்பதாக கை கட்டி வேடிக்கை பார்த்த போலிஸ் கண்டிக்கதக்கவர்கள்தான்.

கல்லுரி வளாகத்துக்குள் போலிஸ் வந்தால் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற காரணத்துக்ககாக அதை பாகிஸ்தான் பார்டர் போல் நினைத்து எல்லை மீறாத போலீஸ், அதுவும்கை கட்டி வேடிக்கை பார்த்த போது அவர்கள் காட்டு மிராண்டி மனநிலையில் இருப்பது போலவே தெரிகின்றது .
நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
சட்டம் படிக்க வந்தவன் கையில் கத்தி எப்படி வந்தது.
மாணவர்களின் பெற்றோர் தன் மகன் என்ன செய்கிறான் என்ற கேள்வி கேட்காமல் எப்போது வீட்டுக்கு வந்தாலும் கதவை திறந்து விடுவதும், கையில் காசு கேட்கும் போது எல்லாம் கொடுததால் இந்த மாதிரி பொறிக்கிதனம்தான் செய்யும்.
கலவரம் நடக்க போகிறது என்று ஒரு சன்டிவி கேமரா நிருபருக்கு தெரியும் போது கல்லூரி முதல்வர் என்ன மமாதா கோவிலில் மணி ஆட்டிக்கொண்டா இருந்தார்.
போலிஸை குற்றம் சொல்வதற்க்கு முன் மாணவர்கள் பெற்றோர் எல்லோரும் தண்டனைக்கு உரியவர்களே. அதே போல் இந்த சண்டையில் ஈடுபட்ட எல்லா மாணவர்களின் கல்வி தகுதியை உடனே ரத்து செய்ய வேண்டும் . அவர்கள் ஏதாவது ஆடுமாடு மேய்த்து பிழைத்து கொள்ளட்டும்.அந்த மாணவர்கள் படிக்க லாயக்கற்றவர்கள்
போதவாக ஒரு சொல்வடை உண்டு.
மாணவன் நல்லவன்
மாணவர்கள் கெட்டவர்கள்
அன்புடன் /ஜாக்கிசேகர்
\\மாணவன் நல்லவன்
ReplyDeleteமாணவர்கள் கெட்டவர்கள்
\\
மிக சரி
வாங்க போலிஸ் வேலைக்குப் போகத் துடித்த என் சகோதரனே,
ReplyDeleteஅம்பேத்கர் சட்ட கல்லுரியில். ஜாதி பாடம்
நடத்திக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
அந்த காட்சியை அநியாயமாய் திரும்ப, திரும்ப காண்பித்தது,
அசிங்கமான டிஆர்பி ஈனச் செயல்.
மேலும் போலிஸ் வேடிக்கை பார்த்திருந்தால் கூட பரவயில்லை,
கேமராவுக்கு "போஸ்" அல்லவா கொடுத்திருந்தார்கள்.
கடைசியில் அசிங்கம் பூசிக்கொண்டது ஒவ்வொரு தமிழனும் தான்.
அன்புடன்,
முகு
நன்றி முகு தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நல்ல வேளை நான் போலிஸ் வேலைக்கு போகவில்லை போய் இருந்தால் எனக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் அடித்து கொண்டே இருப்பார்கள்
ReplyDeleteநன்றி முரளி கண்ணன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteஇதனால் தான் வெளிநாடுகளில் நம் இந்திய தமிழ் நாட்டு கல்விகள், பட்டங்களை அங்கீகரிப்பது இல்லை.
ReplyDeleteகுப்பன்_யாஹூ
Please read my post at my blog.
ReplyDeletehttp://naiyaandinaina.blogspot.com/2008/11/blog-post.html
and put u r comments also.
/
ReplyDeleteசட்டம் படிப்பதால் தான் என்னவோ பெரிய படுங்கிகள் போல்தான் அவர்களை எண்ணிக்கொள்வார்கள்.
/
இருக்கும் :(((
சிவா இந்த பசங்க பண்ற கூத்துக்கு பெரிய வக்கில் எல்லாம் வக்காலத்து வாங்குவானுங்க..
ReplyDelete/*
ReplyDeleteஇப்போது அதே வளாகத்தில் நடந்த சண்டையில் உள்ளே போனால் நாங்க வெட்டிக்குவோம் குத்திக்கிவோம் உங்களுக்கு எனன வந்தது என்று திரும்பி போலிஸ் மீதே பபழியை போடுவார்கள் அதனால்தான் போலிஸ் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது.
*/
தங்கள் கருத்தில் ஒரு தொலைநோக்கோ, தெளிவான சிந்தனையோ இல்லை என்பது என் கருத்து...
இதே லாஜிக் அனைத்து குற்றங்களுக்கும் ஒத்து வரும் என்பதை கருத்தில் கொள்க.
இது முதல்வன் படத்தையும் விஞ்சும் ஓரு கேனத்தனமான, கேவலமான ஓரு ஈன அரசியல் என்பதை கருத்தில் கொள்க.
முதல் குற்றவாளி: (TN Gov)
இதற்க்கு எல்லாம் எங்கே நேரம் இருக்கிறது. டெல்லிக்கு போனோமா காரியத்தை முடித்தோமா, பணம் பார்த்தோமா, பதவி பெற்றோமா என்று சலனமில்லாத ஒரு தெளிந்த நீரோடை போன்ற ஒன்றுக்கும் துப்பில்லாத அரசு.
இரண்டாவது குற்றவாளி: (Police)
கண் முன்னே நடக்கும் அட்டூழியத்தை அழிக்க வக்கு இல்லாதவர்கள்
காக்க காக்க: வக்கு இல்லன்னு சொல்ல முடியாது. அரசியல் அழுத்தம் அது மாதிரி அதாங்க Political Preasure.
மூன்றாவது குற்றவாளி: (College Management)
சட்ட கல்லூரி நிர்வாகம். ஒரு கல்லூரி நடத்த வக்கிலாதவர்கள் அதில் இருந்து என்ன கிழிக்க போகிறார்கள்.