பேஸ்புக் வரமா சாபமா? வினுப்பிரியா மரணம் எழுப்பும் கேள்வி -?




சேலம்வினுப்பிரியாவுக்கு அன்றைய தேவை ஆதரவான வார்த்தைகளே ... பெற்றவர்களே நம்பவில்லை என்பதுதான் அந்த பெண்ணின் தற்கொலைக்கு முக்கியமான காரணம்.. பேஸ்புக்கிற்கு போகாமல் படங்களை பதியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடக்கம் ஒடுக்கமாக அந்த பெண் இருந்து இருந்தால் அந்த பெண் இறந்து போய் இருக்காது என்று பதறுபவர்களை பார்த்தால் மிரட்சியாக இருக்கின்றது..

APPA ( 2016 ) tamil movie review | சமுத்திரகனியின் அப்பா திரைவிமர்சனம்




அப்பா திரை விமர்சனம்…
==============
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல…
உங்கள் பிள்ளைககள் உங்கள் பிள்ளைகள் அல்ல…
அவர்கள் அவர்களுடைய  வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள்  அல்ல

                          கலீல் ஜிப்ரான்.
எழுதிய இந்த வரியை முன் வைத்துதான்  அப்பா  திரைப்படத்தை சமுத்திரகனி  எடுத்து இருக்கின்றார்

Request Road Travelers | வாகன ஓட்டிகள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.







நான் உத்தமனில்லை.. அப்படியான பிம்பம் என் மீது விழுவதை நான் ஒரு போதும் விரும்பியதில்லை..காரணம் குறை நிறைகளோடு மட்டுமே ஒரு மனிதன் வாழ முடியும்..
100 சதவிகித நேர்மையும் ஒழுக்கமும் வாய்ப்பே இல்லாத விஷயம். அனால் குறைந்த பட்ச நேர்மை என்னிடத்தில் உண்டு …


சுவாதி கொலை சொல்லும் சேதி.




எனக்கு நேராது எனக்கு நிகழாது எங்களுக்கு நடக்காது என்று இந்த பூமியில் எந்த உத்ரவாதமும் இல்லை...


சுவாதி கொலை சொல்லும் சேதி.




எனக்கு நேராது எனக்கு நிகழாது எங்களுக்கு நடக்காது என்று இந்த பூமியில் எந்த உத்ரவாதமும் இல்லை...


Metro -2016 tamil movie review | மெட்ரோ திரைவிமர்சனம்




வேளச்சேரியில் புழுதிவாக்கம் செல்லும் சாலையில் இரண்டு பெண்கள் வாங்கிங் போய்க்கொண்டு இருந்தார்கள்…  என் கண் எதிரில்  அப்போசிட்டில் வந்த பையன் ஒரு பெண்மணியின்  கழுத்தில் இருந்து அசால்டாக செயினை அறுத்துக்கொண்டு  பறந்தான்.. மனைவி குழந்தையோடு இருந்த காரணத்தால் அவனை வேகமாக விரட்ட முடியவில்லை.ஆறு பவுன் செயின் நொடிப்பொழுதில்லை அவன் கையில் கழுத்தில் காயத்தோடு அந்த பெண்மணி பறிதவித்து போய் இருந்தார்.… போலிசில் கம்ளெயின்ட் கொடுக்க சொன்னேன்.. இல்லைங்க வீட்டுக்கு போலிஸ் வருவதை எங்க வீட்டுக்காருக்கு பிடிக்காது… அதனால் கம்ளெயின்ட் கொடுக்கலை.. எல்லாம் என் தலையெழுத்து வாயை கட்டி வயித்தை கட்டி  சேர்த்து வச்சது என்று அழுது புரண்டார்..

amma kanakku -2016 movie review | அம்மா கணக்கு திரைவிமர்சனம்



திருமணத்துக்கு பிறகு அமலாபால் ஆக்ஷன் கட் இரைச்சலில் இருந்து விலகி இருப்பார் என்று பார்த்தால்…முன்னிலும் அதிக வேகத்துடன் களம் இறங்கி இருக்கின்றார்… சிறப்பான பாத்திரங்களை ஏற்று  செய்வதோடு தன் தனித்தன்மையையும் நிருபிக்கி போராடுகின்றார்… அதற்காகாவே அவருக்கு ஜாக்கி சினிமாஸ் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.

ஒரு நாள் கூத்து கதை மாந்தர்கள் ஒரு பார்வை.




சில திரைப்படங்கள்  தமிழ் சினிமாவில் வெளியாகி கவனம் பெறாமலே போய் விடுவதுண்டு…  அப்படியான சமீபத்திய திரைப்படம் ஒரு நாள் கூத்து… இறைவி அளவுக்கு கொண்டாடப்பட்டு இருக்க வேண்டிய திரைப்படம்.. ஆனாலும் இந்த திரைப்படம் பெருபாண்மையான மக்களின் கவனம் பெறாமலே போய் விட்டது…


Now You See Me: The Second Act ( 2016 ) movie review




நவ் யூ சி மி 2


இப்ப  நீ என்னை பாரு என்பதுதான் தமிழாக்கம்…அதை ஒரு மேஜிக்காரன் சொன்னா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சி பாருங்க….
இந்த படத்தின் முதல் பாகம்..2013 ஆம் ஆண்டு வெளியா‘கி  பட்டையை கிளப்பியது… நான்கு மேஜிக் நிபுனர்கள் ஒன்று சேர்ந்து  பெரிய பண  பொக்கிஷத்தை எல்லோர் கண்களிலும் மெஜிக் செய்து அபிட் விடுகின்றார்கள் என்பதுதான் கதை.

Iraivi Tamil movie Female character detailed analysis by jackiesekar | இறைவி திரைப்பட பெண் கதாபாத்திரங்கள் ஒரு பார்வை.




இறைவி திரைப்படம் பேசியது ஆணியமா? பெண்ணியமா? என்று தெரியாது..?  ஆனால்  அந்த திரைப்படத்தின் காதாபாத்திரங்கள் முக்கியமாக பெண் காதாபாத்திரங்கள் என் மனதை கவர்ந்தன என்பேன்.


நண்பர் சுபாஷும் அசோக்கும்..



சில நண்பர்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது… அவர்களோடு வாழ்ந்த பால்ய காலங்கள் என்றைக்கு நினைவு படுத்தினாலும் சந்தோஷத்தை கொடுக்க கூடியது…


Central Intelligence 2016 movie review



பாஸ்ட் பியூரியஸ் படத்தில் கலக்கிய ராக் என்கின்ற Dwayne Johnson    நடிப்பில் இந்த வாரம் வெளியான திரைப்படம்  சென்ட்ரல் இன்டிலஜென்ஸ்.. ஆக்ஷன்  காமெடி ஜானரில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் உலக அளவில் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி வருகின்றது.. அதற்கு காரணம் படம் நெடுக இழையோடும் நகைச்சுவைதான்.
===

நேற்று இரவு ஒரு விபத்து.. அது தொடர்பான பாடங்களும்.


நேற்று இரவு பெங்களுருவில் இருந்து நான், மனைவி, யாழினி ஆல்ட்டோ காரில் வந்துக்கொண்டு இருந்தோம் யாழினி பின்னால் தூங்கி கொண்டு இருந்தாள்.. கார் முழுவதும் பொருட்கள்… கேமரா, லைட், லேப்டாப் என்று சகலமும் இருந்தன சுருங்க சொன்னால் புல்லி லோடேட்.


The Conjuring 2 - 2016 - தி கான்ஜுரிங் 2 திரை விமர்சனம்.





கான்ஜுரிங் திரை விமர்சனம்.


2013 ஆம்  ஆண்டு வெளியான கான்ஜூரிங் ஹாரர்  திரைப்படம் கொடுத்த அதிர்வை உலக சினிமா ரசிகர்கள் அறிவார்கள்… தற்போது  அதன் இரண்டாம் பாகம் வெளியாகி மக்களை டரியல் ஆக்கி இருப்பதோடு அட்சரசுத்தமாய்  தமிழ் பேபேசுவது ,இன்னும் கூடுதல் சிறப்பு. காரணம் இந்த திரைப்படம் ண் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வெளி வந்துள்ளது…


Idhu Namma Aalu movie review \ இது நம்ம ஆளு திரை விமர்சனம்.





இது நம்ம ஆளு படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு  மிக முக்கியமான காரணம் லவ் பிரேக் அப் ஆன ரெண்டு பேர் மீண்டும்  சேர்ந்து  நடிக்கின்றார்கள்  என்பதே…அப்படி நடிப்பதும் சேர்வதும் இங்கே புதுமையான விஷயம்…


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்.






1990 களில் 425 இல் இருந்து... 450 மாக்க எடுத்த பையனை பார்க்கறது என்பது கடவுளை பார்ப்பது போல...
இப்ப என்னடான்னா... 499 மார்க்கை ரெண்டு பேர் எடுக்கறாங்க...


நேஷனல் ஜியாகிராபி






1986களில்தான் எனக்கு முதன் முதலாக தொலைக்காட்சி அறிமுகம்... கடலூர் கூத்தப்பாக்கத்தில் காசுக்கடைக்காரர் வீட்டில் இருந்து பிளாக் அண்டு ஒயிட் டிவிதான் நான் பார்த்த முதல் டிவி...

சிவாஜி கேஆர் விஜயா நடித்த செல்வம் திரைப்படம்தான் நான் தொலைகாட்சியில் பார்த்த முதல் திரைப்படம்.. ஆனால் அந்த டிவியை 30 அடி தொலைவில்தான் பார்த்து ரசித்து இருக்கிறேன்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாத்தியார் சுஜாதா



வாத்தியார் சுஜாதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

கிராமத்தில் பிறந்த எனக்கு உலகம் என்றால் என்ன என்று நிறைய படித்து அதனை எழுத்தில் வடித்து கற்றுக்கொடுத்தவன்.

அவன் எழுத்தைவாசிக்க வில்லை என்றால் நிறைய ரசனைகளை ரசிக்க தெரியாமல் தந்தி போல கடந்து போய் இருப்பேன்...

நேஷனல் ஜியாகிராபி பேட்டி


2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி....சென்னை பெருவெள்ளம் அப்படியான வெள்ளத்தை என் 22 வருட சென்னை வாழ்க்கையில் நான் இதுவரை கண்டதில்லை...

காலை எட்டு மணிக்கு டிவியில் சைதாப்பேட்டை பாலத்தில் அலை அடித்துக்கொண்டு இருக்கின்றது...

கணமும் தாமதியாமல் வீடியோ கேமரா எடுத்துக்கொண்டு செல்கிறேன்.. மக்கள் அகதிகளாக திரிகின்றார்கள்.. சிக்னல் வேலை செய்யவில்லை..

ரைட் செடு ராங் சைடு என்று எதும் இல்லை... மின்சாரம் இல்லை... கருனையுள்ளவர்கள் சாப்பாடு போடும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம்..

சாலையெங்கும் நீர்.....

நாகேஷ்வரராவ் பார்க் வெள்ளத்தில் மிதக்கின்றது.. அண்ணாசாலையில் வெள்ளத்தில் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கயிறு கட்டி நடக்கின்றார்கள்...

எனது பைக்கில் உயிரை பணயம் வைத்து சைதாப்பேட்டை சென்று விட்டேன்...

சைதாப்பேட்டை பாலத்தில் கடல் அலை போல ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் அடித்துக்கொண்டு இருந்தது...

ஒன்பது மணியில் இருந்து இரண்டு மணி வரை அங்கே இருந்தேன்.. சைதை மறைமலை அடிகள் பாலம் மெல்ல மெல்ல மூழ்கும் காட்சியை படம் பிடித்தேன்.

ஜாக்கி சினிமாசின் சொத்து இதுதான்..


சினிமா ஈர்ப்புதான்.. ஆனால் இது போன்ற பதிவுகள்தான் எனக்கு பிடிக்கும்...

மெட்ரோ ரயில் பாலத்தின் மேல் ஏறி மழைக்கு நடுவே நின்று எடுத்ததும் பாலத்தை சுற்றி ஓடும் அசுர வெள்ளத்தின் ஊடே இடுப்பளவு நீரில் இறங்கி பயத்தோடு பனகல் மாளிகையை அடைந்ததும் வாழ்கையில் மறக்க முடியாதது...


சைதை பாலம் மூழ்கும் காட்சியை நான்கு மணி நேரம் காத்திருந்து பதிவு செய்தேன்..

அந்த வீடியோவை பார்த்து விட்டு நேஷனல் ஜியாகிரபி சேனலில் இருந்து அழைத்தார்கள்.. சில வீடியோ கிளிப்பிங்குளை கொடுத்தேன்...

எனது இண்டர்வியூவை எடுத்தார்கள்... தமிதுல் பேசுகின்றேன் என்று சொன்னேன்... ஆனால் ஆங்கிலத்தில் பேசினால் நலம் என்றார்கள்.

கொஞ்சம் வேர்த்து போய் தான் பேசினேன்...

வரும் வியாழன் இரவு மே ஐந்தாம் தேதி ஒன்பது மணிக்கு சென்னை வெள்ளம் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பாக இருக்கின்றது..

அதில் எனது பேட்டி இடம் பெறுகின்றது.. நண்பர்கள் பார்த்து விட்டு கருத்து கூறவும்.



இந்த வீடியோவை எடுத்த காரணத்தால்தான் நேஷனல் ஜியாகிரபி சேனலில் பேட்டி எடுத்தார்கள்.....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
03/05/2015








நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

பகுத்தறிவா? பணமா?




மயிலை குளக்கரை ரோட்டில் நானும் யாழினியும் பைக்கில் வந்துக்கொண்டு இருந்தோம்.
மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னே

போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே என்று யாழினி பாடினாள்…
நான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து இருக்க வேண்டும். என்னைக்கு அப்படி இருந்து இருக்கோம்….இன்னைக்கு இருக்க..?


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner