2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி....சென்னை பெருவெள்ளம் அப்படியான வெள்ளத்தை என் 22 வருட சென்னை வாழ்க்கையில் நான் இதுவரை கண்டதில்லை...
காலை எட்டு மணிக்கு டிவியில் சைதாப்பேட்டை பாலத்தில் அலை அடித்துக்கொண்டு இருக்கின்றது...
கணமும் தாமதியாமல் வீடியோ கேமரா எடுத்துக்கொண்டு செல்கிறேன்.. மக்கள் அகதிகளாக திரிகின்றார்கள்.. சிக்னல் வேலை செய்யவில்லை..
ரைட் செடு ராங் சைடு என்று எதும் இல்லை... மின்சாரம் இல்லை... கருனையுள்ளவர்கள் சாப்பாடு போடும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம்..
சாலையெங்கும் நீர்.....
நாகேஷ்வரராவ் பார்க் வெள்ளத்தில் மிதக்கின்றது.. அண்ணாசாலையில் வெள்ளத்தில் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கயிறு கட்டி நடக்கின்றார்கள்...
எனது பைக்கில் உயிரை பணயம் வைத்து சைதாப்பேட்டை சென்று விட்டேன்...
சைதாப்பேட்டை பாலத்தில் கடல் அலை போல ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் அடித்துக்கொண்டு இருந்தது...
ஒன்பது மணியில் இருந்து இரண்டு மணி வரை அங்கே இருந்தேன்.. சைதை மறைமலை அடிகள் பாலம் மெல்ல மெல்ல மூழ்கும் காட்சியை படம் பிடித்தேன்.
ஜாக்கி சினிமாசின் சொத்து இதுதான்..
சினிமா ஈர்ப்புதான்.. ஆனால் இது போன்ற பதிவுகள்தான் எனக்கு பிடிக்கும்...
மெட்ரோ ரயில் பாலத்தின் மேல் ஏறி மழைக்கு நடுவே நின்று எடுத்ததும் பாலத்தை சுற்றி ஓடும் அசுர வெள்ளத்தின் ஊடே இடுப்பளவு நீரில் இறங்கி பயத்தோடு பனகல் மாளிகையை அடைந்ததும் வாழ்கையில் மறக்க முடியாதது...
சைதை பாலம் மூழ்கும் காட்சியை நான்கு மணி நேரம் காத்திருந்து பதிவு செய்தேன்..
அந்த வீடியோவை பார்த்து விட்டு நேஷனல் ஜியாகிரபி சேனலில் இருந்து அழைத்தார்கள்.. சில வீடியோ கிளிப்பிங்குளை கொடுத்தேன்...
எனது இண்டர்வியூவை எடுத்தார்கள்... தமிதுல் பேசுகின்றேன் என்று சொன்னேன்... ஆனால் ஆங்கிலத்தில் பேசினால் நலம் என்றார்கள்.
கொஞ்சம் வேர்த்து போய் தான் பேசினேன்...
வரும் வியாழன் இரவு மே ஐந்தாம் தேதி ஒன்பது மணிக்கு சென்னை வெள்ளம் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பாக இருக்கின்றது..
அதில் எனது பேட்டி இடம் பெறுகின்றது.. நண்பர்கள் பார்த்து விட்டு கருத்து கூறவும்.
இந்த வீடியோவை எடுத்த காரணத்தால்தான் நேஷனல் ஜியாகிரபி சேனலில் பேட்டி எடுத்தார்கள்.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
03/05/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Congraats Jackie sir
ReplyDeleteWay to go
வாழ்த்துகள் சார்!
ReplyDeleteமகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஜேக்கி.
ReplyDeleteCongratulations!
ReplyDeleteYou have chosen a job that you love which means that you may not have to work a day in your life!
Wish you many more success!
A true reporter!! Keep it up, Jackie Sir!
ReplyDeleteவாழ்த்துக்கள் (சந்தோஷமுங்க சந்தோஷமுங்க)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி!!
ReplyDelete