கிராமத்தில்  பிறந்த எனக்கு உலகம் என்றால் என்ன என்று  நிறைய படித்து  அதனை எழுத்தில்  வடித்து கற்றுக்கொடுத்தவன்.
அவன் எழுத்தைவாசிக்க வில்லை என்றால் நிறைய ரசனைகளை ரசிக்க தெரியாமல்  தந்தி போல கடந்து போய் இருப்பேன்...
நிறைய எழுத  வேண்டும் என்ற ஆசைதான்... ஆனால்  நேரமில்லை. இருந்தாலும் அவர் எழுத்தில் வெளி வந்த  கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இந்த  காட்சியை என்னால் எப்போதும் மறக்க முடியாது..
காரணம்...இது போன்ற ஒரு சூழலை சந்தித்தவன் நான்..
அதை அவர் மிக அழகாக கையாண்டு இருப்பார்... 
மம்முட்டி வயது அதிகம் உள்ள ராணுவத்தில் கால் இழந்த மேஜர்...அவருக்கு மிகவும் பிடித்த பெண் ஐஸ்வர்யா...... ஆனால் அவள் வேறு ஒருவனை (அப்பாஸ்)காதலிப்பாள்.. வயது வித்தியாசம் காதலை வெளி    சொல்ல முடியாது...
 ஐஸ்வர்யா மீது இருக்கும் பிரியமும் காதலும்  ஒரு போதும் குறையாது... ஆனாலும் ஐஸ்வர்யாவுக்கு பிடித்த அப்பாசுடன்  இருக்கும் காதல்  பிடிக்காவிட்டாலும்  மனதில் காதலை வைத்து இருப்பார்...
மனதில் காதலை புதைத்து வைக்க எவர் அனுமதி வேண்டும்... ஆனாலும் கண்ணா மூச்சி ஏனடா முடிவில்.. கட்டை கால் விழுந்து அவமானப்பட்டு நிற்பார்..
கோபக்காரன், குடிகாரன் என்ற பெயர் வேறு....
 தபு ஐஸ்வர்யா குடும்பம் நொடிந்து விடும்....
ஆனாலும் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருவார்...
ஒரு நாள்  அந்த பெண் அவனிடம் காதலை சொன்னதும்.. மனதில் காதல் இருந்தாலும் அந்த காதலை மம்முட்டி மறைக்கும் மறுக்கும் காட்சியில் வரும் வசனங்கள் செமையாக இருக்கும்..
"கருனையும் காதலையும்  போட்டு குழப்பிக்காதே.''
என்கிட்ட என்ன இருக்கு??
ஆனா நீங்கதான் எனக்கு வேணும்...
வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு சீக்கரமா பதில் கிடைக்கறது இல்லை...
நான் ஏன் ராணுவத்தில் சேர்ந்தேன்... காலை இழந்தேன் குடிகாரநானேன்... உன்னை சந்திச்சேன்... உன் மனசை புரிஞ்சிக்காம இன்னோருத்தனை கூட்டி வந்து புடிச்சி இருக்கான்னு கேட்டேன்..?
இதெல்லாமே... இந்த பச்சைக்கண் தேவதையை கொடுக்கறேன். பத்திரமா பார்த்துக்கோன்னு கடவுள் என்கிட்ட ஒப்படைச்சி இருக்கார் என்று மம்முட்டி சொல்லி  ஒடனே ஐஸ்வர்யாவை தொட்டு விட மாட்டார்.. அவர் கைகளில் தயக்கம் இருக்கும்...
மம்முட்டி கையை  பிடித்து கண்ணத்தில் ஐஸ்வர்யா வைத்துக்கொண்டு பார்த்துக்குவிங்களா என்று கேட்க.. அப்போதும் தவிப்பார்...
மம்முட்டி மார்பில் ஐஸ்வர்யா சாய்ந்த போதும் ஆரத்தழுவமாட்டார்... நிறைய தயக்கம் முகத்தை நிமிர்த்தி பார்த்துக்கறேன் என்று  சொல்லுவார்...
 வாத்தியார் எழுதினதிலே  எனக்கு பிடித்த வசனமும் அருமையான காட்சியும்   இதுதான்...
வாத்தியார் பிறந்தநாளை முன்னிட்டு...இந்த காட்சியை பார்த்து  என்ஜாய் செய்யுங்கப்பா...
ஜாக்கிசேகர்
03/05/2016
https://youtu.be/IGTAgm9VF2w
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...


pamarargalukkum vaasippu elimaiyakkiavar
ReplyDeleteசுஜாதாவை பற்றிய வித்தியாசமான பார்வை! வாழ்த்துக்கள்!
ReplyDelete