மயிலை குளக்கரை ரோட்டில் நானும் யாழினியும் பைக்கில் வந்துக்கொண்டு இருந்தோம்.
மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னே
போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே என்று யாழினி பாடினாள்…
நான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து இருக்க வேண்டும். என்னைக்கு அப்படி இருந்து இருக்கோம்….இன்னைக்கு இருக்க..?
காச்சின பாலுதரேன் கல்கண்டு சீனி தரேன் என்ற வரிக்கு… கொஞ்சம் அழுத்தமாக கச்சின பாலும் தாரேன் கல்கண்டு சீனி தரேன் என்று பாடினேன்..
அப்பா….
என்னம்மா..?
பாட்டை பாடதிங்க…
ஏன்டி?
உம்மாச்சி பாட்டை பழிக்காதிங்க..
நான் எங்க பழிச்சேன்..?
காச்சினன்றதுக்கு கச்சின பாலுன்னு பாடுறிங்க…
ஸ்டைலுக்காக பாடினேன்…
ஸ்டைலுக்காக பாடினேன்…
(பாடும் போது வார்த்தைகளை மாற்றி போட்டு யாழினியை வெறுப்பு ஏற்றுவது எனக்கு பிடித்த விளையாட்டு ஆனால் அவள் பர்பெக்ஷன் விருப்புகின்றவள்.)
அப்படி பாடதிங்க…
ஏன்?
உனக்கு பணம் வேண்டுமா? வேண்டாமா? (என்று சம்பந்தம் இல்லாத கேள்வி குண்டை தூக்கி என்னிடத்தில் போட்டாள்)
வேணும்…
அப்ப உம்மாச்சி பாட்டை தப்பா பாடாதே.
தப்பா பாடினா ?
தப்பா பாடினா ?
உனக்கு பணம் கிடைக்காது…
பகுத்தறிவா? பணமா? என்ற கேள்வி யாழினி மூலம் என் முன் நின்றது…
வயதும் அனுபவமும் அவளிடம் அதற்கு மேல் பேச முடியாமல் யோசிக்க வைத்தது…
எப்போதுமே விடை தெரியாத கேள்விகள் என்முன் இருக்கும் போது பின் வாங்குவது என் வழக்கம்.
நான் யாழினியிடம்
நான் யாழினியிடம்
உனக்கு ஐஸ்கிரீம் வேண்டுமா? சிப்ஸ் வேண்டுமா?- என்ற பேச்சை மாத்தினேன்
ஜாக்கிசேகர்.
20/04/2016
20/04/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
bro children are innocent you know that after fifteen years shalini would hide many from you do you know that
ReplyDeleteBeautiful picture of you two.
ReplyDeleteNice story. Kids are smart.