பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்.


1990 களில் 425 இல் இருந்து... 450 மாக்க எடுத்த பையனை பார்க்கறது என்பது கடவுளை பார்ப்பது போல...
இப்ப என்னடான்னா... 499 மார்க்கை ரெண்டு பேர் எடுக்கறாங்க...

498 மதிப்பெண் களைப் பெற்று இரண்டாவது இடத்தை 50 பேர் பிடித்துள்ளார்கள்... 497 மதிப்பெண்களை எடுத்து மூன்றாவது இடத்தை 224 மாணவர்கள் பெற்றுள்ளார்கள்..

ஏன்டா.. உங்களுக்கு எல்லாம் தமிழ் செகன்ட் பேப்பர்..இங்கிலிஸ் செகன்ட் பேப்பர் எல்லாம் இருக்கா இல்லையப்பு...?????
தமிழ்ல 100 க்கு 100 வாங்க வாய்ப்பே இல்லை... கணக்குல மட்டும்தான் 100க்கு 100 வாங்க முடியும்ன்னு டகூல் பாட்சா வேலை எல்லாம் காமிப்பானுவோ... இப்ப மட்டும் எப்படிடா-?
என்னை மாதிரி நல்லா படிச்ச புள்ளைக்கு பத்தாவதுல 277 மார்க் கொடுத்து என்னுடைய எதிர்காலத்தையே இந்த தமிழக கல்வி சூழல் பாழக்கிவிட்டது..
இல்லையென்றால் ஒரு டாக்டராகவோ.. இன்ஜினியராகவோ.. மாறி தமிழகத்துக்கு சேவை செய்து இருப்பேன்...
அப்படி இல்லை என்றால் ஒரு அதிகாரியாகவாவது மாறி முட்டி போட்டு பவ்யமாக மலர்கொத்தாவது கொடுத்து இருப்பேன்...
யாருக்கு லாஸ்...??? எனக்கா??
உங்களுக்குதான்டா என் வென்று...

ஜாக்கிசேகர்

26/05/2016


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.2 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner