1986களில்தான் எனக்கு முதன் முதலாக தொலைக்காட்சி அறிமுகம்... கடலூர் கூத்தப்பாக்கத்தில் காசுக்கடைக்காரர் வீட்டில் இருந்து பிளாக் அண்டு ஒயிட் டிவிதான் நான் பார்த்த முதல் டிவி...
சிவாஜி கேஆர் விஜயா நடித்த செல்வம் திரைப்படம்தான் நான் தொலைகாட்சியில் பார்த்த முதல் திரைப்படம்.. ஆனால் அந்த டிவியை 30 அடி தொலைவில்தான் பார்த்து ரசித்து இருக்கிறேன்...
எப்போது வேண்டுமானலும் நிறுத்தி விடுவார்கள்... அது என்னவோ தெரியவில்லை... டிவி மீது அப்படி ஒரு பைத்தியம்...
1989களில் மாமா வீட்டில் சாலிடர் கலர் டிவி வாங்கினார்கள்... அப்போதுதான் டிவி இரண்டு அடியில் பரிட்சயமானது.
அதன் பின் திருப்பாதிரிபுலியூர் அபினாயா வீடியோ சென்டரில் வேலைக்கு சேர்ந்தேன்.. சாலிடர் கலர் டிவியும், அக்காய் மார் டூ டெக்கும் எனக்கு அப்போது அத்துப்படி..
வீட்டில் முதலில் ஒரு சாலிடர் பிளாக் அண்டு ஒயிட் டிவி.... டிவி சிரியல்களுக்கு கேமரா மேனாக வேலை பார்த்து அதன் பின் சினிமா தொலைகாட்சி நிறுவனங்களில் பணி புரிந்தாலும்...
நிறைய விவாதங்களில் கலந்து கொண்டாலும் இந்த புகைப்படம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல்தான்...
எங்க அம்மா பார்த்து இருந்தா எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன்...
நேஷனல் ஜியாகிரபி சேனலில்
சைதாப்பேட்டை பாலம் எப்படி மூழுகியது என்பதை விவரித்தேன்...
கல்லூரியில் ஆங்கிலத்தில் படம் நடத்தி இருக்கிறேன். ஆனால் நேரில் பேசும் போது பேசி விடுவேன்.. கேமரா முன்னாள் ஆங்கிலத்தில் பேச முதலில் தயங்கினாலும் என் மனைவியுடன் மகளுடன் பேசி பழகிய ஆங்கிலம் கை கொடுத்தது.
இரண்டு நிமிடங்கள் பேசி இருப்பேன். வந்ததோ...ஐந்து செகன்டுகள்தான் .. நான் எடுத்த சில காட்சிகளை பார்த்த போது மகிழ்ச்சி... முக்கியமாக மக்களோடு விலங்குகளும் முக்கியமாக பாம்பு சைதாபேட்டை பாலத்தில் தவித்துக்கொண்டு கிடந்த காட்சியை பார்த்த போது மகிழ்ச்சி...
இன்னும் இந்த ஆவணப்படம்நிறைய பேசி இருக்க வேண்டும்.. ஆனால் பேசவில்லை...
சென்னை செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளத்தின் துயரம்...அதை சொல்ல ஒரு மணி நேரம் போதாது...
எனது பேட்டி நேஷனல் ஜியாகிரபி சேனலில் வந்தது...ஐந்து செகன்ட்டோ பத்து செகன்டோ....
எப்படி இருந்தாலும் இந்த வாய்ப்பு என்னை பொருத்தவரை பெரிய விஷயம்...
இந்த புகைப்படமும்தான்.
ஜாக்கிசேகர்
05/05/2016
வாழ்த்துக்கள்...
ReplyDeleteCongrats !!!
ReplyDeleteGood. May be 5 seconds .... but who knows what is ahead for you.
ReplyDeleteEvery Giant Leap starts with a small step.
வாழ்த்துக்கள்!
ReplyDeletesuper ya Jackie ellam Yazhini kutty vantha piraguthaan.. Un vaazhkai Yazhinikku Mun Yazhinikku pin endru Pirikkalam.Im happy for you.
ReplyDeleteமகிழ்ச்சி.
ReplyDelete