எனக்கு பிடித்த பாடல்... அது ஏன்? எனக்கு பிடிக்கும்
எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் இசையையும் பாடல்களையும் ரசிக்கின்றோம்... பாடல்கள் பலருக்கு அரும் மருந்து , கல்லூரி பெண்களுக்கு, ஆண்களுக்கும் அதுதான் சாப்பாடு, பாடலால் எழுந்து பாடலால் குளித்து பாடலால் பல் துலக்கி பாடலால் தலை துவட்டி என பாடல்களின் பயன் பாடுகள் பெண்களுக்கு ஆண்களுக்கும் தவிர்க்க முடியாதாகிறது.
ஒருகாலத்தில் துர்தர்ஷனில் ஒளியும் ஒளியும் போடும் போது தெருவில் வாகன போக்குவரத்து வெள்ளி இரவு 8 லிருந்து 8•30வரை சற்றே மந்த நிலையில் காணப்படும்....
இப்போது சன்மியுசிக், இசைஅருவி, எஸ் எஸ் மியுசிக், போன்ற சேனல்கள் தமிழில் பாடல்கள் ஒளிபரப்பினாலும் மற்ற சேனல்கள் இரவு முழுவதும் பாடல்கள் ஒளிபரப்பிய வண்ணம் உள்ளன...
தமிழ் படங்களில் பாடல்கள் இல்லாத படங்கள் ஒருசிலதான் அல்லது விரல் விட்டு எண்ணி விடலாம் எனெனில் கூத்து பார்த்து வளர்ந்த சமுகம் நம்முடையது... கூத்தில் வசனங்களை விட பாடல்க்ளே அதிகம் முக்கியத்துவம் பெரும் கூத்து எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள் மக்கள் தொலைக்காட்சி பார்த்து தெரிந்து கொள்ளவும்....
பாடல்கள் இல்லாத நம் வாழ்க்கை முறை யோசித்து பார்க்க முடியவில்லை செத்தாலும் பாட்டு, வயசுக்கு வந்தாலும் பாட்டு, கல்யாணத்துக்கும் பாட்டு, என்று பாட்டு என்பதும் நம் தமிழர் வாழ்வில் ஒன்றாகி விட்ட ஒன்று...
நான் பாடல்களின் ரசிகன் ஆனால் எப்போதும் இயர் போன் வைத்துக்கொண்டு பாடல் கேட்கும் வெறியன் இல்லை... ஆனால் நல்ல பாடல்களை ரசிப்பேன் அதன் வரிகளை மிகவும் ரசிப்பேன். அந்த ரசிப்புகளை அந்த கவிதைகளை அந்த வைர வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்...
சென்னையில் இருந்த கடலூருக்கு இதுவரை எனது இரு சக்கர வாகனத்தில் எப்படியும் 40 முறைக்க மேல் போய் இருக்கிறேன் கிழக்கு கடற்க்கரை சாலையில் சத்தம் போட்டு பாடியபடி வாகனம் ஓட்ட எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
ஒடிய படம் ஓடாத படம் என்பது முக்கியம் அல்ல,
பாடல் முக்கியம் அந்த பாடல் எப்படி என்னை கவர்ந்தது ஏன் கவர்ந்தது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
அடஜாக்கி இந்த வரியைதான் குறிப்பிட்டு சொன்னானா? என்று நீங்கள் அந்த வரியை இன்னும் கவனத்துடன் கேட்பீர்கள். அதுவும் நான் காதல் வயப்பட்ட போது என்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றிய போது, தபால்காரன் தெய்வமாக ஆன போது, பாடல்கள் பரம சுகமாய் இருந்தது,
காதல் வயப்பட்டவன் கள்ளு குடித்தவன் போல் இருப்பான் அவனுக்கு பாடல்கள்தான் சோறு, அதுவும் காதல் பாடல்கள் கேட்டு அவன் வேறுஉலகத்தில் மிதப்பான்,. நான் ரசித்த அந்த போதை பாடல்களையும் உங்களுக்கு தருகிறேன்
என் பார்வையில் நான் மிகவும் ரசித்த பாடல்களை இங்கு எழுத போகிறேன் அப்படி ரசிக்க எந்த தளத்தில் வேண்டும் ஆனாலும் பயணிக்கலாம் அது டப்பாங்குத்து பாடல்களாக கூட இருக்கலாம் ரசிப்பு ஒன்றே நம் குறிக்கோள் அது சில நேரத்தில் இந்த பாடலுக்கு கூட ஒரு பதிவா? என்று வியக்கலாம் அது ரொம்ப அட்டு பாடல்களாகவும் இருக்கலாம்... உங்களுக்கு ஈர்பில்லாத பாடலாக கூட இருக்கலாம் நன்றாக இருந்தால் பின்னுட்டம் இட்டு வாழ்த்துங்கள்
சமுகத்தை பற்றி நாம் எப்போதாவது கவலை பட்டு இருக்கின்றோமா? பக்கத்து வீட்டுகாரன் பெயர் கூட கேட்டு வைத்துக்கொள்ள கூச்சபடுகின்றோம்,ஈழத்தில் நம் உறவுகள் கொத்துக்கொத்தாய் பலியாகும் போது நாம் இங்கு அறிக்கை போர் நடத்திக்கொண்டு இருக்கின்றோம்....
காதலனும் காதலியும் படுக்கை அறையில் இல்லற விஷயங்களை விட சமுக விஷயங்களுக்க முக்கியத்துவம் கொடுத்து இருவரும் பேசிக்கொள்வதான பாடல் அது பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை எடுத்துக்கொண்ட பாடல் அந்த படம் அழகன் பாடல் ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே...
மனதுக்கு பிடித்த பெண் எதிரில் இருக்கிறாள் அவளை அள்ளி அனைக்காமல் தலைவன் சொல்கிறான்.
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் , கன்னித்மிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தலாட்டு...
காதலி எதிரில் இருக்கும் போது கன்னித்தமிழை முன்னேற்ற சொல்கிறான் பாருங்கள்...
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாளு சுவருக்குள்ளே வாழ் நீ ஒரு கைதியா?இன்று கேட்டு விட்டு
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான் தாயை காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான் கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்....
சென்னைக்காரர்கள் எதிர்கால மனநிலையை எப்படி புட்டு வைத்து இருக்கிறார் பாருங்கள்
அடுத்தாக உலகம் எல்லாம் உண்னும் போது நாமும் சாப்பிட எண்னுவோம் உலகம் எல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
அது நம்ம தமிழனுக்க வரவே வராத விஷயம்....
யாலரும் ஊரென யாரு சொன்னது சொல்லடி..
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடமா? நினைச்சி பார்த்தோமா?
படிச்சத புருஞ்சி நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சி இந்த நாட்டுக்கு நாம் ஆச்சு..
பாருங்கள் எந்த இடத்திலும் அவன் நாட்டையும் மக்களையும் விட்டுக்கொடுக்கவேயில்லை அதனதலே இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
உங்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும் என்ற் நம்புகிறேன்... இவரை இந்த பாடலை கேட்காதவர்கள் இரவு பதினோறு மணிக்கு விளக்கு அனைத்து கேட்டுபாருங்கள் மரகதமணி இசையில் பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் 1991ல் அழகன் படத்தில் வந்தது இயக்கம் பாலச்சந்தர்
பொதுவாய் பெண்களுக்காக இந்த பகுதியை எழுதுகிறேன் ஏனென்றால் ஆண்களை வி்ட பெண்கள்தான் அதிகம் பாடல்களை ரசிக்கின்றார்கள் இன்னும் பாடல்கள் அடுத்த பதிவில்....
Subscribe to:
Post Comments (Atom)
\\காதல் வயப்பட்டவன் கள்ளு குடித்தவன் போல் இருப்பான் அவனுக்கு பாடல்கள்தான் சோறு, அதுவும் காதல் பாடல்கள் கேட்டு அவன் வேறுஉலகத்தில் மிதப்பான்\\
ReplyDeleteஅண்ணேன் டாப்பு ...
கொளுத்துங்கண்ணே.. கொளுத்துங்க..
ReplyDeleteநானும் ஒண்ணு எழுதலாம்னு நினைச்சிருந்தேன்.. நீங்க மொதல்ல எழுதுங்க.. பின்னாலேயே வரேன்..!
\\சமுக விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருவரும் பேசிக்கொள்வதான பாடல் \\
ReplyDeleteஅழகான பாடல் அழகன் பாடல்
\காதல் வயப்பட்டவன் கள்ளு குடித்தவன் போல் இருப்பான் அவனுக்கு பாடல்கள்தான் சோறு, அதுவும் காதல் பாடல்கள் கேட்டு அவன் வேறுஉலகத்தில் மிதப்பான்\\
ReplyDeleteஅண்ணேன் டாப்பு ...
thank you jamal thank you so much
கொளுத்துங்கண்ணே.. கொளுத்துங்க..
ReplyDeleteநானும் ஒண்ணு எழுதலாம்னு நினைச்சிருந்தேன்.. நீங்க மொதல்ல எழுதுங்க.. பின்னாலேயே வரேன்..!
vanganne welcome
கொளுத்துங்கண்ணே.. கொளுத்துங்க..
ReplyDeleteநானும் ஒண்ணு எழுதலாம்னு நினைச்சிருந்தேன்.. நீங்க மொதல்ல எழுதுங்க.. பின்னாலேயே வரேன்..!
yes jamal azhagan movie song all are good but perticularly this song was very nice that movie, and very nice line also
your
jackiesekar
நேத்து நான் பண்ணின அக்கபோரிலே, இன்னிக்கு என் முத்தழகு படத்தை மொத்தமா எடுத்துட்டீங்களா?
ReplyDeleteஇருங்க... இருங்க... போய் ஒரு கட்டிங்கை சாத்திட்டு வந்து வச்சிக்கிறேன்.
உங்க பதிவு நல்லா இருந்தது சாமியோ....
ReplyDeleteஅப்புறம் ஒரு சின்ன விஷயம், அந்த பாடல் வரிகளின் எழுத்து நிறத்தை கொஞ்சம் மாற்றி காட்டி இருந்தீங்கன்னா, என்னை மாதிரி மரமண்டுகளுக்கு பாட்டு எது? பதிவு எது என்று கொஞ்சம் தெளிவா இருக்கும் தலிவா....
வாழ்த்துகள் ஜாக்கி..
ReplyDeleteகலக்குங்க...
//பொதுவாய் பெண்களுக்காக இந்த பகுதியை எழுதுகிறேன் ஏனென்றால் ஆண்களை வி்ட பெண்கள்தான் அதிகம் பாடல்களை ரசிக்கின்றார்கள் இன்னும் பாடல்கள் அடுத்த பதிவில்....
ReplyDelete//
அப்படி எல்லாமில்ல நண்பா.. ஆண்களும்தான் பாட்டை ரசித்து கேட்கிறோம்.. இந்த பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. இன்னும் எழுதுங்க..
நேத்து நான் பண்ணின அக்கபோரிலே, இன்னிக்கு என் முத்தழகு படத்தை மொத்தமா எடுத்துட்டீங்களா?
ReplyDeleteஇருங்க... இருங்க... போய் ஒரு கட்டிங்கை சாத்திட்டு வந்து வச்சிக்கிறேன்.//
எனக்கே கொஞ்சம் மாற்றம் வேனும்முன்னு இலியான படத்தை போட்டேன்
அப்புறம் ஒரு சின்ன விஷயம், அந்த பாடல் வரிகளின் எழுத்து நிறத்தை கொஞ்சம் மாற்றி காட்டி இருந்தீங்கன்னா, என்னை மாதிரி மரமண்டுகளுக்கு பாட்டு எது? பதிவு எது என்று கொஞ்சம் தெளிவா இருக்கும் தலிவா/=/
ReplyDeleteநன்றி நைனா
தங்கள் சொல்லுவத போல் பாடல் வரிகளுக்கு கலர் கொடுக்கிறேன்
நன்றி வண்ணத்து பூச்சியார்
ReplyDelete//
ReplyDeleteகாதல் வயப்பட்டவன் கள்ளு குடித்தவன் போல் இருப்பான் அவனுக்கு பாடல்கள்தான் சோறு, அதுவும் காதல் பாடல்கள் கேட்டு அவன் வேறுஉலகத்தில் மிதப்பான்
//
ஆமாங்ணா ஆமாம்!
~ ~ ~ ~ ~ ~
நீங்க சொல்லியிருக்க இந்த பாட்டு எனக்கும் பிடிக்கும்.
அப்படி எல்லாமில்ல நண்பா.. ஆண்களும்தான் பாட்டை ரசித்து கேட்கிறோம்.. இந்த பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. இன்னும் எழுதுங்க..//
ReplyDeleteநன்றி பாணடியன் தங்கள் கருத்துக்கும் தொடர்ந்து பின்னுட்டம் இட்டு ஊக்குவிப்பதற்க்கும்
நன்றி மங்களுர் சிவா....காதல் போதை நம் ,ருவரும் அறியாததா என்ன?
ReplyDeleteஅழகன் திரைப்படமும் எல்லா பாடல்களும் எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். ஒருவருக்கு ஒருவர் தொலைபேசியில் பேசிக்கொள்ளும்போது வேறென்ன விசேஷம் என்றால் வீட்டில் ஒரு ஆஷ்டிரே வாங்கி வைத்திருக்கிறேன் என்போம். போட்டுப்பார்த்து போட்டுப்பார்த்து விசிடியே தேய்ந்திருந்தாலும் விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteNALLAIRUKKU
ReplyDelete