Ho gayi hai mohabbat tumse....நான் ரசித்த முதல் இந்தி ஆல்பம் சாங்...



ஆங்கிலமே அரைகுறை..
சரி எப்படியாவது இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று   நினைத்து பல முயற்சிகள் எடுத்தேன்.. எல்லாம்  தோல்வியில்தான் முடிந்தது... எங்கள் ஊர்கூத்தப்பாக்கத்தில் உள்ள ஒரு ஹிந்தி மிஸ் இடம் பாடம் படிக்க போனேன்.. அவர்களின் இரண்டு பெண்கள் அழகாக இருந்த காரணத்தால் அம் அஹ என்பதோடு இந்தி என்னிடத்தில்  நொண்டி அடிக்க  ஆரம்பித்து விட்டது..


ஆனால் விடாமல் பல இடங்களில் இந்தி கற்க வேண்டும் என்ற  வெறி மட்டும் என்னுள்  இன்னும்  கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கின்றது..திமுக தலைவர் கலைஞரே தடுத்தாலும்  அது எரியும்.....


1990 களின் எலக்ட்ரானிக் மீடியா ஆதிக்கம் மெல்ல இந்தியாவில் எட்டி பார்த்த போது பரவலாக டிவிக்கள் எல்லோருடைய வீடுகளிலும் ஓடத்துவங்கி இருந்த காலம் அது... பலர் டிடியில் ஒளிபரப்பாகும் சீரியல் பார்த்து இந்தி  கற்றுக்கொண்டார்கள்.. என் வீட்டம்மாவும்  அவள் நண்பியும் டீவி பார்த்துதான் இந்தி  பேச கற்றுகொண்டார்கள்.. அவர்கள் பேசி பேசியே  இந்தி பேச வளர்த்து கொண்டார்கள்.. என்ன கொடுமை இந்த அறிவு  நம்மிடத்தில் எப்படி இல்லாமல் போயிற்று என்று நானும் முயற்சித்து பார்த்தேன் முடியலை...


எனக்கு தெரிந்து கிரிக்கெட் மழையால்  நின்றால் மோசம்  ஜானுக்கரி என்றால்  மழை வந்து விட்டது என்று  பிரந்து கொண்டு தலையில் கை  வைத்துக்கொண்டு  உட்காந்து விடும் அளவுக்கு  என்னுள்   இந்தி வேர் விட்டு இருந்தது..


இந்தியில் வெகு பரிச்சையமான வாக்கியங்கள் என்னை பொறுத்தவரை இரண்டு நன்றாக தெரியும். அடிக்கடி டிடி பார்த்து ,.நகி கிலாஜாராங்ஹே... என்ற  வார்த்தையும்,  யாத்திரிகன் கரிபியா பேம்பூ என்று சென்ட்ரல் முழுவதும் ஒரு பெண் வாய் ஓயாமல் கத்திக்கொண்டு இருப்பாள்  அதனால் அந்த இந்தி வாக்கியங்கள் எனக்கு மிக பரிச்சயம்.


ஆனால் இந்தி  மீது இருந்த  காதல்  மட்டும் குறைந்தபாடில்லை... என்  உயிர் நண்பன் சுரேஷ் என்கின்ற சூரி ஒரு சேட்டு பையன்... அவன் இந்தி பேசும் போது எல்லாம் எனக்கு வயிறு எரியும்..ஆனாலும் தொடாந்து முயற்சித்தேன் முடியவில்லை.
  
தேவ் ஆனந் ராஜ்கப்பூர் படங்கள் எல்லாம் தலையெழுத்தே என்று அந்த கால டிடியில் பாத்து தொலைத்தாலும் இந்தி வந்த பாடில்லை..அந்த கால  ஷோலைவே  எங்கள் ஊர் முருகாலாயா தியேட்டரில் போட்டார்கள்.. மெகபூ பா மெக பூபா பாட்டு மனிதில் நின்றதோடு சரி..

 சரி தியேட்டரில் போய் பார்த்து தொலைப்போம்  என்று பாசிகர், தர் போன்ற படங்களை பார்த்தாலும்  இந்தியை விட எனக்கு காஜலும், ஜூலி சாவ்லாவும் என் கு...        (ச்சே  அபச்சாரம் அபச்சாரம்  பசங்க கிட்ட பேசறது நினைப்புல  ஒரு புலோவுல வந்துடுச்சி..) என்  நெஞ்சில் ஏறி மிதித்த காரணத்தால் இந்தி எனக்கு சாத்தியபடாமலே போயிற்று...


ஆனாலும் என் விடா முயற்சி காரணமாக இந்தி எனக்கு எழுத படிக்க  தெரியும் ... அனால் அர்த்தம் தெரியாது...


1990 களில் காஸ் சிஸ்டம், மயிறு சிஸ்டம் என்று எந்த  வரையறையும்  இல்லாமல்  கேபிள் டிவி  கோலோச்சிக்கொண்டு இருந்த போது.. எம்டிவியிலும், வி டிவியிலும் இந்த பாடல் வெகு பிரபலம்..


Ho gayi hai mohabbat tumse..... நான் ரசித்த முதல் இந்தி ஆல்பம் இது என்றால் அது மிகையில்லை... இந்தி புரியாவிட்டாலும் 1994களில் இந்த பாடலை மிக சத்தமாக சைக்கிளில்  செல்லும் போது பாடிச்செல்லுவேன்.


எனக்கு இந்த பாடலை எனக்கு மிகவும் பிடிக்க காரணம் ..  இந்த ஆல்பத்தின்  போட்டோகிராபி மற்றும் கேரளா பேக் வாட்டர்  லொக்கேஷன்..  இது ஒரு காரணம் என்றால்..  இந்த ஆல்பத்தில் இருக்கும் அந்த காதல் கியூட்நஸ்....


 அழகான பெண் கேரள பேக் வாட்டரில் குளித்துக்கொண்டு இருக்கும் போது....முதலில் நாயகன்.. கண் தெரியாதவன் போல அந்த பெண்ணை ஏமாற்றி விட்டு, அதன் பிறகு அவனுக்கு கண் தெரியும் என்று அவளுக்கு தெரிந்து அவனை அவள் பார்க்க  ஆரம்பிக்கும் போது, ஒரு சின்னக்குழந்தையின் வேண்டுகோளை நிறைவேற்ற... காகித கப்பலை எடுக்க  கோட்  சூட் போட்டு குட்டை தண்ணியில் இறங்கி , காகித கப்பலை எடுத்துக்கொடுத்து அந்த  சின்ன பெண்ணின் சோகத்தை போக்குவதும்....  அதை பார்த்த  பெண் அவன்  மேல் காதல் வயப்படுவதும்.. அவன் உடற்கட்டை பார்த்து  அதிசியத்து கண்  தெரியாதவள் போல நடிக்க.... அவன்  சந்தோஷமடைவது போல இந்த ஆல்பம் முடிந்து போகும்.....


முக்கியமாக சின்ன பிள்ளைக்காக கோட்  சூட் உடன் காகித கப்பல் எடுக்க  அவன் குட்டையில் இறங்கும் முன் ஏதோ போர்ட் மீட்டிங் செல்வது போல தன்னை தயார் படித்திக்கொண்டு செல்வது மிக அழகு...

 மேட்டர் பட டைரக்டர் சாலமன் கிங் எடுத்த தி ரெட் ஷூ டைரி ஹீரோயினுக்கு லைட்டாக ஒன்றரை கண் இருக்கும்.... அது  போலவே இந்த  ஆல்பத்து பெண்ணும் இருந்து  தொலைத்த காரணத்தால்  இந்த பெண்ணை நான் அதிகம் நேசிக்க ஒரு காரணம்....

இன்பிரியாரிட்டி காம்ளக்ஸ் அதிகம் இருந்த காலத்தில் என் கனவில் காதல் நாயகியாக சில காலம் இந்த பெண் வந்து சென்றாள்...

இந்த பாடல் இன்றைக்கு கேட்டாலும் சொக்கி போகின்றேன்...

 நீங்களும் கேட்டு பாருங்கள்..




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

குறிப்பு..
இந்த பாடலில் நடித்த நாயகன் நகுல் கப்பூர் ரோட் ஆக்சிடென்ட்டில் இறந்து விட்டதாக பீதியை கிளப்பி சிலர் குளிர் காய்ந்தார்கள்..வான்கோவரில் யோகா டீச்சராக இருப்பதாக சில வலைதளங்கள் தெரிவிக்கின்றன...


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

  1. ஆப் கா யே போஸ்ட் பகுத் அச்சா ஹை ! !

    ஹிந்தி சீக்னா பகுத் படிபாத் நஹி ஹை !! கோசிஸ் கரியே ! !

    ReplyDelete
  2. Hello Jackie Anna,

    This pop song is 1 of my all time favorites..

    Entire song will go in slow motion, kind of green shade, shot in Kerala backwaters or in Goa side, presence of water in every shot (Eeram movie predecessor)..

    And this song was kind of big craze for the girls of that era :-)

    Thanks for the post.

    Sudharsan

    ReplyDelete
  3. Hello Jackie Anna,

    This song is 1 of my all time favorites.

    If you notice, entire song will be in slow motion, kind of green shade, presence of water in every shot (Eeram movie predecessor), brilliant cinematography..

    This particular song was hot-shot favorite for many girls of 90's era.. Even though they could not make out the meaning of the song (We are all Tamilians and no Hindi !!!), this song was mega hit among the older era girls..



    Sudharsan

    ReplyDelete
  4. thamizh naattil vivitha barathiyil hindi paattu kettavanga ellaam ilayaraja fieldukku vanthappuram hindi paattu pakkame povathillai. inge bombayil,appave ilayarajavin tamil songs super hit..arththam puriyaamale....tune appadi....

    ReplyDelete
  5. அது என்ன ? "நான் ரசித்த முதல் இந்தி ஆல்பம் சாங்... "...
    "நாம் ரசித்த" அப்டின்னு மாத்தி எழுதுங்க..

    தல.. நான் என்றால் உதடுகள் ஒட்டாது..
    நாம் என்றால் உதடுகள் ஓட்டும்..- தலைவர் கலைஞர் சொன்னது..

    உங்கள் எழுத்துக்கள் மூலம்.. இன்னொரு உலகம்..காண்கிறோம்.
    *---------------*
    "சரி தியேட்டரில் போய் பார்த்து தொலைப்போம் என்று பாசிகர், தர் போன்ற படங்களை பார்த்தாலும் இந்தியை விட எனக்கு காஜலும், ஜூலி சாவ்லாவும் என் கு... (ச்சே அபச்சாரம் அபச்சாரம் பசங்க கிட்ட பேசறது நினைப்புல ஒரு புலோவுல வந்துடுச்சி..) என் நெஞ்சில் ஏறி மிதித்த காரணத்தால் இந்தி எனக்கு சாத்தியபடாமலே போயிற்று..."
    ஹீ ஹீ.. நம்மளையும் சேத்து..

    *---------------*

    எங்களை..நீங்கள் பிரதிபலிப்பதால்...நாங்கள் வலையில் எழுதவில்லை என்று..ஒரு நாளும் வருத்தப்பட்டதே இல்லை.

    *--------------*

    என்றும் அன்புடன்..

    ரா.நல்லதம்பி.










    ReplyDelete
  6. க்யா பாத் கஹீ ஜாக்கி-ஜீ முஜ்பீ ஹிந்தி-ஸே ப்யார்-த்தா ஏக் கரஸ்பாண்ட் கோர்ஸ்-மே லிக்னே பட்னே ஸிகா. லேகின் பாத் கேலியே சோடா சோடா ஆனா ரஹேங். யே தோ அச்சீ ஹை.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner