கடலூர் வேல்முருகன் தியேட்டர்....
பதினொன்றரை மணி காலைகாட்சிக்கு வெயிலில் இரண்டு ரூபாய்
டிக்கெட்டுக்கு கேட் முன் தவம் கிடந்த
கழுத்து வியர்வை கசகசக்க அந்த நீண்ட சுரங்க பாதை போன்ற கவுண்டரில்
பயணித்து டிக்கெட் எடுத்து முத டிக்கெட்
பத்து ரூபாய் தாளை நீட்டினா என்ன செய்யறது ? என்று தலையில் அடித்துக்கொண்டு
முனறிக்கொண்டே சில்லரை கொடுக்க டிக்கெட் வாங்கி வாயில் நிற்பவரிடம் டிக்கெட் கிழித்து உள்ளே செல்லும்
முன் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு தியேட்டர் உள்ளே சென்றால்......
பினாயில் மனம் கமழும்
சரியான சீட் தேடி
உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் சைடில் இருக்கும் மின் விசிறிகள் சால தொடங்கும்....
வெண்திரை அவுத்து போட்ட படி இருக்கும் ஒரு காலத்தில்
ஸ்கிரின் வளைவான மஞ்சள் ஸ்கிரின் ஆங்கில இசைக்கு ஏற்ற படி கொஞ்சம் கொஞ்சமாக தூக்கும்.... அது ரிப்பேர் ஆனதும் அப்படியே உடைப்பில் போட்டு விட்டார்கள்.
வெண் திரைக்கு பின்னே இருக்கும் ஸ்பீக்கருக்கு மின்சாரம்
கொடுக்கப்பட்டவுடன் கரிக் பிரிக் என்று சத்தம் எழுப்பி தன் இருப்பை
காட்டிக்கொள்ளும்...
டப் டிப் என்று சத்தம் போட்டு மிக மெதுவாக ஒரு பாடல் வரும் பாருங்கள்...
அந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..... சரியாக பதினோன்னே முக்காவுக்கு அந்த பாடலை போடுவார்கள்...
அந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..... சரியாக பதினோன்னே முக்காவுக்கு அந்த பாடலை போடுவார்கள்...
உள்ளம் உருகுதைய்யா
முருகா உன்னடி காண்கையிலே....
இதே பாடலை கோவில் திருவிழாக்களில் நிறைய முறை கேட்டாலும் ...
மின் விசிறி சுற்றி
வரும் காற்றில், வியர்வை அடங்கி. பெனாயில் வாசத்தோடு ஒரு பெரிய அரங்கில்
இந்த பாடலை கேட்கும் போது...பக்தி மனம் கமழும்.
முருகனை டிஎம்எஸ் கெஞ்சும் போது அதுவும் தியேட்டரில் கொடுத்த இன்பத்தை எந்த கோவிலிலும் நான்
உணர்ந்ததில்லை....
கடலூர் வேல்முருகன் தியேட்டரில் மட்டும்தான் இந்த பாடல் போடுவார்கள்..
அதனால் காலைகாட்சிக்கு சென்று பார்த்த திரைப்படங்கள் ஏராளம்.....
இந்த பாடலின் கடைசியில் டிஎம்எஸ் அப்படியே முருகனுக்காக உருகுவார்....
பக்திக்கு மட்டுமல்ல....
அரை நூற்றாண்டு தமிழக அரசியல் மாற்றத்தில் பெரும்பங்கு வகித்தது டிஎம்எஸ்குரல் என்றால் அது மிகையில்லை... எம்ஜிஆர் தன் கொள்கைகளை தன் வெண்கல குரலால் பட்டி தொட்டி எங்கும் பரவ செய்தவர் டிஎம்எஸ்.
டிஎம்எஸ் உள்ளம் உருகி முருகனடி காணட்டும்...
அஞ்சலிகள்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
உங்களோடு சேர்ந்து நானும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDeleteEthani thadavai intha padalai kettalum miga inimiyaga irrukkum. Avaraukku enathu mouna anjali.
ReplyDeleteungalodu sernthu naanum en irangalai therivithu kolgiren. annarathu aanma shanthi adayatum
ReplyDeleteதமிழிசையுலகம் மறக்க முடியாத பெயர்.
ReplyDeleteகோடானுகோடி இதயங்களை அமைதிப்படுத்திய ,அவர் ஆத்மா அமைதியுறட்டும்
காற்றுள்ள வரை அவரின் கானங்களும் நம்மோடு இருக்கும்.
ReplyDeletewhile reading this post,I think , miss U lot. You know what i come to say.Thank u for sharing your past years memories.
ReplyDelete