வாகனத்தில் செல்லும் போது சத்தமாக
உற்சாகமாக பாடி செல்வது என் வழக்கம்..
. வீட்டில் நான் பாடினால் அப்பா கத்ததே
என்று யாழினி நக்கல் விடும் காரணத்தால் அதிகம்
வீட்டில் கத்துவது இல்லை.... ச்சே பாடுவது இல்லை... அதனால் வாகன இரைச்சல்ளுக்கு மத்தியில் என் குரலும் தேய்ந்து
விடுவதால் இந்த ஐடியா... இது இன்று நேற்று வந்த பழக்கம் அல்ல..சின்ன வயதில் சைக்கிளில் போகும் போது.... இப்போது பைக்.... கார்....
என்று அந்த பழக்கம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.....
நான் எப்போது எல்லாம் சோர்ந்து போய் இருக்கின்றேனோ... அப்போது எல்லாம் பாடல்கள் முனு முனுத்துதான் என்னை
நான் ரிப்ரெஷ் செய்துக்கொள்வேன்... என்னை உற்சாகம் கொள்ள செய்வது எல்லாம் பாடல்கள்தான்....
இந்த வருடத்தோட முதல் முனு முனுப்பு... அலெக்ஸ் பாண்டியன்...
அதுல பேட் பாய் சாங்... எல்லோருக்கும் வணக்கம்...அப்புறம்
சமர் படத்துல அழகோ அழகு அவள்
கண்ணழகு சாங்.. அதுல திரிஷாவை விட சுனைனாவோட கியூட் சிரிப்புக்கு பார்க்கலாம்....
அப்புறம் கடல் படம்...
நெஞ்சுக்குள்ளே பாடல் பட்டைய கிளப்ப அந்த பாடலைநானும் முனுமுனுத்தேன்..
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நான் முனு முனுத்த
பாடல் என்றாலும்... எப்பயுமே ரொம்ப பாஸ்ட் பீட் சாங்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்....
அந்த வகையில் ஏலே கிச்சா... இந்த வருடத்தின் முதல் பாடல் என்று சொல்லாம்... அதே படத்தில் முங்கில்
தோட்டம்.... சித்திரையே நிலா போன்ற
பாடல்களை சொல்லலாம்...
பட் திரும்ப திரும்ப கேட்ட பார்த்த பாடல் என்றால் விஸ்வரூபம் படத்தில்
வந்த உன்னை காணாத பாடல்.... அதுல முக்கியமா
சில்லவுட்டுல கமல் ஆடிக்கிட்டு அப்படியே வெளிச்சத்துக்கு
வரும் இன்ட்ரோ சான்சே இல்லை....
அப்புறம் அந்த குட்டி
குட்டி கியூட் பிகர்ஸ்.... சின்ன பொட்டோட லேட்டா வந்து தப்பா ஸ்டெப் போடும் ஆண்ட்ரியா....கியூட்..
அதே போல நடன அசைவுகள்... சிக்கன் வெந்துடுச்சான்னு...?? சொல்லிட்டு சாப்பிட்டு பார்த்துட்டு
.... கெட்டுது போ என்று சொல்லி விட்டு அவர்களை கண்ணன் விரட்டுவது போல விரட்டுவது...
கமல் வயசுல இவ்வளவு ஸ்லிம்மா.... கண்ணன் பெண்களை
விரட்டுவது போல என்னால் விரட்ட முடியுமா? என்பதுதான் என் வயிற்று எரிச்சலுக்கு முக்கிய காரணம்.
அதே போல துப்பாக்கி
எந்தன் தோழனே பாட்டோட மியூசிக் ரொம்பவும் புடிக்கும் அந்த பாட்டையும் நிறைய வாட்டி கேட்டு இருக்கேன்.
அதுக்கப்புறம் சூது கவ்வும் படம்தான்... அதுல மாமா டவுசர்
கழண்டுச்சே பாட்டு பட்டைய கிளம்பிச்சி....ஆனா எனக்கு காசு பணம் துட்டு மணி மணி பாட்டு ஆடுன
நாலு பாம்பே பிகர்ஸ்.... இந்த வருஷ இறுதியிலும் கண்ணுலே இருக்காங்கன்னா பார்த்துக்கோங்களேன். முக்கியமா சென்டர்ல ஆடின அந்த பாம்பே பிகர்.
எதிர் நீச்சல்.... பூமி என்ன சுத்துதே யாழினிக்கு ரொம்ப பிடிச்ச
பாட்டு... அதே படத்துல நேற்று வரை டிடிக்கு எதிரே இரண்டு அடி கேப்பு
கொடுத்து காம்பயர் பண்ண பையன் சிவா கார்த்தி யும் பிரியா ஆனந்தும் ரொம்ப நெருக்கமா தீவு பாட்டுல காட்டிய
நெருக்கத்தை பார்த்தும் லைட்டா ஸ்டமக் பர்க் ஆச்சி...அதே போல தனுஷ் ,நயன், சிவா ஆடின அந்த குத்து பாட்டு பார்க்க நல்லா இருந்திச்சி...
கபாலம் கலங்க குடிச்சிட்டு அந்த பாட்டுக்கு ஆடினா நல்லா இருக்கும்... ஆனா யார் கூட
ஆடறது....???
என் எச் 4 படத்துல யாரோ
இவன.... யாரோ இவன் நல்ல மெலடி.. நிறைய முறை அந்த படம் வந்த புதுசுல முனு முனுக்க
வச்ச சாங்... படத்துல விஷுவல்ஸ் நல்லா இருக்கும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்..
சரியான மெலடி... சைந்தவி குரல் சொக்க வைக்கும்... அதுலதான் பிரகாஷ் புள்ளை சொக்கி போச்சி போல... அப்படியா குரல் கடவுள் வரம். 2013 ஆம் வருடத்தோட பெஸ்ட் லவ் சாங் அப்படின்னு சொல்லலாம்.... முக்கியமா கேர்ள் பாயிண்ட் ஆப்யூவுல வரும் வரிகள்... வாவ்...
நேரம் படத்துல காதல்
என்னுள்ள வந்த நேரம் அறியாமல் பாட்டும் விஷுவலும்
ரொம்ப நல்லா இருந்துச்சி... அந்த பாட்டுல
நஸ்ரியா கூட பேசிக்கிட்டு இருக்கும் போது ஒரு பொண்ணு போக... அந்த பொண்ணு மூஞ்சே
சரியில்லைன்னு சொல்ல..... அதுக்கு நஸ்ரியா மூஞ்சா
பார்த்தன்னு?? படால்ன்னு போட்டு உடைக்கும் காட்சியை
பார்க்கும் போது... நாங்க லவ் பண்ணும் போது யாரோ கூடவே நின்னு நோட்ஸ் எடுத்துக்கிட்டு
போய் படம் புடிச்சா போல இருக்கும்... இந்த பாட்டு என்னோட பேவரைட்...
அதனால்
இந்த பாட்டும் இந்த படத்து வரும் பிஸ்தா
பாட்டும் எனக்கு ரொம்ப புடிக்கும்...
குட்டிப்புலி படத்துல
அக்கா மக சாங்குல சசிக்குமார் செய்யற ரஜினி அலப்பரையை ரசிக்கலாம்.. தீயா வேலை செய்யனும் குமாரு படத்துல பாட்டை கேக்கறதை விட
ஹன்சிகா வரும் பிரேமை எல்லாம் வச்சக்கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்கலாம்...
சிங்கம் டூ... சிங்கம் டான்ஸ்... காரணம் யாழினிக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு....
மரியான் படத்துல வரும் நெஞ்சே எழு என்னோல் அதிகம் பைக்கில் போகும் போது பாடிக்கொண்டு போன பாடல் என்று சொல்லலாம்.... உணர்ச்சி பெருக்கான பாடல் அது... அருமையான குரலில் அந்த பாடலுக்கு இன்னும் பலம் சேர்த்து இருப்பார்....
அப்புறம் 555 பைவ்...
இதுல ‘ விழியிலே பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு லோ பட்ஜெட் படம் பட் இருந்தாலும் அதுக்கு ஏற்ற துள்ளலான ஆட்டம்..
எடிட்டர் பருப்பு எறைய விட்டு வேலை வாங்கி இருப்பார் டைரக்டர்... எடிட்டரின் கடும்
உழைப்புக்காக இந்த பாட்டு பிடிக்கும். அதே போல அந்த பொண்ணும்.. நல்ல எனர்ஜிக்காக ஆடி இருக்கும்....
ஆதலால் காதல் செய்வீர் படத்துல மெல்ல சிரித்தால்
காதல்தான்.... பாட்டு விஷுவலாகவும் கேட்கவும் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு ....நிறைய முறை
பைக்கில் போகும் போது முனு முனுத்த பாடல் என்று சொல்லாம்
பொன் மாலை பொழுது படத்துல வரும் இரவுகளில் சாங் நல்ல மெலோடி
கேட்கவும் பார்க்கவும் நல்லவே இருக்கும்...
தங்க மீன்கள் படத்துல ஆனந்த யாழினை மீட்டுகின்றாய் கேட்டு
ரசிக்க நல்ல பாடல்.... நல்ல லோக்கேஷன்...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல ஊதா கலரு ரிப்பன்..
யாழினியோட பேவரைட்... சாங்.ஒரு சில வாட்டி
கேட்டு இருக்கேன்..
மூடர் கூடம் படத்துல சென்ட்ராயனோட மைக்கேல் ஜாக்சன் சாங்...
இந்த வருஷத்துல படத்துல
வந்த எல்லா பாட்டும்பிடிச்சி திரும்ப திரும்ப கேட்டேன் அப்படின்னா அது ராஜாராணி...
முக்கிய சில்லென மழைத்துளி பாட்டு செமை...
முக்கியமா பிக்சரசேஷன் செமையா இருந்திச்சி....கலங்கரை
விளக்கம் ஷாட் அப்படின்னு சென்னைய நிறைய ரசிச்சேன். அதே போல ஓட ஓட சாங்....
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரவில் இரண்டு பாட்டு பிரே பண்ணுங்க சார்.. பாட்டும்...மொத சாங்கு என் வீட்டுல அவ இருந்தாலே.... ராஜு மாஸ்ட்டரோட கிளிஷே ஸ்டெப்ன்னாலும் ரசிக்க வச்சாங்க...
பாண்டிய நாட்டு படத்துல இரண்டு பாட்டு ரொம்ப பிடிச்சிது... பைவ் பைவ் பாட்டு மற்றும் ஒத்தக்கடை ஒத்தக்கடை ரெண்டு பாட்டும் நல்லா இருந்திச்சி...
ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்துல உன்னை பார்த்த நேரம் சாங் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்.... அந்த பாட்டுதான் என் மோபைல் ரிங்டோன்..
நல்ல மேக்கிங்..
பிரியாணி படத்து வரும் திரும்பி வா பாட்டு நல்ல எனர்ஜெட்டிக் சாங்.... இந்த வருட இறுதியில்எனக்கு ரொம்ப பிடிச்ச மேகிங் வீடியோ இதுன்னு கூட சொல்லாம்...
என்றென்னும் புன்னகை.... ஹாரிஸ் கேட்ட பாட்டு போல போட்டு இருக்கார்.,. கடல் நான்தான் பாட்டு முனுமனுக்க வைத்தாலும் விஷுவலில் ஆண்டிரியாவுக்கு செயற்கையா எப்படி வேர்க்க வச்சி இருக்காங்கன்னு பார்க்கலாம்.....
==================
இந்தியில ஆஷிக் 2 படத்துல தும்பிஹோ... பாட்டு உயிரை கொடுத்து
அப்படியே உருகி பாடி இருப்பான் ... இந்த வருஷத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச இந்தி பாட்டு....
அதே போல
eh Jawaani Hai Deewani படத்துல வரும் பாடல்கள்.. முக்கியமா படகோனுக்காக கண்டிப்பா
பார்க்கலாம்.... ரிச்சான பிரேம்ஸ் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்... அதே போல தனுஷ் நடித்த
ரஞ்சனா படத்தின் பாடல்கள்....
=============
தெலுங்கு....
சீதம்மா வாகிட்லோ படத்தின் எல்லா பாடல்களும்.. முக்கியமா
அந்த கல்யாண சாங் அதுக்கான ஷாட் மேக்கிங்ங
ரொம்ப நல்லா இருக்கும்... போன வருஷம் ரிலிஸ் ஆனா எல்லா பேமஸ்தெலுங்கு பாட்ல்கள் பிடித்தாலும் ரொம்ப பிடித்த பாடல்கள் சீதம்மா
வாகிட்லோ பாட்டுதான்..
================
மலையாளம்..
அன்னயும் ரசுலும்... எல்லா பாட்டும்... கண்டு ரெண்டு கண்ணு சாங்... இன்னம் எழுத நிறைய இருந்தாலும் வேலை இருக்கும் காரணத்தால் இத்தோடு முடித்து
விடை பெறுகின்றேன்..
அப்படியே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டையும் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி.....
இது என் ரசனை மட்டுமே.... இன்னும் நிறைய பாடல்கள் நல்ல பாடல்கள் இருக்கலாம்,.. நான் பார்த்த கேட்ட ரசித்த பாடல்களை மட்டுமே பகிர்ந்து கொண்டு இருக்கின்றேன்... நன்றி.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
===================
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
super collection of songs
ReplyDeleteஅண்ணே பாலகுமராவில் "ஏன் என்றால் உனக்கு பிறந்த நாள்" பாட்டையும் சேத்துகொங்க
ReplyDeleteரசனை மிகுந்த தொகுப்பு .
ReplyDelete