இன்னைக்கு எத்தனை விதமான பாடல்களை வேண்டுமானாலும் நான் கேட்கலாம்.. ரசிக்கலாம்.
.ஆனா முத முதலா எந்த பாட்டை நீங்க ரசிச்சிங்க என்று கேட்டால் ? சில பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. எங்கள் ஊரில் புனலில் பாடலை கத்த விடுவார்கள்.. திருமணம், காது குத்தி என்று எந்த விசேஷமாக இருந்தாலும் எதாவது ஒரு பாடல் ஒலித்துக்கொண்டு இருக்கும்...
கிராம போனில் ஓடும் ரிக்கார்டுகளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருப்போம்.. சிலநேரங்களில் பாடிய வரிகளே திரும்ப திரும்ப வரும் போது கொல் என்று சிரித்தபடி ரெக்கார்ட் போடுபவரிடம் சென்று முறையிடுவோம்.. கொடு விழுந்த ரிக்கார்ட் என்று கத்துவோம்.. இன்று இந்த வார்த்தை மற்றும் வாக்கிய பிரயோகம் இல்லைவே இல்லை..
முதன் முறையாக அந்த பாடலை கண்ணா பின்னாவென்று ரசிக்க ஆரம்பிதேன்.. ஸ்லோ பீட் பாடல்களை விட ஸ்பீட் பாடல்களை எனக்கு பிடிக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டேன்.
அதே போல வருடத்துக்கு ஒரு படம் தான் அழைத்து செல்லுவார்கள்.. பெரிய ஐஏஎஸ் எக்சாம் படிக்க வைக்கறது போல.. புள்ளைங்க படிப்பு பாழகிடுமாம் என்று நொண்டி சாக்கு சொல்லி கடுப்பேத்துவாய்ங்க...
இப்ப இருக்கறது போல எம்பிதிரி,ஐபோன் ,ஐபேட் ன்னு எந்த மயிறும் கிடையாது... ரேடியோவை கட்டிக்கிட்டு மாரடிக்கனும்.. சரி ரேடியோவுலயாவது புது பாட்டு போடுவானுங்களான்னு பார்த்தா அதுலேயும் பழைய பாட்டா போட்டு உயிரை எடுப்பானுங்க.. அப்படி ஒரு கால கட்டத்துல அந்த பாட்டை வெறித்தனமா ரசிக்க ஆரம்பித்தேன்..
1983ல் வெளியான அந்த பாடலை விழுப்புரத்தில்உள்ள அமைச்சார் கோவிலில் ஒரு பேங்க் மேனேஜர் வீட்டில் பேனாசோனிக் பெரிய டெப்ரிக்கார்டரில் கேட்டேன்.. அவர்கள் எப்போது அந்த பாட்டை போடுவார்கள் என்று தேவுடு காத்து இருக்கின்றேன்...
ரொம்ப நாளைக்கு ஜாஹோ, ஜாஹோ, ஜாஹோ, ஜாஹோ என்று கத்தி தீர்த்து இருக்கின்றேன்.. ஆர்யூ ரெடி என்று அர்த்தம் புரியாமல் ஆங்கில வரியை பாட்டாக பாடி இருக்கின்றேன்.
பப்பிலஹரி மியுசிக் என்பது இப்போதான் தெரியும்... வருடத்துக்கு ஒரு முறை திருவிளையாடலும் வரஸ்வதி சபதமும் பார்க்க வைத்த என் அம்மாவுக்கு நாய், குதிரை என்று இந்த படத்தில் வந்த காரணத்தால் என்னை அழைத்து சென்று அந்த திரைப்படத்தை காட்டினார்கள். எட்டு வயது பையனான நான் தினமும் ஜாஹோ ஜாஹோ ஜாஹோ... என்று தொடர்ந்து கத்திக்கொண்டு இருந்த்தும் ஒரு காரணமாக இருந்து இருக்காலம்...
பெ.குழு: ஜாஹோ ஜாஹோ ஜாஹோ...
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: ஜாஹோ ஜாஹோ ஜாஹோ...
பெ: சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண்
பெ.குழு: ஜாஹோ ஜாஹோ ஜாஹோ...
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி.. ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
...
பெ: நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை
வா வா எந்தன் மன்னவா
கையணைக்க மெய்யணைக்க கட்டழகைத் தொட்டணைக்க
ஆனந்தம் நான் சொல்லவா
ஆ: நீ புது ரோஜா.. நான் யுவராஜா
நீயொரு பொன் மேகம்.. நான்தான் தொடும் செவ்வானம்
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: ஜாஹோ ஜாஹோ ஜாஹோ...
பெ: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: ஜாஹோ ஜாஹோ ஜாஹோ...
பெ: முன்னழகும் பின்னழகும் மூடி வைத்த பெண்ணழகும்
ராஜா நீ கொண்டாடத்தான்
முத்து நவரத்தினமும் முத்தமிடும் சித்திரமும்
எந்நாளும் உன்னோடுதான்
ஆ: நான் மயங்க.. தேன் வழங்க
நீ நெருங்க.. நாடகம் தொடங்காதோ
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: ஜாஹோ ஜாஹோ ஜாஹோ...
பெ: அரே.. உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: ஜாஹோ ஜாஹோ ஜாஹோ...
பெ: சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண்
பெ.குழு: ஜாஹோ ஜாஹோ ஜாஹோ...
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: ஜாஹோ ஜாஹோ ஜாஹோ......
1980'S, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், பப்பிலஹரி...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

//சங்கர் கணேஷ் மியுசிக் என்பது இப்போதான் தெரியும்... //
ReplyDeleteநண்பரே...இப்படத்தின் இசை அமைப்பாளர் பப்பிலஹரி.
செம பாட்டு :-)
ReplyDeleteதுள்ளவைக்கும் பாட்டுதான்! பகிர்வு அருமை!
ReplyDeletenice post .. .
ReplyDeleteஇந்த படத்தில் சுஹாசினி பாடுவதாய் வரும் அண்ணன் சென்டிமென்ட் பாட்டும் நன்றாக இருக்கும்! (ஆசை நெஞ்சே நீ பாடு, அண்ணன் வந்தான் தாய் வீடு!). இந்த படத்தை 90-களில் தியேட்டரில் (புத்தம் புது பிரிண்ட்!) போய் பார்த்து நொந்துவிட்டேன்! ஆனாலும் ரஜினியின் ஸ்டைல் நன்றாக இருக்கும்!
ReplyDeleteputhu pathivu nandrga ullathu jaki anne.
ReplyDeleteputhusu,puthusa pathiva poottu thakkuringa annee...
ReplyDeleteந்த படத்தில் சுஹாசினி பாடுவதாய் வரும் அண்ணன் சென்டிமென்ட் பாட்டும் நன்றாக இருக்கும்! (ஆசை நெஞ்சே நீ பாடு, அண்ணன் வந்தான் தாய் வீடு!).
ReplyDeletegood song:) I remember the 'are u ready' thing. I stil sing those lines but never knew the song name:) Thanks for sharing:)
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=hFqYGjY2fWk&feature=relmfu
ReplyDeleteநல்ல பாடல் பகிர்வு.
ReplyDelete