பொதுவாக வயது முதிர்ந்தவனின் காதலையும் காமத்தையும் ஊடலையும்
தமிழ் சினிமா புறந்தள்ளி இருக்கின்றது...
50 வயதுக்கு மேல் கிருஷ்ணா ராமான்னு கிடைக்க
வேண்டியதுதானே என்ற பொதுபுத்திதான் நம்முள் வியாபித்து இருக்கின்றது......
முதல் மரியாதை படத்தில்
சிவாஜியின் காதலையும் நேசத்தையும் கொஞ்சமே
கொஞ்சம் தொட்டு செல்லுவார்கள்...
கணவன் கை கழுவ.... மனைவி கை துடைக்க துண்டு கொடுக்கவும்... மனைவிக்கு கால்
பிடித்தும் அளவில்தான் தமிழ் சினிமா பதிவு செய்திருக்கின்றது.. ஆனால் சமீபத்தில் பண்ணையாரும்
பத்மினியும் படத்தை பார்த்தேன்... அதில் ஜெயப்பிரகாஷ் துளசி ஜோடியின் அட்டாகசமான உடல்
மொழி மற்றும் நடிப்பை பார்த்து அசந்து போனேன்....
ஏற்கனவே ஆதலால் காதல்
செய்வீர் திரைப்படத்தில் மிக இயல்பாக துளசி நடிக்கின்றார் என்று எழுதி இருந்தேன்...
மகாநதி படத்தில் ஹனிபாவோடு காரில் வந்து கமலுக்கு
பீடா மடித்து கொடுத்து கவிழ்ப்பாரே அதே கேரக்டர்தான்....
பட் இந்தனை வருடங்களில் அவர் அம்மா ஸ்தானத்தை அடைந்த அம்மா கேரக்டருக்கு செட் ஆனாலும்
அசத்துகின்றார்... மிக இயல்பு.... தற்போது அம்மாவேடத்தில் நடிக்கும் நடிகை சரண்யாவிடம் கூட ஒரு பதட்டத்துடன்
கூடிய நடிப்பு எட்டிப்பார்க்கும்... ஆனால் சும்மா சொல்லக்கூடாது... துளசி அவருடைய கேரக்டரை உணர்ந்து நடிக்கின்றார்...
.
தமிழ் சினிமா உலகம் துளசி என்ற நடிகையில் நடிப்பை நன்கு பயண்படுத்திக்கொள்ள
வேண்டும்...
பண்ணையாரும் பத்மினி படம் முழுக்க ஜெயப்பிரகாஷ் மற்றும்
துளசி அசத்தி இருக்கின்றார்கள்..
ஜெயப்பிரகாஷ் ஒரு சில படங்களில் பத்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 100
ரூபாய்க்கு நடிக்கின்றார் என்று பேச்சு இருக்கும் பட்... இந்த படத்தில் மனிதர்
பின்னி இருக்கின்றார்...
முக்கியமாக
உனக்காக பிறந்தேனே எனதழகா.. பிரியாம
இருப்பேனே பகல் இரவா... பாடல் கேட்கும் போதும் அதுக்கு உண்டான மான்டேஜ் காட்சிகளும் நெஞ்சை அள்ளுகின்றன..
ரொம்ப நாளைக்கு பிறகு
ராஜா இசையில் பாடல் கேட்டது போல, முக்கியமாக மெலடிக்கு திரும்ப கிடைத்து இருக்கும்
வரவேற்ப்பாகவே இந்த திரைப்படத்தின் பாடலை பார்க்கின்றேன்.
ஒரு ஷாட்... துளசி சமைச்சிக்கிட்டு
இருப்பாங்க.... ஜெய்ப்பிரகாண் அந்த வழியா போவார்... சட்டுன்னு காய் நறுக்கி அறுவாமனை இருக்கும் அதை வேலை களைப்புல அதுல தெரியா இடிச்சி பொண்டாட்டி காலை வெட்டிட போவுதுன்னு சட்டுன்னு
அதை ஓரமா எடுத்து வச்சிட்டு போய்க்கிட்டே இருப்பாரு...
அதை துளசி சமைச்சிக்கிட்டே ஒரு பார்வை பார்ப்பாங்க....
எனக்காக பொறந்தாயே எனதழகி ...இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதின்னு வாய்ஸ் வரும்...
அந்த பாடல் மான்டேஜ் முழுக்கவே அசத்தி இருப்பாங்க... நாம பதிவு பண்ணறதுக்கே நிறைய இருக்கு... ஆனா நாம இன்னும் அப்படி
பதிவு பண்ணலைன்றதுதான் உண்மை.
கணவன் வெளியே போகையில் தினமும் நின்று சாவி எடுக்கும் இடத்தில் சாவி எடுக்காம போறானே
என்று சாவி எடுக்க திரும்ப மறந்த சாவியை எடுக்க ஜெயப்பிரகாஷ் வரும் காட்சிகளும்
பொருள் வாங்க இங்க் பேனாவில்
எழுத.. போன எபதாமல் சண்டித்தனம் செய்ய.. அதை உதறும் போது அது வேட்டி முழுக்க புளு இங்க் மார்டன் ஆர்ட் டிசைன் போட... அதை பார்த்து நக்கல் விட
அரைத்த சட்டினியில் தண்ணி ஊற்றி செல்வது தேர்ந்த ரசனை.
பாடலில் எம்ஸ்வியும் இளையாராஜாவும்
வியாபித்த்து இருக்கின்றனர்.
இந்த பாடல் மட்டும் அல்ல
படம் நெடுக உணர்வு மழையில்... நம்மை சுற்றி எல்லோரும் நல்ல மனிதர்கள்தான் இருக்கின்றார்கள்... கோப்பை முழுக்க நிரம்ப நிரம்ப அன்பு மட்டுமே உள்ளது
என்பதைதான் இந்த படமும் பாடலும் உணர்த்துகின்றது...
பாடல் முழுக்க ஆணாதிக்க
வெளிப்படாக இருக்கின்றது என்று சிலர் குறைப்பட்டு கொள்ளலாம்...
இரவில் மனைவியின் உடையை வெறித்தனமாக
அவுக்கும் ஆண்... மறுநாள் துவைத்த துணியை.....
உள்பாவடை உட்பட காய வைக்க நிறையவே யோசிக்கும்
சமுகம் நம்முடையது.. அப்படியே காய வைக்க ஆண் நினைத்தாலும் பெண்ணே அதை அனுமதிக்காத வீடுகளும் உள்ளன என்பதையும் நாம் உணர
வேண்டும்.. பட் இந்த சாங்... ரொம்ப நெகிழ்ச்சி
படுத்தியது... அந்த அருவாமனையை எடுத்து கவிழ்த்து வைத்து விட்டு செல்லும் அந்த காட்சிதான்.
அவசியம்
இந்த பாடலை காணுங்கள்.... வாலி எழுதிய
இந்த பாடல் வரிகள் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.
நெகிழ்ச்சியின் அனுபவத்தை உணர்வீர்கள்...
இதை பாடமாக்கிய குழுவினருக்கும்
இயக்குனர் அருனுக்கும் நன்றிகள்.
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
இரவில் மனைவியின் உடையை வெறித்தனமாக அவுக்கும் ஆண்... மறுநாள் துவைத்த துணியை..... உள்பாவடை உட்பட காய வைக்க நிறையவே யோசிக்கும் சமுகம் நம்முடையது.......Jackie rocks
ReplyDeletemiga arumiayaana vimarsanam, idhai munney ungalidam irundhu edhir paarthen
ReplyDeleteஒரு அமைதியான படத்தை பார்த்த திருப்தி தந்தது... நம்மால் இந்த மாதிரி சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை என்ற ஏக்கமும் வந்தது ஜாக்கீ ஸார்
ReplyDeleteama Sir.. Really it is superb when reading in your words...
DeleteAma sir.. It feels really superb when reading in your words..
Deleteஅருமையான பாடல்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அண்ணா...
super jackie anna
ReplyDeleteSuper Song Jackie Anna
ReplyDeletesir, yazhini photo kumudham book il vanthullathu!
ReplyDeletesir yazhini photo kumudham book il .it look nice
ReplyDelete