பொதுவாக
எனக்கு மலையாளிகளை பிடிக்காது..
அவர்களிடம் இருக்கும் அதீத சுயநலமும் சட்டென
தமிழன் என்று வேறு படுத்தி பார்க்கும் மனோபாவமும்தான்... அது அவர்கள் ரத்தத்தில் ஊறிய ஒன்று.... ஆனால் எல்லா மலையாளிகளையும் பொத்தாம்
பொதுவாக குற்றம் சாட்டுவதில் எனக்கு கிஞ்சித்தும் விருப்பம் இல்லை.
கடலூர்
முத்தையா திரையரங்கில் அரும்பு மீசையோடு, அவளோடு ராவுகள் படம் பார்க்கும் போது ,டெம்ட்டான
கைலியை அடக்கி ஆண்டதில் இருந்து எனக்கும் மலையாளிகளுக்குமான நெருங்கிய பந்தம் தொடங்கியது எனலாம்..
அதன் பிறகு நான் வேலை பார்த்த நிறுவனங்கள்
எல்லாம் மலையாளிகள் நடத்திய
நிறுவனங்கள்தான்.. பாண்டியன் டயர்ஸ்,இந்துஸ்தான் கல்லூரி போன்றவற்றை
குறிப்பாக சொல்லலாம்..
குறிப்பாக
இந்துஸ்தான் கல்லூரியில் பணி புரியும்
போது 5 வருடங்கள் மலையாள நண்பர்களும் , மலையாள மாணவர்களும் மிக அதிகமாக
நட்பானார்கள்..இன்றளவும் என் வாழ்வின் முக்கிய திருப்பங்களில், சந்தோஷங்களில்
மலையாள நண்பர்களின் பங்கு மிக மிக அதிகம்
என்பேன்.
கல்லூரியில்
வேலை பார்த்த சமயம்.. நிறைய நல்ல மலையாள படங்களை மாணவர்கள் என்னிடம் சொன்னாலும்
அவைகளில் பெரிய இன்ட்ரஸ்ட் நான் காட்டியதில்லை.. ஆனால் வெகு நாட்களுக்கு
பிறகு மம்முட்டி நடித்த பிக் பி படத்தை
பார்த்த போது நான் மூக்கில் விரல் வைத்து ரசிக்காத குறை... இவ்வளவு ஸ்டைலான மேக்கிங்கில் இவர்களால் படம் பண்ண முடியுமா?-
என்று யோசித்து வியந்து இருக்கின்றேன்.
அதன் பிறகு அடூர் கோபாலகிருஷ்ணனின் நான்கு பெண்கள் திரைப்படத்தை உலக படவிழாவில்
பார்த்த்தோடு சரி.. அதுக்கு பிறகு
மலையாள படங்களை நான் பார்த்து
ரசிக்க வில்லை...
கடந்த மே
ஒன்றாம் தேதி வயநாடு போய் இருந்த
போது இந்த படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருந்தது... தனியாளாக கார்
ஓட்டிக்கொண்டு வந்த காரணத்தால் டயர்டு காரணமாக இந்த படத்தை அப்போது பார்க்க முடியவில்லை..
உதவி
இயக்குனர் தம்பி ரமேஷ் சில மலையாள படங்கள்
லிஸ்ட் அனுப்பி பாருங்க.. பாருங்க
என்று நச்சரிக்க இரண்டு படங்களை நேற்று பார்த்தேன்.. ஒன்று
சால்ட் அண்டு பெப்பர்.. மற்றது 22 பிமேல் கோட்டயம். இரண்டு படத்தை
இயக்கியதும் ஒரே இயக்குனர்.,.
===========
ஓகே 22 Female Kottayam-2012-உலகசினிமா/இந்தியா/ 22 பிமேல் கோட்டயம் படத்தோடு ஒன்லைனை பார்ப்போம்.
பெரும்பாலான கேரளத்து பெண்கள் நர்ஸ் டிரைனிங்
முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை செய்ய
போவது வழக்கம் அப்படி வெளிநாடு செல்ல முயற்சிக்கும்
ஒரு நர்ஸ் பெண்ணின் வாழ்வின் எதிர்பாராத
நிகழ்வு இந்த திரைப்படம்.
=============
22 பிமேல்
கோட்டயம் படத்தின் கதை என்ன?
Rima Kallingal ( Tessa K. Abraham) 22 வயது கோட்டயம் பெண்... உறவுகள் என்று
சொல்லிக்கொள்ள யாருமில்லை. அதனால் நர்ஸ் வேலையில் சேர்ந்து கனடா செல்ல
திட்டம்...டிராவல் ஏஜென்ட் Fahad Fazil (Cyril C. Mathew) விடம் கனடாவுக்கு விசா
வாங்கி கொடுக்க டெஸ் வேண்டுகின்றாள்....
இரண்டு பேரும் காதலில் விழுந்து
தொலைக்கின்றார்கள்.. ஒரு நாள் சிரில் ஓனரால் டெஸ் கற்பழிக்கபடுகின்றாள்... அந்த
காயம் ஆறுவதற்குள் பொதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை
செல்லுகின்றாள்.. ஏன்?, ஏதற்கு-?, எப்படி? என்று வெண்திரையில் பாருங்கள்..
=======================
படத்தின்
சுவாரஸ்யங்களில் சில...
சஸ்பென்ஸ் திரில்லர் கதையை கையில்
எடுத்துக்கொண்டு இயக்குனர் Aashiq
Abu கலக்கி இருக்கின்றார்...
இவரின் சால்ட் அண்டு பெப்பர்.. மனதை தொடும் காதல் கதை என்றால் இந்த படம்
பக்கா சஸ்பென்ஸ் திரில்லர்.
Aashiq Abuவுக்கு
நிறைய ரேப் படங்கள் இன்ஸ்பயர் ஆகி இருக்கின்றது என்பது தெரிந்தாலும் அந்த
பழிவாங்கலை..கேரளத்து மண்ணோடு கலந்து கொடுத்து மனதில் ஸடூல் போட்டு ஏறி நிற்கின்றார் இயக்குனர்....
முதல்
பாதியில் காதல் காட்சிகளில் நல்ல ரசனை.. கேரக்டர்களை அறிமுகபடுத்துவதில் ஒரு
ஸ்டைல் இருக்கின்றது.. இது மலையாள திரைப்படங்களுக்கு மிக புதிது..காரணம் அறு ஓடம்
பச்வை பசேல் போன்ற விஷயத்தை ஓரம் கட்டி விட்டு நகர்புறத்து பின்புலத்தில் அசத்தி
இருக்கின்றார்.
Rima Kallingal டெஸ் பாத்திரத்தில் வாழ்ந்து இருக்கின்றார்.. இயக்குனர் அப்படி வாழ வைத்து இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்..
முதல் முதலில் ஒரு ஆணோடு நெருக்கமான வேலையில் நான் வெர்ஜின் இல்லை... ஊரில்
மெடிக்கல் வைத்த இருந்த பென்னியோடு எனக்கு ஏற்கனவே மேட்டா ஆகிவிட்டது என்று
தெளிவாக சொல்லும் அந்த காதல் காட்சி
ரசனையான காட்சி...
Fahad Fazil நடித்து இருக்கும் சிரில் பிரிக்கி லவ்வர் பாய்
பாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்துகின்றார். முக்கியமாக எஸ்எம்எஸ் அனுப்பும்
மாடேஜ் காட்சிகளில் அவர் முகத்தில்
காட்டும் ரோமாண்டிக் மூட் அற்புதம்.
சிரில்
கேரக்டர் காபி ஷாப்பில் டெஸ் தங்கையுடன் அறிமுகமாகும் அந்த வேளையில் டெஸ் தங்கை
கேரக்டர் சிரில் குண்டி செமையாக
இருக்கின்றது என்று சொல்லும் அந்த காட்சி..கேர்ள்ஸ் டாக்கை ஓட்டு கேட்டு
வைத்து இருக்கும் காட்சி என்பேன்.
படத்தில்
இரண்டு கேரக்டர்கள் மனதில் வெகு நேரம் நிற்கின்றார்கள்.. ஒன்று அந்த நோயாளி
பெரியவர் மற்றது சிறையில் இருக்கும் தமிழ் பெண்தாதா கேரக்டர்....
டெஸ் என்னை
கல்யாணம் செய்து கொள் என்று வம்பு பண்ணும் அந்த பெரியவர் கேரக்டர்.. சிறையில் இருக்கும் டெஸ்சுக்கு கடிதம் எழுதி
தன் சொத்தில் கொஞ்சம் எழுதி வைக்கும் காரணத்தையும் சொல்லி விட்டு மோளே
என்று விளிக்கும் அந்த காட்சியில் படம்
பார்க்கும் உங்களை கண்களில் ஜலம்
வைத்துக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் உணர்ச்சியற்றவர் என்று பொருள்.
பெண்தாதா
கேரக்டர் அவர் சொந்தங்கள் அறிமுகமாகும்
காட்சிகளில் வழக்கமான தமிழ் நக்கல் நிரம்பிய காட்சி என்றாலும் ரசிக்க
வைக்கின்றது...
முதல் டைட்டில் காட்சியில்
பின்னனியில் ஒலிக்கும் அந்த பாடலும் பெங்களுர் நகர மான்டேஜ் காட்சிகள்
தேர்ந்த ரசனை...
ஒளிப்பதிவு Shyju Khalid மல்ட் கேமராக்களில் படத்துக்கு
பலம் சேர்த்து இருக்கின்றார் என்றாலும்
ரேட் ஒன் பட்ஜெட்டை கட்டுக்குள் வைத்து இருக்க உதவி செய்து இருக்கின்றது...
இசையும்
பின்ன்னி இசையும் படத்துக்கு பெரிய பலம்..
. தேங்ஸ் கார்டு மட்டுமே படத்தின்
துவக்கத்தில் பத்து நிமிடத்துக்கு போடுகின்றார்கள்.
===============
படத்தின் டிரைலர்..
================
படக்குழுவினர்
விபரம்
Directed by Aashiq Abu
Produced by O. G. Sunil
Written by Abhilash Kumar
Shyam Pushkaran
Starring Rima Kallingal
Fahad Fazil
Music by Bijibal
Rex Vijayan (BGM)
Cinematography Shyju Khalid
Editing by Vivek Harshan
Studio Film Brewery
Release date(s)
April 13, 2012
================
பைனல் கிக்.
படம் பார்த்து
முடிக்கும் போது ஒம்மால இதுதான் படம்
என்று மனதுக்குள் சொல்லிக்கொள்வோமே?
அப்படி இந்த படத் தை பார்த்து முடிக்கும் போது அப்படி தோன்றுவது
இயல்பு..வயதுபெண்கள் நிச்சயம் இந்த படத்தை
பார்த்தே தீர வேண்டும்..படம் பார்த்து
வெகு நேரம் படத்தின் கேரக்டர்கள் உங்கள் மனதில் உட்கார்ந்து இருப்பார்கள்..
முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியின் டயலாக் செம மெச்சூர்ட். பார்த்தே தீர வேண்டும் இந்த மலையாள படத்தை.............
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. உங்கள் விமர்சனம் படித்ததும் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. குறித்து வைத்துக் கொள்கிறேன். :)
ReplyDeleteராகவன் கண்டிப்பாக படத்தை பாருங்கள்.
ReplyDeleteஅருமையான விமர்சனம். அந்த லிஸ்ட் கொஞ்சம் ஷேர் பண்ணுங்களேன்?
ReplyDeleteபுரியல 1..
ReplyDelete//பொதுவாக எனக்கு மலையாளிகளை பிடிக்காது..
அவர்களிடம் இருக்கும்........... ஆனால் எல்லா மலையாளிகளையும் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவதில் எனக்கு கிஞ்சித்தும் விருப்பம் இல்லை.//
புரியல 2..
//வேலை பார்த்த சமயம்.. நிறைய நல்ல மலையாள படங்களை மாணவர்கள் என்னிடம் சொன்னாலும் அவைகளில் பெரிய இன்ட்ரஸ்ட் நான் காட்டியதில்லை.. ஆனால் வெகு நாட்களுக்கு பிறகு மம்முட்டி நடித்த பிக் பி படத்தை பார்த்த போது நான் மூக்கில் விரல் வைத்து ரசிக்காத குறை... இவ்வளவு ஸ்டைலான மேக்கிங்கில் இவர்களால் படம் பண்ண முடியுமா?- என்று யோசித்து வியந்து இருக்கின்றேன்.
..... அதன் பிறகு அடூர் கோபாலகிருஷ்ணனின் நான்கு பெண்கள் திரைப்படத்தை உலக படவிழாவில் பார்த்த்தோடு சரி.. அதுக்கு பிறகு மலையாள படங்களை நான் பார்த்து ரசிக்க வில்லை......இது மலையாள திரைப்படங்களுக்கு மிக புதிது..காரணம் அறு ஓடம் பச்வை பசேல் போன்ற விஷயத்தை ஓரம் கட்டி விட்டு நகர்புறத்து பின்புலத்தில் அசத்தி இருக்கின்றார்.//
மலையாளப்படங்களை ஒரு பத்து படங்களுக்கு கீழ் தான் பார்த்திருப்பீர்கள் என்பது நீங்கள் சொல்லியபடி தெரிகிறது. பிறகு எப்படி நீங்கள் மலையாளப்படங்களை விமர்சிக்கறீர்கள் என்று புரியவில்லை.
thanks jackie for the review
ReplyDeleteபி.வி.ஆரில் முன்பு இப்படம் பார்த்தேன் சார். க்ளைமாக்ஸ் சூப்பர். பாசிலின் மகன் ஹீரோவாக சிறந்த படங்களை தேர்ந்தடுத்து வருகிறார். உஸ்தாத் ஹோட்டல் (மம்முட்டி மகன் நடித்தது) நேரம் கிடைத்தால் பாருங்கள்.
ReplyDeleteWill meet you at paadhivar meet Jackie:)
ReplyDelete//அதீத சுயநலமும் சட்டென தமிழன் என்று வேறு படுத்தி பார்க்கும் மனோபாவமும்தான்//
ReplyDeleteஉண்மைதான்! நான் கவனித்த வரையில் கேரளத்து பெண்கள் இப்படி பாலிடிக்ஸ் செய்வது இல்லை! ஆண்களோ, கேப் கிடைத்தால் போதும் - நம்மை மட்டம் தட்டாமல் விட மாட்டார்கள்!
ஆனால், கள்ளத்தனமாக நம் தமிழ் படங்களை / பாடல்களை இரசிப்பதில் அவர்களை மிஞ்ச ஆள் கிடையாது! நல்லா இல்லை என்று புலம்பிக்கொண்டே விடாமல் தமிழ் படம் பார்ப்பார்கள்! :)
Good review jacki annea,:-)
ReplyDeleteenna sir...villan prathap potthan acting patthi sollave illa
ReplyDeleteAfter reading this review downloaded and watched now... really super fantastic narration... That lady thatha is giving the inspiration and revenge activities are quite different.. BGM is awesome.. While killing Prathap Bothan that call girl dialogue is surprise and i clapped.. romba naalaikku appuram super movie from Malayalam...
ReplyDeleteafter reading this review i downloaded and watched now.. Really super thriller movie..That Lady dada and Old Man acting so simple and nice.. getting inspiration from Lady dada is helping the narration of the movie..BGM is awesome and the breezy love story till the first rape scene arrives by Prathap Bothan.. its a heart breaking scene but from that it film started to suspense.. The call girl dialogue when Prathap Bothan killing scene is so classy and stated clapping... A bakka thriller.. Nice watching and great...
ReplyDeleteஜாக்கி சார், நல்ல விமர்சனம். இது போன்ற நல்ல படங்களை அடிக்கடி விமர்சிக்கவும். நிறைய வாசகர்கள் இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறோம். சமீபத்தில் நிறையப் படங்கள் "பார்த்தே தீர வேண்டிய படங்கள்" வரிசையில் வருதே.. வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாகப் போவுதோ..
ReplyDeleteஜாக்கி சார், நல்ல விமர்சனம். இது போன்ற நல்ல படங்களை அடிக்கடி விமர்சிக்கவும். நிறைய வாசகர்கள் இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறோம். சமீபத்தில் நிறையப் படங்கள் "பார்த்தே தீர வேண்டிய படங்கள்" வரிசையில் வருதே.. வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாகப் போவுதோ..
ReplyDeleteகார்த்திக் கரெக்ட்டா சொன்னிங்க... நான் டுடேரியல்ல படிச்ச சமயம்... எனக்காக உயிரை கூட கொடுக்க ஒரு மலையாள பொண்ணு தயாரா இருந்திச்சி.. ஆனா அவங்க அண்ணன்க எல்லாம் வேற டைப்.. உண்மைதான் பெண்கள் அப்படி பாலிட்டிக்ஸ் பார்ப்பதில்லை.. உண்மையை சொன்னால் தமிழக ஆண்களை அவர்களுக்கு நிரம்பவே பிடிக்கும் அப்படி நிறைய பெண்கள் எனக்கு நட்பானவர்கள் அதிகம்.
ReplyDeleteவானிலா.. முதல் பாராவில் விளக்க்ம் சொல்லியும் புரியலைன்னா? நான் ஒன்னும் செய்ய முடியாது.
ReplyDeleteஇப்ப பார்க்கறது குறைஞ்சு போச்சு ஒரு காலத்துல நிறைய பார்த்து இருக்கேன்... கொலையே பண்ணாத ராஜேஷ்குமார் ஆயிரத்துக்கு மேல கிரைம் நாவல் எழுதும் போது நான் விமர்சிக்கலாம் தப்பில்லை..
சமீபத்தில் நிறையப் படங்கள் "பார்த்தே தீர வேண்டிய படங்கள்" வரிசையில் வருதே.. வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாகப் போவுதோ..//
ReplyDeleteதமிழ் பையன் நல்ல படங்களை மட்டும்தான் அதிகமா எழுதனும் மெனக்கெடனும் என்பதில் தெளிவா இருக்கேன்.. அதான்..
Thanks and i talk this more than 1 week and sorry anna not to give the CD.
ReplyDeleteReally amazing and good revenge movie in movie.
This movie look like I Spit On Your Grave
Good movie.
ReplyDeletethanks.
thanam
கொலையே பண்ணாத ராஜேஷ்குமார் ஆயிரத்துக்கு மேல கிரைம் நாவல் எழுதும் போது நான் விமர்சிக்கலாம் தப்பில்லை...
ReplyDeleteVery Nice reply to Vannila...
note: This is my 1st comment after i start to reading your blog. Past 1 year i am reading ur blog.
This is very good film.. good review jackie..
ReplyDelete//ஆனால், கள்ளத்தனமாக நம் தமிழ் படங்களை / பாடல்களை இரசிப்பதில் அவர்களை மிஞ்ச ஆள் கிடையாது! நல்லா இல்லை என்று புலம்பிக்கொண்டே விடாமல் தமிழ் படம் பார்ப்பார்கள்! :)// yes yes..
படம் நன்றாக இருக்கிறது. ஆனால் 2004ல் வெளிவந்த 'Ek hasina thi' (ராம்கோபால் வர்மா தயாரித்து ஸ்ரீராம் ராகவன் டைரக்ட் செய்தபடம்)-ன் அப்பட்டமான தழுவல். டைட்டில் கார்டில் அவருக்கும் நன்றி கூறியிருப்பாராயின் நல்லது. ஸயீஃப் அலி கான், ஊர்மிளா மடோன்கர் நடித்த அந்தப் படத்தில் பிரதாப் போத்தன் மாதிரி கேரக்டர் இல்லை. ஆனால் climaxல் ஊர்மிளா தான் ஜெயிலில் எலிகளுடன் போராடியதை வனமம் தீர்க்க ஸயீப் அலி கானை யாரும் காப்பாற்ற முடியாத வனக்குகைக்குள் கட்டிப்போட்டுவிட்டு திரும்பிப்பார்க்காமல் வந்துவிடுவார். ஆனால் Female 22 climax நச். நல்லதொரு படம் பார்க்கத்தூண்டியதற்கு நன்றி.
ReplyDeletegood.... diredtor added filmography in the end card......
ReplyDelete