யாழினி அப்பா...7





விஜயசதமி அதுவுமாக யாழினியை கிரீச்சில்  விடப்போனால்
ஒரு நிமிஷம்  உள்ள வந்துட்டு போங்க என்றார்கள்…  உள்ளே சென்றால் கொலு வைத்து இருந்தார்கள்..  சரஸ்வதி பூஜை அதுவுமா உங்க பொண்ணு  அரிசியில் எழுதறதை பார்த்துட்டு போங்க என்றார்கள்.. யாழினியை மடியில் உட்கார வைத்து  மஞ்சள் கலந்த அரியில்  அ என்று எழுதினார்கள்அதன் பின் ஆங்கில  எழுத்து ஏ வை எழுதினார்கள்அதன் பின் இந்தி எழுத்து அ வை எழுதினாகள்…  என்னை பள்ளியில்  சேர்க்கையில் ஒரு பெரிய வாத்தியார் என்று அழைக்கப்படும் ஐயர் எனக்கு அரிசியில்   அ எழுத கற்றுக்கொடுத்தார்… எழுதி முடித்த பிறகு  கிளாசுக்கு அழைத்து சென்றார்கள்…ஆரஞ்சி மிட்டாய் பாக்கெட் என்னிடம் கொடுக்கப்பட்டது… எல்லோருக்கும் ஒரு ஆரஞ்சு சுளை கொடுத்தேன்…. கொடியேற்றினால் கட்டாயம் கொடுக்கப்படும் மிட்டாய் அது… எனக்கு முன்பே  தெரிந்து இருந்தால்  தேடி பிடித்தாவது வாங்கி வந்து தந்து இருப்பேன்...

குழந்தைபக்கத்துல  உட்கார்ந்து நீங்க எழுதிரிங்களான்னு கேட்டாங்க… ஐயோ நான் மக்கு  மடசாம்பிராணி டென்த்ல 277தான் டோட்டல்ன்னு சொன்னேன்….நம்ம படிப்பு நம்மோடு  போகட்டும்னேன்...  அந்த டீச்சர் சொன்னாங்க... விழுந்து நமஸ்காரம் பண்ணுன்னு.... எங்க வீட்டுக்காரி சொன்னா.... யாழினி உம்மாச்சி கிட்ட விழுந்து சேவிச்சிக்கோன்னு....இரண்டு பேரும் நமுட்டு சிரிப்பு சிரிச்சிகிட்டாங்க... எனக்கு அவுங்க சிரிப்பின் அர்த்தம் விளங்கியது....

===========
கிரீச்சில் நிறைய  பிள்ளைகளுடன் இருப்பதால் வேலைக்கு போய் வந்தவுடன் நிறைய கதைகள் சொல்லுகின்றாள்..தீபிகா இல்லைப்பா என்னை ஆ பண்ணா…? என்று கம்பெளெயின்ட் வாசிப்ப்பதுதான் அவள் வேலையே… ஆ பண்ணுதல் என்பது அடித்து விடுவதுடைய ஷார்ட் பார்ம்.
============
நிறைய ரைம்ஸ் பாடுகின்றாள் என்றாலும் காலையில்  எழுந்து இணையத்தில் அல்லது ஏதாவது புரோகிராம் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு இருக்கையில் என் அருகில் வந்து பளிச் சிரிப்பை உதிர்த்து  விட்டு, அப்பா  கூவா கூவா வாத்து என்று கம்யூட்டரை காட்டினால் அதை போட்டே ஆக வேண்டும்…ஆனால் அதை திரும்ப திரும்ப போட சொல்லி படுத்தி எடுக்கும் போது,  விக்கித்து போய் நிற்பதை தவிர வேறு வழியில்லை…. எப்படியும் ஒரு 500 முறைக்கு  மேல் அந்த வீடியோவை பார்த்து விட்டேன்.. வாத்து  நடப்பதை பார்த்து அவள்   விழுந்து விழுந்து சிரிக்கின்றாள்…. ஆம்மா ஆடு இலை... ஃ வரை சொல்லுகின்றாள்...கூவா கூவா வாத்து, தோசையம்மா தோசை, அம்மா இங்கே வா வா....incy wincy spider, I hear thunder, jhony jhony, old McDonald, yankee doo ,இதெல்லாம் அவளுக்கு ரொம்ப  பிடிச்ச ரைம்ஸ்...எருமை போல இருக்கும் இந்த வயதில்தான்....எனக்கு  ஜானி ஜானி எஸ்பாப்பா பாட்டு அர்த்தம்  முழுதாக  புரிந்தது..

===========
கூவா கூவா வாத்து இம்சையில் இருந்து தப்பிக்க… ஒரு ரைம்ஸ் சீடி வாங்கி வந்து போட்டேன்…. அது என் தப்புதான்… எந்த புரோகிராமும் டிவியில் பார்க்க முடிவதில்லை… எல்லாத்துக்கும் எதிர்வினை இருக்கும்ன்னு யாழினி மூலமா புரிஞ்சிக்கிட்டேன்…
===================
தலைகாணியில படுத்துகிட்டு ரைம்ஸ்  சிடி பார்த்துகிட்டு இருந்தா? யாழினி யாழினின்னு நாலு வாட்டிகூப்பிட்டப்ப கூட அவ என்னை திரும்பி பார்க்கலை… அப்படி என்ன அங்க அவுத்து போட்டு ஆடுதுன்னு எனக்கு  கோபம்…அப்பா கூப்பிடறது  உன் காதுல விழலயா யாழினின்னு  நேர அவளுக்கு டிவி மறைப்பது போல   முட்டி போட்டு அவ முன்னாடி நின்னு கேள்வி கேட்டேன்…எட்டி மூஞ்சி மேல சரியா மூக்கு மேல உதைச்சா… செமையான உதை… எங்க அம்மா  அடிக்கடி சொல்லும்…. ஊட்டுக்கு அடங்காதது  எல்லாம் ஊர்ல அடங்கும்ன்னு.. அம்மா ஜெயலட்சுமி நான் வீட்டுலயே அடங்கி போறேன்.. போதுமா?
========
நான் ஒரு ஸ்பைய பெத்து வச்சி இருக்கேன்… எஸ்.. நேத்து  அவளை அழைச்சிகிட்டு பால் வாங்க கடைக்கு போனேன்…. வரும் போது… பால்  பாக்கெட்டை தெரியாம கீழே  போட்டு தொலைச்சிட்டேன் வீட்டுக்கு வெளிய இருக்கும்  டாப்பில் பால் பாக்கெட்டை கழுவி எடுத்துக்குனு  போனேன்.. அப்படியே எடுத்து போனா.. ஒரு பால் பாக்கெட்டை உருப்ப்படியா வாங்கி வர துப்பில்லைன்னு எங்க ஆத்துக்காரி காலையிலேயே சொல்லடப்போறான்னு நினைச்சேன்…. சரியா அந்த பால் பாக்கெட் பொங்கி காபியா மழறும் சில மணிதுளிக்கு முன்பு… …பொம்மைய வச்சி கிட்டு விளையாடிக்கிட்டு இருந்தவ… நேர அவங்க அம்மா கிட்ட போனா…. அம்மா……. அப்பா பால் பால்பாக்கெட்டை   ஆ பண்ணினா என்றாள்… எனக்கு காலடியில பூமியே நழுவிடுச்சி….பால் பாக்கெட்டை என்னங்க பண்ணிங்க ?என்று என் பொண்டாட்டி ரைட் ரயாலா கேட்டா ?  என்ன சொல்லறது… பால்பாக்கெட்டை கீழ போட்டுட்டேட்டின்னு சென்னேன்….என்ன கொடுமை சார். இது… ஒரு பால் பாக்கெட் கீழ போட்டதை கூட மறைக்க முடியலை… வாட் ஏ ஷேம் ஜாக்கின்னு நொந்துக்கறதை தவிர வேற என்ன சொல்ல…?நாலாவது தெரு ஆண்டிக்கிட்ட நாலு நிமிஷம் நடு ரோட்டு நின்னு துவரம் பருப்பு வாங்கி வரும்  போத அப்பா  பேசிக்கிட்டு இருந்தான்னு  யாழினி அவ அம்மா கிட்ட சொல்ல நிறைய வாய்ப்பு இருக்கும்  காட்சி தெளிவாக  தெரிவதாக என் மண்டையில்   சிவப்பு பல்ப் எரிந்து  இப்போதே  எச்சரிக்கை செய்கின்றது….

===============
பக்கத்து வீட்டில் காய்  கறி அறிந்து கொண்ட இருந்தார்கள்….யாழினிக்கு  பொடிசாக நறுக்கி கேரட்டை கொடுத்தார்கள்… அவள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்… அப்பாவுக்கு  என்றேன்… படக் என்று எல்லாத்தையும் வாயில போட்டு கொமுக்க ஆரம்பித்த விட்டாள்… அவள் அம்மா வந்து அம்மாவுக்கு யாழினி என்று கை நீட்ட வாயில கொமுக்கியதில் இருந்து கேரட் பீஸ்கள் எடுத்து அவள் அம்மாவுக்கு கொடுத்தால்…what a pitty….. I  know my future very clearly J
======================
இப்போதே முட்டை ஆய்.... சாக்கெலேட் ஆய் என்று அவள் அம்மா   சொல்லிக்கொடுப்பதால்.... நான் அவிச்ச முட்டையை முழுங்கும் போது என் அருகில் வந்து அப்பா  முட்டை ஆய் என்றாள்.... அடி செருப்பால யாருடி சொன்னது என்றேன்... அம்மா என்று சொன்னாள்...கொஞ்சம் நேரம் கழித்து தயிர் சாதம் ஊட்டினாள்... எப்படி இருக்கு  யாழினி என்று அவள் அம்மா கேட்க?.... நன்னா இருக்கு என்றாள்... யாழினி நன்னா இல்லை... நல்லா இருக்குன்னு  சொல்லு என்று சொன்னேன்... திரும்ப நன்னா இருக்கு என்று சொல்லுகின்றாள்....ரெண்டு பேரும் என்னை கலாச்சிட்டாங்கலாமாம்?
==============


ருசி பாக்கறதுல நான் என்னவோ பார்க் ஓட்டல் செப்புன்னு என் பொண்டாட்டிக்கு நினைப்பு....பருப்பு சாம்பார் வச்சி ரெண்டு தோசையை சுட்டு அவ சாப்பிட்டுகிட்டு இருந்தா...எனக்கு  தோசை ஊத்தட்டுமான்னு கேட்க..? எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் எழுதி  முடிக்கும் வேலை இருந்த காரணத்தால் நீ சாப்பிட்ட எனக்கு ஊத்திகொடு என்று சொன்னேன்...ஏங்க நான் வச்ச சாம்பார் செம டேஸ்ட்டா இருக்கு... என்னாலே நம்ம முடியலை... இரண்டு வா வாங்கிக்கோங்கன்னு இரண்டு   விள்ளல் ஊட்டி விட்டா..... அவ்வளவுதான் நேர பொறி தின்னுக்கிட்டு இருந்தவ எழுந்து வந்து,  அவ அம்மா காலை  பிராண்டி அப்பாவுக்கு போதும் எனக்கு...?  என்று கேட்கின்றது   நான் பெற்ற செல்ல மகள்............

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

17 comments:

  1. //நாலாவது தெரு ஆண்டிக்கிட்ட நாலு நிமிஷம்//

    ithu veraiyaa...

    ReplyDelete
  2. //ருசி பாக்கறதுல நான் என்னவோ பார்க் ஓட்டல் செப்புன்னு//

    பார்க் ஹோட்டல் செப்க்கு தான் ருசி பார்க்க தெரியும்னு யார் சொன்னது... சாப்பாட்டை நல்லா அனுபவிச்சு சாப்பிடுறவங்களுக்கு தான் ருசி தெரியும்... அதனால அண்ணி உங்ககிட்ட கேட்டிருக்கலாம்... உங்களை நீங்களே இப்படி கலாய்ச்சுகிட்டா எப்படி?

    //நாலாவது தெரு ஆண்டிக்கிட்ட நாலு நிமிஷம் நடு ரோட்டு நின்னு துவரம் பருப்பு வாங்கி வரும் போத அப்பா பேசிக்கிட்டு இருந்தான்னு//

    ஆறாவது தெரு அகிலா, பத்தாவது தெரு பத்மா இவங்ககிட்ட பேசிக்கிட்டு இருந்தீங்கன்னாலும் அதுவும் வீட்டுக்கு போய்டும். what a pity

    // திரும்ப நன்னா இருக்கு என்று சொல்லுகின்றாள்....ரெண்டு பேரும் என்னை கலாச்சிட்டாங்கலாமாம்?//

    பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்ச பிறகு அவர்கள் பேசுவதை நாம் சரி செய்தால் போதும். வீட்டுல அண்ணி எப்படி பேசுறாங்களோ அதை பேசும் போது சரி பண்ணாதீங்க. அப்புறம் நீங்க யாரிடமாவது கெட்ட வார்த்தைகள் பேசும் போது அதையும் நல்லா கவனிச்சு அவங்க பேச ஆரம்பிச்சுடுவாங்க.

    ReplyDelete
  3. ஊட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும்...தாயை மகளில் பார்க்கும் உங்கள் நேசம்...யாழினி அப்பா!...அப்பப்பா!

    ReplyDelete
  4. //கூவா கூவா வாத்து இம்சையில் இருந்து தப்பிக்க… ஒரு ரைம்ஸ் சீடி வாங்கி வந்து போட்டேன்…. அது என் தப்புதான்… எந்த புரோகிராமும் டிவியில் பார்க்க முடிவதில்லை… எல்லாத்துக்கும் எதிர்வினை இருக்கும்ன்னு யாழினி மூலமா புரிஞ்சிக்கிட்டேன்…//

    Why Blood !!! Same Blood !!!

    ReplyDelete
  5. be proud to be a father of such a girl Sekar! nice!

    ReplyDelete
  6. மிக நன்றாக உங்கள் உணர்வுகளைப் பதிவிடுகிறீர்கள்.

    ஒரு சின்ன விஷயம். தமிழ் டி‌வி நிகழ்ச்சிகளைப் பார்த்து, பலரும் ஆங்கிலத்தையும் தவறாக உச்சரிக்கிறார்கள். நீங்கள் அது மாதிரி செய்ய வேண்டாம் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

    குழந்தைகளை தினமும் சிறிதுநேரம் பார்த்துக்கொள்ளும் இடம், ஆங்கிலத்தில் CRECHE. இதன் உச்சரிப்பு= க்ரெஷ். சுட்டியைப் பார்க்கவும்: http://dictionary.cambridge.org/dictionary/british/creche_1?q=creche இந்தத் தளத்தில், அநேகமாக எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கும் உச்சரிக்கும் முறையும் தரப்பட்டிருக்கும்; அர்த்தமும் கிடைக்கும்.

    தமிழ் டிவியில் எப்போதும் ஆண்டீ என்பார்கள். அது 'பாண்டி' யில் வரும் பா ஒலிக்குறிப்பு போலத்தான் சொல்ல வேண்டும். இவர்கள் 'BAT'-இல் வரும் பா போல, தவறாக சொல்வார்கள்.

    உங்களை குறை சொல்லவில்லை. நீங்கள் சொன்னால் பலரும் கேட்பார்கள் என்பதால் இதை எழுதினேன். இந்த விஷயம் பற்றி நீங்கள் தனியாக ஒரு பதிவிடுங்கள். சுட்டியையும் கொடுங்கள். இதை இங்கே பிரசுரிக்க வேண்டாம். பெஸ்ட் Wishes, pvr.

    ReplyDelete
  7. யாழினிக்கு இனிய வாழ்த்துகள்.
    கலைமகள் அருளால் கல்வியில் சிறந்து வளரட்டும்.

    ReplyDelete
  8. ஹா, ஹா...
    யாழினிக்கு bright future இருக்கு!!!! உங்களுக்கும்தான்!:)))

    ReplyDelete
  9. மழலைக் குறும்புகள்! இனித்தன! அருமையான பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  10. Jacki... Show this one.. She will love it

    http://www.youtube.com/watch?v=0qwR43sC3dc

    ReplyDelete
  11. யாழினி உங்கள் 'சொந்த குமாரி'யா? நான் சூப்பர் சிங்கர் பற்றி எழுதுறீங்கன்னு நினைச்சேன்.
    குழந்தையுடன் நாம் இருக்கும் அந்த தருணங்கள் அனுபவித்து மறக்க முடியாதவை. அழகாக சொன்னீர்கள். யாழினிக்கு என் வாழ்த்துக்கள்.
    சகாதேவன்

    ReplyDelete
  12. யாழினி உங்கள் 'சொந்த குமாரி'யா?
    நான் சூப்பர் சிங்கர் பற்றி எழுதுறீங்கன்னு நினைச்சேன்.
    குழந்தையுடன் நாம் இருக்கும் அந்த தருணங்கள் அனுபவித்து மறக்க முடியாதவை.
    அழகாக சொன்னீர்கள்.
    யாழினிக்கு என் வாழ்த்துக்கள்.
    சகாதேவன்

    ReplyDelete
  13. Me "tooooooooo" some times Same Blood Jaki!!!

    OH WHAT A PITY

    ReplyDelete
  14. yaanai yaare yaanai yaare song also nice

    ReplyDelete
  15. அன்பு நண்பரே,
    நான் கன்னல் இளம்பரிதி அப்பா. என்னுடைய மகனோடு நான் வாழும் தருணங்களை என் வலைப்பூவில் எழுத நினைத்திருந்தபோது யாழினி அப்பா படிக்க நேர்ந்தது. ஆச்சரியம் யாழினியின் குறும்புகளும் உங்கள் புலம்பல்களும் என்னுடையவையாகவே தோன்றுகின்றன. எந்நேரமும் தன் தாயோடு கூட்டணி வைத்து என்னை நோகவைக்கும் என் மகனை நினைத்து ஒரு மகள் இருந்தால் என்னோடு கூட்டணி வைப்பாளோ என்று நினைத்திருந்தேன். யாழினி அப்பா அதை மாற்றிவிட்டார். யாழினிக்கு என் அன்பு முத்தங்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner