சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012


ஆல்பம்...

இந்த கர்நாடக கார பயல்களுக்கு இருக்கற போங்கும் சரி..
கேரளாகார பயல்களுக்கு இருக்கும் போங்கும் சரி.. நியாயமாவே பேசவே மாட்டானுங்க.. சின்ன பசங்க பல்பம் சிலேட்டுன்னு எடுத்துகிட்டு இது என்தின்னு  பச்சையா பொய் சொல்லுங்களே. அது போல பொய் சொல்லுவானுங்க... அதே மாதிரிஇரண்டு மாநிலத்து காரணுங்களும் அவ்வளவு  ஒத்துமை.... நம்ம கிட்ட அப்படி ஒரு    விசயம் சுட்டு போட்டாலும் நமக்கு வராது..    வேற்று கர்நாடக ரக்ஷனவேதிகா பார்ட்டிங்க... யாகம் வளர்த்து யப்பா சாமி பிரதமருக்கு தமிழகத்துக்கு தண்ணி  கொடுக்கக்கூடாதுன்னு  புத்தி கொடுப்பான்னு வேண்டி இருக்கானுங்க.... இவனுங்களை என்னத்தை சொல்ல... இன்னும் சில நட்ட நடு  சென்டருங்க... நம்ம   நீர்நிலைகளை அழிச்சிட்டோம்... அதை ஒழுங்கா  செஞ்சி இருந்தா அவன்ககிட்ட கையை கட்டி நிக்க வேண்டாம்.. ரைட்டு வாஸ்தவம்தான்...அப்படி  ஆட்சிபண்ணதான்  யாருமே இல்லையே? 100 ரூபாய்ல பாதி 50 ரூபா கொடுக்கனும்னா கொடுத்துடனும் அதுதான் மரியாதை....கர்நாடக அதை செய்ய மறுக்கின்றது.,.
==========
இந்திய வெளியுறவுதுறை அமைச்சர்.. எஸ்எம் கிருஷ்ணா  தமிழ்நாடு வெளிநாடு என்று நினைத்துக்கொண்டு  தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதை உடனே நிறுத்துக  என்று திருவாய் மலர்ந்து இருக்கின்றார்... தமிழகத்தில் இதற்கு வைகோ மட்டுமே கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்... மற்ற அரசியல்  கட்சிகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்று தெரியவில்லை.
===========


அஞ்சலி
இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி  அவர்கள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து  விட்டார்..சென்னை பதிவர் சந்திப்பில் நானும் மணிஜியும் காலாயத்தோம்...அதன் பிறகு நான் பேசவில்லை. மைதிலுக்கு தீபாளிக்கு உடைகள் வாங்கி தருதாக் சொன்னார்.. இல்லை உதவிகள் இந்த வருடத்துக்கு போதும் என்றேன்.... நல்ல மனிதர்.. உலகில் ரொம்ப கொடுமையான மரணம் ஹார்ட்  அட்டாக் தான் அவருக்கும் எனது அஞ்சலிகள்.

===========

சென்னை மேட்ரோ  காசி  தியேட்டர் தாண்டியதும்... வரும் பகுதி இது...
=========
மிக்சர்.
அது என்னங்கடா சரக்கு அடிக்கலைன்னா கை நடுங்கறது போல டெய்லி கலைஞரை திட்டலைன்னா சில பேருக்கு தூக்கம் வராது போல... பேஸ் புக் மற்றும் சமுக வலைதளங்களில் கலைஞரை திட்டறதை மட்டுமே பொழப்பா வச்சி இருக்கற நட்ட நடு சென்டர்களையும், புரட்சியாளர்களையும் நினைச்சா சிப்பு சிப்பா வருது....கலைஞரை யோக்கிய சிகாமனின்னு நான் எங்கேயும் வாதாடலை.. ஆனா அவரு கருப்பு சட்டை போட்டாக்கூட நக்கல் விடறவங்க...ஆறு மாசத்துல ஆட்சிக்கு வந்தா கரென்ட் தருவோம்னு சொன்னவங்களை கேட்க துப்பில்லை......

==========
வயசான காலத்துல அந்த ஆளு சட்டைய போட்டா என்ன? கோமணம் கட்டின என்ன...-?இதுல பாரின்ல ஏசியில உட்கார்ந்துகிட்டு பொங்கி படையல் வச்சிகிட்டு....ஊர்ல கிராமத்துல உங்க அப்பன்,ஆத்தா பனை மட்டை விசிறி வச்சி விசிறிகிட்டு, வேர்த்து விறுவிறுக்க யாரை திட்டறாங்கன்னு போய் பாருங்கடா.....வெண்ணைங்களா.......
===========

விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்தேன்..ரக்ஷிதா பாடி முடிந்த்தவுடன் ஓட்டு கேட்டார்கள்... அந்த பெண் பெங்களுரை சேர்ந்தவர் தந்தையை இழந்தவர்,வார வாரம் சூப்பர் சிங்கர் ஷூட்டிங்குக்காக பெங்களுரில் இருந்து தன் அன்னையோடு வந்து கொண்டு இருக்கின்றார்.... அம்மா பெண் இருவருமே பெங்களுர் கல்சரில் இருக்கின்றார்கள்... நேற்று அந்த பெண்ணின் அம்மா நெகிழ்ச்சியாக தன் கதையை சொல்லி நிகழ்ச்சி பார்க்கும் பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார்... தன் கணவன் கடைசி ஆசையை சொன்னார்...ஆனால் அவர் ஜீன்ஸ் டி ஷர்ட்டில் வந்து ,இருந்தார்.... பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னார்... பிரகதி அம்மா போல இந்த பொம்பளையும் தன்னை நினைச்சிக்கிச்சி போல....ஓட்டு விழுறது சந்தேகமே... மத்த நாள்ள எப்படி வேணா வா....ஓட்டுக்கேக்கற அன்னைக்கு சுடிதார் போட்டுகிட்டு வந்தா என்ன குறைஞ்சா போயிடும்..? அந்த டிசர்ட்டில் ஓ ஹனி என்ற வாசகம் வேறு இருந்தது.... அதை பற்றி எதாவது பேசுவார் என்று நினைத்து இருந்தேன்.. அதை பற்றி எதுவும் பேசவில்லை...இந்த அங்கலாய்ப்புக்கு மிக முக்கிய காரணம்.. ரக்ஷிதாவை அந்த பெண்மணிக்கு ரொம்பவே பிடிக்கும் என்பதுதான்... இயல்பாய் இருத்தல் என்பது தமிழகத்தில் வேலைக்காகது.... உடை என்பது அவரவர் விருப்ப விஷயம் என்றாலும் செண்டியாக பேசும் அதே நேரத்தில் இந்த உடையை நம் ஊர் பெண்மணிகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பேயில்லை. அதைதான் அந்த பெண்மணி ஆதங்கமாக சொன்னார்...

==============
சத்தியம் தியேட்டரில்......... வாழ்வில் முதன் முறையாக தண்ணிக்கு பதில் பேப்பர்... நேற்று இரவு சாப்பிட்ட கோபி மஞ்சுரியனை அசிங்கமாக திட்டித் தொலைத்தேன்... மனசு ஒப்பவில்லை....வெட் டிஷ்யூ வைத்து யாழினிக்கு செய்த சேவைகள் உதவி புரிந்தாலும், வீட்டுக்கு வந்த ஒரு ஜலகீரிடை நடத்திய பிறகுதான் அடுத்தவேலையில் கவனம் செலுத்தியது மனது... இந்த ஸ்டேட்டஸ் பார்த்து யாராவது ஒரு சென்னை dude மனதுக்குள் சிரிக்கலாம்... இந்த ஸ்டேட்டஸ் கனுக்கால் தண்ணியில் கால் அலம்பி பழக்கப்பட்டு, என்னை போல மனது ஒப்பாத கிராமத்தானுக்காக.... இந்த ஸ்டேட்டஸ் சமர்பணம்.

==========

அது என்னவோ தெரியவில்லை…. ஆங்கில எழுத்தில் A மற்றும் I ஏழுத்தில் முடியும் பெயர் கொண்ட பெண்கள் , என் மனதுக்கு மிக பிடித்தமானவர்களும், மிக நெருக்கமானவர்களாகவும் இருக்கின்றார்கள்மனைவி பெயர்.. sudha ஏவில் முடிகின்றதுமகள் பெயர்.....yazhini ஐயில் முடிகின்றதுஅதனால்தான் அப்படி சொன்னேன்யப்பா ஒரு வழியா லாஜிக்கோடு தப்பிச்சாச்சி..:-))) விடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்
=========

1997இல் ஊட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது... இந்த படத்தை பார்க்க சொல்ல எனக்கே என்னை அப்பயும் இப்பயும் பார்க்க சிரிப்பா இருக்கு...
இரண்டு  நாளைக்கு முன்ன கூகுள் பிளஸ்ல இந்த படத்தை போட்டேன்...  நம்ம மக்கள்ஸ் ஓட்டி தீத்துட்டாங்க.
===========
சார்....ஜாக்கியா-?
ஆமாங்க...
சார் என் பேர் அந்தோனி
நான் பாம்பேலர்ந்துபேசறேன்..
சொல்லுங்க
சார் உங்க பிளாக்  தொடர்ந்து படிச்சிகிட்டு வரேன்.. ரொம்ப நல்லா எழுதறிங்க... தொடர்ந்து எழுதுங்க.....
நன்றி அந்தோனி.பாம்பேல என்ன  செய்யறிங்க...?
டிரைவரா இருக்கேன்...
குட்..குடும்பம்.....?
15 வருஷமா இங்கதான்சார் இருக்கேன்...
எப்படி கட்டுபடியாவது...?  டிரைவரா இருந்துகிட்டு?
இங்க (பெயர் வேணடாம்).............. தூதரகத்துல டிரைவரா இருக்கேன்..
ரொம்ப சந்தோஷமா இருக்கு...தொட்ர்ந்து வாசியுங்கள் என்று போனை வைத்தேன்.
நான் ஏதோ கால் டாக்சி டிரைவரா இருப்பார்ன்னு நினைச்சுட்டேன்... அவருடன் பேசியது மகிழ்வாக இருந்தது.
 ===============
சென்னை shell Bpoவில் வேலை செய்யும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்....ஒரு உதவி தேவையாய் இருக்கின்றது....

========
யாருப்பா அது.. இந்த புள்ளை கையில கொஞ்சம் துண்டு பிரசுரங்களை டச் பண்ணாம கொடுங்கப்பு..

===============


பிலாசபி பாண்டி.

 பேசுவதை வைத்து நண்பர்களை ஒரு போதும் தேர்ந்து எடுக்காதீர்கள்.

நான்வெஜ்18+
Boy: Dad, a guy from my school calls me “Gay”

Dad: You should punch him in the face.
.
.
Boy: But he is soooo cute!   
========
பிரிய்ஙகளுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

19 comments:

  1. மணி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. உலகில் ரொம்ப கொடுமையான மரணம் ஹார்ட் அட்டாக் தான்

    //

    நம்ம மணி அண்ணன் மரணம் தனிப்பட்ட முரையில் நமக்குக் கொடுமையானது. ஆனால் கொஞ்சம் பிராக்ட்டிகலாய் யோசியுங்கள், மரணத்திலேயே மிகச் சிறந்த மரணம் மாரடைப்புதான். ஓரிரு நிமிட அல்லது பல நேரங்களில் ஓரிரு நொடியில் பெரிய வேதனையின்றி, நம்பொருட்டு யாரையும் தொல்லைப்படுத்தாத மரணம். புண்ணியம் செய்தவனுக்குத்தான் இப்படி மரணம் கிட்டும்.

    ReplyDelete
  3. jockey
    இந்தியாவில் 90 சதவிகிட பெண்களின் பெயர்கள் 'A' விலும் 'I' லயும்தான் முடியும் உங்களுக்கு தெரிந்த பெண்களின் பெயர்களி சொல்லிபாருங்கள்

    ReplyDelete
  4. புதுகை.அப்துல்லா, மாரடைப்பு ஏற்பட்டு உடனே உயிர் பிரிந்து விட்டால் அது நீங்கள் சொல்லுவது போல சிறந்ததாய் இருக்கும்... ICU-வில் வைத்திருந்து, அவர்கள் படும் வேதனையை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள். என் தந்தை மரணத்தில் நான் கண்கூடாக அவரது வேதனைகளை கண்டு, இன்றும் பல நேரங்களில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறேன்...

    ReplyDelete
  5. புதுகை.அப்துல்லா, மாரடைப்பு ஏற்பட்டு உடனே உயிர் பிரிந்து விட்டால் அது நீங்கள் சொல்லுவது போல சிறந்ததாய் இருக்கும்... ICU-வில் வைத்திருந்து, அவர்கள் படும் வேதனையை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள். என் தந்தை மரணத்தில் நான் கண்கூடாக அவரது வேதனைகளை கண்டு, இன்றும் பல நேரங்களில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறேன்...

    ReplyDelete
  6. பஞ்சாபில் சீக்கியபெண்களுக்குப் பெண் பெயர்கள் கிடையா. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே. இந்தர், சுகிவிந்தர், தேவெந்தர், ஜிதேந்தர், என்று வரும். பெண்ணை எப்படி தெரிவதென்றால், கவுர் என்று கூட வரும். இந்தர் கவுர், ச்கிவிந்தர் கவுர் என்று. ஆனால் கூப்பிடும்போது, வெறும் இந்தர்தான்.

    ReplyDelete
  7. நல்ல ஆழ்ந்த தூக்கத்தின்போது வரும் இதய நிறுத்தம் மட்டுமே நல்ல மரணம். பொதுவாக நீரழிவு நோயாளிகளுக்கு வரும். எம்ஜிஆர்.

    எம்ஜிஆருக்கு நல்ல மரணம்.

    மற்றபடி நினைவு தெரியும்போது வரும் நிறுத்தங்கள் சுலபமாக நிற்காமல் வலியைக்கொடுத்து விட்டும், நாம் சாகப்போகிறோம் என்ற நினைவைக்கொடுத்துவிட்டும் ஜாக்கி சேகரின் ‘உலகத்திலே கொடுமையா’ என்ற கேட்டகிரியில் வரும்.

    சிலமாதங்களுக்கு முன் ஒருவர் சேப்பாக்கம் மேற்பாலத்தில் சைக்கிளில் செல்லும்போது, வலியெடுத்தவுடன் வண்டியை நிறுத்தி, சாலையோரத்தில் உருண்டு துடித்து மரணித்தார். வீட்டை விட்டு வெகுதூரத்தில் ஆருமறியாமல் செல்கிறோமே நம் குடும்பம் குழந்தைகள் என்னாவது என்ற நினைப்பும் வந்தால்?

    அவருக்கு நாற்பதே வயது.

    ReplyDelete
  8. ஆல்பம்...ஆல்பம்-னு தலைப்பை போட்டீங்க சரி!!!!! ஆனா ஆல்பத்தை பத்தி ஒண்ணுமே எழுதல!!! ஒரு ப்ளோவில மறந்துடீங்களா?

    ReplyDelete
  9. ஆல்பம்-னு தலைப்பை போட்டீங்க சரி!!!!! ஆனா ஆல்பத்தை பத்தி ஒண்ணுமே எழுதல!!! ஒரு ப்ளோவில மறந்துடீங்களா?

    ReplyDelete
  10. மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு !!
    மாரடைப்பின் காரணமாக, வரும் ஆபத்தை எப்படி தவிர்ப்பது ?
    http://tamiljatakam.blogspot.com/2012/08/blog-post_30.html

    ReplyDelete
  11. //....வெட் டிஷ்யூ வைத்து யாழினிக்கு செய்த சேவைகள் உதவி புரிந்தாலும், வீட்டுக்கு வந்த ஒரு ஜலகீரிடை நடத்திய பிறகுதான் அடுத்தவேலையில் கவனம் செலுத்தியது மனது... இந்த ஸ்டேட்டஸ் பார்த்து யாராவது ஒரு சென்னை dude மனதுக்குள் சிரிக்கலாம்... இந்த ஸ்டேட்டஸ் கனுக்கால் தண்ணியில் கால் அலம்பி பழக்கப்பட்டு, என்னை போல மனது ஒப்பாத கிராமத்தானுக்காக.... இந்த ஸ்டேட்டஸ் சமர்பணம்
    //
    I use this in USA. Hope this will be usefull for u
    http://www.amazon.com/Washmate-Portable-Bidet-Bottle-300/dp/B001BYV3J6/ref=sr_1_1?ie=UTF8&qid=1349729562&sr=8-1&keywords=portable+bidet
    :).
    After using toilet sheet..and wet tissue then you can use this.

    ReplyDelete
  12. நன்றி... பெப்லி..

    ReplyDelete
  13. அப்துல்லா.. இது பத்தி விரிவாய் பதிவிடுகின்றேன். நன்றி கருத்துக்கு...

    செந்தில் உங்கள் கருத்துக்கு உடன்படுகின்றேன்.

    ReplyDelete
  14. அப்துல்லாண்ணனின் பாய்ண்ட் யோசிக்கவைத்தது. ஆனால், உண்மையில் எந்தளவுக்கு வலி இருக்குமென தெரியவில்லை. முன்னபின்ன செத்திருந்தா தெரியும்..;)

    சத்யத்துல தண்ணி பைப் வைக்க என்ன கேடு? நான் அமெரிக்கா வந்து 10 வருஷமாச்சு..இன்னும் பேப்பர் பழக்கமாகல, ஆகாது..வேலைக்கான ட்ராவல் போது ஏர்போர்ட்களில் அவ்வளவு கஷ்டம்..நைசாக 3$க்கு மினரல்வாட்டர் வாங்கி (அதும் வெறும் 500 மில்லி தருவான்) அதை பதுக்கி எடுத்துக்கொண்டு போயி..

    அமெரிக்க அமேசானில் நம்ம ஸ்டைல்ல ப்ராடக்ட் விற்க, இந்தியால வெறும் பேப்பர் வைக்கிறான். நல்ல ஐரனி..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner