(SNEAKERS) வித்யாசமான வேலைகள்...

உலகில் எவ்வளவோ வித்தியாசமான தொழில்கள் இருக்கின்றது...ஆனால் சவாலான வேலைகளுக்கு எப்போதுமே மவுஸ் இருக்கத்தான் செய்கின்றது... கரணம் தப்பினால் மரணம் என்று இருக்கும் போது அது போலான வேலையில் ஈடுபட பெரிய தில் வேண்டும்....

அப்படி தில்லாக வேலை செய்ய ஒரு நல்ல குழு வேண்டும்.. அப்படி ஒரு கூட்டம் மட்டும் கிடைத்து விட்டால்...எதிரியின் கண்களில் விரல் விட்டு ஆட்டிவிடலாம் அல்லவா??? அப்படி ஒரு விரல் விட்டு ஆட்டும் குழுவின் படம்தான் இது.....

SNEAKERS படத்தின் கதை இதுதான்....


..Martin Brice (Robert Redford0) ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி...கம்யூட்டர்களை ஹெக் செய்பவன்.... இதற்கு முன் ஒரு குற்றத்தில் ஈடுபடும் போது அவனது நண்பன் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிடுகின்றான்.... காலங்கள் உருண்டு ஓடுகின்றது....


மார்டின் டைகர் டீம் என்ற செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்தி வருகின்றான்... அந்தகுழுவின் வேலையே எல்லா பேங்குகளில் உள்ள செக்யூரிட்டி குறையை சொல்லி காசுவாங்குவதுதான்... எப்படி என்றால்....

என் பேங்கில் திருட வாய்ப்பே இல்லை என்று நீங்கள் சொன்னால் அந்த பேங்கில் திருடி இப்படி எல்லாம் உன் பேங்கில் திருட வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லி அந்த பேங்கிடம் பெரிய பில்லாக பொடுவதுதான் அவர்களின் பொழப்பே...


இப்படியே போனால் அது நைன் டூ பைவ் ஜாப்பாகிவிடும் என்பதால்.. கதையில் புதிதாய் இருவர் நுழைகின்றார்கள்...அவர்கள் நேஷனல் செக்கியூரிட்டி ஏஜென்சியில் இருந்து வருவதாக சொல்லி ஒரு வேலையை சொல்கின்றாகள்.. அப்படி மறுத்தால் உன் பழைய கதையை எல்லாம் எடுத்து உன்னை எப்படியும் வாழ்நாள் முழுவதும் களிதிங்க வைத்துவிடுவோம் என்று சொல்லி மிரட்டுகின்றார்கள்...
பழைய கதை அவர்களுக்கு தெரிந்த காரணத்தால் மார்ட்டின் அவர்கள் சொல்லும் வேலையை செய்ய ஒப்புக்கொள்கின்றான்... அவன் ஒத்துகிட்டா போதுமா? அவன் குழுவில் இருப்பவர்கள் ஒத்துக்கொண்டு விடுவார்களா? அந்த வேலையும் சாதாரண வேலை போல இல்லை....அந்த வேலையை எடுத்ததும் பல சிக்கலக்ளையும் பல கொலை முயற்ச்சியும் நடக்குது.....


அது என்ன வேலை?
அந்த வேலையை அவன் எப்படி வெற்றிகரமா செஞ்சான் போன்றவற்றை எப்படியாவது பார்த்துவிடுங்கள்...

படத்தின் சுவார்ஸ்யங்களில் சில...

படத்தின் அடுத்த கட்டம் என்ன என்று ஆர்வமாய் பார்ககவைக்கும் திரைக்கதை...

விறுவிறுப்பான ஆக்ஷன் தமாக்கா......

ஒரளவுக்கு திரைக்கதை யூகிக்க முடியும் என்றாலும் சுவராஸ்யத்துக்க பஞ்சம் இல்லை...

ஆக்ஷனோடு கொஞ்சம் காமெடி காட்சிகளும் இருக்கும்..

இந்த படம் 1992ல் வெளியான படம்...

படத்தின் ஹைலைட் சீ்ன்..
படத்தின் கண் தெரிந்தவர்கள் தினரும் போது கண் தெரியாத அந்த கேரக்டர் கண்டுபிடிக்கும் காட்சிகள் அத்தனையும் அசத்தல் ரகம்

படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...

Directed by Phil Alden Robinson
Produced by Lawrence Lasker
Walter F. Parkes
Written by Phil Alden Robinson
Lawrence Lasker
Walter F. Parkes
Starring Robert Redford
Dan Aykroyd
Ben Kingsley
Mary McDonnell
River Phoenix
Sidney Poitier
David Strathairn
James Earl Jones
Music by James Horner
Cinematography John Lindley
Editing by Tom Rolf
Distributed by Universal Studios
Release date(s) September 9, 1992 (USA)
Running time 126 min.
Language English
Gross revenue $105,232,691(Worldwide)


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...



4 comments:

  1. ரைட் பார்த்துடுறேன்...

    ReplyDelete
  2. ஜாக்கி ....உங்கள் வலைதளத்திற்கு நாளுக்கு நாள் புது மெருகு ஏறுகிறது, "இப்போது கூட அந்த ஜக்குபாய்ஸ் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கிறோம்."

    ReplyDelete
  3. தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?

    தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html

    ReplyDelete
  4. ரைட்டு தல.. ஸ்டார்டிங் டவுன்லோட்....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner