நேற்று இரண்டு நிகழ்ச்சிகள் நடந்தன...ஒன்று டிஜிட்டல் சினமா பற்றிய கருத்து அரங்கம்... மற்றது...மாதத்தின் இரண்டாம் ஞாயிறு நடக்கும் ஞானி வீட்டு கேணி கூட்டம்...
காலையில் கிளம்பும் போதே என் மனைவி குட்டையை குழப்பியதால் காலை பத்து மணிக்கு செல்லவேண்டியநான் பதினொன்றரை மணிக்கு செமினாருக்கு போய் சேர்ந்தேன்... நல்ல செமினார்...
டிஜிட்டல் சினிமாவின் டெக்கினிக்கல் விஷயங்கள் விலாவாரியாக விளக்கபட்டது...இன்னும் 4 வருடத்தில் பிலிமில் இருந்து டிஜிட்டலுக்கு மாறிவிடு்ம் என்று பலர் ஆருடம் சொன்னார்கள்...
ஆர் ஆர் சீனுவாசன் தமிழ்சினிமாவில் இருக்கும் ஆதிக்க சக்திகளிடம் சிக்கிதவிக்கின்றது என்றும் அதை சரிபடுத்தவும் நல்லா சினிமா வரவும் டிஜிட்டல் தொழில்நுட்டபம் கை கொடுக்கும் என்றார்...
பலர் ஆர்வமாக கேள்விகளை கேட்டனர்... பதிவர்களில் கேபிள் பட்டர்பிளைசூர்யா வந்து இருந்தனர்... இன்ப அதிர்ச்சியாக நட்புடன் ஜமால் வந்து என்னை கட்டி பிடித்து அன்பை பகிர்ந்து கொண்டார்..நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த ஜமாலை சந்தித்துவிட்டேன்...
=========================================
ஞானி வீட்டு கேணி இலக்கிய கூட்டம்..
போனமாதம் முதன் முதலாக கேணி கூட்டத்தில் கலந்து கொண்டேன்...அந்த சூழல் ஏனோ எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது...செல்போனில் குறுந்தகவல் மூலம் எழுத்தாளர் பாமா பேசுவதாகவும் மாலை 4மணி என்றும் தகவல் தெரிவித்தனர்..
பாதியில் போகமால் சரியான நேரத்துக்கு போய்விட்டோம்... மாலை 3,30ல் இருந்தே கூட்டம் வந்து இருக்க வேண்டும்..நல்ல கூட்டம் நான் தண்டோரா , சூர்யா இடம் தேடி அமர்ந்தோம்...
கேணி கூட்டத்தின் ஒரு வருட நிறைவு விழா என்று ஞானி அறிவித்தார்.. அதன் காரணமாக ஒரு ஓரங்க நாடகத்தையும் அரங்கேற்ற போவதாகவும் சொல்ல... அதற்க்கு முன்...எழுத்தாளர் பாமாவை அறிமுகபடுத்தினார்...பெண் எழுத்தாளர் என்று அறிமுகபடுத்தவே தனக்கு பிடிக்கும் இருந்தாலும் அவர் வரலாறு தெரிய வேண்டும் என்பதற்க்காகவும், அவர் கடந்து வந்த பாதையை தெரியபடுத்த அவர் தலித் எழுத்தாளர் என்று சொல்லி அவர் வரலாற்றை தெரியபடுத்தினார்...
வினோதினி என்ற கூத்துபட்டறை கலைஞர் எழுத்தாளர் பாமாவின் சாமியாட்டம் என்ற கதையை ஒரங்க நாடகமாக நடித்து காட்டினார்.. சான்சே இல்லை ரொம்ப அற்புதமான நடிப்பு... அழகான முக பாவங்கள்... நல்ல உடல்மொழி...மிக முக்கியமாக டயலாக் உச்சரிக்கும் போது விளிம்புநிலை மனிதர்களின் பாஷையும் அங்கலாய்பும் அற்புதம்... மிக முக்கியமாக வீட்டு வேலைகள் செய்து கொண்டே அந்த கதையை சற்றும் சொதப்பாமல் ஏற்ற இறக்கத்துடன் அந்த பெண் நடித்து காட்டியது... ஞானியின் அறிமுகத்தின் போது அந்த பெண் பெரிய படிப்பு எல்லாம் படித்து விட்டு நடிப்பு கலையின் மீது உள்ள காதலால் இப்போது நடிகையாக இருப்பதாக தெரிவித்தார்...அந்த பெண் நடிப்பின் வெற்றியை நேற்று மாலை வேலையில் நன்றாகவே ருசித்தார்... எழுத்தாளர் பாமா எழுதிய கதைதான்... இருந்தாலும் அந்த நடிப்பை பார்த்துவிட்டு நாடகத்தின் முடிவில் அந்த பெண்ணை, கண்களில் கண்ணிரோடு கட்டி பிடித்து தன் பாராட்டை தெரிவித்தார் பாமா... முதலில்
கதையில் ஒன்றாமல் இருந்தவர்கள்கூட அந்த நடிப்பின்காரணமாக ஒன்றி நாடகம் முடிவில் நான் உட்பட பலர் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல், கண் கலங்கி இருந்தோம்....அந்த நாடகம் முடிந்த போது கைதட்டல் முடிய நீண்ட நெடிய நேரம் ஆனது... அதன் பிறகு நாடகத்தால் கலங்கிய கண்களுடன் பாமா பேசினார்...
தலித் எழுத்தாளர் என்பதற்க்காகவே பல இடங்களில் தன்னை ஒதுக்கி வைத்து உள்ளார்கள்.. அனால் இந்த நகர பரபரப்பில் என்னை அழைத்து வந்து மரியாதை செய்த ஞானிக்கும் பாஸ்கர் சக்திக்கும் நன்றி கூறினார்...தனது கதைகள் பெண்ணியவிடுதலை சொல்லும் கதைகளாக இருந்தாலும்.. தலித் பெண்கள் இரண்டு சிக்கல்களை சந்திக்கின்றனர்... ஒன்று ஆண்வர்கத்தால் வஞ்சிக்கபடுவது மற்றது தீண்டாமை என்று பேசினார்....அவர்கடந்து வந்த பாதையை அழகாக விளக்கினார்.. இப்போது 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக இருக்கின்றாராம்.. பாமா பேசும் போது மைக் வேலை செய்யவில்லை... இருந்தாலும் தன் கணீர் குரலில் பாடம் நடத்துவது போல் பேசினார்....
கலந்துரையாடல் பகுதியில் பலர் கேள்வியை சுருக்கமாக கேட்காமல் நீட்டி முழங்கினார்கள்...அதில் ஒரு சுவாரஸ்யமான கேள்வியை ஒரு மாணவன் கேட்டான்... என் அம்மா என் அப்பாவுக்கு அடிமையாக இருந்தார்கள்...இப்போது நான் வேலைக்கு போக போகின்றேன்.. எனக்கு என் அம்மா அடிமையாகிவிடுவார்களோ என்று தனக்கு பயமாக உள்ளதாக சொல்ல அதற்கு பாமா அவர்களை அப்படியே விட்டு விட சொன்னார்...
இருப்பினும் நாடகத்தில் நடித்த பெண் வினோதினியிடம் பல கேள்விககள் முன் வைக்கபட்டன.... அந்த பெண் ஒரு கருவி...அன்பே சிவத்தில் கமல் சொல்லுவார்.. நான் ஒரு சுத்தி போல அடிச்சி முடிச்சதும் என் வேலை முடிஞ்சுது... அது போல அந்த பெண்ணும் ஒரு கருவிதான்... ஆனால் பாமாவிடம் கேள்வி கேட்பதற்க்கு பதில் அந்த பெண் சார்ந்த கேள்விகள் அதிகம் முக்கியத்துவம் பெற்றன.... நாடகம் முடிந்தது... அந்த பெண்ணுக்கான பாராட்டாக பத்து நிமிடம் கொடுத்து அவர் பாராட்டையும், கேள்வியை முடித்து விட்டு, அடுத்து பாமா பக்கம் திரும்பி இருந்தால் அவரிடம் கேட்க வேண்டிய நிறைய கேள்விகள் நேரம் காரணமாக தள்ளி வைத்திருக்கவேண்டிய அவசியம் வந்து இருக்காது...
ஒரு ஏற்பாடு செய்யும் போது அதில் சம்பந்தம் இல்லாமல் நுழைந்து இது நொட்டை நொள்ளை என்று சொல்ல என்னால் முடியாது... மேலுள்ளது எனது கருத்து மட்டுமே...
( பட்டபிளை சூர்யாவும்,நானும்)
கூட்ட சுவாரஸ்யங்கள்...
கேணி இலக்கிய கூட்டத்தின் முதல் பெண் எழுத்தாளவிருந்தினர் பாமாதான்...அடுத்தமாதமும் பெண்மணிதன் சிறப்புவிருந்தினர்... பெயர் ஞாபகம் இல்லை...
எல்லாவற்றையும் விட இந்த முறை நல்ல பெண்கள் கூட்டம்... அதே போல் மாணவர் கூட்டமும்...
கூட்டத்தினருக்கும் டீ கொடுத்தார்கள்... அவ்வப்போது நல்ல தண்ணீரும் கொடு்த்தார்கள்...
கூட்டத்தை கட்டுபடுத்தும் வகுப்பு ஆசிரியராக ஞானி இருந்தார்...
போன முறை ஒரு குயில் இந்த முறை மயிலுக்கு பதில் மூன்று காகங்கள் கத்திக்கொண்டே இருந்தன... சட்டசபை பக்கம் போய்விட்டு வந்து இருக்க வேண்டும்... தொடர்ந்து கத்திக்கொண்டு இருந்தன....
சென்னையில் மினிபஸ் என்பதற்க்கு பதில் ஏர்பஸ் என்று காதில் விழுந்து விட்டது போல... விமான நிறுவனங்கள் சலைக்காமல்... வெள்ளோட்டம் விடுவது போல் ஒரு 5நிமிடத்துக்கு ஒருமுறை புவீயிர்ப்பு விசையை ஜெயிக்க பெரிரைச்சலை போட்டுக்கொண்டு தலைக்குமேல் பறந்து தொலைத்தன...
ஞானிவீட்டு முதல் மாடியில் ஒரு பாட்டியம்மா பால்கனியில் வந்து நின்று வேடிக்கை பார்த்துவிட்டு போனார்.. அதன்பிறகுஅவர் மருமகனோ அல்லது மகனோ அதே பாணியில் விசிட் கொடுத்ததார்...
கூட்டம் முடிந்து வெளியில் வாகனம் எடுக்கவந்த கூட்டத்தை பார்த்துவிட்டு பாரா வந்த போலிஸ்காரர் மிரண்டு போய் என்ன? ஏது? என்று விசாரித்து விட்டு கால் பரப்பிக்கொண்டு சைக்கிள் மிதித்து சென்றார்...
நன்றி சொல்லும் போது பாஸ்கர் சக்திக்கு ஒரு துண்டு பிட்டு சிட்டு போனது...அதில் உள்ள கருத்துக்கு உடன்படுவதாக சொன்னார்... அதாவது கூட்டம் நடக்கும் போது வருகை புரிந்தவர்களுக்குள் விவாதம் வேண்டாம் என்றார்...ஞானி, நாடக கதாபாத்திரத்தின் மூலம் கேணியையும் சுத்தபடுத்திக்கொண்டு , வீட்டுக்கு காய்கறியும் நறுக்கிகொண்டார்... என்று நாங்கள் நக்கலாக பேசிக்கொண்டோம்...
என் சங்க தலைவர் உண்மைதமிழன்... நண்பர் லக்கி அவர் நண்பர் அதிஷா கூட்டத்துக்கு வரவில்லை...
நான் எழுத்தாளர் பாமாவின் புத்தகங்கள் இரண்டை வாக்கி்னேன்...
ஞானி திருச்சியில் உள்ள பள்ளி பிள்ளைகளுக்கு நடத்திய ஒர்க்ஷாப்பில் கல் உடைக்கும் தொழிலாளிகள் வாழும் வீட்டை பார்த்து அதில் வசிப்பவர்களுடன் பசங்களை பேச சொல்ல... அவர்கள் தாங்கள் வாழும் பகட்டு வாழ்க்கை நினைத்து வெட்கபட்டு... இதெல்லாம் எப்ப மாறும்னு எனக்கு தெரியாது... நான் இப்ப இவுங்களுக்கு என்ன பண்ண என்று ஒரு மாணவி கேட்டதும்... எல்லா பிள்ளைகளுக்கும் இது போல விளிம்புநிலையில் உள்ள மக்களின் கஷ்டங்கள் புரிய வைக்க அவர்களோடு எல்லா அப்பர் மிடில்கிளாஸ் பசங்களையும் பழக விட வேண்டும்.. என்று சொன்னார்... அது நல்ல முயற்ச்சியாக இருந்தது...அட்லிஸ்ட் உதவி செய்யாவிட்டாலும் அவர்களை நக்கல் விடாமலாவது இருப்பார்கள் அல்லவா?
நன்றி ஞானிக்கும், பாஸ்கர் சக்திக்கும்,டீ தண்ணீர் கொடுத்த வாலாண்டியர்களுக்கும் மிக்க நன்றி... நல்ல மாலை பொழுதை வழங்கியமைக்கு......
அன்புடன்
ஜாக்கிசேகர்
நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...
நேரில் பார்த்த மாதிரி இருக்கு, வர்ணனை
ReplyDeleteஅருமை.
/-- அடுத்தமாதமும் பெண்மணிதன் சிறப்புவிருந்தினர்--/
ReplyDeleteவரவிருப்பது ஆய்வாளர் கீதா. 'காந்தியம் மற்றும் பெரியாரியம்' பற்றிப் பேசப் போவதாக ஞானி அறிவித்தார்.
அன்புடன்,
கிருஷ்ண பிரபு.
நன்றி அண்ணே, நான் அங்கிருந்த மாதிரி இருக்கிறது
ReplyDeleteபகிர்விற்கு நன்றி பாஸ்... ஓட்டு போட்டாச்சு...
ReplyDeleteநல்ல பகிர்வு.. :)
ReplyDeleteஅவரது வலைமனை மூலமாக இப்படிக் கூட்டம் நடத்து வருகிறார் என்று அறிந்திருந்தேன். உங்களுடைய பதிவு அதுகுறித்து மேலும் அறிய உதவியது.
ReplyDeleteநன்றி.
நல்ல தொகுப்புங்க.
ReplyDelete//நண்பர் லக்கி அவர் நண்பர் அதிஷா//
ReplyDeleteஅப்போ அதிஷா ஒனக்கு நண்பனில்லையா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நல்ல தொகுப்பு...நிகழ்ச்சியை நன்றாக COVER செய்திருக்கீர்கள்.
ReplyDeleteநன்றி ஜாக்கி சார்.
//நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...//
இதற்க்கு முன்னாள் இருந்த வாக்கியங்களை விட இது நல்லா இருக்கு.
சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டேன் :)
பி.கு ஓட்டும் போட்டாச்சு..!!!
ஞானியும் பாரதி பக்தர்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதற்கேற்றார் போல் அவருடைய இக்கூட்டத்தில் பாரதி படம் ஒட்டி இருக்கு...
ReplyDeleteவே.மதிமாறன்தொடர்ந்து பாரதிய பற்றி கிழி கிழின்னு கிழிக்கிறார். இந்த ஞானி ஏன் வாயையே திறக்க மாட்டுரார்.
நன்றி சைவ கொத்து பாரோட்டா..
ReplyDeleteநன்றி கிருஷ்ணபிரபு தகவலுக்கு...
நன்றி கே ஆர்பி செந்தில்...
நன்றி பிரசன்னா ராஜன்..
நன்றி அசோக்...
நன்றி அரைக்கிறுக்கன்..
நன்றி விக்னேஷ்வரி...
நன்றி ஸ்ரீராம்..அவரும் என் நண்பரே...
நன்றி சிவன்..சுட்டிகாட்டியமைக்கு..
நன்றி போட்டோ பிளாக்...ஆனால் அது போலான விவாதங்கள்... இந்த இடுக்கையில் வேண்டாம். இது குறித்து வரும் எந்த விவாதமும் வெளியிடப்படாது..
நன்றி
பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteKeni kooduthal patri kelvi pattullen,poga vendum ena ninapen,ponathilai,ungal pathivu nalla arimugam thanthathu.
ReplyDeleteNjani veettu keniyil thanni irukka?(aazham evvalavu?) Kudikka kodutha thannir keni thannira?summa oru pothu arivukkaga ketkiren!
http://www.penniyam.com/2010/06/09052010.html
ReplyDelete