(Devil's Town) 18+ உலகசினிமா செர்பியா/ சமுகத்தின் இன்னொரு முகம்

வெப்கேம் ஸ்கேண்டல்கள் இப்போது வலைதளத்தில் பிரபலம்.... அந்த பெண் பெங்களுர் அல்லது சென்னையாக இருக்க வேண்டும்.... அந்த பெண் ரொம்பவும் அழகு.. அந்த பெண்ணுக்கு அன்றுதான் பிறந்தநாள்... கோவிலுக்கு எல்லாம் போய்விட்டு நெற்றியில் திருநீறு அணிந்து ஸ்டிக்கர் போட்டு எல்லாம் வைத்து ரொம்பவும் மங்களகரமாக இருக்கின்றாள்.... வேலைபாடு செய்யபாட்ட காஸ்ட்லி சுடிதார் அணிந்து இருக்கின்றாள்... அது அவளின் ஹாஸ்டல் ரூம்... காதலனிடம் வெப்கேம் வழியாக அந்த பெண் பேசிக்கொண்டு இருக்கின்றாள்...


அவன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை... கொஞ்சம் தயங்கி அந்த பெண் தன் மார்பகங்களை வெப்கேம் வழியாக காதலனுக்கு காட்ட அந்த காதலன் என்ற போர்வையில் இருந்த அந்த நாய் அதை ரெக்கார்ட் செய்து வெளியிட இப்போது உலகம் முழுவதும் அந்த பெண்ணின் அந்தரங்கம் எல்லோருக்கும் தெரிந்ததாக ஆகிவிட்டது.....இது போலான கயவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றார்கள்... அவர்கள்.. சி்றுமிகளையும் விட்டு வைப்பதில்லை.... இது போல் நடக்கும் பலவிஷயங்களை வக்கிரங்களை இந்த படத்தின் ஊடே போகின்ற போக்கில் சொல்லிவிட்டு போகின்றது இந்த செர்பிய படம் டெவில் டவுன்.....

சாத்தான்கள் வாழும் நகரம்..... பல பேருடைய வாழ்க்கையை சொல்லும் போது அதனை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தி சொல்லி இருப்பது இந்த படத்தின் திரைக்கதை சிறப்பு....

சமுகம் என்பது என்ன? நல்லதும் கெட்டதும் அடங்கியது... எல்லா இடத்திலும் நல்லவைகள் மட்டுமே காணப்பட்டாள்.. உலக சுபிட்சமாகிவிடும்....அனால் அப்படி உலகம் இருப்தில்லை.. இது போலான பேய்களுடனும் சமுகத்தில் வாழ்ந்துதான் தொலைக்கவேண்டும் என்று சொல்ல வந்திருக்கும் படம்


(Devil's Town) 18+ உலகசினிமா செர்பியா படத்தின் கதை இதுதான்...


ஜெலினா இவானா இருவரும் தோழிகள்...ஜெலினா ஏழை... ஜெலினா அம்மா இவானா வீட்டில் வேலை செய்கின்றாள்... இவனா டென்னீஸ் ஆட போகும் போது ஜெலினாவும் அவளோடு டென்னீஸ் கோர்டுக்கு செல்கின்றாள்...ஜெலினாவுக்கு டென்னி்ஸ் விளையாட ஆசை வருகின்றது..ஆனால் டென்னிஸ் ராக்கெட் விலை 200டாலர்... அவளோ ஏழை...அப்பாவிடம் பணம் கேட்க அவரோ போலிஸ் தேடும் குற்றவாளி...இவனாவுடன் நெட்டில் பழக்கம் அகும் ஒருவன் உன்னுடைய அப்பா நான்தான் என்று சொல்லிவிட்டு கொஙசம் கொஞ்சமாக அந்த பெண்ணின் உடையை கழட்ட சொல்லவது... கோழை காதலன் அவன் காதலி மற்றவனிடம் முத்தமிடுவதை பார்த்து ,தற்கொலைக்கு முயல்வது...,கோபமான டாக்சி ஓட்டி கொலை செய்ய துணியும் சின்னவயது பகை, குடும்ப தலைவியாக இருந்து கொண்டு சோரம் போகும் பெண்...
படம் எடுப்பதை வாழ்வின் லட்சியமாக வாழும் இளைஞன்... இப்படி அத்தனை பேரின் கதைகளும் ஒரு புள்ளியில் வருகின்றது.. தீர்வு என்ன படத்தை பார்த்து ரசித்து கொள்ளுங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


நிறைய கதைகள் நிறைய கணவுகள் எல்லாம் ஒரு புள்ளியில் சேருவதாக திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்...

அப்பா என்று சொல்லிவிட்டு உடை கழட்ட சொல்லும் போது.. நமக்கு திக் என்று இருக்கும்...

குடு்ம்பத்துக்காக, பிள்ளைக்காக என்று சோரம் போகும் பெண்கள் இனம் உலகம் முழுவதும் இருக்கின்றது என்பதையும்... அவர்கள் இயலாமையையும் மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றார் இயக்குனர்..

காதலிக்க நேரமில்லை நாகேஷ் போல் ஒரு கேரக்டர் தன் தந்தையிடம் படம் எடுக்க காசு கேட்டு அலைவது நகைச்சுவை...

அதே போல் புல் வெளியில் முயல்கள் தப்பிக்கும் அந்த காட்சி நெகிழ வைக்கும் காட்சி...

வயதான காலத்தில் விலைமாதர்களிடம் போய் பணத்தை கொடுத்து எதையும் செய்யாமல் பார்த்துவிட்டு மட்டும் வருவதை ஒரு பொழப்பாக வைத்து இருக்கும் ஒரு அப்பன்...

போட்டில் டான்கள் உல்லாசமாக பெண்களோடு அனுபவித்துக்கொண்டு இருக்கும் போது அங்கு நடக்கும் கொடுர கொலையும் அதில் தப்பிக்கும் இரு் பெண்கள் அரை நிர்வாணமாக கரை ஏறி குனி குறுகுவதும் அற்புதமான காட்சிகள்...-

இந்த படம் எழாவது சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்டு திரையிடப்பட்டது...

இந்த படத்தின் இயக்குனர் valadimir paskaljevic முதலில் குறும்பட இயக்குனராக இருந்து இவரது படைப்புகளுக்கு பல்வேறு அங்கீகாரம் கிடைத்து உள்ளது....இந்த படம் பல்வேறு விருதுகளை இவருக்கு பெற்றுதந்தது...

இந்த படம் ஏதோ செர்பிய தேசத்தை மட்டும் சொல்கின்றது என்று எடுத்துக்கொள்ள கூடாது.... இது எல்லா நாட்டுக்கும் பொறுந்தும்....படத்தின் டிரைலர்....

குறிப்பு....

நண்பர்களுக்கு... இந்த படத்தின் லிங்க என்னிடம் கேட்க வேண்டாம்... இந்த படத்துக்கு புகைபடம் சேகரிப்பதற்க்குள் தாவு தீர்ந்து விட்டது....படம் அறிமுகபடுத்துவது மட்டும் நம் வேலை...அதே போல் எந்த படத்தையும் நான் டவுன்லோடு செய்து பார்க்கும் பழக்கம் என்னிடத்தில் இல்லை....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

10 comments:

 1. விஞ்ஞான வளர்ச்சியை, தவறான வழியில் பயன்"படுத்து"வோரே அதிகம் போல.

  ReplyDelete
 2. //நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...//

  போட்டாச்சு தல.

  ReplyDelete
 3. ஓட்டு போட்டாச்சு!!!!!!!!!!!!

  ReplyDelete
 4. Jackie-Anna,

  Multiple stories running parellely,
  then joining at fine point..
  Or joined by some common cause..

  Another Bufferfly effect movie like
  our Dasavatharam?.

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம் ஜாக்கி..

  நிஜமாவே செர்பியால அனா இவானோவிச்-னு ஒரு டென்னிஸ் வீராங்கனை இருக்கா.. என்னா ஃபிகரு தெரியுமா.. :-P

  ReplyDelete
 6. நல்ல கொள்கை போங்கண்ணா...

  ReplyDelete
 7. நண்பருக்கு வணக்கம் இது போன்ற சம்பவம் உண்மையல் மதுரயில் நடந்தது பதிக்கபத்ட் பெண் குழந்தை ஒரு காவல்துறை நபர் என்பதால் பிரச்சினை பையனுக்கு மட்டும் எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள் ப்ரொவ்சிங் நிறுவனம் நடத்தியது பெரிய அரசியல் புள்ளி.ஆனால் இதுபோன்ற படங்கள் நம் நாட்டு இளம் பெண்களுக்கு ஒருபாடமாக இருக்கவேண்டும்

  ReplyDelete
 8. ஓட்டு போட்டாச்சண்ணே...

  ReplyDelete
 9. //நண்பர்களுக்கு... இந்த படத்தின் லிங்க என்னிடம் கேட்க வேண்டாம்... இந்த படத்துக்கு புகைபடம் சேகரிப்பதற்க்குள் தாவு தீர்ந்து விட்டது..//

  பாவம் ஜாக்கி அண்ணா, உங்களுக்கு அந்த கஷடம் வேண்டாம், நாங்க இருக்கோம் லிங்க் கொடுக்க.....

  விஜய்,
  மஸ்கட்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner