ஆல்பம்...
சென்னையில் ஒரு மழைகாலம்... நல்ல மழை... இந்த மழை மட்டும் பேயவில்லை என்றால் மக்கள் தவித்து போய் இருப்பார்கள்...வேளச்சேரியில் மழை பெய்த காலையில் ஆந்திரா பெண் ஒருவர் வேலைக்கு போகும் போது அறுந்து கிடந்த மின் கம்பி மிதித்து இறந்துவிட்டார்...அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..மூன்று மாதத்துக்கு முன்புதான் சென்னையில் இருக்கும் காக்னிசென்டில் வேலை மாறுதல் கிடைத்து வந்தாராம்....மாண்டவர் மீண்டதில்லை... இருப்பினும் பக்கத்துவீட்டுபாரர் அந்த பெண் ரோட்டில் மயங்கி விழுந்து கிடப்பதாக நினைக்க அப்புறம்தான் மின் கம்பி மிதித்து இறந்து போனது தெரிகின்றது....நம்ம சென்னை ஆட்கள் வீட்டில் போய் கதவை சாத்தினால் திறப்பதே இல்லை...பால்கனியில் வந்தாவது என்ன நடக்குது என்று பார்க்கும் பழக்கம் இல்லை... இதுவே கிரமமாக இருந்தால் நாலு இளவட்டங்கள் ரவுண்டு கட்டி அங்கு கரண்ட் கம்பி அறுந்து கிடப்பதாகவும் யாரும் செல்ல வேண்டாம் என்றும் லைன் மேன் வரும் வரையில் ஆள் மாத்தி ஆள் காவல் இருப்போம்.. ஆனால் சென்னையில்....பாவம் யாராவது எச்சரித்து இருந்தால் நிச்சயம் அந்த பெண்ணின் இறப்பை தடுத்து நிறுத்தி இருக்கலாம்...
============================
தமிழ் செம்மொழி விழாவுக்கு ஏஆர் ரகுமான் போட்ட பாடல் நன்றாகவே இருக்கின்றது.... அன்று நடந்த நிகழ்வை பொதிகையில் ஒளிபரப்பினார்கள்...அது பல தமிழர்களுக்கு தெரியாது.......
=======================
தப்பு எங்க நடந்தாலும் தப்பு தப்புதான்...மத்திய அரசு மருத்துவமைனைகளில் கலாவதி மருந்துகள் பறிமுதல் செய்யபட்டன.. அப்ப என்ன அர்த்தம்... வாங்கி சாவ போறது பொதுமக்கள்... இவன் மகளையும் மகனையும் அப்பல்லோவில வாங்கின லஞ்ச பணத்துல உடம்பை காட்டிக்குவானுங்க... அப்படித்தானே... அரசு உழியர்கள் அத்தனை பேரும் முதல்வர் உட்பட அரசு மருத்துவ மணையில்தான் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும என்று சட்டம் இயற்றபட வேண்டும்....
==================================
பதவி படுத்தும் பாடு.... முதல்வர் பதவியில் இருந்து மீண்டும் சிபூசோரன் பதவி விலக மறுத்து இருக்கின்றார்.. வரும் 5ம் தேதி முதல்வர் பதவி ஏற்க்க இருக்கு பாஜக என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு இருக்கின்றது....
=========================
சர்க்கார் வாப்பான்னு சென்னை கோவளத்தில் இருக்கும் இஸ்லாமிய மத போதகர் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்து இருக்கின்றது..தர்காவுக்கு வரும் பெண்களை வசியம் செய்வது மற்றும்சிறுவர்களை ஓரினச்சேர்கையில் ஈடுபடவைக்கின்றார் என்பதாக புகார்... போலிஸ் அவருக்கு குறிவைத்து இருப்பதாக இந்த வார நக்கீரனில் செய்தி வெளியாகி உள்ளது... எல்லா மதத்தது சாமியார்களுக்கும் நேரம் சரியில்லை போலும்....
=============================
மிக்சர்........
லைலாபுயலால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து சூட்டை தனித்து இருக்கின்றது... இயற்கைக்கு என் நன்றிகள்....
============
பாராட்டுகள்...
பொதுவாக ஒரு அரசியல்வாதியை பற்றி நம் மனதில் வரும் மதிப்பிடுகள் நம்மை பொறுத்தவரை முகம் சுளிக்க வைப்பதாகவே இருக்கும்....ஆனால் சைதை துரைசாமி நடத்தி வரும் ஐஏஎஸ் இலவச பயிற்ச்சி முகாம் மூலம் வருடா வருடம் பல தமிழர்கள் வெற்றி கொடி நாட்டி வருகின்றார்கள்... இந்த வருடம்146பேர் தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றார்கள்... இவர் நடத்தி வரும் இலவச பயற்ச்சி முகாம் மூலம் தொடர்ந்து தமிழ்ர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிக்கொடி நாட்டிவருகின்றார்கள்.......சைதை துரைசாமி அவர்களின் சேவைக்கு நமது நன்றிகளும் பாராட்டுகளும்....
============================
உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்....
6லட்சத்தி ஐம்பதாயிரம் ஹிட்சுக்கு
===================================
பிளஸ்டூ
இந்தமுறை பிளஸ்டூ மதிப்பெண்களில் கணக்கில் நிறைய பேருக்கு குறைவான மதிப்பெண் என்பதால் நிறைய தமிழக மாணவர்களின் என்ஜினியரி்ங் கனவு கேள்வி குறியாக இருக்கின்றது... அதற்க்கு சென்னை யூனிவர்சிட்டியில் உட்கார்ந்து கொஸ்ட்டின் பேப்பர் தயாரித்த ஒரு சனியன்தான் காரணமாக சொல்கின்றார்கள்... எது எப்படியோ பலரின் கனவோடு ஒரு தனிமனித அதிமேதவித்தனத்தால் எல்லாம் குலைந்து போனது.....
========================
விரலுக்கு தகுந்த வீக்கம்...
பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைக்ளுக்கு ஏத்த கோர்ஸ்களில் சேர்க்கவும்...பொருளாதரத்தை மனதில் வைத்தும் சேர்க்கவும்... என் நண்பி ஒருவள் பைலட்டாக வேண்டும் எனபது சிறுவயது கணவு... லோன் எல்லாம் வாங்கி... நிலத்தை அடமானம் எல்லாம் வைத்து அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் அனுப்பி பைலட் கோர்ஸ் படிக்க வைத்தார்கள்.. எல்லாம் எக்சாமையும் முடித்து தற்போது வேலை தேடிக்கொண்டு இருக்கின்றாள்...வாங்கிய கடன் வட்டி கட்ட முடியாமல் அந்த குடும்பம் தவிக்கி்ன்றது...30 லட்சத்துக்கு மேல் செய்த செலவுக்கு வெறும் பிரியாவாக பிலிப்பைன்ஸ் போய் கேப்டன் பிரியாவாக திரும்பி வந்து இருக்கின்றாள்... அது பணக்காரர்களின் தொழில்....மும்பையில் என் நண்பி வேலைதேடிக்கொண்டு இருக்கின்றாள்... ஏர் இந்தியாவில் பைலட் ஓப்பனிங் எப்போது போடுவார்கள் என்று காத்துக்கொண்டு மும்பையில் கிடைத்த வேலையை செய்து கொண்டு நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றாள்...உதவிக்கு யாரும் இல்லை.. நம்ம பரம்பரையில் வானத்துல அண்ணாந்து பார்த்தே பழக்கம்.... இல்லைன்னா ஒரு வேலை வாங்கி கொடுத்துடலாம்... பார்போம்...யாராவது பைலட் இதை படிச்சா....ஒரு தபா என்கிட்ட பேசுங்க அப்பு... அதனால் பெற்றோர்கள்..நம்ம தகுதிக்கி ஏத்த படிப்பை படிக்க வைக்கவும்....
==============================
மணிரத்னம் சார்....
இராவணன் படத்து தமிழ் டிரைலர் எல்லா சேனலிலும் ஓடுது....மெட்ராஸ்டாக்கிஸ்,பாடல்கள் வைரமுத்து,இசை ஏஆர் ரகுமான்,படத்தின் பேர் எல்லாம் தமிழில் வருகின்றது... மணிரத்னம் பிலிம் மட்டும் ஆங்கிலத்தில்.... இதை குத்தமா சொல்லலை.. டக்னு மனசல பட்டிச்சி...தமிழ்ல மணிரத்னம் படைப்புன்னு சொல்லலாமா?
மணிசார்... இதைகூடவா நோட்பண்ணுவிங்கன்னு என்னை வையாதிங்க....
=====================
டிவி டிரைலர்..
சன்டிவியில சுறா படத்துக்கு எத்தனை வித விதமான விளம்பரம் ஆனா பையா படத்துக்கு கலைஞர் டிவியில எப்ப பார்த்தாலும் சோன்ன்னு பேயற மழை... என்ன பெங்களுர்ல மழையான்னு கேட்டு கேட்டு அலுத்து போச்சி மாத்துங்கப்பு.....
======================
எனக்கு எக்சாம்....
நாளையில் இருந்து நாலு நாளைக்கு தொடர்ந்து பரிட்சை எழுத போறேன்... மதுரை காமராசர் பல்கலை கழக அஞ்சல் வழியில் எம்ஏ மாஸ்கம்யூனிகேஷன் ஜேர்னலிசம் பரிட்சை எழுத போறேன்.. இங்க போருர் டிரங் ரோட்டுல இருக்கற ஹோலி ஏஞ்சல் பள்ளியில் தினமும் மதியம் 2லிருந்து5வரை... அந்த நேரத்தி்ல் யாரும் போன் செய்ய வேண்டாம்...தினமும் டிராப்டில் இருக்கும் பதிவுகள் போஸ்ட் அகும்...நல்லா எழுதனும்னு இந்த 35வயசு மாணவனை வாழ்த்துங்க அப்பு....
==============================
இந்தவார சலனபடம்...
ங்கொய்யால....
============================
அஞ்சலி...
எழுத்தாளர் அனுராதரமனனுக்கு...
அவரின் வாரமலர் அட்வைசுக்கு நான் ரசிகன்..
==========================
பார்த்ததில் பிடித்தது...
ரேஷன் கார்டு மாற்ற ஸ்ரீபெரும்பத்தூர் போய் விட்டு என் பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருத்தேன்... குயின்ஸ் லேன்ட் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பையன் நிழற்குடையில் சாய்ந்து கொண்டு இருக்க அவன் மேல் அந்த பெண் சாய்து கொண்டு இருந்தது... நான் வாகனத்தின் வேகத்தை குறைத்தேன்...அந்த பெண்ணுக்கு தலை எல்லாம் கலைந்து, களைப்பு முகத்தில் கொட்டிக்கிடந்தது... சூட்டின் கதகதப்பு இன்னும் குறையவில்லை போலும்... அந்த பெண் அவன் காதில் ரகசியம் பேசுவாதாக கூப்பிட்டு காதை கடித்து வைத்தது...எனக்கு நம்ம ஊர் பேருந்து நிலையம்தானா என்று சந்தேகம் வந்தது......
===================
சுறா பாடலில் வங்க கடல் எல்லை கோவில் திருவிழா குத்து பாட்டில் ஆடும் வெள்ளை பெண்களில் இருவர் அக்கா தங்கை அல்லது டிவின்சாக இருக்க வேண்டும்...சிறுவயதில் இருந்தே கதாநாயகியை விட பின்னனியில் ஆடும் பெண்களின் மீதுதான் என் கவனம் பதியும்... அதில் சில பெண்கள் ஹீரோயின்களை விட அழகாக இருப்பார்கள்...படத்தில் இரண்டாவதாக பெண்ணாக (பச்சைகலர்)ஆடும் அந்த பெண் நல்ல அழகு...ஒரு ஸ்டேப் ரொம்ப காமெடியாக இருக்கும்...உடை டைட்டாக இருப்பதால் அவளால் நளினமாக ஆட முடியாது... காலை அகட்டி ஆடுவது நன்றாக இருக்கவில்லை....
===================================
ஒரு அசத்தல் நகை விளம்ரம்...
அந்த பெண்ணுக்கு கல்யாண ஆசை இல்லை காரில் அப்பா அம்மாவுடன் பயணம்.. அப்பா கல்யாண பேச்சையும் பையனை பற்றியும் சொல்ல.. மகள் கல்யாணத்தில் இன்ட்டிரஸ்ட் இல்லை என்று சொல்ல... அம்மா வரியில் இருக்கும் நகை கடையில் நிறுத்த சொல்ல... நகை போட்டு பெண்ணுக்கு அழகு பார்க்க .....நகை கடை ஊழியை கல்யணத்துங்ககாக? என்று கேட்க... எங்களுக்கு கல்யாணத்தில் இன்டிரஸ்ட் இல்லை என்று அம்மா சொல்ல.... அந்த பெண் முகத்தை சுருக்கி நகை கழட்டி கொடுத்து விட்டு திரும்ப காரில் பயணபடும் போது... அந்த பையன் பேர் என்ன? என்று அப்பாவிடம் கேட்க அம்மா கணவனை பார்த்து சொல்வாள்... கல்யாணம் ஆயி 25 வருஷம் அகுது இதுவரை பெண்களை புரிந்து கொள்ள தெரியவில்லை என்று சொல்லும் அந்த விளம்பரம்.. அதில் நடித்த பெண்ணின் அழகியலும் உடல் மொழியும் அற்புதம்... அந்த பெண்ணுக்கு நகை போட்டதும் ஒரு எக்ஸ்ரா அழகு வந்து ஒட்டிக்கொள்ளும் பாருங்கள்... இப்போது என் பேவரைட்....
================
ஒரு காமெடி விளம்பரம்....
தேவயானி என்னை குடும்பதலைவியா உணரவைப்பது பொம்மிஸ் நைட்டிஸ் என்று சொல்வது....
============
பிலாசபி பிச்சை...
மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல.... முயற்ச்சி நின்றாலும்தான்...
பரத் எம்பிஏ....
===================
அமெரிக்காவுல ரெண்டு வகையான ரோடு இருக்கும் ஒன்னு நேஷனல் மற்றது இன்டர் நேஷனல்... நம்ம ஊர்ல இரண்டு ரோடு எப்பயும் நீங்க பார்க்கலாம்...
1.. அண்டர் கன்ஸ்ட்டிரக்ஷன்ஸ்
2.டேக் டைவர்ஷன்...
லட்சுமணன்...
================================
ரோட்டுல போறப்ப பாம்பு நம்ம கடிச்சா அது அரேஞ்சுடு மேரேஜ்....
பாம்புகி்ட்டயே போய் என்னை கடி.. என்னை கடின்னு சொன்னா அது லவ் மேரேஜ்...
ராமன்...
=======================
நான்வெஜ்...
ஜோக்....1
பதிவர் மயில் அனுப்பிய குறுஞ்செய்தி...
நடிகர் விஜய் காலேஜ் ஆரம்பித்த என்ன பேர் வைப்பார்...?
டாக்டர் விஜய் மெடிக்கல் காலேஜ் ஆப் என்ஜினியரிங்...
========================
ஜோக்...2
டீச்சர்...
கோழி முட்டை போடுமா? சேவல் முட்டை போடுமா?
பையன்....
சேவல் முதல்ல கோழியை போடும்... அப்புறமா கோழி முட்டையை போடும்.. அந்த முட்டையை சாப்பிட்டு விட்டு காலையில நீங்க வெட்................ போடுவிங்க...
டீச்சர்....
பையன் கன்னத்தில் பளிச்.......
=========================
பையன்கள்..இந்த கேள்வியை பொண்ணுங்ககிட்ட தைரியமா கேட்கும் இடம் எது தெரியுமா? எக்சாம் ஹால்....
கேள்வி... பிளிஸ் கொஞ்சம் காட்டுப்பா....
================
5பேர் திடிர்னு கிங்பிஷர் பிளைட்டுலநுழைஞ்சாங்க...விமானபணிப்பெண்கள் ஆறுபேரும் எதுவுமே கேட்காம டிரஸ் எல்லாத்தை கழட்டி உடம்புல ஒட்டு துணி கூட இல்லாம தரையில முட்டி போட்டாங்க...அதுல ஒரு பெண் கேள்வி கேட்டா?
இது பிளைட் ஹைஜாக்கா? ராப்பெரியா? அல்லது...
மாசத்துக்கு 4வாட்டி நடக்கற யூஷுவல் போர்டாப் டைரக்டர் மீட்டிங்கா?....
=====================
அன்புடன்
ஜாக்கிசேகர்
நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...
செம்மொழி மாநாட்டு பாடல் பற்றிய எனது கருத்துக்கள்:
ReplyDeletehttp://ilakindriorpayanam.blogspot.com/2010/05/blog-post_19.html
உங்கள் பதிவுகள் போலவே உங்கள் பரிட்சையையும் எழுதுங்கள். வாழ்துகள்.
டாக்டர் விஜய் மெடிக்கல் காலேஜ் ஆப் என்ஜினியரிங்...
ReplyDeleteஇது தான் குபுக்.
தல,
ReplyDeleteதப்பா நினைக்காதீங்க...
இந்த நான் வெஜ் ஜோக்கெல்லாம் எங்க இருந்து புடிக்கீறீங்க..எல்லாம் சூப்பரா கீது.
ஒரு ஆர்வக்கோளாறுதான், வேற ஒண்னூமில்லை.......
மனோ
ALL THE BEST TO YOUR EXAMS.
ReplyDeleteMANO
நன்றாக தேர்வு எழுதி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்!!!
ReplyDeletecurrently Mani ratnam has been focusing more on Bollywood thats why this english title.
ReplyDeleteBut boilywood focu is the major reason for his recent failures starting from tiruda tiruda, aayutha eluthu, alaipayuthe, kannathil muthamittal, Guru
நல்ல பகிர்வு ஜாக்கி அண்ணா. தேர்வுகளை சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.
ReplyDeleteall the best for your exams..
ReplyDeleteகலக்கல் பதிவு வாத்யாரே...
ReplyDeleteபரீட்சை நன்றாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்,,,,
தமிழ் உதயன்
Best of luck... Examskku :)
ReplyDeleteகலக்கல் அண்ணாச்சி
ReplyDeleteபாவம் விஜய் விட்டுவிடுங்கள்.
ஜாக்கி,
ReplyDeleteAll the best for your exams...
Don't ask this in your exam hall.... பிளிஸ் கொஞ்சம் காட்டுப்பா :-)
super
ReplyDeleteAll The BEST FOR YOUR EXAMS
ReplyDeleteS.Sakul Hameed
கால் போட்டால் கலாவதிக்கு பிடிக்காதோ?
ReplyDelete//ஏற்க்க அதற்க்கு , மனிரத்னம் , முயற்ச்சி,/
ReplyDeleteஇதுக்கும் சேர்த்து பரீட்சை எழுதவும்.
பாம்பு-கண்ணாலத்து கதை ஜோரு. வோட்டுப் போடுங்கன்னு சொல்லி வோட்டிப் பொட்டிய கொண்டு போயி கொண்டையத்துல வெச்சா எப்படி போடுவாங்க?
பரீட்சை எல்லாம் நல்லா எழுது ஜாக்கி, வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
கலக்கல் ஜாக்கி. பரிட்சைல்லாம் நல்லா எழுதுங்க.
ReplyDeleteஅனைத்து செய்திகளும் அருமை. நல்லாயிருக்கு இந்த சாண்ட்விச்
ReplyDeleteசாண்ட்வெஜ் - பிழை திருத்துங்க ஜாக்கி. :-)
All the very best!
ReplyDeleteAll the best for your exams!
ReplyDelete/// அதற்க்கு சென்னை யூனிவர்சிட்டியில் உட்கார்ந்து கொஸ்ட்டின் பேப்பர் தயாரித்த ஒரு சனியன்தான் காரணமாக சொல்கின்றார்கள்... ///
ReplyDeleteI strongly disagree with your point...
ஆட தெரியாதவ தெரு கோணல்னு சொன்னமாதிரி இருக்கு நீங்க சொல்றது...
படிக்க வேண்டிய காலத்துல படிக்காம, கொஸ்ட்டின் பேப்பர் தயாரிச்சவர திட்டறது சரியில்ல...
அதுவும் எதாவது ஸ்டுடென்ட் திட்டினா கூட ஒத்துக்கலாம்...
எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் தோணுது?
என்னதான் கொஸ்டின் பேப்பர் கஷ்டமா இருந்தாலும் இதிலையும் ௨௦௦ வாங்கினவங்க இருக்காங்க...
அதேமாதிரி இது எல்லோருக்கும் பொதுவான கொஸ்டின் பேப்பர் மார்க் போனா எல்லோருக்கும் போகும்... அதனால எல்லோருக்கும் cut-off குறையும்... இன்ஜினியரிங் காலேஜ் அட்மிசன் cut-off mark அ வச்சுதான் நடக்கும்...
இப்போ +2ல படிக்கிற எல்லோருக்கும் இன்ஜினியரிங் காலேஜ்ல இடம் இருக்கு...
அதேமாதிரி இந்த எக்ஸாம்ல பெயில் ஆனவங்களுக்கும் உடனே எக்ஸாம் வச்சி அவங்களையும் இந்த வருசத்திலிருந்தே காலேஜ்ல செர்த்துக்கறாங்க...
கொஸ்டின் பேப்பர் தயாரிச்ச ஒரே காரணத்துக்காக நீங்க அவர சனியன்னு சொல்றத என்னால ஏத்துக்க முடியல...
---எனக்கு அவ்வளவா உங்கள மாதிரி எல்லாம் எழுத தெரியாது.. எதோ என்னால சொல்லிருக்கேன்...
எக்சாம் நல்லா எழுதுங்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅண்ணே பழக்க தோஷத்தில் பிட் ஏதும் அடிச்சி மாட்டிகாதிங்க .. ஹி ஹி ஹி
ReplyDelete//தமிழ் செம்மொழி விழாவுக்கு ஏஆர் ரகுமான் போட்ட பாடல் நன்றாகவே இருக்கின்றது.... //
ReplyDelete........!!!!!!!!!!!!!!!!!!!!
ஸ்ருதி ஹாசன் ஹாட் - Sruthi Hasan Hot http://cinema-gallary.blogspot.com/2010/05/sruthi-hasan-hot.html
ReplyDeleteDear Seker,
ReplyDeleteஎக்சாம் நல்லா எழுதுங்க வாழ்த்துக்கள்.
With prayers,
Roshma.
தேர்வு நன்றாக எழுதவும்....வாழ்த்துக்கள்....
ReplyDelete//அதேமாதிரி இது எல்லோருக்கும் பொதுவான கொஸ்டின் பேப்பர் மார்க் போனா எல்லோருக்கும் போகும்... அதனால எல்லோருக்கும் cut-off குறையும்... இன்ஜினியரிங் காலேஜ் அட்மிசன் cut-off mark அ வச்சுதான் நடக்கும்... இப்போ +2ல படிக்கிற எல்லோருக்கும் இன்ஜினியரிங் காலேஜ்ல இடம் இருக்கு...
ReplyDeleteஅதே!!!
அந்தப்பேப்பர் கடினமாகயிருந்தது முன்னமையே தத்தம் ஆசிரியர்களிடம் முறையிட்டிருக்கலாமே!
அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
ஆமா கிங்ஃபிஷர்ல இப்படியெல்லாம நடக்குது. இருக்கலாம் இந்த மல்லையாவ நம்பமுடியாது.
ReplyDeleteபரீட்சை நன்றாக எழுத வாழ்த்துக்கள்.
ஆமா கிங்ஃபிஷர்ல இப்படியெல்லாம நடக்குது. இருக்கலாம் இந்த மல்லையாவ நம்பமுடியாது.
ReplyDeleteபரீட்சை நன்றாக எழுத வாழ்த்துக்கள்.
ஆமா கிங்ஃபிஷர்ல இப்படியெல்லாம நடக்குது. இருக்கலாம் இந்த மல்லையாவ நம்பமுடியாது.
ReplyDeleteபரீட்சை நன்றாக எழுத வாழ்த்துக்கள்.
என் தம்பியும் Serbia போய் Pilot Course முடிச்சிட்டு வேலைக்காக அலைஞ்சிகிட்டு இருக்கான் .யாராவது வேலை இருந்த சொல்லுங்கப்பா
ReplyDeleteநன்றாக தேர்வு எழுதி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்!!!
ReplyDelete