சிங்கம்.. அயன் படத்துக்கு பிறகு சன் குழுமத்துக்கு வெற்றிபடம்

அயன் படத்துக்கு பிறகு சன்குழுமத்துக்கு பேர் சொல்லிக்கொள்ளும்அளவுக்கு ஒரு வெற்றிபடம்...இப்போது வெளியாகி இருக்கும் சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம்...இது போலான படங்களை நீங்கள் 230வது தடைவையாக கூட நீங்கள் பார்த்து வைக்கலாம்...ஒரு பக்கா கமர்ஷியல் படம் இந்த படம்..... அதில் எந்த மாற்று கருத்தும் சொல்லமுடியாது... ஆனால் கதையை ரொம்ப விறுவிறுப்பாக சொல்லி இருக்கின்றார்கள்....

இந்த படத்தை நான் பார்க்க நினைத்த முதல் காரணம் அனுஷ்கா டிரைலரில் காதல் வந்தாலே பாடலில் எந்த ரியாக்சனும் இல்லாமல் சட்டென் சூர்யாவை பார்த்து கண் அடிப்பதும், உதடு குவித்து முத்தா கொடுப்பதும் ஏனோ எனக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது.. டேய் இதேல்லாம் ஒரு காரணமா என்று யாரும் கேட்க கூடாது.. நான் சொல்லிடுவேன் பலபேர் சொல்ல கூச்சபடுவாங்க அப்புடுத்தேன்...

சாமி படத்துக்கு பிறகு ஹரி இயக்கிய எந்த படத்தையும் நான் தியேட்டரில் போய் பார்த்தில்லை...

சிங்கம் படத்தின் கதை இதுதான்....

துரைசிங்கம் (சூர்யா)தூத்துக்குடியில நல்லூரில் எஸ் ஜ ... சொந்த ஊரில் வேலை குடும்பத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் வாழ்கின்றார்...சென்னைதாதா மயில்வாகனன்(பிரகாஷ்ராஜ் )ஒரு கேஸ் விஷயமா சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்து கையெழுத்து போட சோம்பேறிதனம் பட்டுகிட்டு அவர் பேருல வேற ஒருத்தன் கையெழுத்து போட.. பிரகாஷ்ராஜ் இன்னுடம 3 மணி நேரத்துல பிளைட்டை பிடிச்சாவது இங்கவந்து கையெழுத்து போடனும்னு சூர்யா சொல்ல அங்க ஆரம்பிக்குது வினை... வினை...அதே ஊருக்கு லீவுல நாசர் பொண்ணுங்கஅனுஷ்க்கா (காவ்யா)மற்றும் அவர் தங்கை வர.. அங்கே சூர்யாவுடன் காதல்...இப்படியா போவுது கதை... இதை இப்படியும் சொல்லலாம்....

இப்படி சொல்லாம... கீழ இருப்பது போலவும் சொல்லலாம்...எப்படி?

துரைசிங்கம்னு ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி.. எப்படி படிபடியா அசிஸ்டென்ட் கமிஷ்னர் அளவுக்கு வளருகின்றார் என்பதே கதை....
படத்தின் சுவராஸ்யங்களில் சில.....

வழக்கமான திரைக்கதை...ஆனால் அதை கொடுத்த விதத்தில் சற்றே வித்தியாசபடுத்தி 2மணி நேரத்துக்கு மேல் நம்மை உட்கார வைக்கின்றார்...

உதாரணமாக செல்போன் மூலம் சில விஷயங்கள் திரைக்கதையில் சின்ன சின்ன டுவிஸ்ட்டாக வைத்து இருக்கின்றார்...

கமர்ஷியல் படம் கத்துவார்கள் என்று தெரிந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே கத்தி வைக்கின்றார்கள்.....

சூர்யாவின் மிடுக்கும் போலிஸ் உடையில் ஓடும் ஓட்டமும் ஒரு உண்மை போலிஸ்காரனை கண்முன் நிறுத்தி வைக்கின்றார்...முக்கியமா ஸ்டேஷனுக்கு வரும் பைக் சீன்...செம மேன்லினஸ்...வசனம் அதிகமா பேசி இருக்கின்றார்... இருந்தாலும் பல வசனங்கள் அட போட வைக்கின்றது..சிலது சினிமாதனமாக இருக்கின்றது...


கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை ஒரு பாடலை தவிர மற்ற பாடல்களில் சிட்டி வாசனை மூக்கை துளைக்கின்றது..

அனுஷ்கா காதல் காட்சிகளில் நன்றாகவே சோபிக்கின்றார்... பெரிய இடுப்பும் சின்ன தொப்புளுமாகஇருக்கும் அந்த இடுப்பு பிரதேசம் 360டிகிரிக்கு வளைந்து நெளிந்து அது என்னவல்லாமோ செய்கின்றது....

அனுஷ்காவின் காஸ்ட்டியும்களில் நன்றாக இருப்பது காதல் வந்தாலே சாங்கில் ரோஸ் கலரில் இருக்கும் ஒரு காஸ்ட்டியூம்...அற்புதம்...
அந்த சாங்கில் நிறைய ரிகர்சல் எடுத்து ஆடி இருக்க வேண்டும்...கழுத்து, முதுகு, இடுப்பு என எல்லா இடத்திலும் இருக்கும் வியர்வை உழைப்பை சொல்கின்றன...

அனுஷ்காவிற்க்கு ஒரு சில காட்சிகளில்ஒன்னுமே இல்லாதது போல் இருக்கின்றார்.. ஒரு சில காட்சிகளில் உருண்டு திரண்டு இருக்கின்றார் எப்படி என்று தெரியவில்லை...

வழக்கம் போல் தமிழ்சினிமாவின் அக்மார்க் முத்திரையாக சுமோ வாகனம் அடியாளின் வாகனம்தான் என்று 837வது முறையாக காட்சிபடுத்தபட்டுள்ளது...இந்த படத்துல சுமோ டாப்பே எகிறுகின்றது....

பிரகாஷ்ராஜ்... பொதுவாக கதநாயகன் எல்லா இடத்திலும் ஜெயிப்பான்.. வில்லன் முழிப்பான்.. ஆனால் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் கேரக்டருக்கு நல்ல ஸ்கோப்...தூத்துக்குடியில் கையெழுத்து போட வந்த இடத்தில் ஊர்காரர்கள் எகிறும் போது இவன் என்னப்பா ஒரே பில்லடப்பா இருக்கே என்று புலம்பும் போது மனதில் நிற்கின்றார்....


விவேக் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றார்...படத்தின் ரிலிப்இவர்தான்...எரிமலை எப்படி வெடிக்கும் சாங்.. சில இடத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகின்றது...

படத்தின் உச்சபட்ச காமெடி என்னவென்றால் என்னதான் சூர்யா பல சாலி என்றாலும் பீச்சில் அனுஷ்காவுடன் பேசி அடுத்து நடக்கும் ஒரு பைட்டில்... பஞ்சு மூட்டையை தூக்கி பின் பக்கம் போடுவது போல் அநாயாசமாக ஒருவனை தூக்கி போட்டு விட்டு நடந்து வருவார்...

அடியாளை அடிக்கும் போது சூர்யா ஆம்ஸ் காட்டுகின்றார் அதனால்ஏதோ கொஞ்சம் நம்பிக்கை வருகின்றது....

தமிழ் சினிமாவில் நண்பனுக்காக இறந்து போகும் பாத்திரத்தில் நடித்து அழிய புகழ் பெற்ற சந்திரசேகர் இடத்தை பிடிக்க ஒரு ஆள் வந்து விட்டார் அவர் மெட்டி ஒலி போஸ்... இந்த படத்திலும் கழுத்து அறுபட்டு சாகின்றார்....

படத்தின் ஆரம்பித்தில் வரும் ஐயனார் கோவில் செட் போட்டு அதில் ஒரு சண்டை காட்சியிம்... சில சீன்களையும் எடுத்து இருக்கின்றார்கள்...

பிரியன் ஒளிப்பதிவும், உழைப்பும் படம் நெடுகிலும்...தெரிகின்றது... நிறைய ஷாட் வைத்து இருக்கின்றார்கள்...

இந்த படத்தை பரபரபப்பாக ஒரு கமர்ஷியல் மசாலாவாக தொய்வு இல்லாமல் உட்கார வைப்பது எடிட்டிங் விடிவிஜயன்

இசை தேவிஸ்ரீபிராசாத்... இளமை துடிப்பை படம் நெடுகிலும் அலைய விட்டு இருக்கின்றார்...

ஹரி இந்த படத்தை கொஞ்சம் விறுவிறுப்பாகவே கொடுத்து இருக்கின்றார்... கொஞ்சம் கத்தலையும் அடிதடியை குறைத்து இருந்தால் இன்னும்சூப்பராக இருந்து இருக்கும்...

சூரியாவின் 25வது படம்....அதகளமாய் வந்து இருக்கின்றது...கொஞ்சம் சீற்றத்தை குறைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்...

ஆனால் பார்க்கலாம்...

படத்தின் டிரைலர்...படக்குழுவினர் விபரம்....
Directed by Hari
Produced by K. E. Gnanavel Raja
Starring Surya Sivakumar
Anushka Shetty
Prakash Raj
Nassar
Vivek
Music by Devi Sri Prasad
Cinematography Priyan
Editing by V. T. Vijayan
Studio Studio Green
Distributed by Sun Pictures(India)
Ayngaran International
(Worldwide)
Release date(s) 28 May 2010
Country India
Language Tamil
udget 15

தியேட்டர் டிஸ்க்கி....

இந்த படத்துக்கு பதிவர் நித்யா இரண்டு டிக்கெட் புக் செய்து வைத்து இருந்தார்... கடைசி நேரத்தில் அவர் வீட்டில் ஏசி பிட்டிங் செய்து கொண்டு இருந்த காரணத்தால் அவர் வரவில்லை....அதனால் ஒரு டிக்கெட்டை ஆட்டோ காரரிடம் விற்று விட்டேன்......

வெயில் அதிகம் இருந்த காரணத்தால் லேட்டாகதான் மக்கள் வந்தார்கள்...புது படம் முதல்நாள் ஆனால் பெரிய விசில், கைதட்டல்,பூ தூவுதல் எல்லாம் இல்லை...

நான் 3மணி ஷோவுக்கு போய் இருந்தேன்... எல்லாம் காலையிலேயே நடந்து முடிந்து விட்டதா அல்லது தியேட்டர் நிர்வாக கெடுபிடியா.. அல்லது 75 ரூபாய் டிக்கெட் விலை உயர்வா என்று தெரியவில்லை....

ஒரு ரோ முழுவதும் கல்லூரி மாணவிகள்... காக்க காக்கபடம் வந்த போது சூர்யாவை ஆதர்ச புருசனாக நினைத்துகொண்டவர்கள் போலும்....சூர்யா வந்த போது எல்லோர்வாயிலும்பல் தெரிந்தது.. சில பெண்கள் உற்சாகமாக கைதட்டினார்கள்...


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

21 comments:

 1. உங்கள் விமர்சனம் அருமை..
  திரை படத்தை பார்க்க தூண்டியுள்ளது .....

  ReplyDelete
 2. ரொம்ப நல்லா இருக்கு விமர்சனம். ( anuska மேல ஏக்கம் அதிகமா இருக்கு போல )
  கீப் இட் அப்.
  சரவணன்,
  குரும்பலூர்.

  ReplyDelete
 3. //டேய் இதேல்லாம் ஒரு காரணமா என்று யாரும் கேட்க கூடாது.. நான் சொல்லிடுவேன் பலபேர் சொல்ல கூச்சபடுவாங்க அப்புடுத்தேன்...
  //

  :))

  ReplyDelete
 4. ஓம் அனுஷ்காய நமஹ

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம்.. அனுஷ்காவுக்காவே பார்க்கணும் போல இருக்கே...


  www.narumugai.com

  ReplyDelete
 6. ரைட்டு, பாத்துடுவோம் தல.

  ReplyDelete
 7. படத்தை விட உங்க விமர்சனம் சூப்பரா இருக்கும் போல

  ReplyDelete
 8. //நான் சொல்லிடுவேன் பலபேர் சொல்ல கூச்சபடுவாங்க அப்புடுத்தேன்...//

  ஹிஹி நானும் உங்களை மாதிரி தான். அம்மணி உதட்டைச் சுழிக்கும்போது ஒரு கிள்ளு கிள்ளி உம்மா கொடுத்துடுவேன் :-)))))))))

  ReplyDelete
 9. //"சிங்கம்.. அயன் படத்துக்கு பிறகு சன் குழுமத்துக்கு வெற்றிபடம்"//

  ரொம்ப நாள் கழித்து வெற்றி

  ReplyDelete
 10. //தமிழ் சினிமாவில் நண்பனுக்காக இறந்து போகும் பாத்திரத்தில் நடித்து அழிய புகழ் பெற்ற சந்திரசேகர் இடத்தை பிடிக்க ஒரு ஆள் வந்து விட்டார் அவர் மெட்டி ஒலி போஸ்... இந்த படத்திலும் கழுத்து அறுபட்டு சாகின்றார்//

  //வழக்கம் போல் தமிழ்சினிமாவின் அக்மார்க் முத்திரையாக சுமோ வாகனம் அடியாளின் வாகனம்தான் என்று 837வது முறையாக காட்சிபடுத்தபட்டுள்ளது...இந்த படத்துல சுமோ டாப்பே எகிறுகின்றது....//

  மிகவும் ரசிக்கும்படியான நடை உங்களுடையது என்பதற்கு இவையே சாட்சி.

  ReplyDelete
 11. டேய் இதேல்லாம் ஒரு காரணமா என்று யாரும் கேட்க கூடாது.//// அப்படிதான் கேட்பேன்..


  ஒட்டு போட்டு தொலைச்சிட்டேன்..

  ReplyDelete
 12. ரொம்ப நல்லா இருக்கு விமர்சனம்

  ReplyDelete
 13. director said...
  ரொம்ப நல்லா இருக்கு விமர்சனம். ( anuska மேல ஏக்கம் அதிகமா இருக்கு போல )
  கீப் இட் அப்....

  JUST கீப் இட் J!

  NICE REVIEW

  காதல் வந்தாலே பாடலில் எந்த ரியாக்சனும் இல்லாமல் சட்டென் சூர்யாவை பார்த்து கண் அடிப்பதும்....HMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

  ReplyDelete
 14. போட்டாச்சு ஓட்டு
  puthiya-tamilan.blogspot.com

  ReplyDelete
 15. காதல் வந்தாலே பாடலில் எந்த ரியாக்சனும் இல்லாமல் சட்டென் சூர்யாவை பார்த்து கண் அடிப்பதும்....HMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
  போட்டச்சு போட்டச்சு

  ReplyDelete
 16. ///டேய் இதேல்லாம் ஒரு காரணமா என்று யாரும் கேட்க கூடாது.. நான் சொல்லிடுவேன் பலபேர் சொல்ல கூச்சபடுவாங்க அப்புடுத்தேன்...///


  :)

  ReplyDelete
 17. அண்ணே பாட்டுல அனுஷ்கா உடம்பு கலர் கலரா தெரிஞ்சதே அது ஏண்ணே ? எந்த பாட்டுனு கூட மறந்து போச்சு..

  அனுஷ்கா - ஆடியோ ரிலீஸ் அப்ப ஹரி சார் தான் எனக்கு நல்ல டீசண்ட டிரஸ் போட்டு பாட்டுல ஆட சொன்னாருனு சொன்னாங்க.. அந்த டீசண்ட் இதானா ?

  உங்களுக்கும் கலர்தானா?

  ReplyDelete
 18. தென்காசியில ரிலீஸான இரண்டாம் நாள் பார்த்தேன். ஹவுஸ்புஃல். எங்க ஊர் பக்கம் எடுத்த படம். சர்தாஜி லாரிய லவட்டிகிட்டு போவாறே அந்த சீன் நான் குடியிருக்கும் பகுதிக்கு வெகு அருகில் எடுத்தது. புட்பால் மேட்ச் நான் படித்த பள்ளியின் மைதானம்.போரடிக்காமல் இருந்தது. அனுஷ்கா உயரம்தான் சூர்யாவுக்கு ப்ராபளம்.

  ReplyDelete
 19. அனுஷ்கா டிரைலரில் காதல் வந்தாலே பாடலில் எந்த ரியாக்சனும் இல்லாமல் சட்டென் சூர்யாவை பார்த்து கண் அடிப்பதும்,


  அதே,, அதே

  ReplyDelete
 20. ஜனவரி 2008 முதல் ஏர் டெக்கான் ப்ளைட்கள் எல்லாம் கிங்க்பிசர் ஆகிவிட்டதே? அவ்வளவு பழைய படமா? விஜய் நடிக்க ஆரம்பிச்சதா?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner