சாண்ட்வி்ச் அண்டு நான்வெஜ்18+(11•05•2010)

ஆல்பம்...

என்வழிதளத்தில் ஒரு செய்தி... முதல்வரும் துணை முதல்வரும் அண்ணா சாலையில் சிக்னலில் மக்களின் வாகனங்களின் ஊடே நின்று சென்றதாக செய்தி வெளியானது... இது இப்படியே தொடருமா அல்லதுதேர்தல் நேர ஸ்டன்டா என்று தளத்தில் சிலர் கேள்வி எழுப்பி இருந்தார்கள்... அதில் ஒருவர் நான் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஒரு இடத்தை கடக்க மக்கள் எப்படி பாதிக்கபடுகின்றார்கள் என்று எழுதி இருந்தேன்... அந்த கடிதம் துணைமுதல்வர் ஸ்டாலினுக்கும் அனுப்பி வைக்கபட்டது... அதை பார்த்து கூட இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று மணி என்று ஒரு வாசகர் எழுதி இருந்தார்....ஏனெனில் முதல்வர் சென்னை சாலையில் பயணிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை சமீபத்தில் நான்தான் எழுதி வந்தேன்..அம்மா ஆட்சியை கம்பெர் செய்யும் போது இது சில நிமிடங்கள்தான் என்று அந்த கடிதத்தில் நான் குறிப்பிட்டு இருந்தேன்... எப்படி இருந்தாலும் மாற்றம் வந்தால் சரி...செய்தியை எனக்கு போனில் சொன்ன மும்பை வாசக நண்பர் தீபக்கிற்க்கு என் நன்றிகள்.. என்வழிகட்டுரை வாசிக்க...கிளிக்கவும்

====================================

நாடளுமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசாமல் இவனுங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ள அடுத்து ஒரு மேட்டர் கிடைத்துவிட்டது..உள்துறை அமைச்சக விவகாரத்தில் கருத்து சொன்ன அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ..அமைச்சரை பிரதமர் கண்டித்து இருக்கின்றார்..(வாயவச்சிக்கினு சும்மா இருக்கமாட்டிங்களோ)இப்போது பதவி விலக சொல்கிறது பாஜக... முன்பு கிரிக்கெட் விவகாரம்... இப்போது இந்த விவகாரம்... நடத்துங்கடே...

====================================

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக கடந்த ஞாயிறு அன்று சுனாமி எச்சரிக்கை விடபட்டது... சரியாக ஒரு மணி நேரத்தில் ஞாயிறு அன்று மெரினாவில் கட்டுக்கடங்காமல் இருக்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஒரு மணிநேரத்தில் காலியாகி விட்டது.. கடற்கரை வெறிச்சோடிகாணப்பட்டது...சுனாமிவரவில்லை ஆனால் ஒரு மணிநேரத்தில் மெரினா கடற்கரையை காலி செய்தது சாதாரணவிஷயம் இல்லை..... அந்த வேகமும்... அதற்கு முயற்ச்சி எடுத்த காவல்துறை நண்பர்களுக்கு என் நன்றிகள்... இந்த அலர்ட் எப்போதும் தேவை ஏன் என்றால் இயற்க்கையை மிகச்சரியாக கணிக்க எந்த கொம்பனாலும் முடியாது...

=============================
நன்றியும் பாராட்டும்....
டாக்டர் ருத்ரன்அவர் பதிவில் புதிய சட்டசபைதிறப்பு விழாவுக்கு சட்டசபையில் ரெண்டு கோடி செட் போட்டு மக்கள் பணத்தை வீணாக்கியதற்க்கு பதில் சென்னையில் மனநல மருத்துவமனையை சீரமைக்கலாம் என்று சொல்லி இருந்தார்.. உண்மைதான்... ஆனால் சென்னை தெருக்களில் அனாதையாக, மனநலம் குன்றி மலத்தில் பிரண்டு நிர்வாணமாக தெருவில் நடக்கும், மன நலம் குன்றியவர்களை மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு புதுவாழ்வு கொடுத்து இருக்கின்றார்.. சென்னை மெயர்... அப்படி வந்தவர்களை சிறப்பாக பார்த்துக்கொள்ளும் உழியர்களுக்கு சிறப்பு பரிசையும் அறிவித்து இருக்கின்றார்....நன்றி சென்னை மேயர்...
================================
மிக்சர்...
அன்னையர் தினத்தன்று அம்மா பற்றி அன்புள்ள அம்மாவுக்கு என்று ஒரு இடுக்கை எழுதி இருந்தேன்... அதற்க்கு போனிலும் சாட்டிலும் மெயிலிலும் தொடர்பு கொண்டு கண்கள் கலங்கியதை பகிர்ந்து கொண்ட போது.... என் கண்களும் கலங்கியது...அந்த இடுக்கை எழுதிய இரண்டு நாட்களும் என் அம்மாவை பற்றிய அதிக நினைவுகளோடு இருந்தேன்...சந்தோஷங்களையும் ,நெகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு என் நன்றிகள்...
அன்புள்ள அம்மாவுக்கு... இடுக்கை வாசிக்க..

==================================

இரண்டு விளம்பரங்கள்.....

ஒரு பையன் குழந்தை எங்க இருந்து வருகின்றது என்று கேள்வி கேட்க...? அம்மா வாயடைந்து போய் சட்டென சுதாரித்து நீ வளர்ந்ததும் சொல்றேன் என்று சொல்ல... அதற்கு பிள்ளை டேபிளில் உள்ள கவின்ஸ் மில்க்கை குடித்து விட்டு உதட்டு மேல் புறத்தில் பால் ஒட்டியபடி ... இப்ப சொல்லு என்று கேட்கும் விளம்பரம் ஒரு கவிதை...அந்த பாலை குடித்தால் உடனே வளர்ந்துவிடுவார்களாம்...
================
பேருந்தில் பெண்கள் பக்கத்தில் உள்ள காலி சீட்டில் ஒரு இளைஞன் உட்கார அவனை திட்டும் பெண்ணிடம் சின்னவயசு பையன் என் பக்கத்துல உட்கார்ந்துட்டான்னு பொறாமையா? எனும் கேள்வி 50/50பி்ஸ்கட் விளம்பரம்...

===================================
88வது வட்டம் ராயபேட்டை அருகே வாசுதேவன் என்ற எம்சி குப்பை கொ்டும் இடங்களில் இது போல போஸ்டர் ஒட்டி வைத்து இருக்கின்றார்....பாராட்டுக்கள்..
=====================================
நிழலின் அருமை...வெயிலில் தெரியும்...

கருரில் ஒரு கல்லூரி மாணவ மணிகளிடம் மரம் வளர்க்க ஆர்வம் ஏற்படுத்துகின்றது... இதுவரை அந்த கல்லூரிமாணவர்கள்.. பல லட்ச மரகன்றுகள் நட்டு உள்ளதாக சில வாரங்களுக்கு முன் ஜுவி செய்தி வெளியிட்டது.. பெயர்மறந்து விட்டது... மன்னிக்கவும்... அதே போல் எல்லா கல்லுரிகளும் இது போலான விழிப்புனர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்த வேண்டும்...
================================
வாழ்த்துக்கள் சென்னை போத்திஸ்.....

வியாபரம் மட்டுமே குறிக்கொளாக இல்லாமல் சமுக அக்கறையோடு செயல்படும் நிறுவணங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்... அந்த வகையில் சென்னை போத்திஸ் துணிக்கடை..வரும் வாடிக்கையாளருக்கு மரங்களை இலவசமாக கொடுத்து மரம் வளர்க்க உற்சாகபடுத்துகின்றது...

நன்றி சன்மியூசிக்...
பொதுவாக பாடல் சம்பந்தபட்ட படத்தின் பெயரை மட்டுமே போட்டுக்கொண்டு இருந்தார்கள்.. இப்போது அந்த பாடலின்... இசையமைப்பாளர்,கவிஞர், பெயர்களை போடுகின்றார்கள்..இது இரண்டும் ரேடியோவாக இருந்தால் ஓகே... விஷுவலாக டிவியில் வரும் போது அந்த பாடலில் கேமராமேன் பெயரையும் ஆர்ட் டைரக்டர், பெயரையும் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் ஒரு பாடல் ரசிக்கும் படி ஒளிப்பதிவு செய்தால்தான் பாடலை பார்க்கமுடியும்.. இது ஒன்றும் ஒரு பெரிய கம்பசூத்திரமான வேலை இல்லை.... ஒரு மாதத்தில் செய்து விட முடியும்...செய்யுமா? சன்மியூசிக்...
============================
இந்தவாரசலனபடம்... அடங்கொய்யால இதுக்குதான் இத்தனை அலப்பரையா?


==================================
பார்த்ததில் பிடித்தது...

நான் போத்திஸ் எதிரே உள்ள துரைசாமிசப்வே விழியாக வந்துடாடா உடுப்ப்பி ஓட்டல் வந்து லெப்டு திரும்பினால் ஒரு எஸ்பிஜ எடிஎம் இருக்கும் ஒரு நண்பர் என்னை அங்கே வெயிட் பண்ண சொன்னார்...ஒரு பெண் சற்று தூரத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தாள்.. அவள் உடையின் காண்ட்ராஸ்ட் கலர்,அவள் தோலின் கலர் எல்லாம் ஒரு அக்மார்க் மாம்பலவாசி என்பதை உணர்த்தியது..அவளின் அலட்டல் எனக்கு பிடித்து போனது அவளை பார்க்க ஆரம்பித்தேன்...அவள் ஏடிஎம் போக வேண்டும்... நான் பார்பது தெரிந்தும் நடையில் ஒரு குதிரை நடை வந்து ஒட்டிக்கொண்டது....என்னை சைடில் பார்த்து்கொண்டே ஏடிஎம்மை தாண்டி போய்விட்டாள்... போய் சட்டென நின்றவள்... இந்தனை வருசமா இங்க இருந்த ஏடிஎம் எங்கே என தேட எனக்கு ஒரே சிரிப்பு... நான் சிரிப்பதைபார்த்ததும் இன்னும் கோபம் வந்து அப்புறம் கண்டுபிடித்து....உள்ளே போனவள் வெளியே வர வெகு நேரம் பிடித்தது.. ஒரு வெட்கமாக இருக்ககலாம் அல்லது பூச்சாண்டி என்ற பயமாகவும் இருக்கலாம்.. அதற்குள் நண்பர் வந்து விட்டார்..

==========================================
பிலாசபி பிச்சை.....

நீங்க 100சதவீதம் ரூல்சை பாலோ செய்தால் உங்களிடம் எந்த உற்சாகமும் வந்து ஓட்டிக்கொள்ளது...
===========
ஒரு உயிர் உயிரோடு இருக்கும் போது இருக்கும் மதிப்பை விட இறந்தபிறகுதான் அதுக்கு மதிப்பு அதிகம்... உதாரணத்துக்கு...உயிருடன்70ரூபாய்.. உறித்த கோழி 135 ரூபாய்..
=========================

நான்வெஜ்.........

ஜோக்..1

சுப்ரமணியபுரம் டயலாக்.....

பரமா நீ என்ன சொன்னாலும் கேட்கறேன் பரமா.....
சன் நெட்ஓர்க்கை தூக்கனும்...பரமா எனக்கு சாவு பயத்தை காட்டிட்டாங்க...சுறா டிரைலரை பார்க்கவச்சிட்டாங்க பரமா....
=================
ஜோக்...2

பிராவுக்கும் பனியனுக்கும் உள்ள பெரிய வித்தியாசம்... இதுதான்... முன்னதுக்கு துணி சின்னது வெயிட் அதிகம்... பின்னதுக்கு துணி பெரிசுஆனா....
=================
ஜோக்...3
மீயூசிக் சேனல் காம்பயரர் டெலிபோன் உரையாடல்...


நீங்க எங்க இருந்து பேசிறிங்க...

கிண்டியில் இருந்து...

நானும் கிண்டிதான்...கிண்டியில எந்த எரியா?

சாய் பிளாட்...

ஆய் நானும் அந்த பிளாட்தான் அதுல எந்த பிளாட்???

பிளாட் நம்பர் 13

கிண்டல் பண்ணாதிங்க அது என் வீடு...

நான் உன் புருசன்டி.. சனியனே வீட்டு சாவியை எங்க வச்சி தொலைச்சே....
=================

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

15 comments:

  1. /பிராவுக்கும் பனியனுக்கும் உள்ள பெரிய வித்தியாசம்... இதுதான்... முன்னதுக்கு துணி சின்னது வெயிட் அதிகம்... பின்னதுக்கு துணி பெரிசுஆனா..../

    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிக்கு கேபிள்ஜி பனியன்

    ReplyDelete
  2. பார்த்ததில் பிடித்தது... - இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ..
    மரம் நடறது, சுத்தமான சென்னை, அரசியல், சுனாமி-ன்னு நல்ல சமூக அக்கறை இருக்கு.. நல்ல விஷயம் ஜாக்கி.. தொடருங்கள்..

    ReplyDelete
  3. எல்லாம் நல்லா இருக்கு ஜாக்கி. ஊருக்கு போய்ட்டு வந்தாச்சா. திருவிழா எப்படி இருந்துச்சு.

    ReplyDelete
  4. இந்த மரம் நடுதலைப் பற்றி யாரோ மூன்று மாதங்களுக்கு முன் எழுதிய இடுகை ஞாபகத்திற்கு வருகிறது...

    இந்தியாவில் சாமியார்கள் (ஜக்கி) முதற்கொண்டு, பல நிறுவனங்கள் மரம் நட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு நாள் நட்ட மரம் எல்லாம் வளர்ந்தால் இந்தியா முழுவதுமாக காடாக இருந்திருக்க வேண்டும்.

    இவர்கள் மரம் நடுவதும் விளம்பரம் பண்னுவதோடு சரி. அந்த மரம் வளருவதேயில்லை.
    கன்றாக நடுவதைப் பற்றியது இல்லை கவலை. அதை மரமாக்க வேண்டும்.
    யார் செய்வார்??
    எல்லாம் விளம்பரத்தோடு சரி... கலிகாலம்

    ReplyDelete
  5. ஜாக்கி,

    கலக்கல் சாண்ட்விச்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  6. நாவெட்ஜ்ஜில் காரம் அதிகமில்லை. மற்றும்படி சாண்ட்விஜ் வழக்கம்போல் கலக்கல்,

    ReplyDelete
  7. ஜாக்கின்னு பேர் வச்சிட்டு தலைவரப் பத்தி எழுதாம இருக்கீங்களே...ஜாக்கி ஜானப் பத்தி நெறைய தெரியும் இருந்தாலும் எழுதுறவங்க எழுதுனா படிக்க நல்லா இருக்கும்..

    நான் இப்போ தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன்...எனக்கு லேட்டாகும்.... நீங்க எழுதுங்க...படிக்க ஆவலாய் உள்ளேன்

    Mohan

    ReplyDelete
  8. //இயற்க்கையை மிகச்சரியாக கணிக்க எந்த கொம்பனாலும் முடியாது...//

    முதற்கண் அது “இயற்கை” - க் வராது.

    அப்புறம் - இயற்கையை வெல்ல முடியாது, ஆனா இப்போல்லாம் மிகத் துல்லியமாக கணிக்க உபகரணங்கள் இருக்கு ஜாக்கி.. எழுத்தில் இன்னும் கவனம் தேவை..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  9. ஒங்கொய்யாலே..அவ நீ உள்ள வருவேன்னு வெயிட் பண்ணலாம்...

    ReplyDelete
  10. சாண்ட்விச் நல்ல டேஸ்ட்.

    ReplyDelete
  11. போத்தீஸ், நய்ஹா ஜோக் எல்லாமே சூப்பர்!!! மியூசிக் சானலில் மாற்றமெல்லாம் அவ்வளவு சீக்கிரம் வராது சார்.

    ReplyDelete
  12. அல்லது பூச்சாண்டி என்ற பயமாகவும் இருக்கலாம்.. அதற்குள் நண்பர் வந்து விட்டார்..


    தன்னை தாழ்துகிறவன் என்றும் உயர்த்தப்படுவான்...

    ReplyDelete
  13. \\கருரில் ஒரு கல்லூரி //

    வள்ளுவர் காலேஜ் அண்ணே அது

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner