கிழக்கே போகும் ரயில்,,,,,,

உலகில் எப்போதும் பார்க்க பார்க்க சலிக்காத விஷயாமாக மூன்று விஷயங்களை சொல்லுவார்கள்...

1 யானை
2 கடல் அலை
3ரயில்

ரயில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம்...என் சிறு வயது கனவு என்பது மற்றவர்களைவிட சற்றே வித்தியாசமானது......எல்லோருக்கும்டாக்டர், இன்ஜினியர், மிலிட்டிரி, என்று கனவு எல்லைகள் விரிந்த நிலையில் எனது கனவு எப்படியாவது ஒரு ரயில் டிரைவர் ஆக வேண்டும் என்பதுதான்....


முதன் முதலில் என் அம்மா எங்களை கடலூரில் இருந்து விழுப்புரத்துக்கு அழைத்து போனதுதான் எனது முதல் ரயில் பயணம்...


பொதுவாக கடலூர்திருப்பாதிரிபூலியூர் வாசிகளுக்கு ஒரு மூட நம்பிக்கை இருந்தது... லாரன்ஸ் ரோடு வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்றால்...இரயில் ரோட்டை கடந்துதான் ஆக வேண்டும்... விழுப்புரம் மயிலாடுதுறை பேசஞ்சர் ரயில் அந்த வழியாகத்தான் கடக்க வேண்டும்...கடலூர் வாசிகளுக்கு ரயில்வே கேட் மூடி இருந்தால் போகும் காரியம் உருப்படாது என்று ஒரு நம்பிக்கை... என் சிறு வயதில் நானும் அப்பாவும் எதாவது வேலை விஷயமாக போகும் போது ரயில்வே கேட் போட்டு இருந்தால் என் அப்பா மூட் ஆப் ஆகிவிடுவார்... ஆனால் நான் என் மனதுள் சந்தோஷம் கொள்ளுவேன்... காரணம் ரயில் போவதை வேடிக்கை பார்க்கலாம் அல்லவா...


விழுப்புரம் மந்தகரை அமைச்சார் கோவிலில் பழனிபிள்ளை என்று ஒரு மேனஜர் இருந்தார்... அவர் எப்போதும் என் ரயில் ஓட்டுநர் கனவை கிண்டல் அடிப்பார்...

ரயில் டிரைவர் ஆகறதுக்கு முன்னாடி என்ன வேலை தருவாங்க தெரியுமா?
ரயிலுக்கு முன்னாடி குதிரையில பெட்ரோமாக்ஸ் லைட்டை எடுத்துகிட்டு நைட்ல ஓடனும் அதுதான் முதல் வேலை என்று அந்த வயதில் எனக்கு சொல்லிய போது அதை அப்படியே நம்பியவன் நான்...

விழுப்புரம் ரயில் நிலையம் சாதாரன ரயில் நிலையம் இல்லை அது ஒரு சந்திப்பு.. அதனால் பல ரயில்கள் போகும் வரும்.. எல்லோரும் ரயில் நிற்க்கும் போது ரயில் என்ஜின் பக்கம் போய் டிரைவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்த்துக்கொண்டு இருப்பேன்... அவர்கள் ஸ்டைலாக கர்சிப் தலையில் கட்டி இருப்பார்கள் பாருங்கள் அதறக்கு நான் ரசிகன்.. கரி அள்ளி கொட்டி நீராவியில் ஓடும் ரயில் என்பதால் அதன் ஒட்டுனர்கள் தீவிரவாதி போல் முகத்தில் நிலக்கரி கருப்பு திட்டு திட்டாக படிந்து இருக்கும்... இருப்பினும் ரயில் டிரைவர் ஆசை மட்டும் அடங்கவில்லை...

ஐயனார் கோவில் பொங்கலின் போது பக்கத்திலேயே இரயில் போகும் தண்டவாளம் என்பதால் எவ்வளவு தூரம் தண்டவாளத்தில் நடப்பது போன்ற போட்டிகள் வைத்து வெற்றி பெற போராடுவோம்... அதே போல் தண்டவாளத்தில் வரிசையாக சிறு கருங்கற்களை வைத்து விட்டு ரயில் அதை போனதும் அரைந்து கிடக்கும் பொடி கோலமாவை போல் இருப்பதால் இப்படித்தான் கோலமாவு செய்வார்கள் என்று ஒரு பி்ட்டை போட்டு விட்டான்...
இது போல் தண்டவாளத்தில் கற்ளை வைத்து விளையாடுவது எங்களுக்கு செம ஜாலி.... பெண் பிள்ளைகள் ரயி்லில் போகும் பயணிகளுக்கு (டாட்டா) கைகாட்டிக்கொண்டு இருப்பார்கள்.. நாங்கள் தண்டவாளத்தில் வைத்த கல் உடைவதை பார்த்த பிறகு பயணிகளுக்கு கை காட்டுவோம்...50 கிலோமீட்டர் வேகத்தில் வரும் டிரைவருக்கு பாதையில் கற்க்கள் குழப்பமான விஷயம் ... எரிந்து கொண்டு இருக்கும் நிலக்கரியை வாரி எங்கள் மீது போடுவார்கள் என்ஜின் டிரைவர்கள்...தேவிடியா பசங்களா என்று கத்திக்கொண்டு செல்வார்கள்... அப்படி ஒவ்வொறு திருவிழாவின் போதும் திட்டுவாங்கி கால்டிரவுசரில் துடைத்துக்கொள்வோம்..


என் அப்பா அரசாங்கத்தில் எந்த குமாஸ்த்தா பதவியும் வகிக்கவில்லை ஆதலால் எனக்கு ஊர் விட்டு ஊர் ரயி்லில் போய் வாழும் வாழ்க்கை என் பால்ய காலத்தில் கடைசி வரை நடக்கவேயில்லை...அதே ஜனாரப்பன் கோவில்,ஐயம் பெருமாள் வீட்டு மோட்டர் கொட்டாய்,இறக்கும் வரை பிரா போட்டுக்கொண்டு வாழ்ந்த இட்லிகாரம்மா வேணி, என்று என் பால்ய வயதில் பார்த்த எந்த விஷயத்தையும் நான் மாற்றிபார்த்தது இல்லை..

நான் தனியாக ரயி்லில் பயணிக்க ஆரம்பித்தது எனது 12ம் வயதில்... என் பாட்டி வீடு பண்ரூட்டியில் இருந்தது... அவர்களை பார்க்க ரயிலில் போவேன் அப்போது அரை டிக்கெட் 1,50 ரூபாய் மட்டுமே அதனால் ரயிலில் போக ஆரம்பித்தேன்... பல வருடங்கள் அந்த டிக்கெட்டுகளை கூ் சேமித்து வைத்து இருந்தேன்... அந்த நாட்கள் என் வாழ்வில் மிக முக்கியமான சந்தோஷ நிகழ்வுகள்...நிறைய பெண்கள் ஆண்கள்...விழுப்புரத்தில் இருந்து சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தில ரயி்லில் போய் படித்து விட்டு ஊர் திரும்புவார்கள்.. ரயிலே ஜக ஜோதியாய் இருக்கும்... பாட்டு கும்மாளமாக களை கட்டும்.. காலை மாலையில் மட்டும்தான் கூட்டம் இருக்கும்... மற்ற நேரத்தில் ஈ அடிக்கும்...

ஆனால் ஒன்பதாம் வகுப்பு கடலூர் திருப்பாதிரிபுலியூர் செயின்ட் ஜோசப்பில் படிக்க சேர்ந்த போது பள்ளிக்கு பக்கத்திலேயே ஸ்டேசன் என்பதால் ரயி்லை அதிகம் பார்க்கும் வாய்ப்பு.... தண்டவாளத்தில் காசு வைப்பதில் இருந்து,ரயில் வருகின்றதா? என்று காது வைத்து பார்க்கும் வரை எல்லாவற்றையும் செய்து இருக்கின்றோம்.. கை காட்டி மரத்துக்கு போகும் இரண்டு கம்பியில் நடுவில் ஒரு குச்சியை வைத்து நன்றறாக சுற்றினால் ஏற்றிய கைகாட்டி மரம் இறங்கவே இறங்காது... எல்லா தீவிரவாத வேலைகளையும் செய்து இருக்கின்றோம்.. கடைசியில் அந்த குச்சியை எடுத்து போடும் ஆள் நான் தான்... அதற்க்கு காரணம் நான் சிறு வயதில் பாட புத்தகத்தில் படித்த கதைதான் காரணம்.. நந்தன் என்ற சிறுவன் வெள்ளத்தில் ரயில் பாதை அடித்துக்கொண்டு போக...ரயில் கவிழாமல் இருக்க தன் சிவப்பு சட்டைடிய கழற்றி ரயி்லை நிறுத்துவான் அவனுக்கு அரசு பாராட்ட எல்லாம் கொடுக்கும்.. அதனால் பயணிக்கும் மக்கள் மேல் ஒரு பாசம் அதுதான்.

சில நேரங்களில் ரயில் சிக்னல் கிடைக்காமல் எங்கள் பள்ளி பக்கத்தில் நிற்க்கும்.. பயண களைப்போடு இருக்கும் ஒவ்வொறு ஜன்னலையும் பார்த்தபடி நடப்போம்... யாராவது தண்ணீர் வேண்டும் என்று கேட்டால் ஓடி போய் பாட்டில் வாங்கி பக்கத்தில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து தருவோம்...

ரொம்ப நேரம் நான் ரயிலில் பயணித்தது என்றால் அது டெல்லி வரை இரண்டு இரவு ஒரு பகல் பயணம்தான்... சமீபத்திய பயணம் செய்தது... அலப்புழாவுக்கு சுறா படத்தின் முதல் கட்ட படபிடிப்புக்கு போய் விட்டு வரும் போதுதான்...


ஆயிரம் இருந்தாலும் அந்த நீராவி ரயில்தான் எனக்கு பிடிக்கும் ஜன்னல் ஓரமாக தலை நீட்டி பார்க்கையில் கரும்புகையில் ஊடே கண்ணில் வந்து விழும் கரித்துகள்கள் வெறுப்பை கொடுத்தாலும்... அது கிளம்பும் போது ஆயிரம் யானை பலத்துடன் எல்லா பெட்டிகளை இழுத்து முடியாமல் சக்கரம் சர சர வென இருண்டு மூன்று சுற்று சுற்றி அதன் பிறகு நீராவி பல வழிகளில் புகையுடன் பீச்சி அடிக்க அதன் பிறகு மெல்லநகர்ந்து வேகம் எடுத்து கூகூகூகூகூகூ என்று குவியபடி செல்வது அழகு என்றாலும்.. டீசல் என்ஜின் வருகைக்கு பின் என்ஜின் பக்கம் போய் பார்பதையே நிறுத்திவிட்டேன்.. இந்த ரயிர் ஃபாம் என்று கத்துகின்றது.... கூ என்று கத்தி கரும்புகை வெளிவிட்ட அந்த எருமைகடா என்ஜினை பார்த்துவிட்டு ஃபாம் என்று செவலை பிள்ளை போல் இருக்கும் இந்த டீசல் என்ஜீன் ரயி்லை ஏனோ எனக்கு பிடிக்கவில்லை...



குறிப்பு ....

இந்த கட்டுரை காட்சி தளத்தில் ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியானது...இதை படிக்காதவர்களுக்காக மீண்டும்.....புறநகர் ரயில் பயணம் பற்றி தனி பதிவு பிறகு எழுதுகின்றேன்



அன்புடன்
ஜாக்கிசேகர்

ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...

13 comments:

  1. நன்றாக உள்ளது ரயில் பற்றிய பதிவு நாங்களும் சிறுவயதில் இந்த வேலைகள் அனைத்தும் செய்துள்ளோம்.

    ReplyDelete
  2. இரயில் எனக்கும் ரொம்ப பிடிக்கும்....நல்ல அனுபவம்...

    ReplyDelete
  3. அழகான பதிவு.

    மனோ

    ReplyDelete
  4. நீங்க பரவாயில்ல ஜாக்கி என் சிறுவயது கனவு ரயிலுக்கு கொடி காட்டுவது காக்கி சீருடையில் இருக்கும் கிழவர்தான் என் சிறுவயது ஹீரோ

    ReplyDelete
  5. நல்ல பதிவு... ச்சின்னவயசு நினைவுகளை கிளப்பிவிட்டுட்டீங்க..

    ReplyDelete
  6. Good post jackie. It reminds me of my Son who is 3.5 yrs old, and likes train a lot. He also wants to become a rail driver.

    Thangavel

    ReplyDelete
  7. Good post jackie. It reminds me of my Son who is 3.5 yrs old, and likes train a lot. He also wants to become a rail driver.

    ReplyDelete
  8. ennaku pesa mudiyavillai sekar sir. romba arumai. nan en palya kalathil seithavai kal.en ninivil nilaladukinrana. nan en siru vaithu pirayathuku senrathu pol unarnthen superp.keep it up sir. hats of u.

    ReplyDelete
  9. nice one. It recalled my childhood dream of becoming Dubbing Artist.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner