ஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம்...


குறிப்பு இது ஏற்கனவே படித்த பதிவுதான்.. இருந்தாலும் படிக்காதவர்களுக்கு மீள்பதிவு செய்கின்றேன்.. இனி மாதத்தில் இரண்டு பதிவுகளாவது மீள்பதிவு செய்யலாம் என்று இருக்கின்றேன்...


சில அனுபவங்கள் கோடி கோடியாய் கொட்டிக்கொடு்த்தாலும் எவருக்கும் கிடைக்காது. அது போன்ற அனுபவம் இது.
இயக்குநர் பாக்கியராஜ் அடிக்கடி சொல்லுவார் சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்டுத்தி் பாக்குறதுதான். அப்படி ஒரு ஏழைக்குடும்பம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த கதையை இப்போது பார்ப்போம்.

பத்து வருடங்களுக்கு முன்பு என்று மிகச்சரியாக ஆரம்பிக்காவிட்டாலும் ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு விகடன் டெலிவிஸ்டாஸ் பேரைச்சொல்லவா என்ற நெடுந்தொடர் தயாரித்து அது சன் டிவியில் சக்கை போடு போட்டது, உங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும் என்று எண்ணுகிறேன், அது ஒரு திகில் தொடர். அந்த தொடரை இயக்கியது ஒளிப்பதிவாளர் ps. தரன் அவர்கள். நாசர் படத்தின் ஆஸ்தான கேமாராமேன்.


தமிழகத்தின் எல்லா இடத்திலும் சின்ன சின்ன பசங்கள் எல்லாம் அந்த தொடரில் வரும் டயலாக்கை பேசி காட்டுவார்கள். “பேரைச்சொல்லவா” என்று சற்றே இழுத்து பயமுறுத்துவது போல் பேசுவார்கள். அந்த அளவுக்கு அந்த சீரிய்ல் சக்கை போடு போட்டகாலம் அது. அந்த சீரியலின் 100 எப்பி்சோட் என்று நினைக்கிறேன், அப்போது விகடன் குழுமம் ஒரு பரிசு போட்டி அறிவித்தது. அதாவது அந்த தொடரில் கேள்விபதில் போட்டி வைத்து வெற்றிபெரும் அதிஷ்டசாலி நேயருக்கு125 பவுன் தங்க நகைகள் கொடுப்பதாக திட்டம்.

தமிழகம் முழுவதும் சொக்கா சொக்கா என்று மக்கள் ஆர்வமாக பங்கெடுத்தார்கள், தமிழகம் முழுவதும் லட்சக்கனக்கான கடிதங்கள் விகடன் அலுவலகத்தில் வந்து குவிந்தன.

நான் அப்போது சென்னை சரவண வீடியோ சென்டரில் கேமரா அசிஸ்டென்டாக வேலைபார்த்து வந்தேன். சீரியல் கதாநாயகி ஈஸ்வரிராவ் மற்றும் சில பிரபலங்கள்(யார் யார் என்று சரியாக நினைவில் இல்லை) முன்னிலையில் குலுக்கள் முறையில் முதல் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த 125 பவுன் பரிசு போட்டியில் சரியான விடைஎழுதிய அதிஷ்டசாலி வால்பாறையை சேர்ந்த ஒரு பெண். இதை முதலில் வீடியோவாக எடுத்து அதனை அடுத்த வாரம் ஒளிபரப்பும் எப்பிசோட்டில் சீரியல் முடியும் போது ஒளிபரப்ப முடிவு செய்யபட்டது.

அந்த வால் பாறை பெண் வெற்றி பெற்ற தகவல் எவர் மூலமும் வெளியில் கசியாமல் வைத்தார்கள். வரும் வாராம் வெள்ளிக்கிழமை இரவு 8,30லிருந்து9மணிக்குள் போட்டி முடிவுகள் அறிவிக்கப்டும். அந்த 125 பவுன் வெற்றிபெற்ற செய்தியை அறிவிச்சதும் அந்த வீட்டில் ஒரு சந்தோஷ கூச்சல் ஒரு படப்டப்பு ஏற்படும் அந்த படபடப்பை அந்த நேரத்தில் அங்கு இருந்தால்? அந்த அனுபவத்தை வீடியோவாக எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனைக்கு விகடன் குழுமம் செயல்வடிவம் கொடுத்தது.

கேமாராமேன் மற்றும் இயக்குநர் தரன் சார், போட்டோகிராபர் ராஜசேகர் என்று நினைக்கின்றேன் ,நான் அப்புறம் கேமரா எக்கியூப்மென்ட் உடன் விகடன் மவுன் ரோடு ஆபிசில் இருந்து கிளம்பினோம், சிறு வயதில் இருந்து நான் விரும்பி வாசித்த அந்த பிரபல பத்திரிக்கையின் அலுவலகத்தை அப்போதுதான் நேரில் பார்த்தேன். இந்திரா காந்தி ஹேர்ஸ்டைலில் வந்த ஒரு பெண்மணி எங்கள் பயணத்துக்கு ஆல்தபெஸ்ட் சொன்னார். அவர் பெயர் சுபாவோ அல்லது சுபஸ்ரீயா சரியாக நினைவு இல்லை கொஞ்சம் தடித்து காணப்பட்டார். பத்து வருடத்துக்கு மேல் ஆவதால் நினைவுகள் மங்கி அவுட் ஆப்போகசில் தெரிகின்றன.

நாங்கள் வால்பாறை போகும் போதே மங்கி பால்ஸ் போன்றவற்றில் காரை நிறுத்தி என்ஜாய் செய்து விட்டு சென்றோம், வால்பாறைக்கு அதுதான் எனது முதல் பயணம் என்பதால் அது எனக்கு கூடுதல் மகிழ்வை கொடுத்தது எனலாம். நாங்கள் வால் பாறை சென்று லாட்ஜீல் ரூம் எடுத்து தங்கினோம் நான் கேமரா பேட்டரி எடுத்து சார்ஜ் எல்லாம் போட்டுரெடியாக வைத்து இருந்தேன். சப்போஸ் கேமராவில் எதாவது பிரச்சனை என்றால் டோட்டல் புரோகிராமும் சொதப்பி விடலாம் என்பதால் எல்லாரையும் விட எனக்கு பக்கு பக்கு என்றது.

நாங்கள் முதலில் அந்த பெண் விலாசத்தை தேடிப்போனோம்.எனென்றால் இரவில் அந்த மலை பள்ளத்தாக்கில் எங்கு போய் தேடுவது.மாலை 5 மணி வாக்கில் அந்த பகுதியில் அந்த பெண்ணின் தகப்பன் பெயரை சொல்லி விசாரித்த போது அவர் பக்கத்தில் இருக்கும் டீ எஸ்டேட்டில்கூலித்தொழிலாளியாக வேலைபார்ப்பதாக சொன்னார்கள். இயக்குநர் தரன் சொன்னார் நல்ல வேளை இந்த 125 பவுன் ஒரு ஏழைக்குடும்பத்துக்கு சென்று சேர்வது குறித்து அவர் மகி்ழ்வதாக சொன்னார் நாங்கள் அந்த மகிழ்வில் பங்கெடுத்தோம்.

சிறிய நகரம் என்பதால் விசாரனையை ரொம்ப ரகசியமாக நடத்தினோம் கிராமத்தில் எட்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பெயர் தெரிந்து வைத்து இருப்பார்கள். அதில் விசாரிப்பவரே கூட அவரது சொந்தமாக இருந்தால் எதற்க்கு வந்து இருக்கின்றீர்கள்?,ஏன் தேடுகின்றீர்கள்?, என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டால் குட்டு உடைந்து விடும் என்பதால் மேம்போக்காகவே விசாரித்தோம். அதே போல் நாங்கள் வந்த காரை அரை கிலோமீட்டருக்கு முன்னே நிறுத்தி நடந்து வந்து விசாரித்தோம்.

மாலை 5 மணிக்கே குளிர் வாட்ட தொடங்கி விட்டது ரோட்ல் ஆள் ஆரவாரமே இல்லை. அப்படியும் ஒருவர் கேட்டார் ஊருக்கு புதுசா? இங்க நிக்காதிங்க, முள்ளம் பன்றி, காட்டுயானை போன்றவை எப்ப வேனா வரும் அதனால ஜாக்கிரதை என்று எச்சரிக்க, கொஞ்ச நேரத்திற்க்கு முன் குளிர் போக்க குடித்த டீ வயிற்றில் கலக்கி குதியாட்டம் போட்டது.

காரில் கேமராவோடு இரவு ஏழு மணிவாக்கில் அதே பகுதியில் வெயிட் செய்தோம். யானை வந்தால் கார் பறக்க வேண்டும் என்று எற்க்கனவே டிரைவரிடம் சொல்லி இருந்தோம். ஊர் அமானுஷ்ய அமைதியாக இருந்தது.

இரவு எட்டரை மணியை உறுதி செய்து மெல்ல அந்த பள்ளதாக்கில் பயணப்ட்டோம் சின்னதாக குடிலை போன்று எழு எட்டு வீடுகள் இருந்தன எல்லோர் வீட்டிலும் பேரை சொல்லவா சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது எட்டு ஐம்பத்து அஞ்சுக்கு பரிசு பெற்றவர் விவரம் அறிவிப்பார்கள். அதற்க்குள் நாங்கள் கேமராவோடு ரெடியாக இருக்க வேண்டும்.

பக்கத்து வீட்டுகாரர் கதவை தட்டி அவரிடம் விவரம் சொல்லி சென்னையில் இருந்து வந்து இருப்பதாகவும் ஒரு பத்து நிமிடத்திற்க்கு ஒரு இன்டர் வியுவுக்காக லைட் போடுவதற்க்கு மின்சாரம் தேவை என்பதை விளக்கினோம். அவர்கள் ஏற்றக்கொண்டர்கள். நாங்கள் எட்டு ஐம்பத்தி ஐந்தாவது நிமிடத்திற்க்காக நகம் கடித்து வெயிட் செய்தோம்.

அந்த நொடி வந்தது சென்னையில் பரிசு பெற்ற பெயரை அறிவித்த வீடியோ சன்டிவியில் ஒளிபரப்பானது. நாங்கள் அந்த பெண் வீட்டின் கதவருகில் வெயிட் செய்தோம், எனக்கு படபடப்பில் உள்ளங்கை வேர்த்தது, அந்த பெண் பெயர் அறிவித்ததும் வீட்டில் ஒரே மகிழ்ச்சி ஆராவாரம் அடுத்த நொடி கதவை தட்டி உள்ளே போனால் நீங்கள் யார் இந்த இரவு நேரத்தில் என் வீட்டில் என்ற கேள்வி குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் முகத்திலும் தொங்கி நின்றது.

நாங்கள் ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வருகின்றோம் என்று சொல்லி இந்த 125 பவுன் கிடைத்ததை வைத்து நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்று வினவ?அவர்கள் தங்கள் மகிழ்ச்சியின் ஊடே தங்கள் எதிர்கால லட்சியங்களை சொன்னார்கள். அந்த குடும்பத்தில் அந்த லட்சியங்கள் இப்போது நிறைவேறியதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த பரிசு பெற்ற பெண் அந்த குடும்பத்தின் பெரிய பெண் அந்தவீட்டில் அந்த பெற்றோருக்கு மூன்று பெண்கள்.பரிசு போட்டிக்கு எழுதிய அந்த வீட்டின் பெரியபெண் அங்கு இல்லை. அந்த பெண் கோவையில் ஒரு பிரபல மருத்துவமனையில் பணி புரிகின்றாள் அவள்தான் போட்டிக்கு கடிதம் எழுதி போட்டு இருப்பாள் என்று சொல்ல... நாங்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களை இன்டர்வியூ எடுத்து விட்டு அந்த குடும்பத்தினரிடம் விடை பெற்று மறுநாள் கோவை வந்து அந்த பிரபல மருத்துவமனையில் அந்த பெண்ணை சந்தித்து இன்டர்வியூ எடுத்து சென்னை வந்து சேர்ந்தோம். அந்த பெண் அடைந்த மகிழ்ச்சியை, வார்த்தைகளில் விவரிக்க முடியாது.விகடன் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் கலந்து பெரிய ஆளாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பத்தாவது படித்த என்னை எப்படி அவர்களால் எடுத்து கொள்ள முடியும். இருப்பினும் இந்த அனுபவம் எனக்கு ஒரு செய்தியை எப்படி சேகரிக்கலாம் என்ற செயல் முறை பாடமாக எனக்கு இது அமைந்தது என்றால் அது மிகையில்லை.

அதன் பிறகு பேரைச்சொல்லவா அடுத்த எப்பிசோட்டில் நாங்கள் வால்பாறையில் எடுத்த மகிழ்வு கணங்கள் சன்டிவியில் ஒளிபரப்பட்டது. அதே வாரம் ஆனந்தவிகடனில் நாங்கள் கஷ்டப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அப்போதைய சின்ன ஆனந்த விகடனில் ஒரு பக்க அளவில் வந்ததாக நினைவு. அது எனக்கு அதிர்ச்சியும் கூட....

வாழ்வில் பல அனுபவங்கள் எனக்கு இருந்தாலும் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இது....


அன்புடன்/ஜாக்கிசேகர்
குறிப்பு)
உங்களுக்கு நான் எழுதியது பிடித்து இருந்தால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஓட்டு போடவும் பின்னுட்டம் இடவும் மறவாதீர்

9 comments:

 1. விறுவிறுப்பான கதை படிச்ச மாதிரி இருந்தது!!

  ReplyDelete
 2. //இந்திரா காந்தி ஹேர்ஸ்டைலில் வந்த ஒரு பெண்மணி எங்கள் பயணத்துக்கு ஆல்தபெஸ்ட் சொன்னார். அவர் பெயர் சுபாவோ அல்லது சுபஸ்ரீயா?//
  ஜாக்கி அது சுபாவாத்தான் இருக்கும். அந்த சமயத்துல அவுங்க விகடன்ல தான் வேலைபார்த்துக் கொண்டிருந்தார்கள்.

  ReplyDelete
 3. மரண மொக்கடா சாமி.

  ReplyDelete
 4. இப்ப எல்லா பதிவிக்கும் (மொக்கை உட்பட
  )ஒட்டு போடிறேன் சந்தூசந்தானே... அன்ன இது மொக்கை

  ReplyDelete
 5. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததா நண்பரே!

  ReplyDelete
 6. அண்ணே மிகவும் அருமையாக விவரித்தீர்கள்,நல்ல நினைவலைகளை எழுப்பியது,அந்த ஏழைபெண்னுக்கு பரிசு கிடைத்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.ஹாட்ஸ் ஆஃப் டு யூவர் டீம்

  ReplyDelete
 7. மிக அருமையான அனுபவம் ஜாக்கி. இதை போய் ஒருவர் மரண மொக்கை என்கிறார்!! ம்ம் ... Taste always differ!!

  சில டிவி மற்றும் பத்திரிக்கைகள் பரிசு தருவதாக சொல்லி ஏமாற்றுவது உண்டு. விகடன் அப்படி அல்ல என நன்றாக தெரியும். விகடன் மேல் எனக்கும் நிறைய ஈர்ப்பு உண்டு. எனவே ரசித்து படிதேன்

  ReplyDelete
 8. உங்கள் சந்தோசத்தில் பங்குக் கொள்வதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 9. நீங்களும் ஆனந்தவிகடன் மாணவ நிருபராக விருப்பட்டீர்களா?

  நான் ஆ.வியில் மாணவர் நிருபர் 3 கட்டங்கள் கடந்து 4 கட்டமான நேர்முக தேர்வில் தோல்வியுற்று ஒரு நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்தவன்.

  இழப்பு எனக்கில்லை , ஆ.விக்கு தான் சமாதானம் கொண்டேன் வந்த நாட்களில்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner