சென்னை தாஜ்மகாலும் அய்யன் அருவியும் ஒரு பார்வை...(நிழற்படங்களுடன்)


இரண்டு வாரங்களாக சென்னையில் தாஜ்மகால் மற்றும் குற்றாலும் செட்டுகள் தீவுத்திடலில் போட்டு இருப்பதாக நாளிதழில் விளம்பரம் வந்த வண்ணம் இருக்க...

எல்லார்வீட்டிலும் கேட்கும் அதே டயலாக் என் வீட்டிலும் ஒலித்தது... கல்யாணத்துக்கு அப்பறம் நீங்க ரொம்பவே மாறிட்டிங்க???

அப்படி மாறவில்லை என்று காட்டுவதற்க்காக இந்த ஞாயிறு அன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழகம் ஏற்பாடு செய்து இருந்த கோடை திருவிழாவில் போடபட்டு இருக்கும் தாஜ்மகால், குற்றாலம் அருவியை பார்க்க என் மனைவியை அழைத்து போய் இருந்தேன்...

பெரிய பார்க்கிங் என்றார்கள்..ஞாயிறு காரணமாக சென்னைவாசிகள் திரண்டு வந்த கூட்டத்தை சாமாளிக்க முடியவில்லை...பார்க்கிங் இடங்கள் எல்லாத்தையும் நிறைந்து ரோடுவரை வந்து விட்டது...அந்த ரோட்டில் நின்ற பார்க்கி்ங் தூரம் பல்லவன் ஹவுஸ் சிக்னல் வரை வந்து விட்டது...

டிக்கெட் கொடுக்கும் கவுண்டர்கள் பலது இருந்தும் எல்லா கவுண்டரிலும் கீயூகட்டி மக்கள் நின்று இருந்தார்கள்..எல்லார் வீட்டிலும் கல்யாணத்துக்கு பின் மாறிவிட்டாய் என்ற டயலாக் பேசி இருப்பார்கள் போலும் ....எல்லோரும் குடும்பத்துடன் வந்து இருந்தார்கள்... அவ்வளவு கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை... இவ்வளவு கூட்டம் வரும் என்று தெரிந்து இருந்தால் நான் சத்தியமாக விடுமுறை தினத்தை தேர்ந்து எடுத்து இருக்கமாட்டேன்..
நல்ல கூட்டம் எல்லாபள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ரகவாரியாக பிள்ளைகள் ரவுண்டு கட்டி அடித்தார்கள்...(வீல் என்று கத்தியபடிமக்களின் குடல் வாய் வரை வந்த போது கிளிக்கியது)

எல்லா ராட்டிணத்திலும் பல குடும்பத்தினர் டிக்கெட் வாங்கி வரிசையில் காத்து நின்று கொண்டு இருந்தார்கள்...
(உட்கார கூட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம்)

முதலில் தாஜ்மகால் செட்டுக்கு சென்றோம்... அங்கும் டிக்கெட் வாங்க கூட்டம் அலை மோதியது...தாஜ்மகாலை உள்ளே போய் பார்க்க 20ரூபாய் டிக்கெட்... பராவாயில்லை நன்றாகவே செட் போட்டு இருந்தார்கள்...
ஆனால் கட்டுக்கடங்காத மனித தலைகள் அதிகம் இருந்த காரணத்தால் அந்த ரியல் பீலிங்கை அனுபவிக்க முடியவில்லை...
செட்டை சுற்றி தாஜ்மகாலின் சுற்றுபுறத்தை பல ஆங்கில்களில் போட்டோ எடுத்து அதனை பெரிது பெரிதாக புளோ அப் செய்து வைத்து இருந்தார்கள்...300 அடியில் வங்காளவிரிகுடா கடல் இருந்தாலும்..
ஏனோ ரொம்பவும் புழுங்கி தள்ளியது... சட்டையை கழற்றி வீசி விடலாமா? என்று நினைக்கும் அளவுக்கும் ஒரே புழுக்கம்....

எனக்கு தெரிந்து தாஜ்மகால் செட்டை அதிக அளவில் பார்க்கவந்தவர்கள்..முஸ்லிம் குடும்பத்தினர்தான்...
எல்லா முஸ்லீம் பெண்களும் பர்தா அணி்ந்து சுதந்திரமாக தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இரண்டு கண்கள் மட்டும் தெரியும் வகையில் செட் தாஜ்மகால் முன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்...சிலர் முகத்தை தெரியும் விதத்தில் எடுத்துக்கொண்டனர்....என் மனைவி சாதாரணமாக ஒரு போட்டோ எடுத்தால் அது நன்றாக வந்த சந்தோஷ மிகுதியில்... டிபரண்டாக இருக்க என் கண்ணாடியை போட சொல்லி ஒரு போட்டோ எடுக்க... ஒரு பெண்கையில் குழந்தை வைத்துக்கொண்டு என்னை பார்த்து நமுட்டு சிரிப்பு எனக்கு நன்றாக கேட்டது..

(கீழே படத்தை கிளிக்கினாள் என் மனைவி போட்டோ எடுப்பதை கையில் குழந்தையுடன் பார்த்து சிரிக்கும் பெண்மணி)தாஜ்மகால் செட்டை சுற்றி நடந்து வரலாம்..ஸ்பீக்கரில் ஏதோ ஒரு கஜல்பாடல் வழிந்தது... தாஜ்மகால் முன்புறம் சிறிய குளம் போல் நீர் ஊற்று வைத்து புல்தரைக்கு பதில் பச்சைகலர் கார்பெட் விரித்து இருந்தார்கள்.. (ஆக்ரா போய் படம் எடுத்துக்க முடியாவிட்டாலும்)

100 பேருக்கு 98 பேர் தன் மொபைலில் தன் குடும்பத்தை, தன் காதலியை, தன் மனைவியை,தன் குழந்தையை, தன் அம்மாவை, மொபைல் மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர்....(இரவு நேரம் ஆரம்பிக்கும் போது)

ஆனால் யார் எடுத்த போட்டோவாக இருந்தாலும் எல்லா பிரேம்களிலும் ஜனதிரள் இருந்துகொண்டே இருக்கும்.... எல்லோரும் சொல்லி வைத்தது போல் மும்தாஜ்,ஷாஜகான் போட்டோ அருகில் நின்று படம்எடுத்துக்கொண்டனர்......
(ஒரு ரியல் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் குழந்தையுடன்)

எல்லா இடத்திலும் விடுமுறை விட்டதால் வீட்டை விட்டு எங்காவது அழைத்து போ என்ற தொந்தரவு காரணமாகவும்...அழைத்துவந்த வெறுப்பு மத்திய வயதை கடந்த அப்பாக்களின் முகத்தில் நன்றாக தெரிந்தது....

(தாஜ்மகாலின் மீது மக்கள் நடைபழகும் போது)

வயது பெண்கள் அதிகம் பர்சேஸ் செய்ய நிறைய கம்மல் தொங்கட்டான்கள் கடைவிரித்து வைத்து இருந்தார்கள்...குதிரைக்கு சேனம் போடுவது போல் பல்வேறு விஷயங்கள் பேசி கவணத்தை திசைதிருப்பி என் மனைவியை அந்த இடத்தை விட்டு அழைத்து செல்வதற்க்குள் எனக்கு பெரும்பாடாகிவிட்டது...

அப்பா இதுல 4 தோடு எடுத்தக்கறம்பா....

அது ஒன்னு என்ன வெலைம்மா?

75ரூபாய்பா....

(4 தோடு 300ரூபாய் என்று மனதில் கணக்கு போடும் போதே, அந்த தகப்பனுக்கு மயக்கம் வர ஆரம்பித்தது...)

இரண்டு எடுத்துக்கம்மா...

போப்பா அருவியிலயும் குளிக்க வேண்டாம்னு சொல்லிட்ட... இதுவும் இரண்டுன்னா... அதுக்கு எதுக்கு இங்க வரனும்? என்று கேள்வி கேட்டது அந்த பெண்...

நியாயம் உணர்ந்த அப்பா அதை வாங்கி தந்தார்....(அருவியில் குளிக்க அந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த காரணத்தை அந்த பெண்ணின் வளர்ச்சி பார்த்தால் தெரியும்...)

சின்ன குழந்தைகள் பல வண்ண உடைகளில் வந்து கலக்கினர்... முக்கியமாக பெண்குழந்தைகள் உடைகள்... அவ்வளவு அற்புதமாக இருந்தது....நடுக்கூட்டத்தில் ஒரு எட்டுவயது பையன் அப்பா எனக்கு ஆய் வருது என்று சொல்லும் பிள்ளையை எங்கு அழைத்து போவது என்று முழிக்க ஆரம்பித்து பிள்ளையை கோவத்துடன் பார்த்தார்...

(மேல உள்ளபடத்தை கிளிக்கினால் அந்த கோபுரத்தின் பின்னே ஒரு பிறையும் நட்சத்திரமும் இருக்கும் பாருங்கள்... அது தானாகவே அமைந்தது... கோபுரத்துக்கு இன்னும் லைட் அதிகபடுத்தி எக்ஸ்போசர் கம்மி செய்து எடுத்து இருந்தால் இன்னும் அது நன்றாக தெரிந்து இருக்கும்....)

நிறைய ரோமியோக்கள்... வலம் வந்து கொண்டு இருந்தார்கள்...ஒரு பையன் கூட்டத்தின் காரணமாக ஒரு பெண்ணை பாடாய் படுத்த அவள்பாட்டி அவளை முன்னே நடக்கவிட்டு காவல்காத்தார்கள்....

ஒரு பையன் சைனா மொபைலில் சத்தமாக என் காதல் சொல்ல நேரமில்லை என்ற பையா படத்து பாடலை சத்தமாக வைத்து யாருக்கோ குறிப்பு அறிவித்து கொண்டு இருந்தான்...செளக்கார்பேட்டையில் இருந்து வந்த.....யாரோ ஒரு மூல்சந்தின் அம்மாவால் நடக்கவே முடியவில்லை...அவர்கள் அந்த ஐன கூட்டத்தின் ஊடே அவர்களின் வேகத்துக்கு அவர்களால் நடக்க முடியவில்லை...நின்று நின்று மூச்சு வாங்கியபடி நடந்தனர்...(தீவுத்திடலில் கூவத்தில் போட்டு இருக்கும் ஒரு மரபாலம்....இரவு நேரத்தில்)
நடந்தே பழக்கபடாதகாரணத்தாலும் அவர்களால் நடக்க முடியவில்லை... அதனால் நிறைய கூட்டம் அந்த பெண்மணியால் நகராமல் நின்று கொண்டு இருந்தது... அந்த அம்மாவின் பசங்கள் அவர்களை அப்படி பார்த்துக்கொண்டார்கள்....ஒன்று சொத்து காரணமாக இருக்கலாம்.. அல்லது அந்த பெண்மணி அவர்களை பாசத்தோடு வளர்த்து இருக்க வேண்டும்...
(மாலை வேலை நெப்பியர் சாரி ஆயுத எழுத்து பிரிட்ஜ்)

தாஜ்மகாலை சுற்றி பார்த்து விட்டு, நடந்து நேராக அய்யன் அருவியை போய் அடைந்தோம்... உள்ளே போகலாம் என்று நினைத்தால் டிக்கெட்150ரூபாய் என்று சொல்ல... என்னை போல் பல குடும்பங்கள் புறமுதுகிட்டு ஓடின.... 150ரூபாயை பெரிய பணமாக மதிக்காதவர்கள்... (அருவி பற்றிய விபரத்துக்கு கிளிக்கி பார்க்கவும்)

உள்ளே தண்ணீரில் ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்... வந்து இருந்த கூட்டத்துக்கு மட்டும்....50 ரூபாய் என்டரன்ஸ் டிக்கெட் என்று சொல்லி இருந்தால்... அந்த குற்றால ஐயன் அருவி செட் இடிந்தே விழுந்து இருக்கும்.... அந்த அளவுக்கு கூட்டம்...(இரவு நேர ஐய்யன் அருவி...)


எல்லா இடத்திலும் பெண்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருந்தது.. கள்ளிபால் ஸ்டாக் ஏதோ ஒரு வருடத்தில் தீர்ந்து போய் இருக்க வேண்டும்.. பையன்களை பார்க்கவே முடியவில்லை....95க்கு முன் பிறந்த பெண்களின் உடைகளில் ஒரு நீட்நஸ் இருக்கின்றது... 95க்கு பிறந்த பெண்கள் பலர் அணிந்து வந்த உடைகள் சொல்லிக்கொள்வது போல் இல்லை... எல்லோரும் சின்ன பெண்கள்தான்....நிறைய அம்மாக்களின் பாசம் கண்ணை மறைத்து இருந்தது... ஒரு இளவட்டம் ஒரு சின்ன பெண்ணை சுற்றி சுற்றி ஒரு 8 முறையாவது வந்து இருப்பார்கள்...
அருவியில் குளிக்க போவதாக இருந்தால் முதலிலேயே வீட்டிலேயே பிளான் செய்து கொள்ளுங்கள்... ஒரு நல்ல காட்டன் உடையை எடுத்து செல்லுங்கள்..பாலியஸ்டர் உடையில் சில பெண்கள் குளித்து, பலர் மூடை ஸ்பாயில் செய்து கொண்டு இருந்தார்கள்....ஒரு சின்ன பெண்... என்ன வயது ஒரு எட்டு இருக்கும்... அக்னி நட்சத்திரம் நிரோஷா போல் நீச்சல் உடை அணிந்து அந்த அருவி தண்ணீ்ரில் போட்ட ஆட்டத்தின் உற்சாகம் நம்மையும் வந்து தொற்றிக்கொண்டது....பக்கத்தில் பல தண்ணீர் விளையாட்டுக்கள் இருந்தன....ஆனால்நல்ல வெயிலில் போய் குளிக்க அந்த சென்னை ஐய்யன் அருவி ஏற்றது என்பது என் கருத்து...

ஒரு பெரிய பலூன் ரொம்ப நேரமாக பறக்க போவதாக சொல்லி சொல்லி சொல்லிக்கொண்டே இருந்தார்களே ஒழிய பறக்கும் வழியை கானோம்...

பலர் சாப்பிட பெரிய புட் கோர்ட் அமைத்து இருந்தார்கள்... எல்லாம் பெரிய நிறுவணங்களும் காசு பார்க்க கடை விரித்து வைத்து இருந்தார்கள்..யானைவிலை சொன்னார்கள்... இருந்தாலும் சாமிகிச்சன்ஸ் வைத்து இருந்த புட் கோர்ட்டில் நான் சிக்கன் பிரியாணியும் ரூ75....என் மனைவிக்கு சோலாபூரிரூ 35க்கும் வாங்கினேன்...


சிக்கனின் சூம்பி போன காலையும் நொச நொசத்து போன சாப்பாட்டையும் கையில் பிளாஸ்ட்டிக் உறையையுடனும், தலையில் பிளாஸ்டிக் தொப்பியையும் மாட்டிக்கொண்டும்.... கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தட்டில் பிரியாணியை வைத்து கண் எதிரே கொள்ளை அடித்தார்கள்...சரி இதுதான் சரி இல்லை...

சோளபூரியாவது சாப்பிடலாம் என்று பார்த்தால்.... சென்னாஎங்கள் இருவரையும் என்னா? என்றது... ஊசை அடித்து போனதை சூடு படுத்தி கொடுத்து இருந்தார்கள்...மனசாட்சி இல்லாதவர்கள்...யார் கேட்க முடியும்... அவர்களை என்ன செய்து விட முடியும்? உங்களுக்கு ஒரு வேண்டுகோள் எவ்வளவு பசியாக இருந்தாலும் இது போலான உணவு திருவிழாவில் அதுவும் இது போலான கட்டுகடங்காத கூட்டம் வரும் இடத்தில் எந்த உணவு பொருளையும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று கேட்ககொள்கின்றேன்....

மிகச்சரியாக இரண்டு மணிநேரம் கழித்து சாப்பிட்டதை சத்தியம் தியேட்டரின் சாந்தம்ஸ்கிரினின் டாய்லெட்டில், கண்ணில் நீர் வர வாத்தியெடுத்துவைத்தேன்....
போலிஸ் பாதுகாப்பு எல்லாம் போட்டு இருந்தார்கள்... தரையில் எல்லாம் புழுதி மண் இருக்க... அதில் நடந்த நடந்து அந்த தரைமண்ணின் கலரே மாறிபோய்கிடந்தது....அந்த பக்கம் ஏதோ இசை கச்சேரி நடப்பதாக சொல்ல.... அதான் எந்த சேனல் வைத்தாலும் இசைகச்சேரி நடக்குதே என்று சொல்லி சமாதானம் செய்து கொண்டு வண்டி பார்க் பண்ண இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்...


புகைபடங்கள்....
மிஸ்டர்அண்டுமிசஸ்
ஜாக்கி

குறிப்பு ...

எல்லா படங்களையும் கிளிக்கி பெரிதாக பார்ககலாம்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

29 comments:

  1. பதிவு ரொம்ப சின்னதா போயிருச்சோ..

    ReplyDelete
  2. நல்ல வர்ணனை ஜாக்கி! அந்த இடத்தை நேரில் பார்த்ததுபோல இருக்கு!

    ReplyDelete
  3. படித்ததன் மூலம், நேரில் பார்த்த திருப்தி!!

    ReplyDelete
  4. Best of Jackie. Weekend Special.

    ReplyDelete
  5. போட்டோக்கள் & விவரிப்பும் அருமை ஜாக்கி!!

    ReplyDelete
  6. அருமையான பதிவு தலைவரே. அந்த இடத்தையெல்லாம் ஒரு ரவுண்டு அடிச்ச மாதிரி இருந்தது. புகைப்படங்கள் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. அந்த பொண்ணு வேற யாரையோ பார்த்துப் பேசிட்டு இருக்குங்க. உங்களப் பார்த்து சிரிக்குதுன்னு நீங்களா நெனைச்சிக்கிறதா?

    எல்லா ஃபோட்டோக்களுமே அசத்தல் ரகம் தான். ம்ம்ம்ம்ம்... நம்ம‌ ஃபோட்டோவ மட்டும் தொலைச்சிட்டீங்களேண்ணே??

    ReplyDelete
  8. // 95க்கு முன் பிறந்த பெண்களின் உடைகளில் ஒரு நீட்நஸ் இருக்கின்றது... 95க்கு பிறந்த பெண்கள் பலர் அணிந்து வந்த உடைகள் சொல்லிக்கொள்வது போல் இல்லை... எல்லோரும் சின்ன பெண்கள்தான்....நிறைய அம்மாக்களின் பாசம் கண்ணை மறைத்து இருந்தது... //

    ரொம்ப சரியா சொன்னீங்க.. கொஞ்சம் ஓவராத்தான் பொயிட்டு இருக்காங்க.. நமக்கே கூச்சமா இருக்கு..

    ReplyDelete
  9. "சென்னை தாஜ்மகால்"
    நன்றாக இருந்தது.

    ReplyDelete
  10. முதல் முறையா உங்களுக்கு கமெண்ட் போடுறேன்...நேர்ல பார்த்த மாதிரி இருந்தது....Very Nice Presentation!

    /////அந்த அம்மாவின் பசங்கள் அவர்களை அப்படி பார்த்துக்கொண்டார்கள்....ஒன்று சொத்து காரணமாக இருக்கலாம்.. அல்லது அந்த பெண்மணி அவர்களை பாசத்தோடு வளர்த்து இருக்க வேண்டும்...//////

    முதல் Point தவிர்த்திருக்கலாம்...

    ////////////////////எல்லா இடத்திலும் பெண்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருந்தது.. கள்ளிபால் ஸ்டாக் ஏதோ ஒரு வருடத்தில் தீர்ந்து போய் இருக்க வேண்டும்.. ///////////////////

    Nice Comment...

    Other than this simply superb!

    ReplyDelete
  11. நீங்கள் எதேச்சையாக ஒரு அறிய விசயத்தை தொட்டு சென்றிருக்கிறீர்கள்
    நேற்று வானத்தில் நிலவும் வெள்ளியும் ஒரு ஜாலம் செய்தது..அதை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் (DSC_0631). நான் நேற்று பார்த்து ரசித்து விவரம் தேடி கண்டு பிடித்து மகிழ்ந்தேன்.

    மேலும் விவரங்களுக்கு http://tinyurl.com/2932rl8

    ReplyDelete
  12. நல்ல விவரணை ஜாக்கி:)

    ReplyDelete
  13. படித்ததன் மூலம், அந்த இடத்தையெல்லாம் ஒரு ரவுண்டு அடிச்ச மாதிரி இருந்தது. !!

    ReplyDelete
  14. எல்லா இடத்திலும் விடுமுறை விட்டதால் வீட்டை விட்டு எங்காவது அழைத்து போ என்ற தொந்தரவு காரணமாகவும்...அழைத்துவந்த வெறுப்பு மத்திய வயதை கடந்த அப்பாக்களின் முகத்தில் நன்றாக தெரிந்தது....

    வயது முதிர்ந்த அப்பாக்கள் மட்டும் அல்ல ஜாக்கி, நம் வயது அப்பாக்களும் தான்.

    ReplyDelete
  15. அடடா சூப்பர் தல. கர்ணன் கவசகுண்டலத்தோட பொறந்தமாதிரி நீங்க கேமராவோடயே இருக்கீயலே!! நன்றி.

    ReplyDelete
  16. //டிபரண்டாக இருக்க என் கண்ணாடியை போட சொல்லி ஒரு போட்டோ எடுக்க... ஒரு பெண்கையில் குழந்தை வைத்துக்கொண்டு என்னை பார்த்து நமுட்டு சிரிப்பு எனக்கு நன்றாக கேட்டது..//



    1) புகைப்படத்தில் அந்த பெண் வேறு எங்கோ பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்...

    2) குளிர் கண்ணாடி உங்களுக்கு சரியாகப் பொருந்தி இருக்கிறது (நிறைய பேர் தங்களுக்கு சம்பந்தமே இல்லாத கண்ணாடியை நாகரீகம் (fashion) என்று சொல்லி அணிந்து அலப்பறை விட்டுக்கொண்டு இருப்பார்கள்). அந்த பெண் அப்படியே உங்களை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்திருந்தாலும் அவர்கள் ரசனை அவ்வளவு தான் என்று சொல்ல மட்டுமே முடியும்...



    //என் மனைவி சாதாரணமாக ஒரு போட்டோ எடுத்தால் அது நன்றாக வந்த சந்தோஷ மிகுதியில்... //



    புகைப்படம் நன்றாகவே வந்திருக்கிறது... உங்களுக்கு வீட்டிலேயே ஒரு போட்டியாளர்...



    //ஆனால் யார் எடுத்த போட்டோவாக இருந்தாலும் எல்லா பிரேம்களிலும் ஜனதிரள் இருந்துகொண்டே இருக்கும்....//



    எல்லா காலத்திலும் ரங்கநாதன் தெருவிலும், திருவிழா காலங்களில் கடைத்தெருவிலும், விடுமுறை காலங்களில் சுற்றுலா தளங்களிலும் கூட்டம் அலை மோதுவது தவிர்க்க முடியாததே... ஆனால், ஒரு கண்காட்சியை பார்க்க கூட்டம் அலை மோதுவது, மக்கள் வெளி தளங்களுக்கு சுற்றுலா செல்வது குறைந்து விட்டது என்பதையே காட்டுகிறது...



    //(4 தோடு 300ரூபாய் என்று மனதில் கணக்கு போடும் போதே, அந்த தகப்பனுக்கு மயக்கம் வர ஆரம்பித்தது...)//



    ரூ.7.50க்கு வாங்கி 75 ரூபாய்க்கு விற்கும் நிலை இருக்கும் வரை தகப்பன்கள் மயக்கம் போட்டு விழுவது வாடிக்கை தான்...



    //நிறைய ரோமியோக்கள்... வலம் வந்து கொண்டு இருந்தார்கள்...ஒரு பையன் கூட்டத்தின் காரணமாக ஒரு பெண்ணை பாடாய் படுத்த அவள்பாட்டி அவளை முன்னே நடக்கவிட்டு காவல்காத்தார்கள்....//



    இன்றைய தகப்பன்களுக்கு சில நேரங்களில் இது போன்ற ரோமியோக்களை போட்டு புரட்டி எடுக்க தைரியம் வருவதில்லை... பாட்டிக்கு நிச்சயம் தலை வணங்கலாம்...



    //95க்கு முன் பிறந்த பெண்களின் உடைகளில் ஒரு நீட்நஸ் இருக்கின்றது... 95க்கு பிறந்த பெண்கள் பலர் அணிந்து வந்த உடைகள் சொல்லிக்கொள்வது போல் இல்லை... எல்லோரும் சின்ன பெண்கள்தான்....நிறைய அம்மாக்களின் பாசம் கண்ணை மறைத்து இருந்தது... //



    95 -ல் தான் கணினி துறையின் வளர்ச்சி ஆரம்பித்தது... அப்போது கணினி துறையில் நுழைந்து புதியதாய் பணம் சம்பாதித்தவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் நாகரீக அமெரிக்காவிலோ, வேறு மேற்கத்திய நாகரீகத்திலோ ஊறி இருப்பார்கள்... தங்களுக்கு கிடைக்காத சுதந்திரம் தன் குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்து அவர்களுக்கு தேவைக்கு அதிகமான சுதந்திரம் கொடுக்க ஆரம்பித்ததினாலேயே இன்று உடையில் ஆரம்பித்து அனைத்திலும் தறி கேட்டு போய் விட்டார்கள் இளைய தலைமுறையினர்...



    //சோளபூரியாவது சாப்பிடலாம் என்று பார்த்தால்.... சென்னாஎங்கள் இருவரையும் என்னா? என்றது... ஊசை அடித்து போனதை சூடு படுத்தி கொடுத்து இருந்தார்கள்...//



    இவர்கள் குடிக்க தண்ணீருக்கு பதிலாக அஜீரண மருந்தையே குடிக்க கொடுக்கலாம்... அல்லது இவர்கள் கொடுக்கும் சாப்பாட்டை இவர்களது முதலாளிகளை அழைத்து வந்து சாப்பிட வைத்து தண்டனை கொடுக்க வேண்டும்...

    ReplyDelete
  17. கோடை விடுமுறை.. சனி, ஞாயிறு போக கூடாத இடங்கள் இவை. படங்கள் அருமை நன்றி

    ReplyDelete
  18. பதிவு ரொம்ப சின்னதா போயிருச்சோ..-//

    அதிஷா பதிவு சின்னதுதான்.. ஒரு 20 போட்டோ வை ஏத்தினேன் அதான் இந்த எபெக்ட்..

    ReplyDelete
  19. நல்ல வர்ணனை ஜாக்கி! அந்த இடத்தை நேரில் பார்த்ததுபோல இருக்கு!//

    நன்றி லக்கி...

    ReplyDelete
  20. நன்றி விக்னேஷ்...

    நலமா இருக்கிங்களா?-


    நன்றி சைவ கொத்து பாரோட்டா...

    நன்றி சௌரி சார்...

    நன்றி ஷங்கர் உங்கள் வாழ்த்துக்கு..

    நன்றி சரவணக்குமார்....

    என்னபண்ணறது... ஜ்ஸ்ட் மிஸ்.. முதல்ல போட்டா அங்க நின்னே ரெண்டு எடுத்திட்டேன்.. அப்புறம் ஒய்ப்புகிட்ட கொடுத்து எடுக்கும் போதுதான் அந்த சிரிப்பு எல்லாம்..

    ReplyDelete
  21. நன்றி சூர்யா...

    நன்றி ஜெய்...நமக்கு கூச்சம் ஒரு புறம் அந்த பெண்ணை இயல்பா பார்த்தாலும் நம்மை தப்பா பார்பாங்கலோன்னு ஒரு பயம் வேற...

    நன்றி மாதெவி..

    நன்றி பருப்பு.. அப்படி சொல்ல முடியாது நல்லதும் கெட்டதுமாகதான் ஒரு பார்வையை பார்த்து இருக்கின்றேன்..

    ReplyDelete
  22. நன்றி கோகுல் அந்த புகைபடத்தை எடுக்கும் போது எனக்கு ஆச்சர்யம்..
    நன்றி கருத்தை பகிர்தமைக்கு

    நன்றி வாணம்பாடிகள் சார்...

    நன்றி கோலிபையன்...

    நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி பிரகாஷ் நீங்கள் சொல்வது உண்மைதான்..

    ReplyDelete
  23. நன்றி மயில்

    நன்றி மோகன்குமார்...

    நன்றி வித்தியாசமான கடவுள்... நன்றாக அனுபவித்து பின்னுட்டமிட்டமைக்கு...

    ReplyDelete
  24. தங்களது பதிவில் இருக்கும் ஏதோ ஒரு கருவி (component) அல்லது கருவிப்பட்டை (toolbar) தங்கள் பக்கத்தில் ஏதோ javascript error சொல்லிக்கொண்டே இருக்கிறது... சற்று கவனிக்கவும்...

    ReplyDelete
  25. வெறும் செட்டை பார்க்கவா இந்த கலாட்டா? எங்கே போய்கொண்டிருக்கிறோம்? அருகில் உள்ள எத்தனையோ நீர்வீழ்ச்சிக்கு செல்லாமல் இந்த செயற்கை நீர்வீழ்ச்சிக்கு மக்களை செல்லத் தூண்டுவது எது?
    இயற்கையை மதிக்காமல் அதை பார்த்து செய்த செயற்கையை மதிப்பது கொடுமை!

    ReplyDelete
  26. எல்லார் வூட்லயும் அதே டயலாக்தானா??
    :))

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner