(DAYLIGHT ROBBERY) 15+உலகசினிமா/பிரிட்டிஷ்... கத்தியின்றி ரத்தம் இன்றி பல கோடி அபேஸ்...


ஒரு பழைய பாடல் ஒன்று இருக்கின்றது... நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை...சில வேலைகளை நீங்கள் எவ்வளவுதான் பக்காவாக பிளான் போட்டு இருந்தாலும் எதாவது ஒரு ஆப்பு நம் பின் பக்கம் செருக காத்துக்கொண்டு இருக்கும்... அந்த ஆப்புகளை கடந்தே, நமது வெற்றியையும் குறிக்கோளையும் அடைய முடியும்...

கொள்ளை அடிக்கும் படங்கள் எல்லாமே விறுவிறுப்பு நிறைந்தவை காரணம்..? அவர்கள் போடும் பிளான் என்பது முக்கிய காரணம்... நம்ம இயல்பவான வாழ்வில் ஏதாவது ஒரு பேங்கை கொள்ளை அடிக்க பிளான் போட முடியுமா?இல்லை வைரத்தை கொள்ளை அடிக்க பிளான் போட முடியுமா?

அது போலான கெத்து இருப்பவர்களை நாம் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம் என்பது உண்மை...அவர்கள் திரையில் சட்டத்துக்கு புறம்பாகதான் எல்லா வேலைகளிலும் செய்கின்றார்கள்.... இருந்தாலும் அவர்கள் திரையில் அறிமுக படுத்திய சில நிமிடங்களில் அவர்களில் ஒருவனாக நாம் மாறி போய்விடுகின்றோம்....

நம் அடிமனது ஆசைகளுக்கு அது பெரும் தீனியாக இருக்கின்றது.... கொள்ளை அடித்து விட்டு தப்பிக்கும் போது தடுக்கும் பெண்ணை கொலை செய்கின்றான்...தன் கடமையை செய்யும் போலிஸ்காரர் அவனை தடுக்கும் போது அல்லது கொள்ளையை தடுக்கும் போது,அந்த போலிஸ்காரரை துப்பாக்கியால் சுட்டு தலைசிதறி சாகடிக்கின்றான்... இருப்பினும் யாரவது ஒரு போலிஸ்காரர் அவன் காலை துப்பாக்கியால் சுட்டுவிட்டால்...

அவன் கொள்ளை அடித்த பொருளுடன் தப்பிக்க முடியாவிட்டால் நாம் வருத்தபடுகின்றோம் விசனபடுகின்றோம்... இதுவே நம் வீட்டுக்கு அருகில் செய்தால்... அல்லது நமக்கு நேர்ந்தால் அவர்களை வில்லனாக பார்க்கின்றோம்....

நம்ம தமிழ்நாட்டில் விருதுநகரில் கோடை விடுமுறைடிய ஜாலியாக கழிக்க ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பையன் 5 லட்சம் வரை நகை பணம் போன்றவற்றை கொள்ளை அடித்து இருக்கின்றான்.... இப்ப நாம் என்ன சொல்லுவோம்...முளைச்சி மூனு இலை விடல அதுக்குள்ள என்ன திருட்டு என்று நேரில் பார்க்கும் போது தலையில் ஒன்று போடுவோம் அல்லது பத்திரிக்கை செய்தி பார்த்து திட்டுவோம்... ஆனால் திரையி்ல் அதே பையன் கொஞ்சம் கஷ்டபடுவதாக காட்டி அவன் திருட்டின் நியாயத்தை சொல்லி விட்டால் நாம் அவனுக்காக வருத்தபடுவோம்.... இது எல்லா கொள்ளை படங்களுக்கும் பொறுந்தும்.....

இந்த பிரிட்டிஷ் சினிமா அந்த வகையை சார்ந்ததுதான்....கத்தியில்லைரத்தம் இல்லை பல மில்லயின் டாலர்கள் அபேஸ் எப்படி... பார்ப்போம்...

DAYLIGHT ROBBERY (15+உலகசினிமா/பிரிட்டிஷ்... ) படத்தின் கதை இதுதான்....

ஏழு பேர்
ஒரு பேங்க்
90நிமிடங்கள்....
20பினைகைதிகள்
பேங்கை சுற்றி போலிஸ் முற்றுகை....

இதையும் மீறிகத்தியன்றி ரத்தம் இன்றி 70,000,000 பணம் கொள்ளை அடிப்பது சாத்தியமா?

இதுதான் கதை......அப்படியே விட்டு போக ஆசைதான் இருந்தாலும் சொல்றேன்...

உலக கோப்பை பார்க்க போறேன்னு ஜெர்மனிக்கு எழு பேர் வராங்க... அப்படித்தான் பாஸ்போர்ட்ல டுரிஸ்ட் விசாவுல சொல்லிட்டு வராங்க...

எல்லாரும் மேச் பார்க்கும் போது இந்த எழு பேர் மட்டும் தம் அடிச்சிட்டு வரலாம் மாமுன்னு சொல்லிட்டு போவது போல் கொள்ளை அடிக்க போகின்றார்கள்...முடிவு என்ன திரையில் பார்க்கவும்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
பொதுவாக பேங்க் ராப்பரி படங்களில் துப்பாக்கி வெடிக்கும் ரத்தம் தெரிக்கும்.... ஆனால்இந்த படத்தில் அப்படி ஏதும் இல்லாதது ஆச்சர்யமே...

இது போலான காட்சி அமைப்புக்கு அப்படி திரைக்கதை அமைத்து இருக்கும் அந்த குழுவுக்கு என் நன்றிகள்...

கொள்ளை அடித்து விட்டு வெளியே தப்பித்து போவதை திரைபடம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் காட்டி, கார் சேசிங் வைத்து பல கார்கள் காற்றில் பறக்கும்.... இடைவிடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருப்பார்கள் ...ஆனால் இந்த படத்தில் அந்த கதையே இல்லை..

படத்தின் பெரும் பகுதி பேங்கில் உள்ளேயே நிகழ்வதாக கதையை அமைத்து இருக்கின்றார்கள்....

முக்கியமாக சுரங்கபாதை செட்டில் ஒளிப்பதிவு அற்புதம்...
நெஞ்சை தொட்ட காட்சி....
சுரங்க பாதையில் மண் சரிந்து ஒருவன் மாட்டிக்கொள்ள... அவன் உயிர்பயத்தி்ல் தவிக்கும் போது நீங்களும் தவிப்பீர்கள்.. என்பது உறுதி...

பொதுவாக கொள்ளை அடிக்கும் படங்களில் கூட்டாளிகள் ஏதாவது இக்கட்டில் மாட்டிக்கொண்டால்..அவர்களை கொன்று விடுவது கொள்ளை தலைவன்களின் பரம்பரை உலக வழக்கம்... ஆனால் இந்த படத்தில் எவரையும் கொள்ளவில்லை.....

கொள்ளை கூட்டத்தில் எப்படியும் பாதி மார்பு தெரியும் படி, அல்லது உள்ளாடை எதும் போடாத ஒரு கொள்ளைகார பெண் அந்த கூட்டத்தில் எப்படியும் இருப்பாள்... அது இந்த படத்தில் இல்லை..

இப்படி இந்த படம் முழுவதும் பிரேக்த ரூ்ல்ஸ்செய்து கிளேஷேக்கள் இல்லாமல் இந்த கொள்ளை படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...

இந்த படத்தின் டைட்டில் போடும் காட்சி அற்புதம்.... இட்டாலியன் ஜாப் ஓசன்11 படத்தின் திரைக்கதையை அவ்வப்போது தொட்டுவிட்டு சென்று இருக்கின்றார்கள்...

கிளைமாக்ஸ் அற்புதம்...


படத்தில் நிறைய சின்ன சின்ன டுவிஸ்ட்கள் இருந்தாலும் இதை யெல்லாம் ஏற்க்கனவே பார்த்து இருந்தாலும்... அல்லது யூகிக்க முடிந்தாலும் அதை வழங்கிய விதத்தில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கின்றார்...

படத்தின் டிரைலர்....
படக்குழுவினர்விபரம்....

Directed by Paris Leonti
Written by Paris Leonti
Starring Paul Nicholls
Shaun Parkes
Distributed by Daylight Productions
Release date(s) 29th August 2008 (UK)
Running time 99 min. (approx.)
Country United Kingdom

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

3 comments:

 1. என்ன அண்ணே பேங்க் கொள்ளை அடிக்கிற படம் உலக சினிமாவா ??? அப்ப ocean சீரிஸ் எல்லாம் உலக படம்ன்னு சொல்லலாமா ??

  ReplyDelete
 2. என்ன அண்ணே பேங்க் கொள்ளை அடிக்கிற படம் உலக சினிமாவா ??? அப்ப ocean சீரிஸ் எல்லாம் உலக படம்ன்னு சொல்லலாமா ??//

  இது அந்த கேட்டகிரி இல்லை.. ரோமியோ.. இந்த படம் ஒரு இங்கிலாந்து படம்.. அதே போல உலகசினிமான்னாலே... அழுது கண்ணை கசக்கனும்னு அவசியம் இல்லை...

  பல நாட்டு படங்கள் உலக பட கேட்டகிரிதான்...

  ReplyDelete
 3. அண்ணே, பரீட்சைக்குப் படிங்கண்ணே.

  கொள்ளையா (or) கொலையா - Spelling mistake

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner