ஐடிதுறை நண்பர்களே உங்களுக்காக..ஒரு குறும்படம்...


ஒரு புத்தகம் எப்போது திறந்தாலும்... அல்லது படித்தாலும் ஒரு வெடிகுண்டை போல் செயல்பட வேண்டும் என்று ஒரு ரஷ்ய எழுத்தாளர் சொல்லி இருக்கின்றார்.. பேர் என்ன என்று கேட்கின்றீர்களா? அது தெரிஞ்சா நான் சொல்லி இருக்கமாட்டேனா?

பொதுவாக இணைப்பு கொடுத்து வரும் எந்த லிங்க்கையும் படித்து பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை...நேரம் இருப்பின் நோண்டி பார்ப்பேன்...
காலையில் நண்பர் பாலராஜன் கீதா ஒரு குறும்படத்தை எனக்கு அனுப்பி அந்த படத்தை அவசியம் பார்க்கும் படி சொல்லி இருந்தார்....

அந்த படம் 20 நிமிடம் ஓடும்... அந்த படத்தை என் ஸ்லோ நெட்கனக்ஷனில் ரொம்ப பொறுமையாகத்தான் பார்த்தேன்... அசந்துவிட்டேன்...

சில காட்சிகளில் நாடகத்தனம் இருந்தாலும் இந்த படம் ஒரு அற்புதமான படம் என்பேன் இன்றைய ஐடி உலகில் நிகழும் உண்மைகளை புட்டு புட்டு வைத்து இருக்கின்றார்கள்... எனக்கு ஐடிக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றாலும் என் மனைவி , மச்சான், எனக்கு நட்பானவர்கள், என் நண்பர்கள் என்று ஒரு பட்டாளமே ஐடியில் பணி புரிந்து வருகின்றார்கள்...

அவர்கள் அவர்கள் டிஎல்லை பற்றியும் பணி சுமை, பணி சூழல் போன்றவற்றை என்னோடு பகிர்ந்து கொள்ளும் போது... கமல் மகாநதியில் சொன்ன டயலாக் எனக்கு நினைவில் வரும்.. ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லாமும் ஒரு கெட்டவனுக்கு தாம்பாளதட்டில் வைத்து கொடுக்கின்றார்களே...? அது என்? அது எப்படி? என்று கேள்வி ஏழுப்புவார்...அது போல்தான் ஐடியில் வேலை செய்பவர்களின் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை...

இது இந்த துறை மட்டும் அல்ல எல்லாத்துறையிலும் இது போலான ஆட்கள் இருக்கின்றார்கள்... இந்த படம் எல்லா துறைக்கும் பொருந்தும் என்றாலும் ஐடிதுறைபிரச்சனைகளைதான் இந்த படம் நக்கலாக அலசுகின்றது... நக்கல் என்றால் சாதாரண நக்கல் இல்லை பிய்ந்து போன செருப்பால் அடிக்கும் நக்கல்...

படத்துக்கு தலைப்பை வைத்து நீங்கள் ஏதாவது நினைத்துவிடாதீர்கள்....இந்த படம் உண்மையின் உரைக்கல் என்றும் சொல்லலாம்...

ஜாக்குபாய் குறும்படத்தின் கதை இதுதான்...

கார்த்திக்...ஐடிதுறையில் வேலை செய்பவன்... எவ்வளவுதான் சின்சியர் சிகாமணியாக இருந்தாலும் சக்சஸ் என்பது எட்டாகனியாக இருக்கின்றது...அதற்கு என்ன காரணம் என்று மண்டையை போட்டு குழப்பிகொள்ளும் போது ரயில் நிலையத்தில் சந்திக்கும் ஒரு நண்பர்... அதற்கான காரணத்தை தன் அனுபவத்தையும் சொல்ல கதை பிளாஷ் பேக்குகளுடன் விரிந்து கிச்சு கிச்சு மூட்டியபடி ஜடி துறை சோகத்தை செவிட்டில் அறைந்து சொல்கின்றது.......

Jakkuboys - The Movie from Scube Productions on Vimeo.

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


பிட்ஸ் பிளானியில் படித்தவன் ஜக்கு தூக்கிய டிஎல்லிடம் வேலை செயவது வரை அவர்கள் சோகத்தை இந்த படம் நகைச்சுவையுடன் சொல்கின்றது...

படத்தை ரொம்ப நகைச்சுவையாகவும் அதே வேலையில் ரொம்பவும் புரபஷனலாகவும் இயக்கி இருக்கும் சதிஷ்குமார் குழுவுக்கு என் நன்றிகள்...

இந்த படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் முரளிகிருஷ்ணன் இந்த படத்தின் பெரும்பலம் என்றால் அது மிகையில்லை...

எல்லோரும் புதியவர்கள் இருந்தாலும் நன்றாக வேலை வாங்கி இருக்கின்றார்கள்..

ஒளிப்பதிவு...பாபு முருகானந்தம் ரொம்ப புரபஷனலாக செய்த வேலை படம் முழுவதும் தெரிகின்றது....முக்கியமாக ரயில் நிலைய காட்சிகள்... எடுத்த விதம் அற்புதம்....

இந்த குழவினர் பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை... இக்குழுவினர் என் கைபேசியில் தொடர்பு கொண்டால் இன்னும் நிறைய பேசலாம்....

டிஎல்லாக நடித்து இருப்பவர் சரியான தேர்வு...

நடு நடுவில் இடைஇடையே பயண்படுத்தி இருக்கும் மியூசிக் நல்ல ரசனை..

முதன் முதலாக பார்க்க வேண்டிய பட வரிசையில் இந்த சுதேசி குறும்படத்தை பரிந்துரை செய்கின்றேன்...

அந்த குழுவினர் அத்தனை பேருக்கும், மற்றும் லிங்க அனுப்பிய நண்பர் பாலராஜன் கீதாவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..

கேமரா பிடி170ல் ஷுட் செய்து இருப்பார்கள் போல.... சென்னை மற்றும் பெங்களூரில் படத்தின் படபடிப்பு நடத்தி இருக்கின்றார்கள்...

டயலாக் அற்புதம்... முக்கியமாக... இது எழும்பூர் டிரைனா? இல்லை எலக்ட்டிரிக் டிரைன் போன்ற வசனங்கள் அற்புதம்.....

படக்குழுவினர் விபரம்...மற்றும் சினாப்சிஸ்...


Synopsis Getting a job these days is quite difficult. But, even after getting a job, being successfull in that job is more difficult. On paper we consider talent and commitment as the major indicators for success. But in the real world, many of us -even who have these qualities, are yet to taste this elusive fruit called success. This indicates a lack of another critical ingredient in our Magix Mix. Jakkuboys explores this secret ingredient for success. The protagonist Kathir, one among us in search of success, finds out this secret from a person he accidentally meets on the tracks..

Cast: Sankar,Tamil Selvan, Abishek, Sandeep Menon, Divya, Salam, Thayumanavan and Raghavan
Editing Balasaravanan
Camera Babu, Muruganandhan
Written and Directed By: Sathish Kumar T
==============================
இது அவர்கள் முகவரி..

படம் பிடித்து இருந்தால் நம் தளத்தில் பார்த்தது பற்றியும்... அவர்களை தெம்புட்டும் விதமாக போன் செய்து ஒரு ஓ போட்டு விடுங்கள்...
==========
SCube Productions,
15, TVK Street,
Then Palani Nagar Extn,
Kolathur
Chennai - 600 099
Tamil Nadu
India
Email:
scubeproductions ( at ) gmail (dot) com

Phone:
+91 9566082416
======================================
குறிப்பு...
படம் எடுக்கும் போது எடுத்த ஒர்க்கிங் ஸ்டில்ஸ் எனது மெயிலுக்கு அனுப்பி வைத்தால் இந்த பதிவில் இடையில் சேர்க்கப்படும்....
===================
அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

28 comments:

 1. ஒரு குறும்படத்தை உங்கள் வழக்கமான திரை விமர்சன பாணியில் எழுதியிருப்பது அருமை ஜாக்கி அண்ணா. அலுவலகத்தில் பார்க்க முடியாது, அறைக்குத் திரும்பியதும் பார்க்கவேண்டும். நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 2. விமர்சனம் நன்று!! அந்த குழுவினருக்கு இது
  நிச்சயம் உற்சாகத்தை கொடுக்கும். பார்க்கிறேன் இந்த
  குறும்படத்தை.

  ReplyDelete
 3. மிக அருமை. பட குழுவினருக்கு வாழ்துக்கள். மிக அருகில் பார்ப்பது போல இருந்தது.

  அன்பரசு செல்வராசு

  ReplyDelete
 4. //அந்த குழுவினர் அத்தனை பேருக்கும், மற்றும் லிங்க அனுப்பிய நண்பர் பாலராஜன் கீதாவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..//
  ஜாக்கி சேகர்,

  அந்தச் சுட்டியை அனுப்பிய எங்கள் அலுவலக நண்பர் சுந்தர்ராஜ் மாதவனுக்கு உங்கள் நன்றிகளையும் வாழ்த்துகளையும் அனுப்பிவிடுகிறேன்.

  ReplyDelete
 5. நல்ல அறிமுகம்.. வீட்டுக்கு போனவுடனே படம் பார்த்துட்டு சொல்லறேன்.. :-)

  ReplyDelete
 6. annae IT la mattum illai. ippo ella idathulaiyum idhu thevaipaduthu

  ReplyDelete
 7. நாட்டு நடப்பை நக்கலாய் சொல்லியிருக்கிறார்கள்...
  அருமை
  இது போல நானும் பார்த்திருக்கிறேன்..

  ReplyDelete
 8. முழுசா பார்த்தேன் ஜாக்கி ... கடைசி சில நிமிடங்கள்(படத்தோட மெசேஜ் ) கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் ரொம்ப ரசிச்சு மனம் விட்டு சிரிச்சு பார்த்தேன்...

  சதீஷ் குமார் , அவரோட நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பிரெண்ட்லி ஹக் ....

  உங்களுக்கும் J...

  ReplyDelete
 9. Congratulations! ! ! for the wonderful presentation.This is What Happening.Now a days.. No matter how educated/talented & Sincere you are.

  But I have found the way which i want to work with my own work ethics No boss/ no reporting especially No round table conference... If any one who is interested to know & Learn can contact

  msvbalakumar@hotmail.com

  ReplyDelete
 10. அருமையான படம்... அருமையான விமர்சனம்...

  //நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...//

  போட்டாச்சு.. போட்டாச்சு...!

  ReplyDelete
 11. அண்ணே வீடியோ சூப்பரா இருக்கு...,
  எனக்கு ரொம்ப நாளாவே ஓரு டவுட்டு..
  இந்த ஆணி புடுங்குறது..ஆணி புடுங்குறதுண்ணு நிறைய பிளாக்குல படிச்சிருக்கேன் அப்புடிண்ணா உண்மையிலே என்ன அர்த்தம்...?

  ReplyDelete
 12. //டிஎல்லாக நடித்து இருப்பவர் சரியான தேர்வு...

  அந்த ‘பிபி’ க்கு அவர் கொடுக்கிற ஒரு எமோஷன் போதும்! வடிவேலுவையே மிஞ்சுகிறார்.

  * ஐயாம் ஜாரி..
  * கம்படபுள்

  இதெல்லாம் ஹைலைட்! நல்ல காமெடியன் கிடைத்தார்..

  அதேபோல, பாஸ் ஒரு நல்ல தேர்வு! “பணியாரம் பணியாரம் பணியாரம்..
  பணியாரம் பணியாரம் உட்டுக்கோ!”
  :)

  சிறந்த நடிகர்களை இனம் காட்டிய குறும்படம்! ஆர்குட்டில் சேர்க்கலாம் என்றால், யூட்யூப் படம் மட்டும்தான் சேர்ப்பேன் என்று அடம்பிடிக்கிறது!

  அன்புடன்
  கார்த்திகேயன்
  http://kaaranam1000.blogspot.com

  ReplyDelete
 13. Hello jackie sir.. naanum intha kurumpadathai recentaa thaan paathen. Bada thaamasu!! especially hey my mouse is not working? do you know why? nu kepparu and aani pudungarthukku oru meeting roomla discussion. sooperappu!! naanum IT la thaan erukken. intha padaththil varum anaiththum akshara suththamaaga nijam illayendraalum, atleast 75% is true. ivargalin adutha padaippugalayum aavalaga ethirpaarkiren.
  Intha vimarsanam illatha oru chinna kelvi.. innum sura paakkkala.. neenga entha part varaikkum padththula work pannenganu therinja athu varaikkum patthutu vitturalaamnu erukken.. mudinthaal sollavum.. :) nandri..

  ReplyDelete
 14. //பொதுவாக இணைப்பு கொடுத்து வரும் எந்த லிங்க்கையும் படித்து பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை.//

  ரொம்ப நல்ல பழக்கம்:)

  ReplyDelete
 15. it is Really very nice Jakie

  and thanks for both.

  ReplyDelete
 16. தவறான கருத்தை வழியுறுத்துகிறது .

  ReplyDelete
 17. ஏற்கனவே பார்த்தாச்சு. டிஎல் தான் super

  ReplyDelete
 18. பின்னுட்டம் அனைவருக்கும் என் நன்றிகள்...

  நேற்றுதான் இந்த படத்தின் இயக்குனரிடம் பேசினேன்..

  உங்களுக்கு ஒரு அச்சர்யம் காத்து இருக்கின்றது.. இந்த படத்தில் டிஎல்லாக நடித்தவர்தான் இந்த படத்தின் இயக்குனர்...

  ReplyDelete
 19. நன்றி பாலராஜன்கீதா உங்கள் நண்பருக்கு...

  ReplyDelete
 20. Very good movie .TL = TAMIL (POLITICAL ) LEADERS?.TL pronouncing like our political leaders
  Good act by all actors .
  Good think by writer and director.

  ReplyDelete
 21. எனக்கும் மெயிலில் வந்தது. செம காமெடி.. அதுவும் அந்த டீம் லீடராக வருபவர் போல பலர் உண்மையில் இருக்கின்றனர்.... சிரிப்பாக வந்தது...

  நன்றி..

  ReplyDelete
 22. THIS STORY WILL HAPPEN IN ALL YOUNGSTERS LIFE, ANYWAY U DONE IT VERY WELL TO US. THANKS FOR MAKING OF JACKUBOY

  REGARDS

  SANTHOSHKUMAR-COIMBATORE - FUTURE GUYS CRICKET CLUB
  (IRUGUR VILLAGE).........

  ReplyDelete
 23. THIS STORY WILL HAPPEN IN ALL YOUNGSTERS LIFE WHO TRYED IN "IT" CAREER.
  ANY WAY IT'S AMAZING TO WATCH AND YOU HIGHLIGHTED EACH AND EVERYONES EXPERIENCE OF WHO SUFFERED FROM MANAGERS AND HIGH EMPLOYEES .

  THANKS FOR MAKING THESE FILM..

  REGARDS

  SANTHOSHKUMAR-COIMBATORE

  FUTURE GUYS CRICKET CLUB
  (IRUGUR VILLAGE-641103)

  ReplyDelete
 24. THIS STORY WILL HAPPEN IN ALL YOUNGSTERS LIFE WHO TRYED IN "IT" CAREER.
  ANY WAY IT'S AMAZING TO WATCH AND YOU HIGHLIGHTED EACH AND EVERYONES EXPERIENCE OF WHO SUFFERED FROM MANAGERS AND HIGH EMPLOYEES .

  THANKS FOR MAKING THESE FILM..

  REGARDS

  SANTHOSHKUMAR-COIMBATORE

  FUTURE GUYS CRICKET CLUB
  (IRUGUR VILLAGE-641103)

  ReplyDelete
 25. really good. You have briefed the real qualification needed in this world to come up fastly in a most hilorious way. Meetings for plugging a nail is a common feature in this industry. good attempt. congrats. sound system is poor. audio very feable. otherwise it is good.

  ReplyDelete
 26. பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்..TL மற்றும் நட்ஸ் நல்ல தேர்வு.. குழுவினர்களுக்கு பாராட்டுகளை மெயில் அல்லது போன் வழியாக தெரிவிக்க இருக்கிறேன்..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner