(FARGO) தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் கர்பினி பெண் போலிஸ்...

இன்றைய சென்னை மாநகர பேருந்துகளில் நீங்கள் அடிக்கடி ஒரு விஷயத்தை காணலாம்... அது பெரியவர்கள் நின்று கொண்டு இருப்பார்கள்...இளையவர்கள் உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள்...சில பெரியவர்கள்.. எதை பற்றியும் கவலை படாமல் மிடுக்குடன் நின்று கொண்டு இருப்பார்கள்....சில பெரியவர்களால் நிற்க்க முடியாது அவர்களில் யாராவது ஒருவர் உட்கார இடம் கொடுக்கமாட்டார்களா? என்று கண்களில் வேதனையுடன் பார்பது கொடுமையாக இருக்கும்...

என் அம்மாவோடு பேருந்து பயணஙகளில் நான் பயணிக்கும் போது முன்று விஷயங்கள் பார்த்து என் அம்மாவை ரொம்பவும் மரியாதையாக பார்ப்பேன்..என் அம்மா பேருந்தில் ஏறினால் மூன்று விஷயங்களை கடை பிடித்து வந்தாள்...

பெரியவர்களில் பாலினம் பார்க்காமல் இடம் இல்லை என்றால் சட்டென எழுந்து நின்று இடம் தருவாள்...இரண்டாவதாக.... கர்பினியாக யார் பேருந்தில் ஏறினாலும்அவர்களுக்கு எழுந்து இடம் தந்து விடுவாள்...5கிலோமீட்டர் மற்றும் 25 கீலோமீட்டர் பயணம் செய்யும் லோக்கல் பேருந்துகள்தான்.. அதற்க்கே சீட்டுக்கு அடித்துக்கொள்வார்கள்...

மூன்றாவதாக எந்த பெண் கைகுழந்தையுடன் ஏறினாலும் கை குழந்தையுடன் ஏறும் பெண்ணின் கை குழந்தை சுமையை தான் வாங்கி வைத்துக்கொள்வாள்...அதுவும் லோக்கல் பஸ்ஸில் இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு, பேருந்தில் பேலன்ஸ் இல்லாமல் ஆடியபடி டிக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும் எத்தனையோ தாய்மார்கள் நீங்கள் பார்த்தபடி தேமே என்று உட்கார்ந்து இருக்கலாம்.....


இனி அப்படி செய்யாதீர்கள்... குழந்தை வைத்துக்கொண்டு நின்று வரும் பெண்ணின் கைகளில் உள்ள குழந்தையை வாங்கி வைத்துக்கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்....இதில் கொடுமை அந்த பெண்ணை படாத பாடு படுத்தி எடுத்து அவளுக்கு குழந்யை கொடுத்த கணவன்... அவளுக்கு கை வலிக்குமே... அந்த குழந்தையை நாம் சிறிதுநேரம் வைத்துக்கொள்வோம் என்ற எண்ணம் தாலி கட்டிய கணவனக்கு இருக்கவே இருக்காது.....

இதனாலே என் சிறுவயதில் எங்கள் ஊர் பேருந்து பயணங்களில் எங்கள் அம்மாவோடு நாங்கள் உட்கார்ந்து பயணித்ததே இல்லை... முதியவர்.. ஊனமுற்றோர்,கர்பினி பெண் போன்றவர்கள் எங்கள் அருகில் உட்கார்ந்து பயணித்து இருக்கின்றார்கள்...என் அம்மா அவள் எழுந்து இடம் கொடுத்து விடுவாள்...எனென்றால் என் அம்மா 5 பெற்றவள்...கர்பமாய இருக்கும் போது வலி வேதனை என்னவென்று அவளைவிட வேற யாரும் அதிகம் அறிய முடியாத ஒன்று....

அப்படி எழுமாத கர்பினியாக இருக்கும் ஒரு பெண் போலிஸ் அதிகாரி நகரில் நடக்கும் கொலையை இன்வெஸ்ட்டிங் செய்து கண்டுபிடிக்கின்றாள் என்றால் அது சாதாரண விஷயமா?..... என்ன பிரச்சனை என்றால் அவர்கள் கொடுர கொலையாளிகள் யாரையும் வைத்துப்பார்க்கமாட்டார்கள்....

FARGO படத்தின் கதை இதுதான்...


Jerry Lundegaard (William H. Macy) ஒரு கார் சேலஸ்மேன்... அவனுக்கு ஏகப்பட்ட கடன் பிரச்சனை... எப்படியாவது கடனை அடைக்க என்ன செய்யலாம் என்று மண்டையை பிச்சிகிட்டு யோசிக்கிறான்...அவன் மாமனார் அதிகம் பணம் உள்ளவர்அவருடைய கார் ஷாப்புலதான் இவன் விற்பனை பிரதிநிதி...

எப்படியும் கடனை அடைக்க பணம் வேனும்... அந்த பணத்தை அடைய என்ன செய்யலாம்னு ஜெர்ரி யோசிக்கறப்ப..... புது படத்துக்கு சத்தியம் தியேட்டர்ல இரண்டு டிக்கெட் புக்செய்வது போல் இரண்டு குற்றவாளிகளை புக் செய்யறான்... அதாவது அவன் மனைவியை கடத்தி அவன் மாமனார்கிட்ட இருந்து லட்சக்கணக்குல பணத்தை கறக்கறதுதான் அவன் திட்டம்....

அந்த ரெண்டு கிரிமினல்சும் ஒரு சுபயோக சுபதினத்துல ஜெர்ரி ஒய்ப் டிவி சிரியல் பார்த்துகிட்ட இருக்கறப்பவே அவளை கடத்துறானுங்க...அனா அவளை அவுங்க ரகசிய எடத்துக்கு அழைச்சிகிட்டு போகறதுக்குள்ள அவுங்க துப்பாக்கி பல பேரோட உயரை குடிக்குது... விடியலில் தூங்கி கொண்டு இருக்கும் ஏழுமாத கர்பினி பெண் போலிஸ் Marge Gunderson (McDormand)க்கு போன் வருதுஎம்ம நகரத்துல இப்படி இப்படி கொலை நடந்து இருக்கு... நீ எப்பிடி எப்பிடிகண்டுபிடிக்கபோறேன்னு? அந்த புள்ளதாச்சிபுள்ள எப்படி அந்த கொடுர கொலைகாரனை எப்படி கண்டுபிடிச்சான்னு உங்களுக்கு ஆர்வம் இருந்தா.... பார்த்து வைங்க...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

கோயின் பிரதர்ஸ் படம் என்றாலே...அவர்களின் வில்லன்கள்.. பழி பாவத்துக்கு அஞ்சவே மாட்டார்கள்...உலகத்துக்காக அவர்கள் என்று நினைக்கமாட்டார்கள்...உலகமே அவர்களுக்காக படைக்கபட்டதாக நினைத்துக்கொள்பவர்கள்...

அதற்கு மிகச்சிறந்த உதாரணம் 4 ஆஸ்கார் வாங்கிய No Country for Old Men படத்தையும் அந்த படத்தின் வில்லனையும் சொல்லலாம்...

இந்த படம் ஒரு உண்மை சம்பவம்...படத்தின் அடிநாதத்தை வைத்துக்கொண்டு கேரகடர்களை மாற்றி எடுத்து இருக்கின்றார்கள்...

இந்த படம் அமேரிக்கா பிலிம் இன்ஸ்டியூட்ல 100 வருஷம் 100படம் வரிசையில இந்த படம் 84வது இடத்துல இருக்கு...

இந்த படத்துல நடிச்ச Marge Gunderson (McDormand)100 வருஷத்துல பெஸ்ட் கதாநயகன் வரிசை எண்...ரேங் 33...வது இடத்துல இருக்கார்

இந்த படத்தின் Roger Deakinsஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டபடவேண்டிய ஒன்று...படம் முழுக்க அவுட்டோர் காட்சிகள் எல்லாம் பனிமுடிய சாலைகளில் கதை நடப்பதாக இருப்பதால் பல சீன்களில் பனி அதிகம் இருப்பது போல் செட் போட்டு எடுத்தார்களாம்....

முக்கியமா ஜெர்ரி வீட்டுக்கு போக கார் எடுக்கும் போது ஒரு எம்டி லாங் ஷாட் இருக்கும்.. முதல்ல அது ஒரு வரைபடம் நாம நினைச்சிகிட்டு இருக்கும் போது அதுல ஜெர்ரி நடந்து போகும் அந்த ஷாட் சான்சே இல்லை

படத்தில் ஓ...யா, ஓ...யா என்று பேச்சுக்கு பேச்சு... ஒரு 3000 முறையாவது சொல்லி இருப்பார்கள்....

குட் சீன்....
ஜெர்ரி மனைவியை கடத்த வரும் இரண்டு கிரிமினில்களும் அந்த பெண்ணின் போராட்டமும்... அற்புதம்...

சம்பந்தம் இல்லாத ரெண்டு பேர் அந்த போலிஸ் கொலையை பார்த்துவிட்டு காரில் பறக்க... வில்லனும் அவனை துரத்த... அந்த காட்சி..


படத்தின் விருதுகளும் பரிந்துரையும்....

Awards and honors

Wins

* Academy Award for Best Actress - Frances McDormand
* Academy Award for Writing Original Screenplay - Joel and Ethan Coen
* BAFTA David Lean Award for Direction - Joel Coen
* Cannes Film Festival Award for Best Director - Joel Coen[2]
* New York Film Critics Circle Award for Best Film
* National Board of Review for Best Actress - Frances McDormand
* National Board of Review for Best Director - Joel Coen
* Screen Actors Guild Awards for Performance by a Female Actor in a Leading Role - Frances McDormand
* Writers Guild of America Award for Best Screenplay Written Directly for the Screen - Joel and Ethan Coen
* 2006 National Film Registry
Nominations

* Academy Award for Best Picture - Ethan Coen
* Academy Award for Directing - Joel Coen
* Academy Award for Best Supporting Actor - William H. Macy
* Academy Award for Best Cinematography - Roger Deakins
* Academy Award for Film Editing - Roderick Jaynes
* Golden Globe Award for Best Motion Picture - Musical or Comedy
* Golden Globe Award for Best Director - Motion Picture - Joel Coen
* Golden Globe Award for Best Actress - Motion Picture Musical or Comedy - Frances McDormand
* Golden Globe Award for Best Screenplay - Motion Picture - Joel and Ethan Coen
* Palme D'or
படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...

Directed by Joel Coen
Ethan Coen (uncredited)
Produced by Ethan Coen
Joel Coen (uncredited)
Written by Joel Coen
Ethan Coen
Starring Frances McDormand
William H. Macy
Steve Buscemi
Peter Stormare
Music by Carter Burwell
Cinematography Roger Deakins
Editing by Roderick Jaynes
Studio PolyGram Filmed Entertainment
Working Title Films
Distributed by Gramercy Pictures
Release date(s) March 8, 1996
Running time 98 minutes
Country United States
Language English
Budget $7,000,000 (est.)
Gross revenue $60,611,975


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

14 comments:

  1. சுவாரசியம் குன்றாத படம் ...


    படத்தின் விமர்சனத்துக்கு முன்னதான கட்டுரை நல்ல முயற்ச்சி தொடருங்கள் ..

    ReplyDelete
  2. ஜாக்கி சார்,

    மீ தா பார்ஸ்ட். உங்க பதிவுகள் என்னோட சைட் பாரில் அப்டேட் ஆக மறுப்பதால் பல பதிவுகளில் வர முடிவதில்லை.

    இந்த படத்தை பல வருடங்களுக்கு முன்பு பார்த்த போது சூப்பர் ஆக இருந்தது.

    ஆனால் இப்போது மறுபடியும் பார்க்க முடிவதில்லை.

    ReplyDelete
  3. கோயன் சகோதரர்களின் ஆரம்ப கால படம்.

    இதன் மூலமே அவர்கள் பிரபலம் ஆனார்கள்.

    ReplyDelete
  4. I have seen this movie two years back. it was really interesting. but so much violent. As u said cinematography is best especially that high way chasing scene.

    ReplyDelete
  5. நீங்கள் எழுதியிருக்கும் விதமே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது ஜாக்கி அண்ணா.

    ReplyDelete
  6. கோயன் பிரதர்ஸின் 'ப்ளட் சிம்பிள்' படம் பற்றி சில மாதங்களுக்கு முன்பு நண்பர் கார்த்திக்கேயன் எழுதியிருந்தார். அதன் பின்னரே தேடிப் பிடித்து அந்தப் படத்தைப் பார்த்தேன்.

    கோயன் சகோதரர்களின் நோ கன்ட்ரி ஃபர் ஓல்டு மென் எனக்குப் பிடித்த மற்றொரு படைப்பு.

    இந்தப் படத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அருமையான பகிர்வுக்கு நன்றி ஜாக்கி அண்ணா.

    ReplyDelete
  7. ரொம்ப நல்ல விமர்சனம் ஜாக்கி.

    ReplyDelete
  8. அருமையான படம்னே,
    ஃப்ரான்கஸ் மெக்டார்மண்ட் ஜோயல் கோயனின் மனைவி தான்.நல்ல நடிகை,இதில் ஆதர்ச தம்பதிகளாய் இவர்களை சித்தரித்திருப்பார்கள்,இவரை ப்ரில்லியண்டாக சித்தரித்திருப்பார்கள்.
    ========
    செம படம்.
    குறுக்கு வழியில் பணம் தேடிப்போகும் ஒருவனுக்கு நேரும் சம்பவங்கள் இவர்களின் சிக்னேச்சர் அம்சம்.இசையும் அபாரமாயிருக்கும்.
    அருமையான பதிவு.அப்புறம் டெலிபோனில் மிரட்டும் வங்கி அதிகாரியிடம் லுண்டகார்ட் தடுமாறும் காட்சிகள் அற்புதம்.இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  9. ///செ.சரவணக்குமார் said...

    நீங்கள் எழுதியிருக்கும் விதமே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது ஜாக்கி அண்ணா.///


    எனக்கும்தான் அண்ணா!

    ReplyDelete
  10. திரைப்படத்திற்கு விமர்சனம் எழுத உங்களை விட்டா வேற யாரு...

    நீங்கள் எழுதியதை வாசித்தாலே படம் பார்த்த உணர்வு.. அருமை

    ReplyDelete
  11. உங்கள் follower ஆக இருந்தும் உங்கள் இடுகைகள் என் Dashboard க்கு வருவதில்லையே ஏன் என்று தெரியவில்லை முடிந்தால் கொஞ்சம் பாருங்க.. ஓட்டு போட்டாச்சு போட்டாச்சு..

    ReplyDelete
  12. அடடா.. நிறைய நல்ல படங்கள் வச்சுகிட்டே பார்க்காம இருக்கேன்.. நீங்க சொல்லிதான் தெரியுது.. சீக்கிரம் பார்த்துடுடறேன் ஜாக்கி..

    ReplyDelete
  13. Super Anna. Keep on posting like this.

    I will see this movie tonight once its get downloaded.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner