மணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல்

ஒரு சமுகம் நன்கு வளர்ச்சி பெற, குடும்பம் என்ற அமைப்பு ரொம்பவும் முக்கியமாகின்றது.. அதிலும் கணவன் மனைவி என்ற குடும்ப தேரின் அச்சானி மிக முக்கியமான ஒன்று...கணவன் மனைவி உறவு சிதைந்தால் அது ஒரு சமுகத்தின் சிதைவுக்கே வழி வகுக்கும்....

இந்தியாவில் 50 விழுக்காடுக்குமேல் நடக்கும் திருமணங்களில் விருப்பம் இல்லாமல் சொத்துக்கும், ஜாதிக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் திருமணங்கள்தான் அதிகம்...இந்தியாவில் நடக்கும் பல திருமணங்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக நடக்கும் திருமணங்கள் அதிகம்....

என் நண்பி்யின் நண்பிக்கு 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது...பெண் பார்க்க வந்த போதே அந்த மாப்பிள்ளை பையனின் கண்களில் தப்பு இருப்பதாக சொல்லி, இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என்று எவ்வளவோ அந்த பெண் எடுத்து சொல்லி இருக்கின்றாள்... ஆனால் நல்ல வேலையில் இருப்பதாலும் சிவப்பு தோலாக அழகாக சுருள் முடியுடன்... கைநிறைய சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை என்று பெற்றோர் அந்த பெண்ணை தாரை வார்த்து கொடுத்துவிட்டனர்.....

திருமணத்துக்கு வந்த மணப்பெண்ணின் நண்பிகளிடம் கை குலுக்கி ஜொள்ளு வழிந்து கொண்டு இருக்கும் போதே அந்த பெண் தன்னை ஏதோ ஒரு விபரீதத்துக்கு தன்னை தயார் செய்து கொள்ள... முதலிரவில் அந்த சிவப்புதோல் அவள் ரசனைக்கு சற்றும் செவி சாய்ககாமல் உடைகளை கிழித்து.....

அந்த கைநிறைய சம்பளம்...கத்தாமல் இருக்கு அவள்வாயில் துணி வைத்து அன்று இரவு முழுவதும் 3 முறை உறவு வைத்துக்கொண்டு மன்னிக்கவும் இருவரும் மனம் ஒத்தால்தான் உறவு... அது கற்பழிப்பு..... மறுநாள் பெண் நானிகோனிவருவாள் என்று பார்த்தாள்...வண்டலூர் மிருகாட்சி சாலை சிங்கம் இருந்த கூண்டில் இருந்து வந்தவள் போல் கல்யாண பெண்இருக்க... என் நண்பியும் பெற்றோரும் கலங்கி நின்றனர்...


நன்றாக யோசி்த்து பாருங்கள்...பத்து வயதுக்கு மேல் தன் அம்மாவிடம் கூட எந்த பெண்ணும் தன் அந்தரங்க உறுப்புகளை காட்ட வெட்கபடும் போது..தாலிகட்டிய அன்றே... நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து மணட்பத்திலேயே சாந்தி முகூர்த்தம்...கொடுமையிலும் கொடுமை இல்லையா?...காலையில தாலி கட்டிவுட்டு... நைட்டு எல்லாத்தையும் அவுத்துட்டு படுன்னு சொன்ன அது எவ்வளவு பெரிய கொடுமை.....

நண்பி அவளை விளையாட்டாய் கலாய்க்க....அவள் விழியில் நீருடன் மதலிரவின் கதையை சொல்ல...அந்த ஓநாய்அந்த பெண்ணின் மார்பகம் எல்லாத்திலும் கடித்து வைத்து வெம்பிய கன்றி போன சுவடுகள் இருந்தனவாம்...மார்பு காம்பில் காயம்...சேகர் அதை பாத்துட்டு எனக்கு தலை அப்படியே சுத்திடுச்சி என்றாள் என் நண்பி...படிச்சவன் இப்படி கூட நடந்துக்குவானா? என்று என்னிடம் கேட்கபட்டது.... நான் சொன்னேன் மிருகதனத்துக்கு படிப்பு என்ன ?பாமரத்தனம் என்ன ? என்றேன்.....ஆனா இதெல்லாத்தையும் அவுங்க அம்மாகிட்ட சொன்ன போது... நிறைய செலவு பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கேன்...

ஒரு நாள்ல மாப்பிள்ளையை அப்படி எல்லாம் முடிவு செய்து விட கூடாது...சில பேர் அப்படி இப்படிதான் இருப்பார்கள் என்று அந்த விஷயத்துக்கு சப்பை கட்டு கட்டி அந்த பெண்ணை அதே சிங்கத்தின் கூட்டில் சமுதாய பேச்சுக்கும்...கௌவரவத்துக்கும் அந்த பெண்ணை இரையாக்கினார்கள்...

நம் நாட்டின் பெரும் சோகம் இதுதான்... நல்லவன் இல்லை என்று தெரிந்தாலும் சமுக நிர்ப்ந்தத்துக்கு அவனிடடே அட்ஜஸ்ட் செய்து கொள்ள போக சொல்லும் கொடுமை நம் நாட்டில் அதிகம்....

மூன்று மாதம் கழித்து பெண்ணை பார்க்க போக 50 பவுன் போட்டு கட்டி கொடுத்த பெண் ஒரு வேலைகாரி போல் இருப்பதையும்...வெறித்த விரீகளுடன் வரவேற்ற பெண்ணை பார்த்து பெற்ற வயிறு பற்றி எரிந்தது...

தினமும் சந்தேகத்தில் வீட்டில் சண்டையாம்...திருமணத்துக்கு வந்து அதிகம் பேசி சிரித்த கல்லூரி தோழனை சுட்டிக்காட்டி எத்தனை முறை அவனோடு மகாபலிபுரைம் போனே என்று சொல்லி சொல்லி டார்ச்சர் செய்வானாம்...நகத்தால் உடம்பில் கிள்ளி காயம்...

விவாகரத்து பெற்று அந்த பெண் இப்போது வேலைக்கு போய்கொண்டு இருக்கின்றாள்.. அவளிடம் மறு திருமணத்தை பற்றி பேசினால்... எல்லா ஆண்களையும் மிருகம் என்கின்றாள்... எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று பயப்பட ஆரம்பித்து விட்டாள்...

ஆனால் இப்படி எல்லாம் இல்லாமல் அன்பாக அனுசரனையாக ஒரு கணவன் கிடைத்தால் எப்படி இருக்கும்....அதுவும் அதிர்ந்து பேசாமல்,முதலிரவில் முத்தம் கொடு்த்துக்கொண்டு இருக்கும் போது... பெண் தூக்கம் வருகின்றது என்று சொல்லும் போது, தூங்க முதலிரவில் எத்தனை கணவன் அனுமதி கொடுப்பான்...? மிக முக்கியமாக எனக்கு உன் முதல் காதல் பற்றி எனக்கு கவலையே இல்லை என்று சொன்னால் அந்த கணவன் தெய்வம் அல்லவா? அப்படி பட்ட ஒரு கணவனின் கதைதான் இந்த படம்....

மௌனராகம் படத்தின் கதை இதுதான்....



திவ்யா(ரேவதி) சுட்டிப்பெண்... வீட்டில் பெரிய பெண்... கல்லூரி படிக்கின்றாள்...அவளை பெண் பார்க்க டெல்லியில் மேனேஜராக வேலைபார்க்கும் சந்திரகுமார்(மோகன்) வருகின்றான்... திவ்யாவுக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று மாப்பிள்ளை சந்திரகுமாரிடம் சொல்ல போக.. இந்த ஓப்பன் டாக் தனக்கு பிடித்து இருப்பதால் இந்த கல்யயாணத்துக்கு சம்மதம் என்று பெற்றோரிடம் சொல்கின்றான்.....
திவ்யா தனக்கு திருமணம் வேண்டம் என்று மறுக்கின்றாள்... இந்த செய்தியால் திவ்யாவின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்வருகின்றது....இதனால் திவ்யா திருமணத்துக்கு சம்மதம் சொல்ல....

திருமணம் நடந்து மணப்பெண் திவ்யா டெல்லியில் தனிகுடித்தனத்துக்கு போக... அங்கே தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி கணவனிடம் விவாகரத்து கேட்கின்றாள்.. காரணம் கேட்கும் கணவனிடம் தனது முந்தைய காதலன் மனோகரை (கார்த்திக்) காதலித்து திருமணம் செய்து கொள்ள போகும் போது ஒரு விபத்தில் இறந்த கதையை சொல்ல...

கணவன் விவாகரத்து வாங்கி கொடுத்தானா...? இருவரும் மனம் ஒத்தார்களா? என்பதை தெலைகாட்சியில் சேனல் திருப்புகையில் ஏதாவது ஒரு சேனலில்... முக்கியமாக பொதிகையில் சேனலில் இந்த படத்தை பார்க்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இன்றைய நவீன சினிமாவின் ஜாம்பவான்கள் ஒன்றாக பணி புரிந்த படம்....

சினிமாவின் மொழியை அதிகம் யண்படுத்தும்தொழில்நுட்பவியலாலர்கள் நிறைந்தவர்கள் செய்த படம்....

ஒத்த அலைவரிசை உள்ள இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் இருவரும் இணைந்து செய்த படங்கள் ஏராளம்... இசைஞானியின் இசையோடு பயணித்த இவர்கள் படங்கள் 80க்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன....

எனக்கு சினிமா மீதான ஆசையை விதைத்த அக்னிநட்சத்திரம் படத்தை எடுத்த பிரம்மாக்களின் படம்...

இரண்டே பேரை வைத்துக்கொண்டு சுவரஸ்யமான திரைக்கதை அமைத்த படம்... அப்போது இந்த படத்தை பார்த்தவர்கள்...இரண்டு பேர் மட்டும் படம் முழுக்க பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.. இந்த படம் ஓடாது என்று சொன்னார்களாம்....அப்படிய ஓடினாலும் ஏ சென்டரில் மட்டும்தான் என்று சப்பை கட்டு கட்டினார்களாம்....


செலவே இல்லாமல் எடுத்த படம்..... படத்தின் பெரும்பாலான காட்சிகள்... சென்னையின் மியூசியத்தில் எடுக்கபட்டது... கார்த்திக்கை விசாரிக்கும் போலிஸ்ஸ்டேசன், சாலை காட்சிகள்...அதே போல் இரவு நேரத்தில் டெல்லியில் ரவுடிகளிடம் இருந்து தப்பி மோகனை ரேவதி கட்டிபிடிக்கும் இடம் எல்லாம் சென்னையில் இரவு நேரத்தில் மியூசியம் எதி்ரில் உள்ள ரோட்டில் மேட்ச் பண்ணி எடுத்த காட்சிகள்தான்....இந்த படம் வந்த போது எனக்கு பதினோறு வயது... ஆனால் எனக்கு சென்னை பரிட்சயம் இல்லை... ஆனால் சென்னை வந்த போது பல இடங்களை பார்த்த போது நானே ஷுட் பண்ண இடங்களை கண்டுபிடித்தேன்... அதே போல் மௌனராகம் படக்குழுவினர் எவரோடும் நான் பேசியதில்லை....

என் அம்மா எதற்கு இந்த படத்தை அப்படி சிலாகித்து பார்த்தாள் என்பது இப்போது எனக்கு புரிகின்றது... ஆனால் அந்த வயதில் இந்த படம் என்னை பொறுத்தவரை செம போர்.... ஒரு சண்டை கூட இல்லை .. ரஜினிபடம் போல் ஒரு ஸ்டைல் இல்லை என்று வருத்தபட்டு நொந்த நூடுல்சாகி பார்த்த படம்....

ஒரு படத்தின் வெற்றி என்பது.. அந்த படத்தின் கதாநாயகியை சரியாக தேர்ந்து எடுத்தாலே பாதி வேலை முடிந்து விடும் என்று சொல்வார்கள்....முதல் காட்சியில் தூங்கி எழுந்து பல் தேய்காமல், காபி குடிக்க கருப்பு ஆப் சாரியில் வரும் ரேவதி... பக்கத்து விட்டு பெண் போல் இருப்பதும் சட்டென மனதில் ஒட்டிக்கொள்வதும் இந்த படத்தின் வெற்றி என்பேன்....

அதே போல் கல்யாணம் நடந்த காட்சி சிம்பிளான ஷாட்டுகளால் எடுத்து இருப்பார்கள்... ரேவதி மேல் மிட் ஷாட்டில் பாலோ செய்யும் கேமரா...அப்படியே ரேவதி சஜஷனில் மோகன் மாப்பிள்ளை உடையில்.. அப்படியயே தாலி கட்டி மாலை மாற்றி..

அடுத்த காட்சி அலங்கரிக்கபட்ட முதல் இரவு அறைக்குள் இருக்கும் பூச்சரத்தில் அடுத்த ஷாட் ஓப்பன் அகும்... செலவே இல்லாமல் கல்யாணம் நடத்தியதாக காட்டி இருப்பார்கள்... நிரம்ப கல்யாண கூட்டம், நேம் போர்டு, போட்டோ, வீடியோ, சப்பாடு என்று ஏதுவும் இருக்காது....

நெஞ்சை நெகிழவைத்த காட்சிகளும் வசனங்களும்.....(மணிரத்னம்)

முதலிரவுக்கு போகாமல் வேண்டாம் என்று அடம்பிடிக்கும் ரேவதியிடம் அம்மா சமாதானம் சொல்லும் போது...

உள்ளமாப்பிளை உனக்காக காத்துகிட்டு இருக்காரு...
அம்மா எனக்கு இது பிடிக்கலை... இது வேண்டாம்..
அவரை எனக்கு முன்ன பின்ன கூட தெரியாது...
அவரு உன்னை தொட்டு தாலிக்டடினவரு...
தொட்டு தாலிகட்டிட்டா? எல்லாம் முடிஞ்சி போச்சா??? இரண்டு நாளைக்கு முன்னாடி என்னை இப்படி அனுப்பி இருப்பியா? என்று கேட்கும் வசனம் அரேஞ்சிடு மேரேஜில் முதலிரவு பயத்தோடு இருக்கும் பெண்ணுக்கான நியாயமான கோபம்....

===========
முதன் முதலாக வீட்டில் உள்ளே வரும் மனைவியிடம் எல்லாம் விளக்கி வரும் மோகன்...

இது எல்லாம் செங்கல் சிமென்டால கட்டனது.. இதை வீட மாத்த வேண்டியது நீதான் எனும் போது...அதற்கு ரேவதி எனக்கு செங்கல் சிமெண்ட் போதும் என்ற இடம் திருமணத்தின் வெறுப்பை சொல்லும் இடங்கள்...

================
முதன் முதலாக ஓட்டலில் சாப்பிடும் போது கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று சொல்லும் மனைவியை பார்த்து குழந்தை ஏங்ன அழுதுகிட்டே பொறக்குது தெரியுமா? பூமிக்கு வரும் பயம் இல்லை... ஆனால்புது சூழ்நிலையில் தன்னை எப்படி பழக்கபடுத்க்கொள்வது எப்படி என்று பயத்தில் அழுகின்றது.. அதுமாதிரிதான் நீயும்... என்று சொல்லும் அந்த வசனம்...
==============
ஒரு நல்ல காட்சி......



தயவு செய்து கைய விடுங்க..
பயமா?
இல்லை பிச்சை...
நீங்க தொட்ட எனக்கு கம்பளி பூச்சி ஊறுவது போல் இருக்கின்றது...
என்று சொல்லும் காட்சியில் மோகனின் ரியாக்ஷன் ராஜாவின் பின்னனி இசை... அற்புதம்...
===========
ஐயோ அப்பா என்று ஓட்டலில் மறையும் ரேவதியிடம் வம்புக்கு இழுக்க மிஸ்டர் சத்திரமௌலி என்று அழைக்கும் அந்த காட்சி... இந்த படத்தின் மெயின் சீன் என்று சொல்லலாம்....
==============
லைப்ரேரியில் காதல் சொல்ல வந்த கார்த்திக்கிடம் ஊர் முழுக்க மைக் போட்டு சொல்லு என்று சொல்லு்ம் போது கார்த்திக் ஒரு சீரியஸ் ரியக்ஷன் கொடுத்து விட்டு பிரின்சிபல் ரூமில் இருந்து மைக்கில் சொல்லும் காட்சிகள் சுவாரஸ்யம் நிறைந்து ஒன்று.....
=============
வக்கிலிடம் விவாகரத்து பற்றி பேசும் போது.. வக்கில் உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேறுபாடு என்று கேட்க.....
வெறுபாடுன்னு ஏதும் இல்லை...பெரிசா ஈடுபாடு இல்லை என்று மோகன் சொல்லும் காட்சியின் வசனம் பலம்..
==============
விவாகரத்து கோர்ட்டில் அப்ளை செய்ததுமே...அதுவரை முன்பக்கத்தில் உட்கார வைத்து காரில் அழைத்து போன மனைவி ரேவதியை பின்பக்க கார் கதவை திறந்து விடுவது நல்ல பஞ்ச்...

அதன் பின் வரும் மனதை மயக்கும் பாடல்....


=============
விகாரத்து பைல் பண்ணி வீட்டுக்கு வந்து ஆபிஸ் நண்பர்கள் இருக்கும் போதே படுத்துக்கொள்ளும் ரேவதி அவர்கள் போன பிறகு சாரி கேட்டுவிட்டு என் மீது எந்த கோபமும் வருத்தமும் இல்லையா? என்று கேட்கும் போது.. குட் நைட் என்று ஒற்றை வார்த்தை சொல்லும் மோகனின் படித்த கேரக்டர் படு ஷார்ப்....
==========
இன்னைக்கு நீ இருக்கற காபி போட்டு தரே.. ஆனா ஒரு வருஷம் கழிச்சி என்று மோகன் முந்தைய காட்சிகளில் ரேவதி பேசும் எல்லா டயலாக்குக்கும் ஒரு பஞ்ச் வைப்பது விறு விறுப்பான காட்சிகள்..
=========
ஒரு நல்ல கணவன் மனைவி காட்சிக்கு ரேவதி முதன் முதலாக மோகனுக்கு காபி போட்டு கொடுக்கும் அந்த காட்சியை சொல்லலாம்...
=========
கையில் அடிப்ட்டு இருக்கும் மோகனுக்கு சாப்பாடு ஊட்ட முயற்ச்சி செய்யும் போது அதை தடுக்கும் போது.. ரேவதி நான் தொட்ட நீங்க ஒன்னும் கருகி போய் விட மாட்டிங்க என்று சொல்லும் போது... எனக்கு ஒன்னும் ஆகாது உனக்குதான் கம்பளிபூச்சி ஊர்வது போல் இருக்கும் என்று சொல்லும் இடம் ஆண்களின் கைதட்டல் வாங்கிய இடம்....
=========
இந்த படத்துக்கு பின் ஆண்கள் பெண்களை சற்று மரியாதையாக பார்த்தர்க்ள் என்று சொல்லலாம்...
==========
கணக்கு எல்லாம் போட்டு விட்டு ரேவதி நீங்க சொல்ல எதாவது இருக்கின்றதா? என்று கேட்க நாலு மணிக்கு டிரெயின் இரண்டுமணிக்கு வந்து அழைச்சிகிட்டு போறேன் என்று சொல்வது....
==========

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்....


கார்த்திக் மாலில் வேகமாக நடக்கும் போது லோ ஆங்கி்ளில் பாலோ செய்வது...
ராஷ்ட்ரபதி பவன் கோபுரத்தை லோ ஆங்கிலில் ரோட்டில் மீடியனி்ல் வைத்து சென்டரில் பியட் கார் வருவது போல் எடுத்த காட்சி அற்புதம்...

நிலவே பாடலில் பல ஷாட்டுகளில் நிலவு இருப்பது போல் லைட்டிங் செய்து எடுத்து இருப்பார்....

ரேவதி ஒயிட் காட்டன் சாரியில் தரையில் படுத்து இருப்பதையும்...அந்த பெண்ணின் வெறுமையை டாப் ஆங்கிளில் காட்டுவதும் நல்ல ஆங்கிள்...

இந்தியா கேட் அருகில் போய் ரேவதி ஆச்சர்யத்தோடு பார்க்கும் அந்த லோ அங்கில் ஷாட்....
எதெச்சையாக கார் நிறுத்தி புதர் பக்கம் ரேவதி நடக்கும் போது தாஜ்மகாலின் பின்புறத்தையும்....ரேவதி விழி விரிய பார்க்கும் தாஜ்மகால் லாங் ஷாட் எந்த படத்திலும் இந்த ஆங்கிலில் தாஜ்மகாலை நான் பார்த்து இல்லை...

இளையராஜா...

நல்ல சோறு போடுவாதாக சொல்லி, வீட்டுக்கு வேளையோடு மோகனை, ரேவதி வரச்சொல்லி விட்டு சிறுவர்களுடன் வீட்டை அழகுபடுத்தும் போது ஒலிக்கும் பின்னனி இசையின் சந்தோஷம் நமக்கும் ஒட்டிக்கொள்ளும்....

மஞ்சம் வந்த சாங்கில் புல்லாங்குழலில் இருந்து டிரம்பட்டுக்கு மாறும் அந்த பீட் சூப்பர்...

வாலியின் பாடல் வரிகள் அப்போதைய இப்போதைய இளைஞர்களின் தேசிய கீதம்....ராஜாவின் பின்னனி இசையை சுவைக்க...


படத்தின் வெற்றிக்கான உளவியல்காரணங்கள்.....

மோகனை போன்ற கணவன் தனக்கு வேண்டும் என எல்லா பெண்களும் ஆசைப்டடது...

கார்த்திக் போல ஒரு காதலன் தனக்கு வேண்டும் என வயது பெண்கள் நினைத்து....

ரேவதி போல தனக்கு ஒரு மனைவி குடும்ப பாங்காக இருக்க வேண்டும் என்று நினைத்த பல ஆண்கள்...ரேவதி போல் ஒரு காதலியை வேண்டி நின்ற ஆண்கள் இந்த படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தார்கள்.....

காட்டன் சாரியில் ரேவதி லட்சுமிகடாட்சம்....அதே போல் சிலி்வ் லெஸ் நைட்டியில் டெல்லி வீட்டில் சோ கியூட்...

ரேவதி, மோகன் வீட்டு மற்றும் ரேவதியின் பிறந்த வீட்டு பெட்ரூம் அற்புதமாக இருக்கும் இது போலான பெட்ரூம் இருக்க வேண்டும் என்று நான் ஆசைபபட்டு இருக்கின்றேன்...

தொப்புள்காட்டாத ரேவதி படத்தின் பலமும் மரியாதையும்....

கார்திக் உற்சாகம்...மோகனின் பெருந்தன்மை...ரேவதியின் குறுகுறுப்பு எல்லோரையும் வந்து ஒட்டிக்கொண்டது.....
எடிட்டிங்..
இரண்டு பேர் அதிகம் பேசுவதால் தேவையில்லா காட்சிகள் டிரிம் செய்யபட்டால்தான் உட்கார முடியும் அதற்க்கு லெனின் எடிட்டிங்ப டத்தின் ஜீவ நாடி...


படத்தில் கிளைமாக்சில் மோகன் ரயில் நிலையத்தில் உருண்டு ஓடி வருவது படத்தின் உச்சபட்ச காமெடி....படத்தில் காமெடி ஒன்றும் பெரிதாய் இல்லை...

அதை தவிர்த்து அதற்கு முன் நடக்கும் ரேவதி, மோகன் உரையாடல் நெஞ்சை நெகிழவைக்கும் கண்களை குளமாக்கும்...
இருப்பினும் காதலிப்பவரும்,திருமணமானவரும் இந்த படத்தை ஒரு முறை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.....

படக்குழுவினர் விபரம்...

Directed by Mani Ratnam
Produced by G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Revathi
Mohan
Karthik Muthuraman
V. K. Ramasamy
Music by Ilaiyaraaja
Cinematography P. C. Sriram
Distributed by Sujatha Films
Release date(s) 1986
Running time 146 mins
Language Tamil
Gross revenue $1 million


குறிப்பு...
நான் எழுதும் விமர்சனத்தில் அதிக நேரம் ஐந்து மணி நேரம் எடுத்துக்கொண்டது இந்த படத்தின் விமர்சனம்தான்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

77 comments:

  1. It is very difficult to get a husband like Mohan character in real life. It is a good movie.

    ReplyDelete
  2. சின்ன சின்ன வண்ணக்குயில் பாட்டில் மட்டுமே ஜீம் யூஸ் பண்ணியிருப்பார்கள் ஜாக்கி . வேறு எங்கும் இருக்காது

    ReplyDelete
  3. Boss,ரேவதியோட அண்ணன் அண்ணி விட்டின் பின்பக்கம் செய்யும் சிலுமிஷுதின் பொது, தண்ணிரை மேல உற்றும் கட்சி ய் விட்டுடிங்களே..

    ReplyDelete
  4. Padathai polave ungal vimarsanamum niraivu..
    Palich vasanagalai ninaivu koorndha ungal porumaiku nanrigal pala.
    Mohan ku iraval kural kodutha S.N.Surendharum paaraatu kuriyavar.
    Lawer vedathil varuvadhu palam perum nadigai Kanchana.
    Kathick varum kaatchigal anil kapoor naditha mani yin kannada padathilum vandhavai.(But Karthick dhan best)

    ReplyDelete
  5. It is very difficult to get a husband like Mohan character in real life. It is a good movie.-//

    இயல்பு வாழ்க்கையில் அது சாத்தியம் இல்லை என்றாலும்... அது போல இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் என்பதான பாத்திர படைப்பு அது..
    நன்றி கலை

    ReplyDelete
  6. சின்ன சின்ன வண்ணக்குயில் பாட்டில் மட்டுமே ஜீம் யூஸ் பண்ணியிருப்பார்கள் ஜாக்கி . வேறு எங்கும் இருக்காது//

    உண்மைதான் மணி... மற்றவை எல்லாம் பிளாக் லென்ஸ்... அதே போல் டெல்லி வீட்டின் கேமரா கோணங்கள் அற்புதம்.. முக்கியமாக படிக்கட்டு காட்சிகள்..

    ReplyDelete
  7. Boss,ரேவதியோட அண்ணன் அண்ணி விட்டின் பின்பக்கம் செய்யும் சிலுமிஷுதின் பொது, தண்ணிரை மேல உற்றும் கட்சி ய் விட்டுடிங்களே..//

    பாலஜி...

    எல்லாம் சொல்லனும்னு ஆசைதான் எவ்வளவுநேரம் இப்படி உக்காந்து டைப் அடிக்கறது...
    நன்றி பாலாஜி

    ReplyDelete
  8. Kathick varum kaatchigal anil kapoor naditha mani yin kannada padathilum vandhavai.(But Karthick dhan best)//

    உண்மைதான் கிருஷ்ணகுமார்... கார்த்திக் வரும் அந்த அரைமணிநேர சீன் ஒரு அதகளமாக சீன்தான்...

    ReplyDelete
  9. Lawer vedathil varuvadhu palam perum nadigai Kanchana.//

    ஓ அப்படியா இந்த மூஞ்சை எங்கேயோ பார்த்து இருக்கமேன்னு ஒரு டவுட் தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  10. ஹாய் ஜாக்கி அண்ணா,
    விரிவான நிறைவான பதிவு.

    திரும்ப dvd தேடி பார்க்க வெச்சிட்டீங்க

    ReplyDelete
  11. athenna //6லட்சம் ஐம்பதாயிரம் ஹிட்ஸ்களுக்கு...//

    aaru latchathu(i) aympatayiram endrallava solla vendum....illai ithu ungal style aa?

    ReplyDelete
  12. Jackie-Anna,

    Mouna Raagam became Mouna Raagam, becoz of P. C. Sriram and Raja.
    Without them, I don't think Mani could have made it that way.

    Madhu Ambat, Santhosh Sivan photography remains good, but still I am not able to match them with PC.

    Nayagan, Dalapathi - I still remember the songs, BGM..

    Please make next posts with Nayagan & Dalapathi, with your extensive narrating style, enjoying the finer moments of those movies..

    I get very much nostalgic (which I like very much), when I read your narrations.. And then visualizing the same...

    In my viewpoint, Mani himself could not create any movie, with the
    technicalities of Nayagan, Dalapathi and Mouna Ragam..

    Even though Alai Payuthe had PC, BGM of ARR was not matching Raja's, in my viewpoint.

    Raja Raja than.

    Sudharsan

    ReplyDelete
  13. வாவ் மெளனராகம் படம் போலவே உங்கள் விமர்சனமும். சந்திரமெளலியை எவரும் மறக்கவே மாட்டார்கள்.
    இசைராஜாவைப் பற்றி நிறைய எழுதாமல் அவரின் பாடலையும் ஒரு பிஜிஎம்மையும் பதிவில் போட்டு அவரைப் பற்றீப் நாம் பேசுவதை விட இசை பேச்ட்டும் என விட்டுவிட்டீர்கள் போல் தெரிகின்றது.

    ராஜா, மணி, பிசி இந்தக்கூட்டணி என்றைக்கும் வெற்றிக்கூட்டணிதான்.

    ReplyDelete
  14. இன்னும் இரண்டு மடங்காக நீங்க எழுதினாலும் கூட படிக்கலாம்.. அவ்வளவு நல்ல படம்.. அவ்வளவு சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.. சரியா எந்த விஷயங்கள் முக்கியமோ அதை எழுதியிருக்கீங்க..

    ReplyDelete
  15. எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத சில படங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  16. A complete film review. Your view of seeing a movie is wonderful. i really enjoyed while reading this post. this is one of my favorite movie. i liked it because of maniratnam and ilayaraja.

    Thanks

    ReplyDelete
  17. மிகவும் இன்போர்மடிவே-அ இருந்தது

    ReplyDelete
  18. //இந்த படத்துக்கு பின் ஆண்கள் பெண்களை சற்று மரியாதையாக பார்த்தர்க்ள் என்று சொல்லலாம்...//

    படம் பார்த்து ஆண்கள் பெண்களை மரியாதையாக பார்ப்பார்கள் என்று நான் நம்ப வில்லை .....படம் பார்த்து வர்ற மரியாதை எல்லாம் ஒரு ரெண்டு நாளைக்கு தான் ...

    ReplyDelete
  19. மிக நன்று. போடா டே... விட்டுடிங்களே..

    ReplyDelete
  20. ரசனையான விமர்சனம். மிகப் பிடித்த படம் பற்றிய அழகான எழுத்துக்கு நன்றி ஜாக்கி அண்ணா.

    ஐந்து மணி நேர உழைப்பிற்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
  21. அண்ணே சான்சே... பிரிச்சு மேய்ஞ்சீட்டீங்க... படத்தை 15 தடவையா பார்க்கனும்னு தோனுது...

    ReplyDelete
  22. படத்தில் நெகட்டிவ் க்ளைமாக்ஸ் இருந்தால் மட்டுமே அது ஒரு தரமான படம், ரசிகர்களை பாதிக்கும் என்கிற போக்குடன் சென்று கொண்டிருக்கும் தமிழ்சினிமாவின் தற்போதைய சூழலில் இந்த பதிவு மிக அவசியமான ஒன்றுங்க ஜாக்கி சேகர்.

    இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் அவர்களின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்.

    போலீஸில் காட்டி கொடுத்ததற்காக கார்த்திக்கிடம் ரேவதி மன்னிப்பு கேட்க வரும் காட்சியும் அருமையான ஒன்று.

    ReplyDelete
  23. டைட்டில் மியூசிக் ஒன்னு போதும் சார், இளையராஜான்னா யாருன்னு காட்ட...பியானோ வை ஆச்சர்யமாக பார்க்க வாய்த்த இசைஞானி அவர். மணிரத்னம் பற்றி நான் என்ன சொல்ல, அதான் நாடே சொல்லுதே

    ReplyDelete
  24. குரு,

    எனக்கு மிக மிக பிடித்த படம் இது. எத்தனை முறை பார்த்தேன் என்று கனக்கே இல்லை. உங்கள் பதிவு மூலமாக மீண்டும் ஒரு முறை பார்த்த த்ருப்தி. “பனி விழம் இரவு” அட்டகாசமான ரொமாண்டிக் SONG.

    ReplyDelete
  25. ஏறக்குறைய எல்லா சிறப்பான காட்சிகளையும் குறிப்பிட்டிருந்தீங்க. படிச்சவுடனே கொஞ்சம் நெகிழ்ச்சியாயிடுச்சு. என்னோட ஆல் டைம் பேவரைட் இது. மோகன் கேரக்டர அத்தன அருமையா சித்திரிச்சிருந்திருப்பாரு மணிரத்னம். ரேவதியோட அப்பா,அம்மா வர்றப்ப வேணுமின்னே உர்றுன்னு இருப்பாரு. ரேவதி பின்னாடி காரணம் கேட்கிறப்போ, நாளைக்கு விவாகரத்துன்னு அவங்களுக்கு தெரிய வர்றப்ப நானும் காரணமாயிருக்கலாம்னு அவங்க நெனக்கனும்றதுக்காக அப்படி செஞ்சேம்பாரு. ரொம்ப டச்சிங்கா இருக்கும்.

    நீங்க சொன்ன மாதிரி தாஜ்மஹாலை இப்படியொரு ஆங்கிளில் எந்த படத்திலும் பார்த்ததில்லை.

    கார்த்திக் சம்பந்தப்பட்ட போர்ஷனும் அந்த சர்தார்ஜி நகைச்சுவைப் பகுதியும் இல்லாம இருந்திருந்தா ஒரு நீட் பிலிம்மா இருந்திருக்குமோன்னு அப்பப்ப எனக்குத் தோணும். ஆனா அந்த போர்ஷன்கள்தான் ரிலீஃப் பீலீங்கை கொடுக்கறதுன்றதுனால நெறைய பேரு இத ஒத்துக்க மாட்டாங்க. :)

    அயல்நாட்டுப் படங்கள விட உள்ளூர் படங்கள ரொம்ப ரசிச்சு எழுதறீங்க. :-)

    நான் கூட ரொம்ப வருஷம் முன்னாடி இந்தப் படத்தைப் பத்தி எழுதியிருக்கேன்.

    http://pitchaipathiram.blogspot.com/2004/12/blog-post_06.html

    ReplyDelete
  26. ஹாய் ஜாக்கி அண்ணா,
    விரிவான நிறைவான பதிவு.

    திரும்ப dvd தேடி பார்க்க வெச்சிட்டீங்க----//

    நன்றி பிரியா இந்த பதிவை படிச்சா கண்டிப்பா ஒரு முறை படம் பார்பிங்கன்னு எனக்கு தெரியம்...

    ReplyDelete
  27. athenna //6லட்சம் ஐம்பதாயிரம் ஹிட்ஸ்களுக்கு...//

    aaru latchathu(i) aympatayiram endrallava solla vendum....illai ithu ungal style aa?//

    ஆம் மணிகண்டன் அது என் ஸ்டைல்தான்...

    ReplyDelete
  28. Mouna Raagam became Mouna Raagam, becoz of P. C. Sriram and Raja.
    Without them, I don't think Mani could have made it that way.//

    அப்படிஎல்லாம் சொல்ல முடியாது...சுடி..மணி நல்ல கலைஞர்...அவரின் சப்போர்டர்ஸ் இவுங்க அவ்வளவே...

    ReplyDelete
  29. இன்னும் இரண்டு மடங்காக நீங்க எழுதினாலும் கூட படிக்கலாம்.. அவ்வளவு நல்ல படம்.. அவ்வளவு சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.. சரியா எந்த விஷயங்கள் முக்கியமோ அதை எழுதியிருக்கீங்க../

    நன்றி ஜெய்...மிக்க நன்றி... இப்தான் எக்சாம் முடிஞ்சிது...அதான்..

    ReplyDelete
  30. வாவ் மெளனராகம் படம் போலவே உங்கள் விமர்சனமும். சந்திரமெளலியை எவரும் மறக்கவே மாட்டார்கள்.
    இசைராஜாவைப் பற்றி நிறைய எழுதாமல் அவரின் பாடலையும் ஒரு பிஜிஎம்மையும் பதிவில் போட்டு அவரைப் பற்றீப் நாம் பேசுவதை விட இசை பேச்ட்டும் என விட்டுவிட்டீர்கள் போல் தெரிகின்றது.


    ஆமாம் தேவன் இளையராஜாவை பத்தி் எழுதனும்னா.. ஒரு தனி பதிவே போடனும்...

    ReplyDelete
  31. A complete film review. Your view of seeing a movie is wonderful. i really enjoyed while reading this post. this is one of my favorite movie. i liked it because of maniratnam and ilayaraja.


    நன்றி மதன் இளங்கோ.. உங்கள் முதல் வருகைக்கு..

    ReplyDelete
  32. மிகவும் இன்போர்மடிவே-அ இருந்தது//
    நன்றி சதீஸ் கண்ணன்...

    ReplyDelete
  33. படம் பார்த்து வர்ற மரியாதை எல்லாம் ஒரு ரெண்டு நாளைக்கு தான் ...==///

    நன்றி தனிகாட்டு ராஜா அதைதான் சொல்லி இருந்தேன்...

    ReplyDelete
  34. மிக நன்று. போடா டே... விட்டுடிங்களே..//

    அந்த காமெடி ஒன்றும் சுக படவில்லை..

    ReplyDelete
  35. நல்ல படம். நல்லா எழுதி இருக்கீங்க..

    எத்தனை முறை பாத்தேன்னு கணக்கெ இல்லை..

    ReplyDelete
  36. ரசனையான விமர்சனம். மிகப் பிடித்த படம் பற்றிய அழகான எழுத்துக்கு நன்றி ஜாக்கி அண்ணா.

    ஐந்து மணி நேர உழைப்பிற்கு ஒரு சல்யூட்.//

    நன்றி சரவணகுமார்...

    ReplyDelete
  37. அண்ணே சான்சே... பிரிச்சு மேய்ஞ்சீட்டீங்க... படத்தை 15 தடவையா பார்க்கனும்னு தோனுது...//

    நன்றி நாஞ்சில் அவசியம் இன்னொறு முறை பாருங்க...

    ReplyDelete
  38. போலீஸில் காட்டி கொடுத்ததற்காக கார்த்திக்கிடம் ரேவதி மன்னிப்பு கேட்க வரும் காட்சியும் அருமையான ஒன்று.//
    நன்றி நளினி சங்கர்...
    அந்த சீனும் நல்லா இருக்கும்...

    ReplyDelete
  39. டைட்டில் மியூசிக் ஒன்னு போதும் சார், இளையராஜான்னா யாருன்னு காட்ட...பியானோ வை ஆச்சர்யமாக பார்க்க வாய்த்த இசைஞானி அவர். மணிரத்னம் பற்றி நான் என்ன சொல்ல, அதான் நாடே சொல்லுதே//

    உண்மைதான் பருப்பு இந்த படத்துல வர்ர எல்லா மியூசிக்கும் இதுல இருக்கும்...

    ReplyDelete
  40. Wow superb..!//
    நன்றி பிரசன்னா...

    ReplyDelete
  41. ஏறக்குறைய எல்லா சிறப்பான காட்சிகளையும் குறிப்பிட்டிருந்தீங்க. படிச்சவுடனே கொஞ்சம் நெகிழ்ச்சியாயிடுச்சு. //

    உங்களை போல சினிமா ரசிகர் இப்படி பாராட்டும் போது ரொம்ப சந்நதோஷமா இருக்கு...

    அதே போல் கார்திக் போஷன் படத்தின் பெரிய பலம்..

    சர்தர்ஜி ஜோக் படத்தின் தொய்வு...
    நீங்க சொன்ன அந்த சீனையும் எழுதி இருப்பேன்... நேரம் இல்லை அதான்... நன்றி சுரேஷ் கண்ணன்சார்..

    ReplyDelete
  42. குரு,

    எனக்கு மிக மிக பிடித்த படம் இது. எத்தனை முறை பார்த்தேன் என்று கனக்கே இல்லை. உங்கள் பதிவு மூலமாக மீண்டும் ஒரு முறை பார்த்த த்ருப்தி. “பனி விழம் இரவு” அட்டகாசமான ரொமாண்டிக் SONG.//

    அந்த ரோமான்டிக் சாங்குல தாஜ்மகால் அழகும்
    ஜான்பாபு டான்ஸ் மாஸ்டரும்... இப்ப சிரியல்ல நடிச்சிகிட்டு இருக்கும் ஒரு பெண்ணோட அம்மாவும் அதுல ஆடி இருப்பாங்க...

    ReplyDelete
  43. ஜாக்கி, உங்களோட ஒரு பதிவை இப்படி வரிக்கு வரி மெதுவாகவும்,ரசிச்சும் படிச்சதில்லை. ஒரு வரி கூட சாஸ்தில்லாம இருக்குங்க. ரசனைகள் மாறுபடலாம், இது உலகத்தோட பொதுவான நியதி. இந்தப் படத்தை பொறுத்தவரையில நிறைய பேருக்கு பிடிச்ச விசயங்கள் பொதுவா போனதுதான் வித்தியாசம்.

    சர்தார்ஜியோட அந்த நகைச்சுவையும் அருமை.
    /மஞ்சம் வந்த சாங்கில் புல்லாங்குழலில் இருந்து டிரம்பட்டுக்கு மாறும் அந்த பீட் சூப்பர்.../

    பல வருசங்களாய் என்னோட அலைபேசியில ரிங் டோனா இருந்தது இசை. ஒரு இசையமைப்பாளரின் பிருமாண்டத்தைச் சொல்லனும்னா இந்தப் படத்தைச் சொல்லலாம். பல இடங்கள்ல இசை இருக்குன்னும் தெரியாது எப்ப வந்துட்டு போவுதுன்னும் தெரியாது. மணிசாருக்கு இது மூணாவது படம், வாழ்வா சாவான்னு ஆரம்பிக்கப் பட்டு பல சர்ச்சைக்கு அப்புறம், வசூல்ல பொளந்து கட்டுன படம்.

    நீங்க இன்னும் “அதற்க்கு”னுதான் எழுதறீங்களா?

    ReplyDelete
  44. மணிசாருக்கு இது மூணாவது படம், வாழ்வா சாவான்னு ஆரம்பிக்கப் பட்டு பல சர்ச்சைக்கு அப்புறம், வசூல்ல பொளந்து கட்டுன படம்.

    நீங்க இன்னும் “அதற்க்கு”னுதான் எழுதறீங்களா?//

    இல்லை அப்படி வேண்டும் என்று எழுதுவது இல்லை...
    ரெண்டாவது ஒரு வாட்டி படிச்சிட்டு போஸ்ட் பண்ணனும் எதாவது வேலை வந்திடும்....

    ReplyDelete
  45. ஜக்கி!, படம் எடுத்த மணியின் உழைப்புக்கும் , உங்களின் அழகியல் சார்ந்த ரசனைக்கும் எனது வோட்டும், வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  46. மௌனராகம் குறித்த அலசல் ஒவ்வொரு வரியும் அபாரம்

    எதை பாராட்டுவது என்று தெரியவில்லை

    ReplyDelete
  47. மருபடியும் படம் பார்க்க ஆசையாய் இருக்கு.
    பதிவை கூட பல தடவை வாசித்தேன்.

    ReplyDelete
  48. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காம வாழ்வதும், ஒருவரை ஒருவர் விட்டுட்டு வாழ்வ‌தும் சரியல்ல!..

    ReplyDelete
  49. One of the finest movies of all time! With so much copy cats around, still no one could come up with a decent copy of this movie. All things came together in this movie

    thanks for the nostalgia you invoked

    ReplyDelete
  50. ஜாக்கி சார்,
    படம் எடுக்க எவ்வளவு உழைத்தார்களோ அதை போலவே உங்கள் விமர்சனமும் மிக போற்றுதலுக்குரியது. கருத்து சொன்னவர்கள் கூட அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து மேய்ந்தது படிக்க கூடுதல் ஈர்ப்பு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  51. //இந்தியாவில் 50 விழுக்காடுக்குமேல் நடக்கும் திருமணங்களில் விருப்பம் இல்லாமல் சொத்துக்கும், ஜாதிக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் திருமணங்கள்தான் அதிகம்...இந்தியாவில் நடக்கும் பல திருமணங்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக நடக்கும் திருமணங்கள் அதிகம்....//

    சரியாகச்​சொன்னிர்கள்! ய​​யோராடு விருப்பபட்டு ​போக இருந்தவ​ரை என் காலில் விழுந்து கதறியும் அவ​ரை திருமணத்திற்கு ஒத்துக்​கொள்ளவில்​லை என்றால் தற்​கொ​லை ​செய்து ​கொள்​வோம் என்று மிரட்டியும் திருமணம் ​செய்து வைத்து.. அது இப்​பொழுது டவுரி ​கேசு வ​ரையும் வந்து நிக்குது..

    ReplyDelete
  52. எனக்கு இந்த படம் சீன் பை சீன் மனபாடம். நீங்கள் விவரிக்கும் போது புதிதாக பார்க்கும் உணர்வு ஏற்பட்டதை மறுக்க முடியாது. பாராட்டுகள். இசை இந்த படத்திற்கு மிக பெரிய பலம் என்பதை மறுக்க முடியாது

    ReplyDelete
  53. good review...recently i saw 'nenjathai killadey'(1981?) directed by Mahendran which is original version of 'mouna ragam'.

    Both the directors have taken same story in their one style with distinction.

    ReplyDelete
  54. அண்ணே உண்மைத்தமிழன மிஞ்சிட்டீங்க...

    ReplyDelete
  55. முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துட்டிங்க. மௌனராகம்- நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் தழுவல் இல்லையா. கிளைமாக்ஸ் காட்சிய பார்த்தீங்கனனா அது தெரியும். அதனாலேயே மௌனராகம் வெளியான கால கட்டத்தில், மணிரத்னம் பல விமர்சகர்களால் கிழிக்கப் பட்டவர். பின்னாளில் மணிரத்னத்தின் பிரபலம் எல்லாவற்றையும் மறக்க வைச்சிட்டுச்சு.

    ReplyDelete
  56. I liked the "delhi" house in this movie. Do you know where was it shot?. It was such a beautiful house. My dream house too. I still wonder & would like to know where is that house?.

    As you have said this is one of the evergreen classic movie in tamil cinema history.

    ReplyDelete
  57. I liked the "delhi" house in this movie. Do you know where was it shot?. It was such a beautiful house. My dream house too. I still wonder & would like to know where is that house?.

    As you have said this is one of the evergreen classic movie in tamil cinema history.

    ReplyDelete
  58. Good review. Tempted to view the movie again.

    This is Mani's 5th movie after Pallavi Anu Pallavi (Kannada), Vunaru (Malayalam), Pagal Nivalvu, Idhayakovil

    Karthik 20 min is mind blowing.

    ReplyDelete
  59. Good thing, he did not have song for Karthik and Revathi

    ReplyDelete
  60. பாஸ் உங்க எழுத்திற்கு ஒரு சலூட்.

    முன்னாடி சொன்ன சம்பவத்தோடு மௌனராகத்தை இணைத்த அழகு அற்புதம்.

    நான் இந்தப்படத்தை டிவி இல் 10 தடவையாவது பார்த்து இருப்பேன்.உங்கள் விமர்சனத்தைப் பார்த்த பின் மீண்டும் பார்க்க ஆசைவந்தது உங்கள் வெற்றியே.

    ReplyDelete
  61. தான் ரசித்த ஒரு படத்தை எழுத்துகளாக அதுவும் சுவையாக மாற்றுவதென்பது.. எல்லோராலும் முடியாத விடயம். அது உங்களால் முடிந்துள்ளது... உங்களின் நல்ல ரசனைக்கு ஒரு சலூட்... படத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்திருக்கிறீர்கள்.. எனக்கும் இந்தப்படம் ரொம்ப பிடிக்கும்

    ஜாக்கி அண்ணா நானும் உங்களை பின் தொடர்கிறேன் நானும் திரைப்படங்களை ரசிப்பவன் என்பதால்,,

    ReplyDelete
  62. ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க ரசிச்சு!

    ReplyDelete
  63. ரசனையான பதிவு ஜாக்கி அண்ணே.......

    ReplyDelete
  64. ஆனால் ஒன்று. மணிரத்னம், எழவு வீட்டில் சுண்டல் விற்பதையே வாடிக்கையாக வைத்துள்ளதை பதிவு கண்டிக்கவில்லையே...

    காஷ்மீர் பிரச்சினை, ரோசா.
    மும்பை கலவரம், பாம்பே.
    ஈழம், கண்ணத்தில் முத்தமிட்டால்.

    ராவணன், எந்த எழவோ !!!

    வார்த்தைகளை கடித்து துப்பி வசனம் வைத்து படம் எடுத்தாலும், மற்றவர்களின் (இசை, கேமரா)சப்போர்ட் இல்லாமல் மணியால் ஆணி புடுங்கியிருக்க முடியாது என்பது என் கருத்து.

    இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனாராக உருவெடுத்துவிட்டபிறகாவது, ஈழப்பிரச்சினையை ஒழுங்காக படமெடுத்து தொலைத்தாரா ? இல்லையே !!! புலிகளை சோளக்கதிருக்குள் மறைந்து நிற்கும் தீவிரவாதிகளாக காட்டியதோடு சரி.

    முள்ளிவாய்க்காலை எப்படி கல்லா கட்டலாம் என்றுவேண்டுமானால் இப்போது யோசித்துக்கொண்டிருப்பார் !!!

    ReplyDelete
  65. Very Nice...
    I saw the movie when i was 12 years old. I liked karthik scenes.
    Then I saw it again when I was 25 yrs old. I am very much attached to the movie.(now with Mohan-Revathy scenes.)

    A wonderful review for the
    wonderful movie.

    Thanks...

    ReplyDelete
  66. இந்த பதிவை படித்ததும் ரொம்பவும் கடந்த காலத்துக்கு போயிட்டேன்.நான் மருத்துவ கல்லூரி முடிக்கும் போது வந்த படம்.
    மணிரத்தினம் எல்லாம் தெரியாது, ஆர்வமில்லை, ஆனால், இந்தபட்த்தின் கதானயகியின் திருமணம் பற்றிய கேள்விகள் எங்களை யெல்லாம் ரொம்ப கவர்ந்தது.எல்லாரும் கல்யாணத்துக்கு ரெடியவதுதானே அடுத்து நடக்கம்.எங்கள் நண்பிகள் குழாம் கொஞ்ஞம் பெண்ணுரிமைகாரர்கள்.எங்கள் கல்லுஉரியில் ஒரு 25-50 % ஆண்கள் மருத்துவர்க்அளாக இருக்க கூட அருகதையில்லாதவர்களாக இருக்கும்போது அவர்களயெல்லாம் கணவ்ராக தேர்ந்தெடுக்க எப்படி முடியும்.அத்னால் மோஹனை பிடிக்காவிட்டாலும் கூட கதை பிடிதிருந்தது.
    இப்போ வாழ்க்கை கொஞம் வாழ்ந்து மருத்துவதொழிலும் செய்து பல மனிதர்களஇ பார்த்தாகிவிட்டது.மனைவி இனொருவன் குழந்தயை சுமக்கிறாள் என்ற போது 'என்ன செய்யல்லாம்' என்ரு மிகவும் பணிவாக கேட்ட கணநவனை ப்பார்த்து எனக்கு கண்ணீர் வந்தது.கணவர் ,சின்ன வயது, பணக்காரர், பார்க்க குறை ஒன்றுமில்லை.
    மனைவிக்கு அவர் மேல் பாசம்.ஒரு பெண் இரு ஆண்கள்மேல் பாசம் வைக்க முடியுமா?
    இத்த்னைக்கும் இருவரும் சாதரண தமிழ் மக்கள்.மனைவி மாற்றனுடன் போவது நல்லது என்றான போது கணவர் ஒன்று சொல்லவிலை. அவருடய துக்கம் அவர் முகத்தில் தெரிந்தது.

    எதர்க்கு சொல்கிரென்றால், அப்போது என்னை எல்லரும் என்னுடய பெண்ணுரிமை கருத்துக்கு விசித்திரமாக பார்க்கும்போது, நான் நினைப்பே, ' இதெல்லாம் மாறிடும்' என்ரு.இப்போ பார்த்தால் நாஙளே தேவல.
    என் நண்பி கணவரி இழந்த்து மருமணம் செய்துகொண்டவ்அர், அதர்க்கு முன் திருமணம் ஆகாதவர். அன் நண்பியின் மகநை தன் மகனாக பாவிக்கிறார். என் நண்பியைஅ விட கொனஜ்ம் சிரியவர்.நாஙள் எல்லாம் ஊக்குவித்து அந்த திருமணம் நடந்து இன்ரும் நாஙள் இருவரும் மிகவும் அன்புடன் இருப்பதர்க்க்உ என் நண்பியின் கணவரும் ஒரு காரணம். என்அக்கு என் பெற்ரோர் ,சகோதரியய தவிர இவர்கள் இருவரும் ஒரு சொந்த. நாங்கள் ஜாதி, மதம் பார்த்த்தில்லை.. ஆனால் இன்றைக்கி இணயத்தில் கொட்டிகிடக்கும் ஜாதீயை பார்தால் ஆச்ச்ரியமாக இருக்கு.

    தப்பும் தவறுமாக எப்டியோ எழுதிவிட்டேன்.உங்கள் விமர்சனம் பல எண்ணங்களை தூண்டிவிட்டது.

    ReplyDelete
  67. செந்தழல் ரவி... பிரச்சினைகளை கண்முன்னாடி நிறுத்துவதுதான் சினிமாவின் வேலை, தீர்வு காண்பது அவர்கள் வேலை இல்லை. அது அரசியல்வாதிகளின் கடமை. இராவணன் இப்போதைய ட்ரெண்ட் கதைதான், நக்சல்களின் கதை :)

    ReplyDelete
  68. miga arumai nanbare.... Nalla padhivu..I enjoyed the way you are expressing your thoughts...

    ReplyDelete
  69. Good Write-Up Sir.Kudos to you.

    ReplyDelete
  70. //
    காலையில தாலி கட்டிவுட்டு... நைட்டு எல்லாத்தையும் அவுத்துட்டு படுன்னு சொன்ன அது எவ்வளவு பெரிய கொடுமை.....
    //

    படிக்கும் போதே மனது வலிகிறது அண்ணா. பாவன் உங்கள் தோழியின் வாழ்க்கை.

    வழக்கம் போல சரவெடி + எண்ணற்ற புது புது விஷயங்கள். தொடர்க மேலும் பல.

    ReplyDelete
  71. ஏனக்கு மிகவும் பிடித்த படம் அது! அதை மிக சிறப்பாகவும் அகழாகவும் உங்களது வார்த்தைகளால் செதுக்கிய ஜக்கி சேகருக்கு ஏனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்!! :)

    ReplyDelete
  72. ஏனக்கு மிகவும் பிடித்த படம் அது! அதை மிக சிறப்பாகவும் அகழாகவும் உங்களது வார்த்தைகளால் செதுக்கிய ஜாக்கி சேகருக்கு ஏனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்!! :)

    ReplyDelete
  73. அன்பின் ராஜி கஷ்டபட்டு தமிழில் அடித்து பின்னுட்டம் இட்டமைக்கு எனது நன்றிகள்.. நீ எனது வகுப்பு மாணவி இல்லையென்றாலும்... அந்த பெருந்து பயணம் ஒரு அற்புதமான நினைவுகூறல்...

    நன்றி..

    ReplyDelete
  74. அருமையான விமர்சனம் இன்றும் நினைவில் நிறைந்திருக்கும் இப்படத்தின் பலம் இசை தான்.படத்தில் பல சிறப்பான அம்சங்கள் இருந்ததாலும் ராஜாவின் இசை தான் அவை நம்மோடு இணைத்து விடுகிறது.மணி சிறந்த இயக்குனர் என்றாலும் அவரின் திறமையை அடையாளம் காட்டுவதும் ராஜாவின் இசை தான்.
    மன்றம் வந்த தென்றல் பாடல் சிறு உதாரணம் .....

    ReplyDelete
  75. உங்கள் விமர்சனத்தை வாசித்த உடன் மனம் வசந்தமாய் இருந்த அந்த காலங்கள் நினைவில் மலர்ந்தது திருநெல்வேலியில் ராயல் தியேட்டரில் படம் வெளியானது படம் பார்க்க செல்வதே திருவிழா போல் இருந்த கால கட்டம் பாலசந்தர் படங்களை மட்டுமே விரும்பி பார்த்த என்னை மாற்றிய படம் . உங்கள் விமர்சனம் மீண்டும் ஒரு முறை படம் பார்க்க வைத்து இளமை காலங்களை திரும்பி பார்க்க வைத்து விட்டது நன்றி..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner