இரண்டு அதிகார துஷ்பிரயோகங்கள்...

நடைபெற்ற சட்டசபை கூட்டதொடரில் காவல் துறை மானியக்கோரிக்கையின் போது சொன்ன புள்ளிவிபரத்தில் கடந்த ஆண்டில் மட்டும் வாய் சண்டையால் ஏற்பட்ட தகராறு காரணமாக300க்கு மேற்பட்டவர்கள் கொலை செய்யபட்டுஉள்ளார்கள்... என்று அரசு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது....

இருவருக்கும் ஏற்படும் வாய் சண்டை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி,அது தன்மான பிரச்சனையாகி, அப்புறம் அது கவுரவபிரச்சனையாகி... அப்புறம் அது சாதி பிரச்சனையாகி, அப்புறம் அது பங்காளிபிரச்சனையாகி, அப்புறம் அது ஊர் பிரச்சனையாகி அப்புறம் கொலையில் வந்து முடிகின்றது... அப்பறம் கோஷ்டி தகராறு... வீச்சருவாள், வேல்கம்பு என இப்படி தமிழகத்தில் நடக்கும் பல கொலைகளுக்கு பல சப்பை காரணங்கள்தான் அதிகம்...சப்பை காரணங்களுக்கா முதுகுக்கு பின் வீச்சாரிவாள் வைத்தவர்களால் இன்னும் இறக்கி வைத்து விட்டு தன்னை அசுவாசபடுத்திக்கொள்ள முடியவில்லை ...இப்படி முடிவில்லா கதைகள் சொல்லிக்கொண்டே போகலாம்....

கடந்த வாரத்தில் தமிழகத்தில் வாய் சண்டையில் ஆரம்பித்த பிரச்சனைகள்... ஒன்று கொலையில் முடிந்து இருக்கின்றது... மற்றது கொலை முயற்ச்சியில் முடிந்து இருக்கின்றது...

முதலில் கொலை...

கடந்த வாரத்தில் நடந்த பாபநாச ஏடிஎம் பிரச்சனையில் எஸ்ஐ பன்னீர்செல்வம் கொலை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்..

ஏடிஎம்மில் பணம் இல்லை..குடிமகன்கள் இருவர்..ஏடிஎம் காவலாளியிடம் ஏன் பணம் இல்லை என்று தகாராறு செய்கின்றனர்... அந்த தாராறின் ஊடே பணம் நிரப்ப வரும் வாகனம் வங்கி ஏடிஎம் எதிரில் நிறுத்துவதற்க்காக,ஏடிஎம் வாசலில் நிறுத்திய வாகனத்தை நகர்த்த சொல்ல.. ஆளுங்கட்சியை சேர்ந்த இருவர் வாய்தகராறில் ஈடுபாட அந்த நேரத்தில் துப்பாக்கியுடன் வந்த ராஜேந்திரன் என்ற காவலாளி... தன்னிடம் துப்பாக்கி இருப்பதால்.. எல்லோரும் பயபட வேண்டும் என்று தாட்பூட் என்று சம்பந்தமே இல்லாமல் வாய் வார்த்தைகளில் எகிர பொதுமக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ராஜேந்திரனை தாக்க வர அதன் பிறகு கோபத்தில் தன் துப்பாக்கி எடுத்து 5 ரவுண்டு துப்பாக்கியால் சுட நால்வர் காயம்...பிரச்சனையை சரி செய்ய வந்த ஒரு திறமையான நேர்மையான... எஸ்ஐ பன்னீர்செல்வம்(ஆறுமாதத்துக்கு முன் தன் மகள் திருமணத்துக்கு தன் வாழ்ந்த வீட்டையே வி்ற்று திருமணம் செய்து வைத்தாராம்) அவ்வளவு நேர்மையானவர்.... ) அதன் பிறகு நடந்த தள்ளுமுள்ளுவில் காவலாளி ராஜேந்திரனின் துப்பாக்கி சூட்டுக்கு எஸ்ஐ பன்னிர்செல்வம் பலியாகிவிட்டார்....

பொதுவாக பாநாசம் மட்டும் அல்ல.. எல்லா ஊர் ஏடிஎம்களிலும்அந்த ஏடிஎம் காவலாளிக்கும் பணம் எடுக்க வருபவருக்கும் சண்டை நடந்து கொண்டுதான் இருக்கும்.... அதிகம் பேர் வசிக்கும் சென்னையில் இது தினமும் நடக்கும் சண்டைதான்... பொதுவாக வாகனம் எங்கே நிறுத்துவது என்பது தொடர்பாகத்தான் இந்த பிரச்சனைகள் வருகின்றன... இது போலான வாய்தகராறுகள் முடிவில்லா தொடர்கதைதான்...தவறுகள் இரண்டு பக்கமும் இருப்பது என்பதுதான் நிதர்சன உண்மை... இதில் அடிப்படையான விஷயம் அதிகாரம் துஷ்பிரயோகம்தான்..

இரண்டாவது கொலை முயற்ச்சி....

சென்னை ஜார்ஜ் கோட்டையில் பணிபிரிபவர் டபெதார் முனுசாமி.... இவர் திருப்போரூர் டூ பிராட்வே பேருந்தில் பயணம் செய்ய.. வரியில் தரமணியில் செக்கிங் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் சிலர் செக்கிங் செய்து இருக்கின்றார்கள்... இந்த நேரத்துல எந்த மடையன் செக்கிங் பண்ணறறான் என்று பேருந்தில் இருந்த முனுசாமி எகிற? எங்க கடமைய செய்யும் போது கேள்வி கேட்க நீ யார் என்று ஜோதி சொல்ல....அதற்கு முனுசாமி நான் தலமைசெயலகத்தில் வேலை செய்கின்றேன்... நான் டிக்கெட் எடுக்கமாட்டேன்... உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்துக்கோ என்று சொல்ல.. வாய்தகராறு பெரிய பிரச்சனையாக...மற்ற பயணிகள் பாதிக்கபடுவதால் அப்போதைக்கு செக்கிங் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் குழுவினர் பேருந்தை விட்டு இறங்கிவிட்டனர்...

அதன்பிறகு தன் அலுவலலகத்துக்கு சென்ற ஜோதியை தலைமைசெயலகத்தில் இருந்து அழைப்பு வந்து இருப்பதாக சொல்ல,தலைமை செயலர் பிஏ ....முனுசாமியிடம் ஜோதியை மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கின்றார்.... தலைமைசெயலகத்தில் முனுசாமியிடம் சாரி கேட்க செல்ல ஜோதியை இழுத்து போட்டு கும்மாங்குத்து கொடுத்து அனுப்பி வைத்து இருக்கின்றார்கள்...

வாய்தகராறு பெரிதாகி இந்த பிச்சனையில் அடித்துக்கொண்ட இருவரும் தமிழக அரசு ஊழியர்கள்.. செக்கிங் ஜோதியை அடிச்ச இடம் ஏதோ டிஎம்எஸ் சப்பேவே உள்ளே இல்லை... சென்னை கோட்டையில் அடித்து இருக்கின்றார்கள்...பக்கத்தில் கோட்டையில் உள்ள காவல் நிலையம் எல்லாவற்றையும் கொட்டுவாய் விட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்து இருக்கின்றது...

சென்னை ஜார்ஜ் கோட்டையில் டபேதார் முனுசாமி தன் அதிகாரிகளிடம் பிரஷர் கொடுத்து..செக்கிங் ஜோதியை தலைமை செயலகத்துக்கு வர வைத்து அவருக்கு உதை கொடுத்து இருக்கின்றார்கள்... நல்லா திங் பண்ணறாங்கப்பா?

எல்லாம் வாய்தகராறுதான்... இது போலான வாய்தகராறுகள் பல என்னையும் , உங்களையும் கடந்து சென்று இருக்கின்றன...ஆனால் கடந்த ஆண்டில் மட்டும்300க்கும் அதிகமான கொலைகள் நடந்து இருக்கின்றன...

துப்பாக்கி வைத்து இருப்பதாலேயே தன் பேச்சை கேட்க வேண்டும் என்று நினைத்த செக்யூரிட்டி ரஜேந்திரன்.... அதனால் ஒரு நேர்மையான எஸ்ஐ கொலை செய்யபட்டார்...

தலைமை செயலகத்தில் வேலை செய்வதால் தன்னை பெரிய பருப்பாக கற்பனை செய்து கொண்ட டபேதார் முனுசாமி...செக்கிங் இன்ஸ்பெக்டரை தரமணியில் நடந்த சண்டைக்கு தலைமைசெயலகம் வர வைத்து அவரை இழுத்து போட்டு பொரட்டி எடுத்தது எல்லாம் அதிகார தோரனையின் அசிங்கமான வெளிப்பாடுகள்...

இந்த பதிவை படித்த வழக்கறிஞர் சுந்தரராஜன் தீர்வுகளை சொல்ல சொன்னார்...

இதோ...

பிரசினைகளை சொல்வதற்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

தீர்வுகளையும் விவாதியுங்கள் சேகர்!//


தீர்வு சொல்ல சொல்லிட்டிங்க...

1,நானும் செக்யுரிட்டி வேலை செய்தவன் என்ற முறையில் அந்த வேலையின் ஒரே கஷ்டம் ஓய்வு இல்லாத பணிசூழல்...அவர்கள் பணிசுமையை குறைக்கவேண்டும்... இதை பல செக்யூரிட்டி நிறுவணங்கள் செய்வதில்லை...

2, இரண்டாவது எல்லா நகரமும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது.. தமிழகத்தின் எல்லா இடத்திலும் ஆக்ரமிப்புகளை அகற்றி வாகனத்துக்கு பார்க்கிங் வசதி செய்யது தர வேண்டும்...

3, எப்போதும் வட்டம், மாவட்டம்,ஆளுங்கட்சி எதிர்கட்சி அல்லகைகள் பிரச்சனை எற்படுத்தினால்,நான் அவன் ஆள்.. இவன் ஆள் என்று சொன்னாலும்,தவறு செய்தவர்கள் மீது காவல்துறைகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..

தலைமைசெயலகத்தில் வேலைசெய்பவர்கள் ஒரு சாதாரண அரசு ஊழியர் என்பதை உணரவும் தமிழகத்தின்கடவுள்கள் அல்ல என்பதைஉணர்த்த அரசு முனுசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அது மட்டும் அல்ல இவரின் பர்சனல் பிரச்சனைக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடத்தை பயண்படுத்தியது... அது மிகப்பெரிய குற்றம்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

15 comments:

  1. எஸ்ஐ பன்னீர்செல்வம்(ஆறுமாதத்துக்கு முன் தன் மகள் திருமணத்துக்கு தன் வாழ்ந்த வீட்டையே வி்ற்று திருமணம் செய்து வைத்தாராம்) அவ்வளவு நேர்மையானவர்.... )

    ரொம்ப வருத்தமான விசயம் சார்..

    ReplyDelete
  2. பிரசினைகளை சொல்வதற்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

    தீர்வுகளையும் விவாதியுங்கள் சேகர்!

    ReplyDelete
  3. வரவர ரொம்ப மோசம் ஆயிடுச்சு நாடு,
    மன்னன் எவ்வழி, மக்கள் எவ்வழி ...

    ReplyDelete
  4. ம்ம்ம். ஏதோ ஒரு Feeling-ல comment போட வந்தேன். பக்கத்துல சூரியகாந்தி கூட்டம்-தான் கண்ணுக்குத் தெரிஞ்சது ..

    என்னமோ போடா மோனி ...

    ReplyDelete
  5. ரொம்பவும் வருத்தமான விஷயம்தான்..ரொம்ப நேர்மையான மனிதராம்...
    நன்றி ராம்-.

    ReplyDelete
  6. பிரசினைகளை சொல்வதற்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

    தீர்வுகளையும் விவாதியுங்கள் சேகர்!//

    தீர்வு சொல்ல சொல்லிட்டிங்க...

    1,நானும் செக்யுரிட்டி வேலை செய்தவன் என்ற முறையில் அந்த வேலையின் ஒரே கஷ்டம் ஓய்வு இல்லாத பணிசூழல்...அவர்கள் பணிசுமையை குறைக்கவேண்டும்... இதை பல செக்யூரிட்டி நிறுவணங்கள் செய்வதில்லை...

    2, இரண்டாவது எல்லா நகரமும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது.. தமிழகத்தின் எல்லா இடத்திலும் ஆக்ரமிப்புகளை அகற்றி பார்க்கிங் வசதி செய்யது தர வேண்டும்...

    3, எப்போதும் வட்டம், மாவட்டம்,ஆளுங்கட்சி எதிர்கட்சி அல்லகைகள் பிரச்சனை எற்படுத்தினால் காவல்துறைகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..

    தலைமைசெயலகத்தில் வேலைசெய்பவர்கள் ஒரு சாதாரண அரசு ஊழியர் என்பதை உணரவும் தமிழகத்தின்கடவுள்கள் அல்ல என்பதைஉணர்த்த அரசு முனுசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அது மட்டும் அல்ல இவரின் பர்சனல் பிரச்சனைக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடத்தை பயண்படுத்தியது... அது மிகப்பெரிய குற்றம்...

    ReplyDelete
  7. ம்ம்ம். ஏதோ ஒரு Feeling-ல comment போட வந்தேன். பக்கத்துல சூரியகாந்தி கூட்டம்-தான் கண்ணுக்குத் தெரிஞ்சது ..

    என்னமோ போடா மோனி ...//

    நன்றி மோனி...ஒத்துகிட்டதுக்கு... அந்த படத்துக்கும்கமேண்டுக்கும் ஒரு வாசகர் வட்டமே இருக்கின்றது...

    ReplyDelete
  8. அட!! இப்படியும் ஒரு எஸ்.ஐ - யா!!

    ReplyDelete
  9. புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு சார்.

    ReplyDelete
  10. உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
    http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html

    ReplyDelete
  11. ரொம்பவும் வருந்த வேண்டிய விசயங்கள்தான்.

    ReplyDelete
  12. வருத்தமான விஷயம்!! :(

    ReplyDelete
  13. வர வர சமூக பிரச்சினைகளுக்குன்னே ஒரு தனி ப்ளாக் போடலாம் போல ஜாக்கி அண்ணே..

    Respond.. Don't react.. -னு யாரோ புண்ணியவான் சொல்லியிருக்காரு.. அதையெல்லாம் சின்ன வயசுல இருந்து சொல்லி வளர்த்தாவே போதுங்க.. நம்ம கல்வி முறையில என்னைக்குதான் கணக்கு, அறிவியல் மாதிரி தனி மனித ஒழுக்கத்தையும் புரிய வைக்க போறாங்களோ..

    ReplyDelete
  14. தீர்வு : செக்யூரிட்டி வேலை மிகுந்த மன உளைச்சல் கொடுக்ககூடிய வேலை. அதனால் செக்யூரிட்டி வேலையில் சேர்பவர்களுக்கு பொறுமையும் , பொறுப்பும் அவசியம் ...
    தீர்ப்பு: Please don't recruit short tempered people for this job.

    தீர்வு : திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ... இதுதான் முனுசாமிக்கு பதில் ...
    மனம் திருந்தி பயண சீட்டு பரிசோதகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ... இல்லாவிட்டால் பொதுஜனங்களில் யாரேனும் ஒருவர் முனுசாமியை நையப்புடைத்து வலியின் வேதனையை தெரிய படுத்தக்கூடும்.
    தீர்ப்பு: Please suspend Munusamy for one month.

    ReplyDelete
  15. நாந்தாங்க அந்த 434...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner